Verified Web

கொள்கைகளை விட்டுக்கொடுக்கேன்

7 days ago Administrator

பத­விக்­காக கொள்­கை­களை விட்­டு­கொ­டுக்கும் மனப்­பாங்­குடன் செயற்­ப­டு­பவன் நான் அல்ல. பிர­தமர் பத­வியை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஏற்­று­கொள்­ளு­மாறு அழைப்பு விடுத்­த­போது நாட்­டு­மக்­களின் பிரச்­சி­னை­களை சரி­செய்­வதும் கொள்­கை­களை நிலை­நாட்­டு­வ­துமே எனது குறி­க்கோ­ளாக இருந்­த­து என ஐக்­கிய தேசிய கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சஜித் பிரே­ம­தாச குறிப்­பிட்டார்.

மேலும் அர­சி­யல்­வா­திகள் ஆட்­சி­ப்ப­லத்­துக்­காக மோத­வேண்­டி­யது அர­சியல் தலை­வர்­க­ளி­ட­மல்ல. மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்­கா­கவும் நாட்டின் அபி­வி­ருத்­திக்­கு­மி­டை­யி­லேயே போராட வேண்டும். அர­சி­ய­லுக்­காக கொள்­கை­களை விட்­டு­கொ­டுப்­பவன் நான் அல்ல. ஜனா­தி­ப­தியின் அழைப்பை நான் மறுத்­தமை சரியே. நான் சரி­யா­ன வழி­யி­லேயே பய­ணிக்­கின்றேன்.  

ஐக்­கிய தேசிய கட்சி அல­ரி­மா­ளி­கையில் நேற்று புதன்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­துக்­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே இதனை தெரி­வித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

இலங்­கையின் ஜன­நா­யக வர­லாற்றில் இதற்கு முன்னர் ஏற்­ப­டாத இக்­கட்­டான நிலையே தற்­போது உரு­வா­கி­யுள்­ளது. அர­சியலமைப்­பினை சிறிது சிறி­தாக உடைத்து யாப்­பினை முழு­மை­யாக அவ­ம­தித்தே ஜனா­தி­பதி இந்த புதிய அர­சாங்­கத்தை உரு­வாக்­கி­யுள்ளார். முழு­நாடும் ஏற்­று­க் கொள்­ளாத இக்­கட்­டான நிலைக்கு பிரச்­சி­னையை எதிர்­கொண்­டுள்­ளது. குறித்த இந்த காலப்­ப­கு­யிலும் ஸதிர­மற்ற நிலை, அமை­தி­யற்ற நிலை இடம்­பெற்று வரு­கின்­றது. 

ஒரு நாட்­டுக்கு சர்­வ­தேச அங்­கீகாரம் என்­பது இன்­றி­ய­மை­யா­த­தொன்­றாகும். சர்­வ­தேச அங்­கீ­காரம் இருந்தால் மாத்­த­ி ரமே வெளி­நாட்டு வரு­மா­னங்­களை அதி­க­ரித்­துக்­கொள்ள கூடிய சூழ்­நிலை உரு­வாகும். அதற்கு நாட்டின் சமா­தான நிலை ,ஒற்­றுமை, அர­சி­யலில் ஒரு­மித்த நிலை என்­பன துணை­பு­ரி­கின்­றன. ஆனால் இலங்­கைக்­கான சர்­வ­தேச ஏற்­பு­டைமை இன்று கேள்­விக்­கு­றி­யாக இது வரையில் கிடைக்கப்­பெற்று வந்த வரு­மா­னங்­களும் அரை­வா­சி­யாக இடை­நி­றுத்­தப்­பட்­டுள்­ளன. மறுபுறம் நாட்­­டினை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்கு பக்­க­ப­ல­மாக இருந்த வெளி­நாட்டு முத­லீ­டு­களும் இன்று தடைப்­பட்டுள்­ளன.

