Verified Web

கேலிக்குள்ளாகும் அரசியல் சாசனம்

10 days ago Administrator

மர்சூக் அகமட்லெப்பை

நல்­லாட்­சியை கவிழ்ப்­ப­தற்­காக முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ கண்­டி­யி­லி­ருந்து கொழும்­புக்கு ஒரு நடை­ப­வனி நடத்­தினார். பின்னர் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­த­லிலே ''எங்­க­ளது மொட்டுச் சின்­னத்­திற்கு வாக்­க­ளி­யுங்கள் மஹிந்த ராஜ­பக் ஷ ஜனா­தி­ப­தி­யாவார் '' என பிர­சாரம் மேற்­கொண்­டனர். ஆனால், உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலின் முடி­விலே மஹிந்த ராஜ­பக் ஷ ஜனா­தி­ப­தி­யா­க­வில்லை.

பின்னர் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­கவை பிர­தமர் பத­வி­யி­லி­ருந்து இறக்க நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையைக் கொண்டு வந்­தனர். ஐக்­கிய தேசியக் கட்சி பின் வரிசை பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் தங்­களின் நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணைக்கு ஆத­ரவு வழங்­கு­வார்கள் என நம்­பி­யி­ருந்­தனர். அதன் விளைவு சில அமைச்­சர்கள் பதவி துறக்க வேண்­டி­யி­ருந்­தது. ஆனால், ரணில் விக்­ர­ம­சிங்­கவை வீழ்த்த முடி­ய­வில்லை.

பின்னர் கொழும்பு முற்­றுகை இடம்­பெற்­றது. கொழும்­புக்கு வந்து முற்­றுகை இடுங்கள், மறுநாள் மஹிந்த ஜனா­தி­ப­தி­யாவார் என நாட்டு மக்­க­ளுக்கு பிர­சாரம் செய்து சில ஆயிரம் மக்­களை வர­வ­ழைத்­தி­ருந்­தனர். ஆனால், அந்தப் போராட்டம் ஒரு பால் பக்­கட்­டுக்கு நின்­று­பி­டிக்க இய­லாமல் அன்று இர­வோ­டி­ர­வாக கலைந்து சென்­றது. இந்த ஆட்சிக் கவிழ்ப்­பிற்­கான முயற்சி பெரும் கரி­யையே மஹிந்­த­வுக்குப் பூசி­யது.

ஆனால் இன்று இர­வோ­டி­ர­வாக மஹிந்­தவும் ஆட்­சியில் அமர்த்­தப்­பட்­டு­விட்டார். மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் தனக்­குள்ள நிறை­வேற்று அதி­கா­ரத்தை வைத்து அதனைச் செய்­த­தாகக் கூறு­கின்றார். ஆனால் ரணில் விக்­ர­ம­சிங்க தன்னை அகற்­று­வ­தற்கு ஜனா­தி­ப­திக்கு அதி­கா­ர­மில்­லை­யென்று கூறி தான் இன்னும் பிர­த­மர்தான் எனக் கூறு­கின்றார். இதனால் எமது நாட்டில் மாத்­தி­ர­மல்ல, உலக அரங்­கிலும் இது ஒரு சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது.

பாரா­ளு­மன்­றத்­திலே அதிக செல்­வாக்­கு­மிக்­கவர் என ஜனா­தி­பதி கரு­து­கின்ற ஒரு­வரை பிர­த­ம­ராக நிய­மிக்­க­மு­டியும் என அர­சி­ய­ல­மைப்பு கூறு­கின்­றது. மஹிந்த ராஜ­ப­க் ஷவை தான் பாரா­ளு­மன்­றத்தில் அதிக செல்­வாக்­குள்­ள­வ­ராக கருதி பிர­த­ம­ராக நிய­மித்­த­தாக ஜனா­தி­பதி கூறு­கின்றார். அவ்­வாறு ஜனா­தி­பதி மஹிந்­தவை பாரா­ளு­மன்­றத்தில் அதிக செல்­வாக்குப் பெற்­றவர் என கரு­தி­யி­ருந்தால் சென்ற திங்­கட்­கி­ழமை பாரா­ளு­மன்றம் கூடு­வ­தற்கு ஜனா­தி­பதி அனு­ம­தித்­தி­ருப்பார். அவ்­வா­றில்­லாமல் எதிர்­வரும் 16 ஆம் திக­தி­வரை பாரா­ளு­மன்றக் கூட்டத் தொடரை தனக்­குள்ள நிறை­வேற்று அதி­கா­ரத்தைப் பயன்­ப­டுத்தி ஒத்­தி­வைத்­துள்ளார். மஹிந்த ராஜபக் ஷவுக்கு பாரா­ளு­மன்­றத்தில் அதிக செல்­வாக்­கு­மில்­லை­யென்று ஜனா­தி­பதி கரு­தி­ய­த­னால்தான் பாரா­ளு­மன்­றத்தை ஒத்­தி­வைத்­துள்ளார். மஹிந்த பாரா­ளு­மன்றத் தில் செல்­வாக்­குள்­ளவர் என்று ஜனா­தி­பதி கரு­த­வில்லை என்­ப­தற்கு இது மிகப் பெரிய சான்­றாகும்.

