Verified Web

சபாநாயகரின் புதிய புரட்சிகர அறிவிப்பு

8 days ago Administrator

வை. எல். எஸ். ஹமீட்

 சபா­நா­யகர் நேற்று முன்­தினம் (05/11/2018) விடுத்த அறி­விப்பில் இரண்டு விட­யங்கள் இருக்­கின்­றன. ஒன்று பாரா­ளு­மன்றம் கூடு­கின்­ற­போது புதிய பிர­தமர் நிய­ம­னத்­திற்கு முன்­பி­ருந்த சூழ்­நி­லையைக் கடைப்­பி­டித்தல், புதிய பிர­தமர் தனது பெரும்­பான்­மையை நிரூ­பிக்­கும்­வரை அதா­வது,  பிர­த­ம­ராக ரணி­லையே ஏற்­றுக்­கொள்­வது என்­ப­தாகும். அடுத்­தது, ஏழாம் திக­திதான் பாரா­ளு­மன்­றத்தைக் கூட்­டலாம் என்ற சமிக்ஞை. ஆனால் இதனை அவர் உறு­தி­யாகக் கூற­வில்லை. இந்த இரண்டு சூழ்­நி­லைகள் தொடர்­பா­கவும் ஏற்­ப­டக்­கூ­டிய சூழ்­நி­லை­களை எனது முன்­னைய ஆக்­கத்தில் தெரி­வித்­தி­ருக்­கின்றேன்.

அதா­வது, மஹிந்த அணி­யினர் விரும்­பினால் நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை கொண்­டு­வ­ரலாம். அவ்­வாறு கொண்­டு­வந்தால் ரணிலைப் பிர­த­ம­ராக ஏற்­றுக்­கொண்­ட­தாகும்.

எனவே, பெரும்­பாலும் கொண்­டு­வர வாய்ப்­பில்லை. அதையும் தாண்டி, சில­வேளை, பெரும்­பான்மை இருந்தால் மக்­க­ளுக்குக் காட்­டு­வ­தற்­காக கொண்­டு­வந்­தாலும் கொண்­டு­வ­ரலாம். அவ்­வாறு கொண்­டு­வந்து ரணிலைத் தோற்­க­டித்தால் சபா­நா­யகர் கூறு­வ­துபோல் மஹிந்­தவைப் பிர­த­ம­ராக அங்­கீ­க­ரிக்­கலாம். அத்­துடன் அர­சியல் பிரச்­சினை தீரும். ஆனாலும் சட்­டப்­பி­ரச்­சினை தொடரும்.

ஏனெனில், ரணில் பிர­தமர் என்றால் அவர் நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையில் தோற்றால் அவ­ரது அமைச்­ச­ரவை கலையும். அப்­பொ­ழுது பிர­தமர் பதவி வெற்­றி­ட­மாகும். அந்த இடத்­திற்கு புதிய பிர­தமர் நிய­மிக்­கப்­பட வேண்டும். எனவே, மஹிந்­தவை மீண்டும் பிர­த­ம­ராக ஜனா­தி­பதி நிய­மிப்­பாரா? அவ்­வா­றாயின் இடைக்­கா­லத்தில் பிர­த­மரும் அமைச்­சர்­களும் அமைச்­ச­ர­வையும் செய்­த­வற்றின் செல்­லு­ப­டி­யாகும் தன்மை கேள்­விக்­கு­றி­யாகும். அதே­நேரம் மைத்­திரி தான் பிழை­யாக மஹிந்­தவை நிய­மித்­ததை ஏற்­றுக்­கொண்­ட­தாகும்.

சபா­நா­யகர் சட்­டத்­திற்கு

அப்பால் செயற்­ப­டு­கின்றார்

மஹிந்­தவை பிர­த­ம­ராக நிய­மித்­தது அர­சி­ய­ல­மைப்­பிற்கு முரணா? இல்­லையா? என்­பதில் வாதப்­பி­ர­தி­வா­தங்கள் தொடர்­கின்­றன. அது அர­சி­ய­ல­மைப்­பிற்கு முர­ணல்ல என ஆங்­கி­லத்­திலும் தமி­ழிலும் எனது ஆக்­கங்­க­ளையும் ஒலிப்­ப­தி­வு­க­ளையும் வெளி­யிட்­டி­ருக்­கின்றேன்.

