Verified Web

இதுதானோ அரசியல்

A.J.M.Nilaam

சிரேஷ்ட முஸ்லிம் அரசியல் ஆய்வாளர், எழுத்தாளர்

 

8 days ago A.J.M.Nilaam

2015ஆம் ஆண்டு  ஜனா­தி­பதித்  தேர்­தலின்  இறு­தி­கட்­டத்தில் வேட்­பாளர் மகிந்த  ராஜபக் ஷ  தமி­ழ­ரையும் முஸ்­லிம்­க­ளையும்   இனி விரும்­பி­ய­வாறு  ஆட  விட மாட்டேன் எனக் கூறி­யி­ருந்தார். இப்­படிக் கூறினால், சிங்­க­ள­வரின்  வாக்­கு­களை  முழு­மை­யா­கவே  பெற­மு­டியும் என நினைத்­துத்தான்  இவர் இப்­படிக் கூறி­யி­ருந்தார். புலி­களைப்  போரில்  வென்று  இவர் சர்­வ­தே­சத்­துக்கும் அஞ்­சாது   ஐ.நா.வுக்கும் தைரி­ய­மாக  முகம் கொடுத்­தி­ருந்­ததால் சிங்­க­ளவர்  மத்­தியில்  இவ­ரது கீர்த்தி  அப்­போது  உச்­ச­கட்­டத்தில்  இருந்­தது. 

தன்­னி­ட­மி­ருந்த நிறை­வேற்று  அதி­கா­ரத்­துக்கும் மேலாக 18 ஆம் ஷரத்­தையும்  அதற்கு  முன் இயற்­றிக்­கொண்­டி­ருந்தார். அதன்­படி  பொலிஸ்,  தேர்தல்,  நீதிக்­கட்­ட­மைப்பு, அரச ஊழியர்  யாவும்  அவ­ரது ஏக­போ­கத்­துக்கு உள்­ளாகி மிகப்­பெரும் வலி­மை­யோடு  இருந்தார். 

2009  ஆம் ஆண்டு  புலி­களைப் போரில்  வென்ற  தள­ப­தி­யான சரத்­பொன்­சேகா ஜனா­தி­பதித் தேர்­தலில்  தன்­னோடு நேர­டி­யாகப் போட்­டி­யிட்­ட­போது  சதிக்­குற்­றச்­சாட்டு   சுமத்தி   பகல் வேளை­யி­லேயே   அவரைத்  தூக்கிச் செல்ல வைத்து  சிறைப்­ப­டுத்­தினார்.  பிறகு  கொடுப்­ப­ன­வு­க­ளையும் நிறுத்தி   சன்­மா­னங்­க­ளையும்  மீளப் பெற்­றுக்­கொண்டார். தனது  திவி­நெ­கும  சட்ட மூலத்­திற்கு எதி­ராகத் தீர்ப்பு  வழங்­கி­ய­தற்­காக உயர் நீதி­ய­ர­ச­ரான  ஷிராணி  பண்­டா­ர­நா­யக்­க­வையும்  பத­வி­யி­ழக்கச் செய்­தி­ருந்தார்.  அப்­போது  இவ­ரது   செயற்­பா­டு­களை விமர்­சிக்க பிக்­கு­களும் கூட முன்­வ­ர­வில்லை. 

எனினும்  மாது­ளு­வாவே  சோபித தேரர் மட்டும்  சரத் பொன்­சேகா,  ஷிராணி பண்­டா­ர­நா­யக்க  ஆகி­யோ­ருக்­காகக்  குரல் கொடுத்தார்.  அத்­தோடு அவர்  சந்­தி­ரி­கா­வோடும்  ரணி­லோடும்   தொடர்­பு­கொண்டு  தனது   'சமூக நீதிக்கான இயக்கம்' எனும் அமைப்பின்  நல்­லாட்­சிக்­கொள்­கையை முன்­வைத்தார். 