ஜனா­தி­பதி ஒரு­வரை செல்­வாக்­கு­மிக்­கவர் எனக் கருதும் விடயம் அவ­ரு­டைய மன­தோடு சம்­பந்­தப்­பட்ட விடயம். நான் உண்­மை­யி­லேயே செல்­வாக்கு உள்­ளவர் என்­றுதான் மஹிந்­தவைக் கரு­தினேன் என அவர் கூறினால் நாம் நம்­பத்தான் வேண்டும். ஆனால் மைத்­தி­ரி­பால சிறி­சேன பாரா­ளு­மன்­றத்தை ஒத்­தி­வைத்­ததன் மூலம் மஹிந்­த­வுக்கு இது­வ­ரைக்கும் பாரா­ளு­மன்­றத்தில் செல்­வாக்­கில்லை என்று தான் தன் மனதில் நினைத்­ததை செயலில் காட்­டு­கின்றார். இனி­மேல்தான் மஹிந்த தனது பிர­தமர் அதி­கா­ரத்தை பாவித்து தனது செல்­வாக்கைப் பாரா­ளு­மன்­றத்­திலே அதி­க­ரித்துக் கொள்­ளட்டும் என மஹிந்­த­வுக்கு 21நாட்கள் கால அவ­கா­சத்தை ஏற்­ப­டுத்திக் கொடுத்­தி­ருக்­கின்றார்.

ஒரு வாரத்­திற்கு பாரா­ளு­மன்­றத்தை ஒத்­தி­வைத்­தி­ருந்­தாலும் பர­வா­யில்லை. 3 வாரத்­திற்கு ஒத்­தி­வைத்­த­தென்­பது மஹிந்­தவின் செல்­வாக்கு பாரா­ளு­மன்­றத்­திலே மிக மோச­மா­க­வுள்­ளது. அந்த செல்­வாக்கை அதி­க­ரிக்க ஒரு­வாரம் போதாது. 3 வாரம் வேண்டும். அந்­த­ள­விற்கு பாரா­ளு­மன்­றத்­திலே மஹிந்­தவின் செல்­வாக்கு கீழ் நிலை­யிலே உள்­ளது என மைத்­தி­ரி­பால சிறி­சேன கரு­தி­யுள்­ளது புலப்­ப­டு­கின்­றது. இவ்­வ­ளவு மோச­மான செல்­வாக்­குள்­ளவர் என மைத்­தி­ரியால் கரு­தப்­பட்ட மஹிந்­தவைப் பிர­த­ம­ராக நிய­மித்­தது என்­பது வேண்­டு­மென்றே ஜனா­தி­பதி அர­சி­ய­ல­மைப்பை மீறினார் என்றே கொள்ள வேண்டும்.

தேசிய அர­சாங்­கத்­தி­லி­ருந்து ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி வில­கி­ய­துடன் ரணில் தனது பத­வியை தானாக இழந்தார் என்று இவர்கள் கூறு­வதை ஒரு விவா­தத்­திற்­காக ஏற்றுக் கொண்­டாலும், மீண்டும் ரணி­லையே மைத்­தி­ரி­பால சிறி­சேன பிர­த­ம­ராக நிய­மித்து பாரா­ளு­மன்­றத்தில் பெரும்­பான்­மையை நிலை­நாட்ட கோரி­யி­ருக்­க­வேண்டும். ரணி­லினால் அவ்­வாறு பெரும்­பான்­மையைக் காட்­ட­மு­டி­யாமல் போனால்தான் மஹிந்­த­விடம் பெரும்­பான்­மையைக் காட்ட கோர­வேண்டும்.

மறு­புறம் சென்ற திங்­கட்­கி­ழமை மக­சோன்­ப­ல­க்காயவின் தலை­வரும், கண்டி திகன வன்­செ­யலின் பிர­தான சூத்­தி­ர­தாரி எனக் கரு­தப்­படும் அமித் வீர­சிங்­கவும், அவ­ரது சக­பா­டி­களும் அவ­சர அவ­ச­ர­மாக விடு­விக்­கப்­பட்­டி­ருக்­கின்­றார்கள். இதன் மூலம் மஹிந்த ராஜபக் ஷ நாட்டு மக்­க­ளுக்கு சொல்ல வரு­கின்ற செய்தி என்ன? 26.10.2018 ஆம் திக­தி­வெள்­ளிக்­கி­ழமை சுமார் 7.30மணி­ய­ளவில் பொது ஜன ஐக்­கிய முன்­னணி தேசிய அர­சாங்­கத்­தி­லி­ருந்து வில­கிய செய்­தியும், மஹிந்த ராஜ­பக் ஷ பிர­த­ம­ராக சத்­தி­யப்­பி­ர­மாணம் எடுத்தார் என்ற செய்­தியும் ஒன்­றா­கவே வெளி­யி­டப்­பட்­டது.