அதே­நேரம் கலா­நிதி ஜயம்­பதி விக்­ர­ம­ரத்ன மஹிந்­தவின் நிய­மனம் ஆரம்­பத்­தி­லி­ருந்தே செல்­லு­ப­டி­யற்­றது (ab initio void) என்று தெரி­வித்­தி­ருக்­கின்றார். அவ்­வா­றெனில் சபா­நா­யகர் மஹிந்­தவை பிர­த­ம­ராக ஏற்று நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை கொண்­டு­வ­ரப்­பட்டு அதில் மஹிந்த பெரும்­பான்­மையால் வெற்­றி­பெற்­றாலும் அவ­ரது நிய­மனம் செல்­லாது.

ஏனெனில், ஆரம்­பத்­தி­லி­ருந்தே செல்­லு­ப­டி­யற்­றது என்றால் மஹிந்த பிர­தமர் இல்லை என்று பொரு­ளாகும். பிர­த­ம­ராக இல்­லாத ஒரு­வ­ருக்­கெ­தி­ராக நம்­பிக்­கை­யில்லா வாக்­கெ­டுப்பு நடத்­து­வதே பிழை. அதையும் தாண்டி நடத்­தப்­பட்டு அதில் அவர் வெற்­றி­பெற்­றாலும் அவர் பிர­த­ம­ராக முடி­யாது.

பிர­த­ம­ராக இல்­லாத ஒருவர் நம்­பிக்­கை­யில்லா வாக்­கெ­டுப்பில் வெற்­றி­பெற்­ற­தனால் பிர­த­ம­ரா­கி­விட முடி­யாது.

யார் தீர்­மா­னிப்­பது?

ஜனா­தி­பதி (நிறை­வேற்­றுத்­துறைத் தலைவர்) அவரை நிய­மித்­தது சட்­டப்­ப­டி­யா­னது என்­கிறார். சபா­நா­யகர் (சட்­ட­வாக்­கத்­துறைத் தலைவர்) அது சட்­டத்­திற்கு முர­ணா­னது என்­கின்றார். (ஏனைய சட்ட அறி­ஞர்­களின் கருத்­துக்கள், அபிப்­பி­ராயம் மட்­டுமே. அவை நிலைப்­பா­டுகள் அல்ல. ஆனாலும் இந்த அபிப்­பி­ரா­யங்­களை வைத்­துத்தான் இவ்­விரு தலை­வர்­களும் நிலைப்­பாட்டை எடுக்­கி­றார்கள் என்­பது வேறு­வி­டயம்)

இப்­பொ­ழுது இந்த இரண்டு நிலைப்­பாட்­டிற்­கு­மி­டையில் தீர்ப்­புக்­கூறும் அதி­காரம் நீதி­மன்­றுக்கே இருக்­கின்­றது. ஆனால் யாரும் நீதி­மன்­றத்தை நாட­வில்லை.

சட்­ட­வாக்­கத்­துறை v

நிறை­வேற்­றுத்­துறை

இன்­றைய பிரச்­சி­னையின் அடிப்­படை ஜனா­தி­ப­திக்கு பிர­த­மரை நீக்கும் அதி­காரம் உண்டா? என்­ப­தாகும்.

நிறை­வேற்­றுத்­துறைத் தலைவர் சரி­யென்­கிறார். சட்­ட­வாக்­கத்­துறைத் தலைவர் பிழை என்று கூறு­வது வேறு­வி­டயம். ஆனால் பிழை­யென்ற நிலைப்­பாட்டை எடுத்து அதன்­படி செயற்­ப­டப்­போ­கின்றேன் என்று கூறு­வது எந்த சட்­டத்தின் அடிப்­ப­டையில்?