ஒரு  பொது  அபேட்­ச­கரைத் தெரிவு  செய்­வதன் மூலம் அவரை  சகல  கட்­சி­களும்  வெற்­றி­பெற  வைத்து அவர்  வென்­றபின்  தனி­ம­னித நிறை­வேற்று  அதி­கா­ரத்தை பாரா­ளு­மன்­றத்­துக்கு முழு­மை­யா­கவே பாரப்­ப­டுத்­துவ தெனவும்  முடிவு செய்­தனர். அப்­போது   சர்­வோ­தயத் தலைவர் கலா­நிதி  ஏ.டி. ஆரி­ய­ரத்ன  அல்­லது முன்னாள் நீதி­ய­ரசர் ஷிராணி  பண்­டா­ர­நா­யக்­கவே  இந்த அடிப்­ப­டைக்குப்  பொருத்­த­மா­னவர் என மாது­ளு­வாவே சோபித தேரர்  குறிப்­பிட்­டி­ருந்தார்.  எனினும்  ஏ.டி.ஆரி­ய­ரத்­னவும்   ஷிராணி   பண்­டா­ர­நா­யக்­கவும் அதற்கு உடன்­ப­ட­வில்லை. 

மஹிந்­தவின்  குணா­தி­ச­யங்­களை  அவர்கள்  விளங்­கி­யி­ருந்­த­தாலும்,  அர­சி­யலில் போதிய  ஈடு­பாடு  அவர்­க­ளுக்கு இல்­லா­தி­ருந்­த­தா­லுமே   இதற்கு  அவர்கள் இணங்­க­வில்லை. பிறகு  இவர்­களைப் போன்­ற­வர்கள்  வேறெங்கும்   இருக்­கி­றார்­களா?  என சல்­லடை  போட்டுத் தேடியும் கூட சிலரைத் தொடர்பு  கொண்­ட­போது ஒரே­ய­டி­யாக மறுத்து விட்­டார்கள்.  

காரணம்  மஹிந்­த­வோடு நேர­டி­யாக  மோது­வது கருங்­கல்­லோடு  தலையை  மோதிக்­கொள்­வது போன்­ற­தே­யாகும் என  அனை­வரும்  அஞ்­சி­ய­தே­யாகும். மஹிந்த எதையும்  சட்டை செய்­ய­வில்லை.  யாரும்  அவ­ரோடு   போட்­டி­யிட  முன்­வ­ரு­வார்கள் என அவர் எண்­ண­வே­யில்லை. 2005 ஆம் ஆண்டு  தமி­ழரின்  வாக்­கு­களைத்  தடுத்து ரணிலைத் தோற்­க­டித்­த­தையும்  2010  ஆம் ஆண்டு  சரத் பொன்­சே­காவை கைதாக்கி தோற்­க­டித்­த­மையும்  எண்­ணிப்­பார்த்தார். ரணில் அல்­லது சஜித்  அல்­லது சரத் வரலாம் என்றே  பலர் எண்­ணி­னார்கள். எனினும்,  இறுதி நேரம் வரை  எவரும்  கிடைக்­கா­ததால் சந்­தி­ரிக்­காவின்  முயற்­சிப்­படி மஹிந்­தவின்  கட்சி செய­லா­ள­ரான  மைத்­தி­ரி­பால சிறி­சே­னவே போட்டி வேட்­பா­ள­ரானார்.  

இவ­ரது  தெரிவு ஸ்ரீலங்கா  சுதந்­திரக் கட்­சி­யி­லி­ருந்தும் வாக்­கு­க­ளைப்­பெற உதவும் எனக் கரு­தப்­பட்ட போதும்  மாது­ளு­வாவே  சோபித தேரர்  இந்த தெரிவை விரும்­ப­வில்லை. மைத்­திரி அதிக காலம்  மஹிந்­த­வுக்கு ஒத்­து­ழைப்பு  வழங்­கி­யவர்.  மனோ­திடம் குறைந்­தவர்.  தாழ்வுச் சிக்கல் உள்­ளவர்.  பிறரின் தீர்­மா­னங்­களில் தங்­கு­பவர் எனும் கணிப்­புக்­க­ளோடு, கட்சி சார்ந்­தவர் பொது வேட்­பா­ள­ராக முடி­யாது  எனவும்  அவர் கூறினார். 