அன்­றி­ரவே இந்த இரண்டு செய்­தி­யோடு மூன்­றா­வது செய்­தி­யாக திகன கல­வ­ரத்தின் பிர­தான சூத்­தி­ர­தா­ரி­யாக கரு­தப்­படும் அமித் வீர­சிங்கவும் அவ­ரது சக­பா­டி­களும் விடு­விக்­கப்­பட்­டார்கள் என்ற செய்­தியும் வெளி­யாகி இருக்கும். ஆனால் அன்று இரவு என்­ப­தாலும், மறுநாள் சனிக்­கி­ழமை என்­ப­தாலும், அதற்­க­டுத்­தநாள் ஞாயிற்றுக் கிழமை என்­ப­தாலும் பொறுத்­தி­ருந்து எப்­போது திங்­கட்­கி­ழமை வரும் எனக் காத்­தி­ருந்து அமித் வீர­சிங்­க­வையும், அவ­ரது சக­பா­டி­க­ளையும் விடு­வித்­திருக் கின்­றார்கள். இத­னால்தான் மூன்று செய்­தி­களும் ஒன்­றாக வெளி­யா­காமல் 03நாட்கள் பிந்தி இவர்கள் விடு­விக்­கப்­பட்ட செய்தி வந்­தது.

மைத்­தி­ரி­பால சிறி­சேன நாட்டு மக்­க­ளுக்கு ஆற்­றிய உரையில் 2015 ஜன­வரி மாதம் நடை­பெற்ற ஜனா­தி­பதித் தேர்­தலில் மக்கள் வழங்­கிய ஆணைக்கு ஏற்ப நல்­லாட்­சியை ஏற்­ப­டுத்த ரணில் விக்­ர­ம­சிங்க தவ­றி­விட்டார். அத­னா­லேயே அவரை நீக்­கினேன்” எனக் குறிப்­பிட்டார். மக்கள் பிர­தா­ன­மாக மஹிந்த ராஜபக் ஷவைத் தோற்­க­டித்து குடும்ப ஆட்­சியை முடி­வுக்கு கொண்­டு­வர வேண்டும் என்­றுதான் ஆணையை வழங்­கி­னார்கள். ஆனால் மஹிந்­தவை மீண்டும் கொண்டு வந்து மக்கள் ஆணையை மீறி­யி­ருப்­பது மைத்­தி­ரி­பால சிறி­சே­னதான்.

மேலும் நாட்டு மக்­க­ளுக்கு ஆற்­றிய உரையில் மக்கள் வங்­கியின் பிணை­முறி மீதான மோச­டியைப் புரிந்­த­மைக்­காக ரணிலை நீக்­கினேன்” என்று மைத்­தி­ரி­பால சிறி­சேன கூறினார். பிணை­முறி விவ­கா­ரத்தில் நிதி­ய­மைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க இரா­ஜி­னாமாச் செய்தார். இதில் தொடர்­பு­பட்­டி­ருந்த பேப்­பர்­ப­சுவல் ட்ரசரீஸ் நிறு­வனப் பணிப்­பாளர் அர்ஜுன் அலோ­சி­யசும், அர­வது சக­பா­டியும் பல மாதங்­க­ளாக கைது செய்­யப்­பட்டு சிறை­யிலே வாடிக்­கொண்­டி­ருக்­கின்­றார்கள். மோசடி செய்­யப்­பட்­ட­தாகக் கரு­தப்­படும் 1100 கோடிக்கு பதி­லாக 1200கோடி ரூபா இந் நிறு­வ­னத்­திற்­கு­ரிய பணம் மத்­திய வங்­கியில் முடக்­கப்­பட்­டுள்­ளது. பணமும் கிடைக்­கப்­பெற்­று­விட்­டது. சம்­பந்தப் பட்­ட­வர்கள் தண்­ட­னையும் அனு­ப­வித்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

இவ்­வாறு நிவர்த்தி பண்­ணப்­பட்ட இந்த மோச­டியைப் பேசிப் பேசி ஜனா­தி­பதி காலத்தை வீண­டிக்­காமல் இன்னும் தீர்வு காணப்­ப­ட­வேண்­டிய மோச­டிகள் மஹிந்த விடம் இருக்­கின்­றது. மஹிந்­தவின் பல ஆயிரம் கோடிப்­பணம் துபா­யிலும் சீசல்ஸ் நாட்­டிலும் தேங்கிக் கிடப்­ப­தாக ஜனா­தி­ப­தி­யினால் கூறப்­பட்­டது.