சபா­நா­யகர் இந்த சட்­டத்தின் இத்­த­னை­யா­வது சரத்தின் அடிப்­ப­டையில் இந்த முடிவை எடுத்­தி­ருக்­கிறேன் என்று கூற­வில்லை. ஜனா­தி­ப­தியின் முடிவு பிழை என்று மட்­டும்தான் கூறு­கின்றார். பிழை­யென்ற தீர்ப்பை நீதி­மன்றம் மட்­டுமே வழங்­கலாம். சபா­நா­ய­க­ருக்கு தீர்ப்பு வழங்கும் அதி­காரம் இல்லை.

அபிப்­பி­ராயம் கொள்ள எல்­லோ­ருக்கும் உரிமை உண்டு. அதே­நேரம் அதை உத்­தி­யோ­க­பூர்வ நிலைப்­பா­டாக சபா­நா­யகர் எடுக்­கலாம், அவரால் அதற்­கு­ரிய சட்­டத்தின் சரத்­துக்­களைக் காட்­ட­மு­டி­யு­மாயின். ஆனால், சபா­நா­யகர் கூறும் காரணம் 116 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அவ்­வாறு தெரி­வித்­தி­ருக்­கின்­றார்கள் என்­ப­தாகும். அது அவர்­களின் அபிப்­பி­ராயம். அதற்கு அவர்­க­ளுக்கு உரி­மை­யுண்டு. ஆனால் அது எவ்­வாறு ஒரு சட்­டத்தின் அடிப்­ப­டை­யாக இருக்­க­மு­டியும்.

சரி, அது ஒரு­புறம் இருக்­கட்டும். “பெரும்­பான்­மையை நிரூ­பிக்­கின்­ற­வ­ரைதான் நான் பிர­த­ம­ராக ஏற்பேன்” என்று கூறு­வ­தற்கு சபா­நா­ய­க­ருக்கு எந்த சட்ட அடிப்­ப­டையும் கிடை­யாது.

அடிப்­ப­டையில் நிய­மனம் பிழை­யென்றால் தீர்ப்பு நீதி­மன்­றத்­திடம். அதையும் தாண்டி சபா­நா­யகர் ரணிலை பிர­த­ம­ராக ஏற்று நம்­பிக்கை வாக்­கெ­டுப்பில் தோற்றால் மஹிந்­தவை சபா­நா­யகர் எவ்­வாறு பிர­த­ம­ராக ஏற்­றுக்­கொள்ள முடியும். எந்த சட்­டத்தின் அடிப்­ப­டையில் அல்­லது மஹிந்­த­வுக்கு இன்­னு­மொரு நம்­பிக்கை வாக்­கெ­டுப்பு நடாத்தி அதில் அவர் வெற்­றி­பெற்றால் அவ­ரைப்­பி­ர­த­ம­ராக ஏற்றுக் கொள்­ளப்­போ­கின்­றாரா?

அவ்­வா­றான ஒரு பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ருக்­கான நம்­பிக்கை வாக்­கெ­டுப்­புக்கு பாரா­ளு­மன்ற நிலை­யியற் கட்­டளை இடம்­கொ­டுக்­குமா? பிர­த­ம­ராக நிய­மிக்­கப்­பட்ட ஒரு­வ­ருக்கு நம்­பிக்கை வாக்­கெ­டுப்பு நடாத்­த­வேண்­டிய அவ­சியம் அர­சி­ய­ல­மைப்பில் இல்லை. ஆனால் ரணிலை பிர­த­ம­ராக ஏற்­றுக்­கொண்டால், மஹிந்த பிர­தமர் இல்­லை­யென்ற நிலைப்­பாட்டை எடுத்­து­விட்டு அதன்பின் நம்­பிக்கை வாக்­கெ­டுப்பை நடாத்தி அவரைப் பிர­த­ம­ராக ஏற்­றுக்­கொள்­வ­தற்கு அர­சி­ய­ல­மைப்பில் என்ன ஏற்­பாடு இருக்­கின்­றது?