மைத்­திரி விட­யத்தில் மாது­ளு­வாவே சோபித தேரர்  கூறி­யது அவ்­விதம்.  அந்­நி­லையில் ஐக்­கி­ய­தே­சிய கட்­சியைச் சேர்ந்த ஆனந்த தேரர்  சந்­தி­ரி­கா­வி­டமும்  மஹிந்­த­வி­டமும், தோல்­வி­யுற்ற  ரணிலால் வெல்ல முடி­யாது எனக் கூறி­விட்­ட­தா­லேயே மைத்­தி­ரிக்கு  சந்­தர்ப்பம் வாய்த்­தது.  அதன்­படி மஹிந்­தவை தோற்­க­டிப்­ப­தையே முன்­னி­லைப்­ப­டுத்திக் கொண்டு சந்­தி­ரிக்­காவின் சிபா­ரி­சுப்­படி  மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வையே அனை­வரும்  ஏற்­றுக்­கொண்­டி­ருந்­தார்கள். அதன் பின்­புதான்  வேறு­வ­ழி­யின்றி ரணிலும்  அதை ஏற்­றுக்­கொண்டு மைத்­தி­ரிக்­குத்­த­னது முழு ஒத்­து­ழைப்­பையும்  வழங்கி வெற்­றி­பெறச் செய்தார். ஒரு சிறிய எண்­ணிக்கை வித்­தி­யா­சத்­தி­லேயே  மைத்­திரி வெற்றி பெற்­றி­ருந்தார். 

ஜனா­தி­பதித் தேர்­தலைப் பொறுத்­த­வரை அதில் முழு­நாடும்  ஒரே தொகை­யாகும். எனவே அத்­த­கைய  தேர்­தலில் வெற்­றி­பெற வேண்­டி­ய­த­ரப்பு  சிங்­கள   மக்­களின் வாக்­கு­களை மட்­டுமே   நம்­பி­யி­ருக்­கக்­கூ­டாது.  100க்கு 26 வீத­முள்ள  சிறு­பான்­மை­களின் வாக்­கு­க­ளையும் பெற்ற தட்டே  கனக்கும். ஏனெனில்  சிங்­கள  வாக்­குகள்  இரு­த­ரப்­பு­க­ளுக்கும்  பங்­கி­டப்­ப­டு­வதால்  சிறு­பான்­மை­களின் வாக்­கு­களே வெற்றி தோல்­வியை  நிர்­ண­யிக்கும்.  

எனினும்,  மஹிந்த யுத்த  வெற்­றி­யாலும்  நிறை­வேற்று  அதி­கா­ரத்­தாலும் 18 ஆம் ஷரத்தின் வலி­மை­யாலும்  இந்த யதார்த்த நிலையை  அறிந்து கொள்­ள­வில்லை. 

சிங்­கள வாக்­குகள்  80 வீதம்  கிடைக்கும் என்று அவர் எண்­ணி­யி­ருந்­ததால் சிறு­பான்­மை­களின்  வாக்­கு­களைப் பெற அவர் சிறி­த­ள­வேனும்  முயற்சிக்கவே இல்லை. மைத்­திரி அவ­ரது  கட்­சியை  விட்டும்  பிரிந்து  அவ­ருக்கு  எதி­ராகக் கேட்­டதால்  மகிந்­த­வுக்கு நாடு முழுக்­கவும்  10 வீதம் குறைந்­தது. இந்­நி­லையில் சிறு­பான்­மை­களின்  வாக்­குகள் 100 வீதம்  மஹிந்­த­வுக்கு  கிடைக்­கா­ததால்  அவர் சிறிய  வித்­தி­யா­சத்தால்  தோல்­வி­யுற நேர்ந்­தது. அன்று முதல் தொட­ரா­கவே அவர்  சிறு­பான்­மை­க­ளால்தான் நான்  தோற்றேன். தமி­ழர்கள் எனக்கு  வாக்­க­ளிக்­கா­தி­ருந்­த­தற்குக்  காரணம்  இருக்­கலாம். முஸ்­லிம்கள் ஏன் அறவே வாக்­க­ளிக்­க­வில்லை எனக் கேள்யியெழுப்பினார்.

