Verified Web

அவுஸ்திரேலிய பொலிஸாரின் செயலால் எனது எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளது

7 days ago ARA.Fareel

அவுஸ்­தி­ரே­லி­யாவில் பயங்­க­ர­வாத தடுப்புச் சட்­டத்தின் கீழ் 14 நாட்கள் தடுத்து வைக்­கப்­பட்டு பின்னர் பிணையில் விடு­விக்­கப்­பட்­டி­ருந்த நான் என் மீதி­ருந்த குற்­றச்­சாட்­டுகள் அனைத்தும் கைவி­டப்­பட்­ட­தை­ய­டுத்து கடந்த ஒக்­டோபர் மாதம் 19 ஆம் திகதி விடு­தலை செய்­யப்­பட்­டுள்ளேன் என அவுஸ்­தி­ரே­லி­யாவில் உயர்­கல்வி பயின்­று­கொண்­டி­ருந்த நிலையில் பயங்­க­ர­வாத தடுப்புச் சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்டு விடு­தலை பெற்­றுள்ள இலங்­கை­ய­ரான கமர் நிஸாம்தீன் தெரி­வித்தார்.

கடந்த திங்கட் கிழமை அவுஸ்­தி­ரே­லி­யா­வி­லி­ருந்து இலங்­கையை வந்­த­டைந்த இவர் நேற்­று­மாலை கொழும்பு சங்­க­ரிலா ஹோட்­டலில் நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாடு ஒன்றை நடத்தி விப­ரங்­களை வெளி­யிட்டார்.  இதன்­போது அவர் தொடர்ந்து கருத்து வெளி­யி­டு­கையில்,

பொலி­ஸாரால் கைப்­பற்­றப்­பட்ட குறிப்புப் புத்­த­கத்­தி­லி­ருந்த கையெ­ழுத்து என்­னு­டை­ய­தல்ல என்­பது நிபு­ணர்­களால் நிரூ­பிக்­கப்­பட்­ட­தை­ய­டுத்தே எனக்கு விடு­தலை கிடைத்­தது. இவ்­வாறு நான் கைது செய்­யப்­ப­டு­வதன் பின்­ன­ணியில் அர்­ஸலான் கவாஜா என்­பவர் இருந்­துள்ளார். நியு­ச­வுத்வேல்ஸ் பல்­க­லைக்­க­ழ­கத்தில் இருந்த இவர் எனது மேற்­பார்­வை­யா­ளர்­களில் ஒரு­வ­ராவார்.

அர்­ஸலான் கவாஜா என்­பவர் என்னை அவ­மா­னப்­ப­டுத்தும் வகையில் இந்த செயலை செய்­துள்ளார். நான் ஆசிய நாட்டைச் சேர்ந்­தவன் என்­ப­தாலும் நான் மாணவர் விசாவில் அவுஸ்­தி­ரே­லிய பிர­ஜை­யாக இருந்­ததே இந்த அரங்­கேற்­ற­லுக்கு கார­ண­மாகும். அவுஸ்­தி­ரே­லி­யாவில் நான் சட்­டப்­படி வசித்து வந்­ததால் பொறுக்க முடி­யா­த­வர்­க­ளா­லேயே இவ்­வாறு பிரச்­சி­னை­க­ளுக்கு உள்­ளாக்­கப்­பட்டேன்.

அவுஸ்­தி­ரே­லிய நீதிக் கட்­ட­மைப்பில் நான் நம்­பிக்கை வைத்­தி­ருந்தேன். ஒரு­வரால் கண்­டெ­டுக்­கப்­பட்ட குறிப்புப் புத்­த­கமே சாட்­சி­யாக இருந்­தது. அக்­கு­றிப்புப் புத்­தகம் கண்­டு­பி­டிக்­கப்­பட்­ட­போது அது என்­னிடம் இருக்­க­வில்லை. ஒரு­மாத கால­மாக நான் வேலை செய்­யாத காரி­யா­ல­யத்தில் இருந்தே அது கண்­டெ­டுக்­கப்­பட்­டுள்­ளது.