ஸ்ரீலங்கன் விமான சேவை­யி­லேயே பல ஆயிரம் கோடி மோசடி, தந்­தை­யி­னு­டைய ஞாப­கார்த்த மண்­ட­பத்­தி­லேயே மோசடி, தேர்­தலின் போது பாவிக்­கப்­பட்ட பஸ் கொடுப்­ப­னவில் மோசடி, வரவு செலவு திட்­டத்­திலே ஜனா­தி­ப­திக்­கென 10ஆயிரம் கோடி ஒதுக்கி எடுத்து அப் பணத்­திலே மோச­டியும், வீண்­வி­ர­யமும், ஹோட்டல் கட்­டு­வதில் மோசடி போன்ற மோசடி புரிந்­த­வர்­க­ளிடம் ஆட்­சியைக் கொடுத்­து­விட்டு ரணில் பிணை­மு­றி­யிலே மோசடி புரிந்­தவர் என ஜனா­தி­பதி பேசு­வது நியாயமில்லை.

என்­னதான் நல்­லாட்சி என்­றாலும் ஊழல் மோச­டியை எடுத்த உட­னேயே முற்­றாகக் களை­வ­தென்­பது ஒரு கஷ்­ட­மான விடயம். ஏனென்றால் ஊழல், மோசடி நிறைந்­தது மஹிந்­தவின் ஆட்சி என மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வினால் வர்­ணிக்­கப்­பட்ட ஆட்சி யிலே இருந்த பல பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் மஹிந்த அணி­யி­லி­ருந்து மாறி­வந்து இந்த நல்­லாட்­சியை அமைத்­தார்கள். ஜனா­தி­ப­தியால் மிக மோச­மான ஆட்சி என்று வர்­ணிக்­கப்­பட்ட ஆட்­சி­யிலும் இவர்­கள்தான் இருந்­தார்கள். நல்­லாட்சி என மிக நன்­றாக வர்­ணிக்­கப்­ப­டு­கின்ற இந்த ஆட்­சி­யிலும் இவர்­கள்தான் அலங்­க­ரித்துக் கொண்­டி­ருக்­கி­றார்கள்.

நல்­லாட்­சியில் இருப்­ப­வர்கள் எல்­லோரும் நல்ல சிந்­த­னை­யுள்ள உத்­த­மர்கள் அல்ல. அதி­க­மா­ன­வர்கள் மோச­மான இடத்­தி­லி­ருந்து வந்­த­வர்கள். எனவே இவர்­க­ளி­ட­மி­ருந்து நூறு­வீதம் நல்­லாட்­சியை எதிர்­பார்க்­க ­மு­டி­யாது. படிப்­ப­டி­யா­கத்தான் நல்ல நிலை­மைக்கு கொண்­டு­வ­ர­மு­டியும். எனவே ஒப்­பீட்­ட­ளவில் யார் கூடு­த­லான மோச­டிக்­காரன், யார் குறை­வான மோச­டிக்­காரன் என்ற அடிப்­ப­டையில் தான் நாங்கள் தீர்­மா­னிக்­க­மு­டியும். 100ரூபாவில், 90ரூபா கள­வெ­டுப்­பவர் யார், 100ரூபாவில், 10 ரூபா கள­வெ­டுப்­பவர் யார்? 90ரூபாவை கள­வெ­டுப்­ப­வனை விட, 10ரூபாவைக் கள­வெ­டுப்­பவன்; பர­வா­யில்லை. அவனை விட இவன் நல்­லவன் என்ற முடி­வுதான் நாங்கள் சொல்­ல­மு­டியும். எனவே ஒப்­பீட்­ட­ள­விலே மஹிந்­தவின் ஆட்­சியை விட ரணிலின் ஆட்­சி­யா­னது மேன்­மை­யா­னது என்­றுதான் நாங்கள்; ஆட்­சியைக் கொண்டு செல்­ல­வேண்டும். 10ரூபா கள­வெ­டு­வத்­த­வ­ரி­ட­மி­ருந்து ஆட்­சியைப் பறித்தால் ஒரு ரூபா கள­வெ­டுத்­த­வ­னிடம் கொடுக்­க­வேண்­டுமே ஒழிய ஒரு­போதும் 90ரூபா கள­வெ­டுத்­த­வ­னிடம் ஆட்­சியை கொடுக்­கக்­கூ­டாது.