உண்­மைதான்  வழ­மை­யா­கவே ஒட்டு மொத்­த­மாக 100 க்கு 70 வீதம்   ஐக்­கிய  தேசி­யக்­கட்­சிக்கு  முஸ்­லிம்கள் வாக்­க­ளிப்­ப­துண்டு. 30  வீதம்  ஸ்ரீலங்கா  சுதந்­திரக் கட்­சிக்கு வாக்­க­ளிப்­பார்கள்.  எனினும்  அத்­தேர்­தலில்  முஸ்­லிம்கள் 100 வீதம் மஹிந்த ராஜபக் ஷவுக்கு  எதி­ரா­கவே  வாக்­க­ளித்­தி­ருந்­தார்கள். இன்றேல்  சிறிய  வித்­தி­யா­சத்தில்  அவர் தோற்­றி­ருக்­க­மாட்டார். 

இதற்குக் காரணம் 2012 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு  வரை இவ­ரது  ஆட்­சிக்­கா­லத்தில் முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ரான  செயற்­பா­டுகள்  நாடு முழுக்க  தலை­வி­ரித்­தா­டி­ய­தே­யாகும்.  இவ­ரது அரசு உரி­ய­மு­றையில் நட­வ­டிக்கை எடுத்து  அதை அடக்­க­வில்லை.  

அது­பற்றி இவர்  மெத்­தனப் போக்­கையே  கையாண்­டி­ருந்தார்.  முஸ்லிம்  வாக்­குகள்   ஐக்­கிய  தேசியக் கட்­சிக்­கு­ரி­யவை. இச்­செ­யற்­பா­டுகள் மூலம் சிங்­கள  எழுச்சி மிகைப்­ப­டு­மாயின் அவர்­களின்  வாக்­குகள்  தனக்கு மேலும் அதி­க­ரிக்கும் என இவர் எண்­ணி­யி­ருக்­கலாம். அந்த அள­வுக்கு  மிகவும்  இளக்­கா­ர­மா­கவே இவர் சிறு­பான்­மை­களின்  வாக்­கு­களை  எண்­ணி­யி­ருக்­கிறார்.

அடம்­பன்­கொ­டியும்  திரண்டால்  மிடுக்கு  எனும் உண்மை  இவ­ருக்கு  தெரி­யாமற் போயிற்று  ஒரு தலைப்­பட்ச  இறு­தி­யுத்­தத்தால் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான  அப்­பாவித்  தமி­ழர்­களும் அழி­வுற்று தமி­ழ­ருக்­கான தீர்­வையும்  இவர் மறுத்­தி­ருக்­கின்ற நிலையில்  தமிழர்கள் ஒட்­டு­மொத்­த­மா­கவே  இவ­ருக்­கெ­தி­ராக வாக்­க­ளித்­திருந்தார்கள். சிங்­க­ளவர் மத்­தி­யிலும் பல புத்தி ஜீவிகள்  இவ­ரது சர்­வா­தி­கார செயற்­பா­டு­க­ளுக்கு எதி­ராக  முன்­நின்று  உழைத்­தனர். 