நமது நாடு ஒரு Constitutional democracy. அந்த நாட்டில் அர­சி­ய­ல­மைப்­பிற்கு அப்பால் ஜனா­தி­பதி செயற்­ப­டு­வது பிழை­யென்றால் சபா­நா­யகர் செயற்­ப­டு­வது சரியா?

நாம் புரிந்­து­கொள்ள வேண்­டி­யது இந்த விட­யத்தில் பாரா­ளு­மன்­றத்தைப் பொறுத்­த­வரை அர­சி­ய­ல­மைப்புச் சட்டம் கூறு­வது இவ்­வ­ள­வுதான்.

பிர­தமர் நிய­மிக்­கப்­பட்டால் அவரை பாரா­ளு­மன்றம் நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணை­யூ­டாக நிரா­க­ரிக்­கலாம். நிய­மித்­த­முறை சரியா? பிழையா? என்று பாரா­ளு­மன்றம் தீர்ப்­புக்­கூற முடி­யாது. அது நீதி­மன்­றத்தின் பணி. பாரா­ளு­மன்­றத்­திற்கே முடி­யா­த­போது அதன் தலை­வ­ரான சபா­நா­ய­க­ருக்கு எவ்­வாறு முடியும்?

அடுத்த கேள்வி

இங்­குள்ள அடிப்­படைப் பிரச்­சினை பிர­த­மரை நீக்கும் ஜனா­தி­ப­தியின் அதி­காரம் தொடர்­பா­னதா? அல்­லது யாருக்குப் பெரும்­பான்மை இருக்­கின்­றது என்­பதா?

பெரும்­பான்மை இருப்­ப­வரை ஏற்­றுக்­கொள்வேன் என சபா­நா­யகர் கூறு­வ­தாயின் “ஜனா­தி­ப­திக்கு அடிப்­ப­டையில் பிர­த­மரை நீக்­கு­கின்ற அதி­காரம்” இருக்­கின்­றது; என்று சபா­நா­யகர் ஏற்­றுக்­கொள்­கின்றார் என்று பொரு­ளாகும். ஆனால் பெரும்­பான்மை இல்­லா­த­போ­துதான் அவ்­வாறு நீக்­க­மு­டியும்.

ரணி­லுக்கு பெரும்­பான்மை இல்லை என்று நீங்கள் தீர்­மா­னித்­ததை என்னால் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. பாரா­ளு­மன்றம் யாருக்குப் பெரும்­பான்மை இருக்­கின்­றது என்று கூறு­கின்­றதோ அவரை பிர­த­ம­ராக ஏற்­றுக்­கொள்வேன் என்று சபா­நா­யகர் கூறு­வ­தாகும்.

இது அர­சி­ய­ல­மைப்புச் சட்­டத்தில் இல்­லாத ஒரு விடயம். ஒரு பிர­த­மரை ஜனா­தி­பதி நிய­மித்தால் அவரை ஏற்­றுக்­கொள்­ளலாம். நிரா­க­ரிக்­கலாம். நிரா­க­ரித்தால் அடுத்­த­வரை ஜனா­தி­பதி நிய­மிக்­கலாம். இரு­வ­ருக்­கு­மி­டையில் சபா­நா­ய­கரோ, பாரா­ளு­மன்­றமோ தீர்ப்­புச்­சொல்ல முடி­யாது.

எனவே, இன்று சபா­நா­யகர் செயற்­பட முனை­வது அர­சி­ய­ல­மைப்­பிற்கு அப்பால் ஒரு புரட்­சி­கர வழி­யாகும். பொது­வாக புரட்­சிகள் வெற்­றி­பெற்றால் சட்­ட­பூர்வம் தோல்­வி­ய­டைந்தால் சட்­ட­வி­ரோதம் என்­பார்கள். இச்­செ­யற்­பா­டு­களை யாரும் நீதி­மன்றில் கேள்­விக்­குட்­ப­டுத்தி ஒரு தீர்ப்பைப் பெறா­விட்டால் எதிர்­கா­லத்தில் வரு­கின்ற சபா­நா­ய­கர்­களும் இவ்­வா­றான சூழ்­நி­லை­களில் இந்த நடை­மு­றையைப் பின்­பற்­றலாம்.