நல்­லாட்சி சிந்­த­னை­யிலே சிறு­வ­ய­தி­லி­ருந்து வளர்க்­கப்­பட்­ட­வர்­களைக் கொண்ட ஒரு பாரா­ளு­மன்­றத்­தி­லே­ தான் நல்­லாட்­சியை நூறு­வீதம் எதிர்­பார்க்­க­மு­டியும். மோச­மான மஹிந்த ஆட்­சியில் இருந்த அதே பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை நல்­லாட்சி என்ற போர்­வைக்குள் வைத்துக் கொண்டு நூறு­வீதம் நல்­லாட்­சியை ஏற்­ப­டுத்த முடி­யாது. இதனை மைத்­தி­ரி­பால சிறி­சேன உண­ரத்­த­வ­றி­விட்டார். இது புரி­யாமல் அவ­ச­ரப்­ப­டு­கின்றார். இவ்­வாறு அவ­ச­ரப்­ப­டக்­கூ­டிய மைத்­திரி எவ்­வாறு நாட்டு மக்­க­ளுக்கு பொறுப்புக் கூறக் கூடிய ஜனா­தி­ப­தி­யாக இருக்­கமு­டியும்?

நாட்டு மக்­க­ளுக்கு ஆற்­றிய உரை­யிலே தன்னைக் கொல்ல சதி­செய்­த­தா­கவும் அதிலே அமைச்சர் ஒருவர் சம்­பந்­தப்­பட்­டி­ருப்­ப­தா­கவும் மைத்­தி­ரி­பால சிறி­சேன குறிப்­பிட்டார். சதித்­திட்­ட­மெல்லாம் நிறை­வே­று­வ­தில்லை. சில திட்­டங்கள் திட்­ட­மி­டப்­பட்ட ஆரம்ப கட்­டத்­தி­லேயே கைவி­டப்­ப­டு­கின்­றன. மைத்­தி­ரி­பால சிறி­சேன ஜனா­தி­ப­தி­யா­னதற்கு பின்னர் ஒரு புலி உறுப்­பினர் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை கொலை செய்ய அவரின் பாது­காப்பு வல­யத்­தி­னுள்ளே சென்று துப்­பாக்­கியும், கையு­மாக மாட்டிக் கொண்டார். அப்­ப­டிப்­பட்­ட­வ­னையே பின்னர் மன்­னித்­தவர் மைத்­தி­ரி­பால சிறி­சேன. அவ்­வாறு இந்தக் கொலைத் திட்­டத்­தையும் நாட்டு நல­னுக்­காக மன்­னித்து அரசைக் கொண்டு செல்­ல­வேண்டும்.

கடந்த ஜனா­தி­பதி தேர்­த­லிலே, தான் தோற்று இருந்தால் மஹிந்த தன்னை 08அடி ஆழத்தின் கீழ் கொன்று புதைத்­தி­ருப்பார் எனக் கூறி­யவர் மைத்­தி­ரி­பால சிறி­சேன. தற்­போது அவ்­வா­றான கொலை­கா­ர­னுக்கு ஆட்சி அதி­கா­ரங்­களை வழங்­கி­யி­ருப்­பது தவ­றா­னது ஆகும். தன்­னு­டைய உயி­ரையும்; துச்­ச­மென மதித்து நாட்டு மக்­களைப் பாது­காக்க கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் குதித்த மைத்­தி­ரி­பால சிறி­சேன தற்­போது உயி­ருக்குப் பயந்து மஹிந்­த­விடம் ஆட்­சியைக் கொடுத்தேன் என்­பது கோழைத் தன­மா­னது. மைத்­திரி உயி­ருக்குப் பயந்­தவர் என்று எடுத்துக் கொள்­வதா? அல்­லது மைத்­திரி உயி­ருக்கு துணிந்­தவர் என்று நாங்கள் எடுத்துக் கொள்­வதா?

தன்னைக் கொல்ல ஏதா­வது சதித்­திட்டம் இடம் பெற்­றி­ருந்தால் அதனைத் தீட்­டிய அமைச்­சரை எச்­ச­ரித்­து­விட்டு தன்­னு­டைய பாது­காப்பில் குறை­யி­ருந்தால் அதனை சீர் செய்­து­விட்டு மக்கள் வழங்­கிய ஆணையை மதித்து ரணிலின் அரசை வழி­நடத்திச் சென்­றி­ருக்க வேண்டும். உயிர் இருக்கும், உயிர் போகும் நாம் அழிந்­தாலும் நாடு பாது­காக்­கப்­பட வேண்டும்.

