Verified Web

தனிமைப்படுத்தப்படும் மைத்திரி

9 days ago Administrator

ஒலுவில் பிஸ்­ருள் ­ஹாபி

தென்­னிந்­திய திரைப்­ப­டங்­களில் திடீ­ரென அதி­ர­டி­யாகத் தோன்றும் கதா­நா­ய­கனும் இடம்­பெறும் சண்­டைக்­காட்­சி­களும்

படத்தின் கருப்­பொ­ருளை மாற்றி நாம் ஊகித்­தது ஒன்­றா­கவும் படத்தின் முடி­வு­களோ வேறொன்­றா­கவும் அமையும். அந்த வகை­யிலே எமது நாட்டின் அர­சி­யலும் திகில்­மிக்க ஒன்­றாக மாறி இருக்­கின்­றது.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் அதி­ரடி நட­வ­டிக்­கை­களை அடுத்து பிர­த­ம­ராக இருந்த ரணில் விக்­ர­ம­சிங்க பதவி நீக்­கப்­பட்டு மஹிந்த ராஜ­பக்­ ­ஷ நிய­மிக்­கப்­பட்­டி­ருந்தார்.

இந்த நிய­ம­ன­மா­னது, அர­சி­ய­ல­மைப்­பிற்கு அமை­வா­னது அல்­லது முர­ணா­னது என்­ப­தற்கு அப்பால் தென்­னி­லங்கை அர­சியல் எவ்­வா­றான அதிர்­வ­லை­களை ஏற்­ப­டுத்தப் போகி­றது என்று நோக்­கு­மி­டத்து முழு சர்­வ­தே­சத்­திற்கும் ஓர் அதி­ருப்­தி­யையும் ஏமாற்­றத்­தி­னையும் ஏற்­ப­டுத்­தி­ய­தோடு வேறு­பட்­டதோர் அர­சியல் பாதைக்­கான அஸ்­தி­வா­ரத்­தி­னையும் இட்­டி­ருக்­கின்­றது.

இங்கு ஜனா­தி­பதி தனக்­குள்ள அதி­கா­ரத்­தினைக் கொண்டு புதிய பிர­த­மரை நிய­மித்­தி­ருந்த போதிலும் அதற்­கான அங்­கீ­கா­ரத்­தினை அறுதிப் பெரும்­பான்­மை­யோடு பாரா­ளு­மன்­றமே வழங்க வேண்டும்.

 இந்­நி­லையில் ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்பு 95 ஆச­னங்­க­ளையும் ஐக்­கிய தேசியக் கட்சி 106 ஆச­னங்­க­ளையும் மக்கள் விடு­தலை முன்­னணி 06 ஆச­னங்­க­ளையும் தற்­போது எதிர்க்­கட்­சி­யாகத் திகழும் தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பு 16 ஆச­னங்­க­ளையும் தன்­ன­கத்தே கொண்­டுள்­ளன. இந்­நி­லையில் 113 எனும் அதிகப் பெரும்­பான்­மையை பெறு­மி­டத்து ஆட்­சியின் ஸ்திரத்­தன்­மையை பேண­மு­டியும்.

இந்­நி­லையில் பல கட்­சித்­த­க­வல்கள் இடம் பெற­லா­மென எல்­லோரும் எதிர்­பார்த்­தி­ருந்த வேளையில், அதிலும் ஐக்­கிய தேசியக் கட்­சியில் தலை­மைத்­துவ போட்­டியும் அதி­ருப்­தியும் வழ­மைபோல் தலை­தூக்கி கட்சி பல சித­றல்­களை அடை­யும  என்­பதே எல்­லோ­ரி­னதும் எதிர்­பார்ப்­பாக அமைந்­தி­ருந்­தது.

ஆனால் அதன் எதிர்­பார்ப்பு தலை­கீ­ழாக மாறி­ய­தோடு முஸ்லிம் காங்­கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ், தமிழர் முற்­போக்கு முன்­னணி போன்ற சிறு­பான்மை கட்­சி­களும் ஜாதிக ஹெல உறு­மய போன்ற கட்­சி­களும் தமது ஆத­ர­வினை ரணில் விக­ர­ம­சிங்­க­விற்கு வழங்­கு­வ­தற்­கான ஒப்­பு­தலை வழங்­கி­யி­ருந்­தன.