இந்தப் புரட்­சி­வ­ழிக்குப் பின்னால்

நியாயம் இருக்­கின்­றதா?

நியா­யங்கள் தவ­றும்­போ­துதான் உலகில் அதி­க­மான புரட்­சிகள் ஏற்­ப­டு­கின்­றன. ஜனா­தி­ப­திக்கு பிர­த­மரை நீக்கும் அதி­காரம் உண்டு. UPFA யின் வெளி­யேற்­றத்­துடன் முன்னாள் பிர­த­மரின் பலம் வெளிப்­ப­டையில் 107 ஆகக்­கு­றைந்­த­தனால் அவரை ஜனா­தி­பதி நீக்­கி­யது சட்­ட­பூர்­வ­மாகும். ஆனால் 107 பெரும்­பான்மை இல்லை என்று அபிப்­பி­ராயம் கொண்ட ஜனா­தி­பதி 95 ஐப் பெரும்­பான்­மை­யாக அபிப்­பி­ராயம் கொண்­டது எவ்­வாறு சரி­யாகும்.

மட்­டு­மல்ல, அவ­ரது பேச்­சுக்­க­ளி­லெல்லாம் ரணிலின் குறை­க­ளினால் நீக்­கி­ய­தாக பேசு­கின்றார். அவர் ஏற்­க­னவே ரணிலை நீக்க முயற்­சித்­த­தையும் கூறு­கின்றார் என்றால் அவர் வெளிப்­ப­டை­யா­கவே அதி­கார துஷ்­பி­ர­யோகம் செய்­ததை ஏற்­றுக்­கொள்­கின்றார். ஏனெனில் பிர­த­மரை நீக்­கு­வ­தற்­கான ஒரே­யொரு கார­ண­மாக பெரும்­பான்மை இன்­மை­யைத்தான் கொள்­ள­வேண்டும். அவர்­களின் பிரச்­சி­னைக்­காக பிர­த­மரை நீக்க முடி­யாது.

மட்­டு­மல்­லாமல் பெரும்­பான்மைக் குறைவில் ரணிலை விடவும் கீழே­யி­ருந்த ஒரு­வரை பிர­த­ம­ராக நிய­மித்து அவ­ருக்கு குறுக்­கு­வ­ழியில் பெரும்­பான்மை பெறு­வ­தற்­காக பாரா­ளு­மன்றை முடக்­கி­யது அதை­வி­டவும் அதி­கார துஷ்­பி­ர­யோ­க­மாகும். ஆனாலும் சட்­டப்­ப­டியே அனைத்­தையும் ஜனா­தி­பதி செய்­தி­ருக்­கின்றார்.

அவ்­வா­றாயின் சட்­டப்­படி செய்­தது எவ்­வாறு அதி­கார துஷ்­பி­ர­யோ­க­மாகும் என்ற கேள்வி இங்கு எழலாம். இதனைப் புரிந்­து­கொள்­வ­தற்கு கீழே தரப்­படும் கோட்­பாட்டைப் புரிந்­து­கொள்­ள­வேண்டும்.

Rule of Law and Rule by Law

Rule of Law என்­பது சட்­டத்தின் ஆட்­சி­யாகும். Rule by Law விற்கு தமிழ் தெரி­ய­வில்லை. இவற்றைப் புரிந்­து­கொள்­வ­தற்கு முதலில் ‘ Law’ என்ற சொல்லின் அர்த்­தத்தைப் புரிந்­து­கொள்­ள­வேண்டும். அதற்குள் செல்­லமுன் அடிப்­படைப் புரி­த­லுக்­காக சில உதா­ர­ணங்கள்.