முஸ்லிம் கட்­சி­களும் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் இந்த சந்­தர்ப்­பத்­திலே நிதா­ன­மாக சிந்­திக்க வேண்டும். கடந்த ஆட்சி காலத்­திலே எவ்­வாறு முஸ்லிம் சமூகம் இன்னல் பட்­டது, அவ­மா­னப்­பட்­டது என்­பதை சீர்­தூக்­கிப்­பார்க்க வேண்டும். ரணிலின் ஆட்சி காலத்­திலும் இவை இடம்­பெற்­றன. ஆனால் மஹிந்­தவின் காலத்தில் முஸ்­லிம்கள் மிகவும் அவ­மா­னப்­ப­டுத்­தப்­பட்­டார்கள். முஸ்­லிம்கள் தொப்பி அணிந்து கொண்டு வீதியில் செல்­லும்­போது தொப்பி கழற்­றப்­பட்டு அவ­மா­னப்­பட்­டார்கள். முஸ்லிம் பெண்கள் பர்தா கழற்றப்­பட்டு தெரு­விலே அவ­மா­னப்­பட்­டார்கள். பன்­றி­யிலே அல்லாஹ் என எழு­தப்­பட்டு ஊர்­வ­ல­மாக அழைத்துச் சென்­றார்கள். பள்­ளி­வா­ச­லிலே பன்­றி­யு­டைய இரத்தம், தலை­களைக் கொண்­டு­வந்து போட்­டார்கள். முஸ்­லிம்கள் இந்த நாட்டில் இருக்க முடி­யாது. சவூ­திக்குச் சென்­று­வி­டுங்கள். அதுதான் உங்­க­ளது தாயகம் எனக் கூறி இந்த நாட்டின் சொந்த வித்­துக்­க­ளான முஸ்­லிம்­களின் பிரஜா உரிமை கேள்­விக்­குட்­ப­டுத்­தப்­பட்­டது.

இந்த மாதி­ரி­யான மிகக் கேவ­ல­மான அவ­மா­னங்கள் ரணில் ஆட்­சி­யிலே இடம் பெற­வில்லை. ஆனால் சொத்து இழப்­புக்கள், உயி­ரி­ழப்­புக்கள் ரணிலின் ஆட்­சியில் ஏற்­பட்­டது உண்மை. ஆனால் மேற்­சொன்ன அவ­மா­னங்கள் ரணிலின் ஆட்­சி­யிலே இடம்­பெ­ற­வில்லை. அப்­படி ஏற்­பட்­டி­ருந்­தாலும் ஒப்­பீட்­ட­ளவில் குறைவு. ரணிலின் ஆட்­சி­யிலே வன்­செ­ய­லுக்கு கார­ண­மா­க­வி­ருந்­த­வர்கள் கைது­செய்­யப்­பட்டு சிறை­யி­ல­டைக்­கப்­பட்­டார்கள். திகன வன்­செ­யலின் பிர­தான சூத்­தி­ர­தாரி எனக் கரு­தப்­பட்ட மஹசோன் பல­காய அமைப்பின் தலைவர் அமித் வீர­சிங்க போன்றோர் கைது­செய்­யப்­பட்­டனர். பொது­ப­ல­சேனா அமைப்பின் தலைவர் ஞான­சார தேரர் சிறை­யி­ல­டைக்­கப்­பட்­டுள்ளார். முஸ்­லிம்­களின் பிரச்­சி­னையை காது கொடுத்து கேட்டு ரணில் முடிந்­த­ளவு நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டார். ஆனால் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­செ­யல்கள், அவ­மா­னங்கள் ஏற்­படும் சந்­தர்ப்­பங்­களில் மஹிந்­த­விடம் போய்; சொன்ன நேர­மெல்லாம் “சின்ன, சின்னப் பிரச்­சி­னை­களை பெரிது படுத்த வேண்டாம்” என முஸ்லிம் தலை­வர்­க­ளிடம் மஹிந்த மிக கவ­ன­யீ­ன­மாக பதில்­களை வழங்­கினார்.

முஸ்லிம் தலை­வர்கள் மஹிந்­த­விடம் எவ்­வ­ள­வுதான் முஸ்­லிம்­களின் பிரச்­சி­னை­களை எடுத்­து­ரைத்த போதும் பல­னற்றுப் போனது. எனவே மஹிந்­தவின் காலத்தில் நடை­பெற்ற வன்­செ­யல்­க­ளையும், ரணிலின் காலத்தில் ஏற்­பட்ட வன்­செ­யல்­களின் அள­வு­க­ளையும் ஒப்­பிட்டுப் பார்த்து ரணி­லுக்கு தங்­களின் ஆத­ர­வினை முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் வழங்க வேண்டும். அதில் எந்­தத்­த­வறும் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் இழைத்து விடக்கூடாது.

தற்­போது ஏற்­பட்­டுள்ள ரணில், மஹிந்த பிரச்­ச­ினையில் ரணிலின் ஆத­ரவு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை மஹிந்த பணம் கொடுத்து தனது பக்கம் ஈர்த்துக் கொள்வார் என்ற கதை உலா­வு­கின்­றது. மஹிந்­தவின் துபா­யி­லுள்ள பணம் சீசல்ஸ்­யி­லுள்ள பணம் எல்லாம் இதற்கு செல­வ­ழிக்­கப்­படும் என எதிர்­பார்க்கப் படு­கின்­றது. சீனா மஹிந்­தவை ஆட்­சிக்குக் கொண்­டு­வர பெரு­ம­ளவு பணம் செல­வ­ழிக்கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

