Verified Web

பாராளுமன்றம் கூட்டப்படுவதே தீர்வு

7 days ago Administrator

Image result for பாராளுமன்றம் vidivelli

நாட்டில் தோன்­றி­யுள்ள அர­சி­ய­ல­மைப்புச் சர்ச்­சைக்கு தீர்வு காண்­ப­தற்­கான ஒரே வழி பாரா­ளு­மன்­றத்தைக் கூட்டி, பெரும்­பான்­மையை நிரூ­பிக்கும் தரப்­பிடம் ஆட்­சியை ஒப்­ப­டைப்­பதே என உள்­நாட்­டிலும் சர்­வ­தேச அரங்­கிலும் ஆலோ­ச­னைகள் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன.

எனினும் 16 ஆம் திகதி வரை ஒத்­தி­வைக்­கப்­பட்­டி­ருந்த பாரா­ளு­மன்­றத்தை, 14 ஆம் திகதி கூட்­டு­வ­தாக ஜனா­தி­பதி வர்த்­த­மானி அறி­வித்­தலை வெளி­யிட்­டி­ருக்­கிறார்.

எனினும் தனக்கு ஏலவே வாக்­கு­று­தி­ய­ளித்­த­வாறு 7 ஆம் திகதி பாரா­ளு­மன்­றத்தைக் கூட்­டாது ஜனா­தி­பதி 14 ஆம் திக­தியே கூட்­டப்­படும் என அறி­வித்­தமை சபா­நா­ய­கரை கடுஞ் சினத்தில் ஆழ்த்­தி­யுள்­ளது.

இத­னை­ய­டுத்தே அவர் கார­சா­ர­மான அறிக்கை ஒன்றை வெளியிட்டு புதிய பிர­த­மரை அங்­கீ­க­ரிக்க முடி­யாது எனத் தெரி­வித்­தி­ருந்தார். மேலும் கொழும்­பி­லுள்ள வெளி­நாட்டு தூது­வர்­க­ளுக்கு கடிதம் ஒன்றை அனுப்­பி­யுள்ள சபா­நா­யகர் ''இது ஆயு­தங்­களோ கவச வாக­னங்­களோ இன்றி முன்­னெ­டுக்­கப்­பட்ட சதிப் புரட்சி'' என வர்­ணித்­தி­ருக்­கிறார். இதுவும் சர்­வ­தேச அரங்கில் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

 பாரா­ளு­மன்­றத்தைக் கூட்­டு­மாறு பெரும்­பா­லான கட்­சிகள் சபா­நா­ய­க­ரிடம் வேண்­டு­கோள்­வி­டுத்­தி­ருந்­தன. மொத்­த­மாக 128 எம்.பி.க்கள் இந்தக் கோரிக்­கையை எழுத்து மூலம் விடுத்­தி­ருந்­தனர். சர்­வ­தேச நாடு­களும் பௌத்த மத பீடங்­களும் பாரா­ளு­மன்­றத்தைக் கூட்டி இந்த அர­சியல் நெருக்­க­டிக்குத் தீர்வு காணு­மாறு சபா­நா­ய­கரைக் கோரி­யி­ருந்­தன. எனினும் ஜனா­தி­ப­தியின் அதி­கா­ரத்தை மீறி சபா­நா­ய­கரால் செயற்­பட முடி­யா­துள்­ளது.

இதற்­கப்பால் தமது தரப்­புக்கு பாரா­ளு­மன்றில் பெரும்­பான்­மையைப் பெற்றுக் கொள்­வ­தற்­கான திரை­ம­றைவு பேச்­சு­வார்த்­தை­க­ளையும் பேரம் பேசல்­க­ளையும்  மைத்­தி­ரி-­, ம­ஹிந்த தரப்பு  தொடர்ச்சியாக முன்­னெ­டுத்து வரு­கி­றது. அந்த வகையில்  போது­மான பெரும்­பான்­மையை மஹிந்­த­வுக்கு ஆத­ர­வாகப் பெற்றுக் கொள்ளும் வரை பாரா­ளு­மன்­றத்தைக் கூட்­டு­வ­தற்கு ஜனா­தி­பதி விரும்­ப­வில்லை.  இதன்­பொ­ருட்டே  ஜனா­தி­பதி பாரா­ளு­மன்­றத்தை நவம்பர் 14 ஆம் திகதி வரை ஒத்­தி­வைத்­துள்ளார்.

இதற்­கி­டையில் பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­ப­டலாம் எனும் ஊகங்­களும் பர­வு­கின்­றன. ஜனா­தி­பதி தனது இறுதி ஆயு­த­மாக பாரா­ளு­மன்­றத்தைக் கலைத்து தேர்தல் ஒன்­றுக்குச் செல்ல முடியும் என்று சிலர் கூறு­கின்­றனர். எனினும் அர­சி­ய­ல­மைப்பில் அதற்கு இட­மில்லை என்­பதே பொது­வான அபிப்­பி­ரா­ய­மா­க­வுள்­ளது. புதிய பிர­த­மரை நிய­மிக்க எடுத்த தீர்­மானம் போல பாரா­ளு­மன்­றத்தைக் கலைக்கும் தீர்­மா­னத்­தையும் ஜனா­தி­பதி எடுக்­க­மாட்டார் என்றும் சொல்­வ­தற்­கில்லை.

எது எப்­ப­டியோ ஜனா­தி­ப­தியின் இந்த நட­வ­டிக்கை கார­ண­மாக  நாட்டில் ஸ்திர­மற்ற ஒரு சூழல் தோற்­று­விக்­கப்­பட்­டுள்­ளது. இந் நிலை தொடர்­வது ஆரோக்­கி­ய­மா­ன­தல்ல. இதற்குத் தீர்வு காணப்­பட வேண்­டு­மானால் பாரா­ளு­மன்றம் கூட்­டப்­பட்டு சட்­ட­ரீ­தி­யான பிர­தமர் யார் என்­பதை நிரூ­பிக்க இட­ம­ளிக்­கப்­பட வேண்டும்.

ஜன­நா­யகம் பற்றி 2015 ஜன­வ­ரியில் உரத்துப் பேசிய அதே ஜனா­தி­ப­திதான் இன்று ஜனநாயக விரோத செயற்பாடுகளில் ஈடுபடுகிறார் என்பது கவலைக்குரியதாகும்.

இதுவிடயத்தில் ஜனாதிபதி தனது கட்சி, அரசியல் நலன்களைப் புறந்தள்ளி நாட்டின் ஜனநாயகத்திற்கும் 2015 ஜனவரியில் மக்கள் வழங்கிய ஆணைக்கும் மதிப்பளிக்க வேண்டும். நாட்டை மீண்டும் வன்முறைக் கலாசாரத்துக்குள் தள்ள இடமளிக்கக் கூடாது என வலியுறுத்த விரும்புகிறோம்.
-Vidivelli