சில நேரம் ஒரு சொல் பொது­வான அர்த்­தத்­திலும் (general meaning) குறித்த அல்­லது விசேட அர்த்­தத்­திலும் (specific meaning) பாவிக்­கப்­படும். சில­நேரம் இரண்­டிற்கும் இரண்டு சொற்கள் பாவிக்­கப்­படும். ஒரு சொல்லின் அர்த்­தத்தை சரி­யாகப் புரிந்­து­கொள்­வ­தற்கு அதன் denotation மற்றும் connotation அத்­தோடு அதன் use and usage ஐத் தெரிந்­தி­ருப்­பது உத­வி­யாக இருக்கும்.

உதா­ர­ண­மாக, accept ( ஏற்­றுக்கொள்) என்ற வினைச்­சொல்­லுக்­கான பெயர்ச்சொல் acceptance ( ஏற்­றுக்­கொள்­ளுதல்) ஆகும். ஆனால் கல்­வி­யியல் துறையில், மொழியியல் துறையில் சில இடங்­களில் accept என்ற சொல்லின் பெயர்ச்­சொல்­லாக acceptation என்ற சொல் பாவிக்­கப்­ப­டு­வ­துண்டு. இது விசேட அர்த்­தத்தில் பாவிக்­கப்­ப­டு­கின்­றது. இரண்டும் அடிப்­ப­டையில் ஏற்­றுக்­கொள்­ளல்தான்.

அதே­போன்­றுதான் decentralization என்ற சொல் சக­ல­வி­த­மான ‘அதி­கா­ரப்­ப­ர­வ­லாக்­க­லையும்’ குறிக்­கப்பயன்­ப­டுத்­தப்­படும். (general meaning). சில­நேரம் சில நிர்­வாக அதி­கா­ரங்­களைப் பகிர்­வ­தற்கு மாத்­திரம் பாவிக்­கப்­படும். (விசேட பொருள்) இலங்­கையில் இந்த விசேட பொரு­ளில்தான் இச்சொல் பாவிக்­கப்­ப­டு­கின்­றது.

எனவே, சில சொற்­க­ளுக்கு பொது­வான அர்த்தம் மற்றும் விசேட அர்த்தம் இருக்­கின்­றது என்­பதைப் புரிந்­து­கொண்டு ‘Law’ என்ற சொல்­லுக்கு வருவோம்.

பொது­வாக சகல சட்­டங்­க­ளையும் law என்று அழைக்­கப்­படும். (‘law’ , written law அர­சி­ய­ல­மைப்பில் வெவ்­வே­றாக வியாக்­கி­யா­னப்­ப­டுத்­தப்­பட்­டி­ருப்­பதை இங்கு யாரும் குழப்­பிக்­கொள்ள வேண்டாம். அது இத்­த­லைப்­பிற்­கு­ரி­ய­தல்ல). ஆனால் Rule of Law பற்­றிப்­பே­சும்­போது law என்ற சொல்லும் legislation என்ற சொல்லும் வேறு­ப­டுத்­தப்­ப­டு­கி­றது.

பாரா­ளு­மன்­றத்தால் நிறை­வேற்­றப்­படும் சட்­டங்கள் எல்லாம் legislation ஆகும். பொது­வான கருத்தில் அவை­களை law என்றும் அழைக்­கலாம். ஆனால் விசேட கருத்தில் குறிப்­பாக Rule of Law பற்­றிப்­பே­சும்­போது அவ்­வாறு அழைக்­க­மு­டி­யாது.

அதா­வது சகல lawவும் legislation ஆகும். ஆனால் சகல legislation உம் lawஅல்ல. இந்த வித்­தி­யா­சத்தைப் புரிந்தால் மேலே கூறப்­பட்ட இரண்டு கோட்­பாட்­டையும் புரிய முடியும். அதனைப் புரிந்தால்தான் இன்றைய பிரச்சினையின் அதிகார துஷ்பிரயோகத்தைப் புரிந்துகொள்ள முடியும்.