இந்­நி­லையில் பாரா­ளு­மன்­றத்­தினை சபா­நா­யகர் அவ­ச­ர­மாக கூட்­ட­கோ­ரிய வேளையில் வரும் 14 ஆம் திக­தி­வரை பாரா­ளு­மன்ற கூட்டத் தொட­ரினை அரசு ஒத்­தி­வைத்துள்ளது.

இச்­செ­யற்­பா­டா­னது அரசு பெரும்­பான்­மையை நிரூ­பிக்க முடி­யாத இய­லா­மையின் வெளிப்­பா­டா­கவும் ஜன­நா­ய­கத்­திற்கு விரோ­த­மான செயற்­பா­டா­கவே எல்­லோ­ரையும் கருதச் செய்­தது.

இவ்­வா­றான ஜனா­தி­ப­தியின் செயற்­பா­டா­னது சர்­வ­தேச மட்­டத்தில் தனக்­கி­ருந்த நற்­பெ­யரை அப­கீர்த்­திக்­குட்­ப­டுத்­து­வ­தோடு நாட்டு மக்­களின் எதிர்ப்­ப­லை­க­ளையும் அதி­ருப்­தி­யையும் ஏற்­ப­டுத்­து­வ­தா­கவே அமைந்­தி­ருக்­கின்­றன. அதிலும் ஊழல்­க­ளுக்கு எதி­ரா­கவும் , அரா­ஜ­கங்­க­ளுக்கு எதி­ரா­கவும் நல்­லாட்­சியை வேண்டி யாரைத் தோற்­க­டிக்க வேண்டும் என்­ப­தற்­காக மக்கள் மைத்­தி­ரிக்­கான ஆணையை வழங்­கி­னார்­களோ அவ­ரையே மீண்டும் மைத்திரி­பால சிறி­சேன அரி­ய­ணையில் ஏற்­றி­ய­மை­யா­னது எவ­ராலும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாத ஒன்­றாக மாறி­யி­ருக்­கின்­றது.

இது தொடர்­பாக தனது வெற்­றிக்­காக தன்­னோடு அய­ராது தோள் நின்று உழைத்த ஏனைய கட்­சி­க­ளோ­டா­வது கலந்­தா­லோ­சித்­தி­ருக்­கலாம். அல்­லது மஹிந்த ராஜபக் ஷ தவிர்ந்த அக்­கட்­சியின் அவர் சார்ந்த வேறு ஒரு­வ­ரை­யாது நிய­மித்­தி­ருக்­கலாம். இவை கட்­சியைப் பலப்­ப­டுத்தும் செயல் என நோக்­கு­வ­தோடு இன்று ஜனா­தி­பதி இக்­கட்­சி­களை மீளப்­பேச்­சு­வார்த்­தை­க­ளுக்கு அழைப்­பதில் நியாயத் தன்­மை­யி­னையும் கொண்­டி­ருந்­தி­ருக்கும்.

இப்­போது எல்லாம் நிறை­வ­டைந்­தபின் பேச்­சுக்கு அழைப்­ப­தனை திரு­மணம் எல்லாம் முடிந்து அனைத்தும் நிறை­வ­டைந்­ததன் பின் விருந்­துக்கு அழைக்கும் செய­லா­கவே கரு­த­வேண்டி இருக்­கின்­றது.

மறு­மு­னையில் இப்­ப­த­வி­யா­னது மஹிந்த ராஜபக் ஷவினைப் பொறுத்­த­மட்­டடில் யானைப்­ப­சிக்கு சோளப்­பொ­ரி­யா­கவே அமைந்­தி­ருக்கும். இது­வரை சுதந்­தி­ரக்­கட்சி ஐக்­கிய தேசியக் கட்­சியின் அரசை விட்டு வெளி­யேற வேண்டும் என்­பதே அவ­ரது நிலைப்­பா­டாக இருந்­தது.

இந்­நி­லையில் ஒரு கல்லில் ஒரு மரத்­தி­னையே சாய்க்கும் செயற்­பாட்டில் கன­கச்­சி­த­மாக செயற்­பட்டு வெற்­றி­பெற்­றி­ருக்­கிறார் என்று கூற வேண்டும்.

