Verified Web

பாராளுமன்ற ஜனநாயகத்தை மேம்படுத்த சவூதி ஷூறா சபை தலைவர் அங்கீகாரம்

7 days ago M.I.Abdul Nazar


ஷூறா சபையின் பாரா­ளு­மன்ற இரா­ஜ­தந்­திர செயற்­பா­டு­களை மேம்­ப­டுத்­து­வ­தற்­காக வெளி­நாட்டு விவ­காரக் குழுவின் பணி­களை விருத்தி செய்­வ­தற்­கான திட்­டத்திற்கு சவூதி ஆரே­பிய ஷூறா சபையின் தலை­வ­ரான அப்­துல்லாஹ் அல் அஷ்ஷெய்க் அங்­கீ­காரம் வழங்­கி­யுள்ளார். 

இத் திட்டம் அனைத்து அர­சாங்க நிறு­வ­னங்­க­ளு­டனும் இணைந்து சவூதி அரே­பி­யாவின் அர­சியல் மற்றும் இரா­ஜ­தந்­திர செயற்­பா­டு­களில் சமூக மற்றும் ஊடகத் தொடர்­பா­டல்­களை நோக்­கி­ய­தாக பாரா­ளு­மன்ற மட்­டத்தில் சபையின் வகி­பா­கத்தை வரை­யறை செய்­வ­தற்கும் தீர்­மானம் எடுப்­பதில் உள்ளூர் மற்றும் சர்­வ­தேச மட்­டத்தில் அதன் முக்­கி­யத்­துவம் தொடர்பில் வரை­யறை செய்­வ­தற்கும் பங்­க­ளிப்புச் செய்­வ­தாக ஷூறா சபை உறுப்­பி­ன­ரான ஸுஹைர் அல்-­ஹார்தி விளக்­கினார். 

இத் திட்டம் நிகழ்ச்­சித்­திட்டம் ஒன்றின் ஊடாக உறுப்­பி­னர்­க­ளி­டையே இரா­ஜ­தந்­திர செயற்­பா­டு­க­ளையும் பாரா­ளு­மன்ற இரா­ஜ­தந்­தி­ரத்­தையும் மேம்­ப­டுத்­து­வதை நோக்­க­மாகக் கொண்­டுள்­ளது, இதில் வெளி­வி­வ­காரம் தொடர்­பான பிரச்­சி­னைகள் பற்றி கலந்­து­ரை­யா­டு­வ­தற்கு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் முன்னாள் இராஜதந்திர நிபுணர்கள் இக் குழுவினால் அழைக்கப்படுவர் எனவும் அவர் தெரிவித்தார். 
-Vidivelli