பாராளுமன்றத்தால் ஆக்கப்படுகின்ற சட்டம் முதலில் legislation எனும் வடிவத்தைப் பெறுகிறது. அந்த சட்டம் நீதியானதாக இருக்கலாம் (just law). அநியாயமானதாக இருக்கலாம் (unjust law). அநீதியான சட்டம் சட்டமாக இருக்கமுடியாது. எனவே அது law அல்ல.

இந்த சட்டம் நீதியானதா, அநீதியானதா? என்பதை நீதிமன்றம்தான் சொல்லமுடியும். ஒரு இந்திய சட்ட அறிஞர் சொன்னார், ஒரு legislation நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டு பொருள்கோடல் செய்யப்படும்வரை அது வெறும் legislation  தவிர அது ஒரு law அல்ல என்று. இதற்கு இன்னும் ஒரு காரணம் இந்தியாவில் சட்டம் ஆக்கியதன் பின்னும் சட்டத்தை நீதிமன்றில் கேள்விக்குட்படுத்தலாம். (post enactment judicial review). ஆனால் இலங்கையில் அது முடியாது.

அண்மையில் இந்தியாவில் திருமணம் முடித்தவர்களின் கள்ளத்தொடர்பு தொடர்பான சட்டத்தை நீதிமன்றம் ரத்துச் செய்தது. ஆனால் அது legislation இல்லை என்று கூறமுடியாது. ஏனெனில் பாராளுமன்றம் உருவாக்கிய சட்டம். ஆனாலும் அது law அல்ல.

இலங்கையில் judicial review of legislation இருந்திருந்தால் சிலவேளை மாகாணசபைத் தேர்தல் சட்டம் ‘ சட்டமல்ல’ என ரத்துச் செய்யப்பட்டிருக்கலாம். இலங்கையில் சட்டங்களை ரத்துச்செய்யத்தான் முடியாது. பொருள்கோடலுக்கூடாக ஓரளவு அர்த்தங்களை வழங்கலாம்.

இப்பொழுது மேற்சொன்ன இருகோட்பாடுகளுக்குள்ளும் வருவோம்.

RAule of Law என்­பது பாரா­ளு­மன்ற சட்­டத்தின் வார்த்­தைப்­பி­ர­யோகம் எவ்­வாறு அமைந்­த­போ­திலும் அது நியா­ய­மான, உரிய நோக்­கத்­திற்­காக மாத்­திரம் பாவிக்­கின்ற அர்த்­தத்தைக் கொண்­ட­தாக இருக்­க­வேண்டும். அதன்­படி ஆட்­சி­செய்­யப்­பட வேண்டும்.

உதா­ர­ண­மாக பாரா­ளு­மன்­றத்தை ஒத்­தி­வைக்­கின்ற அதி­காரம் ஜனா­தி­ப­திக்கு இருக்­கின்­றது. ஆனால் அவ்­வ­தி­காரம் இன்று ஜனா­தி­பதி பாவித்­தி­ருக்­கின்ற நோக்­கங்­க­ளுக்­காக வழங்­கப்­பட்­டது? அல்­லது பிர­த­மரை நீக்­கு­கின்ற அதி­காரம், நிய­மிக்­கின்ற அதி­காரம் அவ­ருக்கு இருக்­கின்­றது.

ஆனால் பெரும்­பான்மை இல்­லா­விட்­டாலும் கூடுதல் ஆச­னங்கள் உள்­ள­வரை நீக்­கி­விட்டு குறைந்த ஆச­னங்கள் உள்­ள­வரை நிய­மித்து குறுக்­கு­வ­ழியில் பெரும்­பான்மை பெறு­வ­தற்கா அவ்­வ­தி­காரம் வழங்­கப்­பட்­டது?

இது அதி­கார துஷ்­பி­ர­யோ­க­மில்­லையா? சட்டம் நியா­ய­மில்­லாமல் பிழை­யான நோக்­கத்­திற்­காக பாவிக்­கப்­ப­டு­வது சட்­டத்தின் ஆட்­சியா? எனவே, இங்கு Rule of Law நசுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. ஆனாலும் சட்­டத்தில் எழு­தி­வைத்­த­ப­டிதான் அனைத்தும் நடக்­கி­றது. இத­னைத்தான் Rule by Law என்­கி­றார்கள்.