சீனா தனது அதி­கா­ரத்தை இலங்­கை­யிலே நிலை­நி­றுத்தி இந்து சமுத்­திரப் பிராந்­தி­யத்­திலே தனது ஆதிக்­கத்தை அதி­க­ரிப்­ப­தற்கு ஒரு­போதும் அமெ­ரிக்­காவோ, ஐரோப்­பாவோ விரும்­பப்­போ­வ­தில்லை. இந்­தி­யாவும் இதனை விரும்­பப்­போ­வ­தில்லை. எனவே சீனா மஹிந்­த­வுக்கு பணம் செல­வ­ழித்தால் அமெ­ரிக்கா, இந்­தியா போன்ற ஜன­நா­ய­கத்தை விரும்பும் நாடுகள் ரணி­லுக்கு பணம் செல­வ­ழிப்­பார்கள். அது­மாத்­தி­ர­மல்­லாமல் கடை­சி­யாக ரணிலும் ஆட்சி அதி­கா­ரத்தில் இருந்­தவர். எனவே பணம்தான் பிர­த­மரைத் தீர்­மா­னிக்கும் என்­றி­ருந்தால் பண விவ­கா­ரத்­திலும் ரணில் பல­வீ­ன­மாக இருப்பார் என்று சொல்­வ­தற்­கில்லை.

பிர­த­மரின் வாசஸ்­த­ல­மான அலரிமாளி­கையும் இப்­போது ஒரு விவாதப் பொரு­ளா­கி­யுள்­ளது. ரணில் அல­ரி­மா­ளி­கையை விட்டு வெளி­யேற மறுத்­து­வ­ரு­வது இன்று சர்ச்­சை­யா­க­வுள்­ளது. மஹிந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் தோல்­வி­ய­டைந்­த­வுடன் முடி­வுகள் வெளி­வர முன்­னரே அதி­காலை வேளை கௌர­வ­மாக அலரி மாளி­கையை விட்டு வெளி­யேறி தனது வெத­முல்­லை­யி­லுள்ள கால்ட்டன் இல்­லத்தை அடைந்து அங்கு யன்­னலில் ஏறி ஆத­ர­வா­ளர்­க­ளுக்கு மத்­தியில் உரை­யாற்­றினார். இது­மா­திரி ரணிலும் ஜென்­டில்­மே­னாக அலரிமாளி­கை­யை­விட்டு வெளி­யேற வேண்­டு­மென மஹிந்­தவின் ஆட்கள் கூறு­கின்­றனர்.

மஹிந்த தோல்­வி­ய­டைந்த பின்னர் தானே அல­ரி­மா­ளி­கையை விட்டு வெளி­யே­றினார். ஆனால் ரணில் இன்னும் தோல்­வி­ய­டை­ய­வில்­லையே. பாராளுமன்­றத்தில் வாக்­கெ­டுப்பு நடத்­தி­னால்­தானே ரணில் தோல்­லி­ய­டைய முடியும் அல்­லது வெற்­றி­பெ­ற­மு­டியும்? காத்­திரப் பிர­காரம் எமது நாட்­டிற்கு துர­திஷ்­ட­மான எதிர்­காலம் இருந்து ரணில் பாரா­ளு­மன்ற வாக்­கெ­டுப்­பிலே தோல்­வியைத் தழு­வு­வா­ராக இருந்தால் அவர் பாரா­ளு­மன்­றத்­தி­லி­ருந்து நேர­டி­யாக தனது சொந்த வீட்­டுக்குப் போவாரே ஒழிய மீண்டும் அலரிமாளி­கைக்கு செல்­ல­மாட்டார்.  மஹிந்­த­வை­விட ஆயிரம் மடங்கு ரணில் ஒரு ஜெண்­டில்மேன். ஆனால் ரணில் அலரிமாளி­கைக்­குள்­ளி­லி­ருந்து முடங்கிக் கிடக்­காமல் தனக்கு பாரா­ளு­மன்­றத்தில் உள்ள செல்­வாக்கை அதி­க­ரிப்­ப­தற்­காக அலரிமாளி­கையை விட்டு வெளி­யேறி துடிப்­புடன் செயற்­ப­ட­வேண்டும். அலரி மாளி­கையை ரணில் பெரி­தாக தூக்கிப் பிடிக்கத் தேவை­யில்லை. அலரிமாளிகை ஓர் அதி­கா­ர­மில்லை. அது ஒரு கட்­டி­டம்தான்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மேற்­சொன்ன கார­ணங்­க­ளி­னால்தான் பிர­தமர் ரணிலை அகற்­றினேன் எனக் குறிப்­பிட்­டாலும் இதற்கு ஓர் உள்­வே­லைத்­திட்டம் (ஹிடின் அஜந்தா) ஒன்று இருக்கும். அதுதான் அடுத்து வரும் ஜனா­தி­பதித் தேர்­தலில் மஹிந்த, மைத்­தி­ரியை ஜனா­தி­ப­தி­யாக்­கு­வது. எனவே எதிர்­வரும் ஜன­வரி மாதம் 10ஆம் திக­தி­யி­லி­ருந்து மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு எந்த நிமி­டமும் ஜனா­தி­பதி தேர்­தலை நடாத்தும் அதி­காரம் கிடைத்­து­விடும். எனவே தற்­போது தனக்கும், மஹிந்­த­வுக்கும் உள்ள உறவில் நாள் செல்லச் செல்ல விரிசல் ஏற்­படும் என்­பதால் ஜனா­தி­ப­தியின் காலம் 05வருடம் முடி­யும்­வரை காத்­தி­ராமல் கூடிய விரையில் ஜனா­தி­பதி தேர்­தலை நடாத்­தவே மைத்­திரி விரும்­புவார். எனவே மஹிந்த மைத்­திரி ஆட்சி ஆகக் கூடி­யது 03மாத காலத்­திற்கே இருக்­கப்­போ­கின்­றது. இந்த 03மாத காலத்­திற்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மஹிந்த தரப்பிற்கு கட்சி தாவி சந்தர்ப்பவாத அரசியல் செய்யத் தேலையில்லை. வெற்றியோ, தோல்வியோ ஒரே தரப்பில் இருந்து கொள்வதுதான் சிறந்தது. அப்போதுதான் முஸ்லிம் சமூகம் தங்களது பாராளுமன்ற உறுப்பினர்களை மதிக்கும். அதேபோல இந்த நாடும் முஸ்லிம் சமூகத்தை மதிக்கும்.