மகிந்த  அப்­போது  மூன்றாம் முறையும் ஜனா­தி­ப­தி­யா­கு­வ­தற்­காக 17 ஐக்­கிய  தேசியக் கட்சி  எம்.பிக்­களை  கட்சி மாற்றி தன்­னோடு இணைத்து  18ஆம் ஷரத்தை  இயற்­றிக்­கொண்­டி­ருந்தார். அதன்­படி  பொலிஸ், தேர்தல், நீதிக்­கட்­ட­மைப்பு, அரச ஊழியர்  என்­ப­ன­வற்றின்  முழு அதி­கா­ரங்­க­ளையும்  உரித்­தாக்கிக் கொண்­டி­ருந்தார்.  இவை­களே  இவ­ருக்கு  எதி­ராக சிங்­கள  புத்­தி­ஜீ­விகள் திரும்பக் கார­ண­மா­யிற்று.  

உண்­மையில்  நிறை­வேற்று அதி­கா­ரத்­து­டனும் 18 ஆம் ஷரத்­து­டனும்  அசு­ர­வ­லிமை பெற்­றி­ருந்த  மஹிந்­த­வோடு  அப்­போது  மோதி வெல்­வ­தென்­பது  பயங்­கர முயற்­சி­யா­கவே  இருந்­தது. இந்தக் கட்­டத்தில் மைத்­திரி முன்­வந்­ததைப்  பாராட்­டித்தான்  ஆக­வேண்டும்.  

இதைப் பற்றி அவர் ஒரு முறை குறிப்­பி­டு­கையில் நான்  தோல்­வி­யுற்­றி­ருந்தால் ஆறடிக் குழியில்  புதைக்­கப்­பட்­டி­ருப்பேன் என்றார். அவ­ரது  மகள் அப்­போ­தைய நிலை­பற்றி எழு­து­கையில்  எனது அண்ணன்  பாது­காப்பு  தேடி இடத்­துக்­கிடம்  மாறி நின்றார். ஹோட்­டல்­க­ளிலும்  தங்க முடி­யா­தி­ருந்­தது. 
இவரது அடையாள அட்டை  எல்லா ஹோட்டல்களுக்கும் வழங்கப்பட்டிருந்ததாகக் கேள்விப்பட்டிருந்தார். 
மைத்திரியின்  மனைவியும்  மகளும்  பயணிக்கும்   காருக்கு குண்டு வைக்கப்படுவதாகவும் புரளி கிளப்பப்பட்டதாக மகள் தனது  நூலில்  எழுதியிருந்தார். ஆக அந்த  நிலைமை மைத்திரிக்கு   ஏற்படாதிருக்க ரணிலே  அப்போது   பக்கத் துணையாக இருந்திருக்கிறார். 

அன்று  மஹிந்தவோடு  இவருக்கு ஏற்பட்ட கோபத்தினாலேயே  ரணிலுடன் சேர்ந்தார். இப்போது  ரணிலோடு  ஏற்பட்ட  கோபத்தினாலேயே மஹிந்தவோடு  சேர்ந்திருக்கிறார். ஆக இவர் தனது  சுயவிருப்பு வெறுப்பை  முன்வைத்தே தேசிய  அரசியலை வழிநடத்திக் கொண்டிருப்பது தெளிவாகிறது. 

அன்று  மஹிந்தவால்  தனக்கு  பாதுகாப்பு இல்லை என்றவர். இப்போது  ரணிலுக்கு   வழங்கப்பட்டிருந்த 1008 மெய்ப் பாதுகாவலர்களை  வாபஸ் வாங்கிவிட்டு வெறும் 10 பேரை  மட்டுமே  வழங்கியிருக்கிறார்.  அலரிமாளிகையிலிருந்து ரணிலை வெளியேறச்  சொல்கிறார். 

ரணிலின் எம்.பி.க்களுக்கு  அமைச்சுக்களை வழங்க மஹிந்தவின்  ஆட்சியை  வலுப்படுத்துகிறார். 
ஐக்­கிய தேசியக் கட்­சியின்  எம்.பி.க்கள்  மென்­மேலும் வந்து  சேர்ந்து அறுதிப் பெரும்­பான்மை  பெறும்­வரை  சபா­நா­ய­க­ரையும் மீறி  பாரா­ளு­மன்­றத்தை மூன்று வாரம் ஒத்தி  வைத்தார். 