Rule by Law என்­பது சட்­டத்தில் என்ன எழு­தப்­பட்­டி­ருக்­கின்­றதோ அதன்­படி நடப்­பது. அது நியா­யமா, இல்­லையா? ஜன­நா­ய­கமா, இல்­லையா? உரிமை மீறலா, இல்­லையா? எதைப்­பற்­றியும் கவ­லை­யில்லை. எழுத்தில் உள்­ள­படி நடந்­தி­ருக்­கின்றோம் என்­பது. இது Rule of Law விற்கு எதி­ரா­னது.

இரண்டாம் உல­க­மகா யுத்­தத்தில் நாசி ஜேர்­ம­னியில் பலர் gas chamber இல் தள்­ளப்­பட்­டெல்லாம் கொல்­லப்­பட்­டார்கள். ஆனால் அவர்கள் சட்­டப்­ப­டிதான் கொல்­லப்­பட்­டார்கள். ஏனெனில் அவ்­வாறு கொல்­வ­தற்கு அனு­ம­தி­ய­ளிக்­கின்ற சட்டம் அன்று இருந்­தது.

யுத்­தத்தின் பின்னர் சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் தண்­டிக்­கப்­பட்­டார்கள். நாங்கள் சட்­டப்­ப­டிதான் கொன்றோம் என்று அவர்கள் வாதா­டி­னார்கள்.

ஆம், சட்டம் உங்­க­ளுக்கு அனு­ம­தி­ய­ளித்­த­துதான். ஆனாலும் அது சட்­ட­மு­மல்ல, சட்­டத்தின் ஆட்­சி­யு­மல்ல. அது Rule by Law. அதை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது என்று Nuremberg trial இல் முடி­வு­செய்­யப்­பட்டு தண்­டிக்­கப்­பட்­டார்கள்.

அதே­போன்­றுதான், இன்­னு­மொரு ஐரோப்­பிய நாடு, பிரித்­தா­னியா என்று நினைக்­கின்றேன். கைதிகள் ஒரு முகாமில் அடைத்­து­வைக்­கப்­பட்­டார்கள். ஒரு நாள் தற்­செ­ய­லாக முகாம் தீப்­பி­டித்­து­விட்­டது. உள்ளே கைதிகள் கத­றி­னார்கள்; கதவைத் திறந்­து­வி­டும்­படி. அதற்குப் பொறுப்­பா­னவர் திறக்­க­வில்லை. சட்­டப்­படி உய­ர­தி­கா­ரியின் உத்­த­ர­வில்­லாமல் கத­வைத்­தி­றக்க எனக்கு அதி­கா­ர­மில்லை என்று மறுத்­து­விட்டார். அனை­வரும் தீயில் கருகி மாண்­டு­விட்­டார்கள்.

சட்­டப்­படி அவ­ருக்கு திறக்க அதி­கா­ர­மில்­லைதான். ஆனாலும் அந்த இடத்தில் அந்­தச்­சட்டம் அந்­தப்­பொ­ருளில் பார்க்­கப்­பட முடி­யாது. அது Rule of Law அல்ல. அது Rule by Law என்று சம்­பந்­தப்­பட்­டவர் தண்­டிக்­கப்­பட்டார்.

இன்று இலங்­கை­யிலும் வெளிப்­ப­டையில் எழுத்தில் எல்லாம் இருக்கிறது. ஆனால் பொருள் அதுவல்ல. எனவே இங்கும் இவ்விடயங்களில் சட்டத்தின் ஆட்சிக்குப் (Rule of Law) பதிலாக Rule by Law நடக்கிறது.

நிறைவேற்றுத்துறைத் தலைவர் இவ்வாறு செய்யும்போது சட்டவாக்கத்துறைத் தலைவர் அதனை ஒரு புரட்சிகர முறையில் முகம் கொடுக்கின்றார். தைரியமான போராட்டம்.

வெல்லப்போவது யார்?
-Vidivelli