26 ஆம் திகதி இரவு ஜனா­தி­பதி தன்­னிச்­சி­யாக எடுத்த முடிவு இன்று சர்­வ­தேசமே நமது நாட்டை திரும்­பி­ப்பார்க்க வைத்­துள்­ளது. இந்த பிரச்­சி­னைக்கு விரைவில் தீர்­மானம் எடுப்­ப­தற்கு சிறந்த இடம் பாரா­ளு­மன்றம். 113 பெரும்­பான்­மையை நிரூ­பிப்­ப­தாக ஒவ்­வொ­ரு­ த­ரப்­பி­னரும் கூறி வரு­வது உண்­மையா என்­பதை தெளி­வுப­டுத்தி கொள்­வ­தற்கு பாரா­ளு­மன்­றமே தீர்­மா­ன­மாக அமையும். பாரா­ளு­மன்­றத்தில் தீர்­வு ­கா­ணப்­பட்­டாலே அது நீதி­யான தீர்­மா­ன­மா­கவும் அமையும்.

ஜனா­தி­பதி இந்த தீர்­மா­னத்தை எடுத்து சுமார் இர­ு வா­ரங்­கள் அண்மிக்கின்­றன. இந்­நி­லையில் ஐக்­கிய தேசிய முன்­னணியா­கிய எங்­க­ளது தரப்பு பெரும்­பான்மை இருப்­பதை உறு­தி­யாக அறி­விக்­கின்றோம். மறு­புறம் சட்­ட­வி­ரோ­த­மாக தெரிவு செய்­யப்­பட்­டுள்ள புதிய அர­சாங்கம் தம்­மிடம் பெரும்­பான்­மை­யி­ருப்­ப­தாக அறி­வித்து வரு­கின்­றது. இதில் எது உண்மை எது பொய் என்­பதை மக்­களும் உல­க நாடு­களும் அறிந்­து­கொள்ள பாரா­ளு­மன்­றமே சிறிந்த தீர்­வாக அமையும்.

கேள்வி: ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பிர­தம­ராக பத­வி­யேற்­கு­மாறு உங்­களை அழைத்த­தாக குறிப்­பிட்­­டி­ருந்தார். அது உண்­மையா?

பதில்: 2015 ஆம் ஆண்டு இரு கட்­சி­களும் புரிந்­து­ணர்­வு­டனும் ஒற்­று­மை­யா­கவும் ஆட்சிப் பொறுப்­பினை ஏற்­றன. அன்று முதல் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­க­வையும் ஒன்­றி­ணைத்து ஆட்­சி­ ந­ட­வ­டிக்­கை­களை சிறப்­பாக முன்­னெ­டுப்­பதே எனது கொள்­கை­யாக அமைந்­தது. அர­சாங்­கத்தில் பிரச்­சி­னைகள் ஏற்­பட்ட போது பிரச்­சி­னை­களை சுமுக­மாக தீர்த்­துக்­கொண்டு முன்­னோக்கி செல்­லவே செயற்­பட்­டு­வந்தேன்.

ஜன­நா­யக கொள்­கையின் அடிப்­ப­டையில் அர­சாங்­க­மொன்று இடம்­பெற்­று­வ­ரும்­போது எதா­வது ஒரு கொள்­கையின் அடிப்­ப­டை­யி­லேயே செயற்­பட வேண்டும். அதே­போன்று அர­சியல் நடத்­தைகள் அசை­வுகள் ஒவ்­வொன்றும் கௌர­வ­மிக்­க­தாக இருக்க வேண்டும்.

ஐக்­கிய தேசிய கட்­சியின் தலைவர் ரணில் விக்­ர­ம­சிங்க இருக்­கும்­போது, பிரச்­சி­னைகள் ஏற்­படும் போது இரு தலை­வர்­க­ளி­டை­யேயும் சமா­தா­னத்­தையும் பலத்­தையும் ஏற்­ப­டுத்தி மக்­களின் எதிர்­பார்ப்­பு­க­ளு­க்கேற்ற வேக­மான அபி­வி­ருத்­தியை ஏற்­ப­டுத்­து­வதே எனது நோக்­க­மாக இருந்தது. ஆனால் ஒரு­நாளும் பத­விக்­காக பணி­யாற்­றி­ய­தில்லை.

அத­ற்கு மாறான பொறுப்­புக்­களை கண்டு ஒரு­நாளும் பயந்­ததும் இல்லை. பயப்­படப் போவ­து­மில்லை. ஆனால் பொறுப்­புக்கள் வழங்­கப்­படும் போது மக்­களின் பொறுப்­புக்­களை நிறை­வேற்­றுவேன். நாட்டின் எதிர்­கா­லத்­துக்­காக  ஜனா­தி­ப­தியின் அழைப்பை மறுத்­ததும் சரியே என்றார்.
-Vidivelli