சட்­டமா அதி­ப­ராலும்  செயற்­ப­ட­மு­டிய வில்லை.  இவர் 2015  ஆம் ஆண்டு  ஜனா­தி­பதித் தேர்­தலில்  பொது அபேட்­ச­க­ரா­கவே போட்­டி­யிட்டு வென்றார்.  பின்பு ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் தலை­வ­ராக  ஆகிக்­கொண்டு ரணி­லோடு கட்சி மோதல் அர­சி­ய­லையே  செய்­தி­ருக்­கிறார். இரு­முறை ஜனா­தி­ப­தி­யாக  இருந்த   ம----ஹிந்த  ராஜபக் ஷவுக்கு மூன்றாம் முறையும்  ஜனா­தி­ப­தி­யாக வேண்டும் எனும்  ஆசை ஏற்­பட்டே ஐக்­கி­ய­தே­சியக் கட்சி எம்.பி.க்களில்  17 பேரை எடுத்து  18 ஆம் ஷரத்தை  நிறை­வேற்றிக் கொண்டார்.  இப்­போதும் கூட  அவர் பாணி­யி­லேயே  மைத்­தி­ரிபால மஹிந்­தவை சேர்த்துக் கொண்டு அதன் வழி­யி­லேயே போகிறார்.  ஒரு முறை  ஜனா­தி­ப­தி­யாக  ரணிலைப் பயன்­ப­டுத்திக் கொண்டு இப்­போது இரண்டாம் முறையும்  ஜனா­தி­ப­தி­யாக  ஆசைப்­பட்டு எதிர்த்­த­ரப்பில்  அடுத்­த­முறை ரணில் மோத­வி­ருப்­ப­தாலும் மஹிந்­த­வுக்கு  மூன்றாம்  முறை கேட்க முடி­யா­த­தாலும்  மஹிந்­தவை பிர­த­ம­ராக்­கு­வதன் மூலம்  அந்த இலக்கை  அடைய  நினைக்­கி­றாரோ? தற்­போது   மைத்­தி­ரி­யிடம்   ஒருவர்  நீங்கள்  மஹிந்­த­வுடன்  சேர்ந்­தி­ருக்­கி­றீர்கள்.  அடுத்த  தேர்­தலில்  உங்கள் சின்னம் என்ன எனக் கேட்­டாராம். கணவன், மனைவி  பிரிந்­து­விட்டு பிள்­ளை­க­ளுக்­காக மீண்டும்  சேர்ந்து கொள்­வ­தில்­லையா?  என மைத்­திரி கூறி­னாராம். 

இதன் மூலம்  மஹிந்­த­வோடு  இவ­ருக்கு ஏற்­பட்ட சொந்த கோபத்­திற்­கா­கவே இவர் அர­சியல்  செய்­தி­ருப்­பது தெளி­வா­கி­றது.  இவர்­க­ளது  பிள்­ளைகள்   ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சி­யி­னரே  என்­பதும்  தெரி­கி­றது. 
இந்த எண்­ணத்தில்  தான் இவர்  இத்­தனை காலமும்   இருந்­தி­ருப்­பா­ராயின்   மாற்­றாந்­தாயின் மனப்­பான்மை யுட­னேயே இவர் இருந்­தி­ருக்க வேண்டும். 

இத்­த­கைய அர­சியல்  சித்து விளை­யாட்­டு­களால்   நாட்டு  மக்­களின் நிலை என்­னாகும் தெரி­யுமா?  பூனைக்கு விளை யாட்டு எலிக்கு  சாவு என்­றாகும்.  எள்ளு காய்­கி­றது எண்­ணெய்க்கு; எலிப்­பி­ழுக்கை  ஏன் காய வேண்டும்.  இதுவா  நல்­லாட்சி சர்­வ­தேச  பிரச்சினைகளுக்கும் உள்நாட்டுப் பிரச்சினைகளுக்கும் முகம் கொடுக்க வேண்டிய இந்த  இறுதிக்  கட்டத்தில்  இது தேவைதானா?
-Vidivelli