ஒரு தடவை மாத்திரம் தான் ஜனாதிபதியாக இருப்பேன் என்று கூறி தனது நிறைவேற்று அதிகாரங்களைக் குறைக்கும் அன்றைய தினம் பாராளுமன்றத்திற்கு வருகை தந்து இரண்டு நாட்கள் தண்ணீர் சாப்பாடு இல்லாமல் தனது நிறைவேற்று அதிகாரத்தை பாராளுமன்றம் குறைப்பதைப் பார்த்துவிட்டுச் சென்ற மைத்திரி, தற்போது மீண்டும் ஜனாதிபதி ஆக எல்லா விதமான கைங்கரியங்களையும் அடி மட்டத்திற்கு இறங்கி செய்வது வியப்பாக இருக்கின்றது. நிறைவேற்று அதிகாரம் தனக்கிருந்தாலும் அதனை ஒருபோதும் பிரயோகிக்கமாட்டேன் என்று கூறிய ஜனாதிபதி இன்று தனது நிறைவேற்று அதிகாரத்தை தன்னை இந்நாட்டு ஜனாதிபதி யாக்கிய ரணிலுக்கு எதிராக பாவிப்பது எந்தவகையில் நன்றியுடையதாக இருக்கும். இன்று ரணிலை அதிகாரமில்லாமலாக்கி அவரின் பாதுகாப்பை எடுத்து, அவருக்கு கரண்ட், தண்ணீர் இல்லாமல் செய்வதற்கு தனது நிறைவேற்று அதிகாரத்தை ஜனாதிபதி பாவிக்கின்றார். நிறைவேற்று அதிகாரத்தைப் பாவிக்க எவ்வளவு சந்தர்ப்பம் மைத்திரிக்குக் கிடைத்தும் பாவிக்கவேண்டிய அந்த சந்தர்ப்பங்களில் பாவிக்காது ரணிலுக்கு அதனை பாவிப்பது என்பது மைத்திரியின் கோழைத்தனத்தை காட்டுகின்றது. மைத்திரிக்கு எதிரி யார், கருத்து முரண்பட்ட நண்பன் யார் என்று தெரியவில்லை. ரணில் ஒரு கருத்து முரண்பட்ட நண்பன். அவர் எதிரியல்ல. ஆனால் மஹிந்த எதிரி. இந்த துல்லியமான வித்தியாசத்தை மைத்திரி உணரவில்லை. நிறைவேற்று அதிகாரத்தை காட்டவேண்டியவர்களுக்கு காட்ட வேண்டிய நேரத்தில் காட்டாமல் மைத்திரி இப்போது ரணிலின் மீது காட்டுகின்றார்.

எனவே அடுத்த பாராளுமன்றம் கூடும்போது மஹிந்த “ஒருநாள் முதல்வரா” அல்லது நிரந்தர முதல்வரா என்பது தெரியும். ரணிலோ, மஹிந்தவோ யார் பிரதமராக வந்தாலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போது செய்து கொண்டிருக்கின்ற வேலைக்குரிய பிரதிபலனை கூடிய விரைவில் அனுபவிப்பார் என்பது உறுதி.
-Vidivelli