இவ்­வா­றான ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் செயற்­பா­டா­னது தனக்கு அர­ணாக இருந்த ஐ.தே.க.விட­மி­ருந்து தன்னை தூர­மாக்­கி­ய­தோடு தனது பெயரை நோபல் பரி­சிற்­காக பரிந்­துரை செய்­யலாம் என்ற சர்­வ­தேச நல்­லெண்­ணத்­தி­னையும் சுக்­கு­நூ­றாக உடைத்­தி­ருக்­கி­றது.

இந்­நி­லையில் மஹிந்த ராஜபக் ஷ தன்­னோடு ஒன்­றாக உண்­டு­விட்டு, உண்ட உணவு ஜீர­ணிக்­குமுன் எதிர்த்­த­ரப்பில் சங்­க­ம­மா­னதை அவ்­வ­ளவு எளிதில் மறந்­தி­ருக்­க­மாட்டார்.

அத்­தோடு இரண்­டா­வது முறை­யா­கவும் பாரா­ளு­மன்ற தேர்­தலில் தனது கட்­சியின் ஊடாக போட்­டி­யிடும் வாய்ப்­பினை வழங்கி தனக்கு கிடைக்­க­வேண்­டிய வரப்­பி­ர­சா­தங்­களை தடுத்­த­தோடு மட்­டு­மல்­லாது எதிர்க்­கட்­சியின் தலைமை பொறுப்­பி­னைக்­கூட பெற்­றுக்­கொள்ள முடி­யாத அள­விற்கு சாதா­ரண பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக சூட்­சு­ம­மான முறையில் ஓரங்­கட்­டப்­பட்­ட­த­னையும் ஒரு­போதும் அவர் மறந்­தி­ருக்­க­மாட்டார். அது­மட்­டு­மல்­லாது மூன்றில் இரண்டு பெரும்­பான்­மை­யூ­டாக 19ஆவது, 20ஆவது சீர்­தி­ருத்­தங்கள் மூலம் தனக்கு மட்­டு­மல்­லாது தனது அர­சியல் வாரி­சு­க­ளுக்கும் இலக்கு வைத்து திறை­ம­றைவில் மேற்­கொண்ட திருத்­தங்­களும் அதனால் ஏற்­பட்ட வலி­களும் இன்னும் ராஜபக் ஷ பரம்­ப­ரையை காயப்­ப­டுத்­தவே செய்யும்.

இந்­நி­லையில் மஹிந்த ராஜபக் ஷ எதிர்­கால ஜனா­தி­பதி தேர்­தல்­களில் போட்­டி­யிட முடி­யாத நிலையில், புதிய மாப்­பிள்ளை பரம்­பரை சொத்தில் அவ்­வ­ளவு இல­குவில் பங்­கு­போட முடி­யாது எனும் நிலைப்­பாட்டில் அடுத்த தேர்­தலை இலக்­காக வைத்து மஹிந்த ராஜபக் ஷ பக்­க­முள்ள மக்கள் பலத்­தினை தன்­பக்கம் ஈர்க்க மைத்­தி­ரி­பால சிறி­சேன கணக்­குப்­போ­டு­வா­ராயின் அதற்கு மூன்­றா­வது முறையும் முட்­டா­ளா­வ­தற்கு மஹிந்த ராஜபக் ஷ அவ்­வ­ளவு சாமா­னிய அரசியல்வாதியாக செயற்படப் போதில்லை என்பதே உண்மை.

எது எப்படி இருப்பினும் தற்போது எழுந்திருக்கும் ஸ்திரத்தன்மையற்ற அரசியல் சூழ்நிலையில் மஹிந்த ராஜபக் ஷ பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை காண்பிக்க தவறினால்கூட அது ஒருபோதும் அவருக்கான தோல்வியாக இருக்கப்போவதில்லை என்பதே உண்மை.

எது எப்படி அமையினும் அமையவிருக்கும் புதிய ஆட்சியின் ஊடாக நாட்டில் ஏற்பட்டிருக்கும் விலையேற்றங்கள் சரி செய்யப்படுவதோடு, வேலயில்லாப் பிரச்சினை, தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு, விடுவிக்கப்படாத காணிப்பிரச்சினை, நீண்டகால இனப்பிரச்சினைகள், காணாமல் ஆக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகள், பல்வேறு பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு சுபீட்சமான ஓர் நாட்டைக் கட்டி எழுப்ப வேண்டும் என்பதே எல்லோரினதும் எதிர்பார்ப்பாக அமைகின்றது.