என்னைக் கைது செய்து எட்டு மணித்­தி­யா­லங்கள் விசா­ரணை செய்­தார்கள். இர­க­சிய பொலிஸ் பரி­சோ­தகர் டெரின் எல். ஜெரார், அவுஸ்­தி­ரே­லிய பயங்­க­ர­வாத தடுப்புச் சட்­டத்தின் கீழ் என்­மீது குற்றம் சுமத்­தினார். குறிப்புப் புத்­த­கத்­தி­லி­ருந்த கையெ­ழுத்து என்­னு­டை­ய­தல்ல என்று நான் உறு­தி­யாகக் கூறியும் என்­மீது குற்றம் சுமத்­தப்­பட்­டது. அதன் பின்பு நடந்­தே­றி­ய­வைகள் மிகவும் மோச­மா­ன­வை­யாகும். நியு­ச­வுத்வேல்ஸ் பயங்­க­ர­வாத எதிர்ப்புப் பிரிவின் கட்­டளை அதி­காரி மைக்கல் சிஹி ஊடக மாநா­டொன்­றிணை நடாத்­தினார். இதன்­பி­றகு நான் ஓர் பயங்­க­ர­வா­தி­யாக உல­குக்கு அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்டேன்.

அவுஸ்­தி­ரே­லிய சிறையில் நான் துன்­பு­றுத்­தப்­ப­டா­விட்­டாலும் கூட அதனால் நான் பெற்ற அவ­மா­னங்­களும் கவ­லை­களும் எண்­ணி­ல­டங்­கா­தவை. எனக்கும் வெளி­யு­ல­குக்கும் எந்தத் தொடர்பும் இருக்­க­வில்லை. எனது குடும்­பத்தார் என்னை தொடர்­பு­கொள்ள ஒரு­மாதம் சென்­றது. இவ்­வாறு நான் கடு­மை­யான உளப் பாதிப்­புக்­குள்­ளா­ன­மைக்கு அவுஸ்­தி­ரே­லிய பெடரல் பொலி­ஸாரும் நியு­ச­வுத்வேல்ஸ் பொலி­ஸாரும் அங்கு கட­மை­பு­ரியும் அதி­கா­ரி­க­ளுமே பிர­தான கார­ண­கர்த்­தாக்­க­ளாக இருந்­தார்கள்.

ஏ.ஏ. பிரிவு சிறையில் என்னை தடுத்து வைத்­தி­ருந்­தனர். 14 தினங்கள் எவ்­வித குற்­றச்­சாட்­டு­க­ளு­மின்றி தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்தேன். குறிப்புப் புத்­த­கத்­தி­லி­ருந்த கையெ­ழுத்து என்­னு­டை­ய­தல்ல என்­பது கையெ­ழுத்து தொடர்­பான விசேட நிபு­ணர்­களால் நிரூ­பிக்­கப்­பட்­ட­தை­ய­டுத்தே நான் விடு­த­லை­யானேன்.

அர்­ஸலான் கவா­ஜா­விற்கும் அந்த குறிப்புப் புத்­த­கத்­திற்கும் தொடர்பு இருப்­ப­தாக ஊட­கங்கள் வாயி­லாக அறிந்­து­கொண்டேன். அந்தக் குறிப்­பா­னது, மெல்கம் டேன்புல் மற்றும் ஜூலி பிசொப் என்­போரை கொலை செய்­வ­தற்கும் ஒபேரா மாளி­கையை குண்டு வைத்து தகர்ப்­ப­தற்­கு­மான சூழ்ச்சி பற்றி தெரி­விக்­கப்­பட்­டி­ருந்த பீதியை ஏற்­ப­டுத்­து­வ­தாகும். இந்தப் போலி­யான குறிப்பை தயா­ரித்­த­வ­ருக்கும் பயங்­க­ர­வா­தத்­திற்கும் இடையில் மிக­நெ­ருக்­க­மான தொடர்பு உண்டு என்­பதை சுட்­டிக்­காட்ட விரும்­பு­கிறேன். இவ்­வா­றான செயல்கள் எனது நற்­பெ­ய­ருக்கு களங்கம் ஏற்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட ஒரு பாரிய சதித்திட்டமாகும்.

நடந்துமுடிந்த சம்பவங்கள் எனது எதிர்காலத்தை பாதித்துள்ளது. எனது எதிர்காலம் கருதி நான் இலங்கைக்கு திரும்பியுள்ளேன். இந்த சந்தர்ப்பத்தில் எனது அனுபவம் மற்றும் சிதைந்து போயுள்ள எனது எதிர்காலம் பற்றிச் சிந்திக்கையில் அதிகாரிகளால் என்னைப்போல் போலிக் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாக்கப்பட்டு பாதிக்கப்பட்டுள்ள அப்பாவிகளுக்காக குரல்கொடுக்க வேண்டுமெனத் தீர்மானித்துள்ளேன் என்றார்.
-Vidivelli