Verified Web

அமித் வீரசிங்கவுக்கு பிணை

13 days ago MFM.Fazeer

கண்டி மாவட்­ட­மெங்கும்  பர­விய இன­வாத வன்­மு­றை­களின் பிர­தான சூத்­தி­ர­தா­ரி­யாக கரு­தப்­படும்  மஹ­சொஹொன் பல­காய எனும் அமைப்பின் தலைவர் அமித் வீர­சிங்க உள்­ளிட்ட 10 பேரையும் பிணையில் விடு­விக்க கண்டி மேல் நீதி­மன்றம் கடந்த திங்கட் கிழமை அனு­மதி வழங்­கி­யது. குறித்த 10 பேரின் பிணை மனு மீதான விசா­ர­ணைகள் அன்­றைய தினம் கண்டி மேல் நீதி­மன்ற நீதி­பதி குசலா சரோ­ஜினி வீர­வர்­தன  முன்­னி­லையில் விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்ட போதே இவ்­வாறு பிணை வழங்­கப்­பட்­டுள்­ளது.

தலா 25 ஆயிரம் ரூபா பெறு­ம­தி­யான ரொக்கப் பணம் மற்றும் 5 இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான சரீரப் பிணை­களில் விடு­விக்க அனு­ம­தி­ய­ளித்த நீதி­பதி அமித் உள்­ளிட்ட 10 பேரும் ஒவ்­வொரு  மாதமும் இறுதி ஞாயி­றன்று பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரிவில் ஆஜ­ராகி கையொப்­ப­மி­ட­வேண்டும் எனவும் நிபந்­தனை விதித்தார்.

கடந்த மார்ச் 4 ஆம் திகதி தெல்­தெ­னிய பொலிஸ் பிரிவில் இரு கடை­க­ளுக்கு தீ வைத்­ததன் ஊடாக கண்டி மற்றும் நட்டின் சில பகு­தி­களில் இன வன்­மு­றைகள் ஆரம்­பித்­தன. அதனைத் தொடர்ந்து கண்­டியின் திகன, பல்­லே­கல, கட்­டு­கஸ்­தோட்டை உள்­ளிட்ட பல பகு­தி­க­ளுக்கு வன்­மு­றைகள் பர­வின. குறிப்­பாக மார்ச் 5,6,7,8 ஆம் திக­தி­க­ளி­லேயே இந்த வன்­மு­றைகள் உச்­ச­கட்­டத்தில் இருந்­தன.

அதன்­படி பொலி­ஸா­ருக்கு கிடைக்கப் பெற்ற முறைப்­பா­டு­க­ளுக்கு அமை­வாக இந்த இன­வாத வன்­மு­றைகள் கார­ண­மாக, கண்டி பொலிஸ் பிராந்­தி­யத்தில் மட்டும் (கண்டி சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சகர் பிரி­வுக்கு உட்­பட்ட பிர­தேசம்) 423 இற்கும் மேற்­பட்ட  கடைகள், வீடுகள் சேத­ம­டைந்­துள்­ளன. 19 பள்­ளி­வா­சல்கள் வரை தாக்­கு­த­லுக்கு உள்­ளா­கின. இவ் வன்­மு­றை­களில் இரு உயி­ரி­ழப்­புக்கள் பதி­வா­ன­துடன்  25 இற்கும் அதி­க­மானோர் காய­ம­டைந்­தனர்.

இந் நிலையில் கண்டி வன்­மு­றைகள் தொடர்பில் பிர­தான விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்த பயங்­க­ர­வாத புல­னாய்வுப்   பிரிவின் சிறப்புக் குழு, கடந்த மார்ச் 7 ஆம் திகதி அதி­காலை  மஹ­சொஹொன் பல­கா­யவைச் சேர்ந்த தெல்­தெ­னிய - கென்­கல்ல பகு­தியை வசிப்­பி­ட­மாக கொண்ட  விதான பத்­தி­ர­னகே அமித் ஜீவன் வீர­சிங்க, கிம்­புல்­கொட - யக்­கல பகு­தியைச் சேர்ந்த அவ­ரது பிர­தான சகா­வான சுரேந்ர சுர­வீர உள்­ளிட்ட 10 பேரை கைது செய்­தி­ருந்­தது.

மேலும் தம்­புள்ளை - வேவெ­ல­வெல பகு­தியைச் சேர்ந்த சம்பத் அனு­ர­சிறி குமா­ர­சிங்க, பங்­க­தெ­னி­யவைச் சேர்ந்த ஆரச்­சி­கும்­புரே சோபித்த தேரர்,  சிலாபம் பகு­தியைச் சேர்ந்த ஆசிரி சத்­து­ரங்க,  ரஜ­வல்ல பகு­தியைச் சேர்ந்த இசுரு பிரி­யங்­கர குமார, பலாங்­கொ­டையைச் சேர்ந்த சுமித் சமிந்த,  கெங்­கல்­லவைச் சேர்ந்த அசங்க பிரதீப் வீர­சிங்க, முரு­த­லாவ - பேரா­தெ­னி­யவைச் சேர்ந்த ஜயநாத் என்டன் குண­ரத்ன, சிலா­பத்தை சேர்ந்த ரஷ்­மித்த பண்­டார மஹ­வத்த ஆகி­யோரே கைது செய்­யப்­பட்­ட­வர்­க­ளாவார்.

கைது செய்­யப்­பட்ட மேற்­படி 10 பேரும்  வன்­மு­றை­களின் சூத்­தி­ர­தா­ரிகள் எனவும், அவர்­க­ளுக்கு வன்­முறை தொடர்பில் உதவி ஒத்­தாசை புரிந்த அர­சி­யல்­வா­திகள், வெளி­நாட்டு சக்­தி­களை வெளிப்­ப­டுத்­தவும், கண்­டியின் பல பகு­தி­களில் இடம்­பெற்ற ஒவ்­வொரு வன்­முறைச் செயல்­க­ளு­ட­னான அவர்­க­ளது தொடர்பு மற்றும் அவர்­க­ளது எதிர்­கால இன­வாத திட்­டங்கள் தொடர்­பிலும் வெளிப்­ப­டுத்த சிறப்பு விசா­ர­ணைகள் இடம்­பெற்­றன.

இந் நிலை­யி­லேயே சர்­வ­தேச  சிவில் மற்றும் அர­சியல் உரிமை தொடர்­பி­லான சர்­வ­தேச இணக்­கப்­பாட்டு சட்டம் உள்­ளிட்ட பல குற்­றச்­சாட்­டுக்­களின் கீழ் அவர்­க­ளுக்கு எதி­ராக குற்றம் சுமத்­தப்­பட்­டது. இந் நிலையில் தெல்­தெ­னிய நீதிவான் நீதி­மன்­ற­மா­னது அவர்­களை தொடர்ச்­சி­யாக விளக்­க­ம­றி­யலில் வைத்­தி­ருந்த நிலையில் சந்­தேக நபர்­களால்  கண்டி மேல் நீதி­மன்றில் பிணை விண்­ணப்பம் செய்­யப்­பட்­டது. அதன்­ப­டியே அவர்­க­ளுக்கு பிணை­ய­ளிக்­கப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

இதற்­க­மைய பிணை நிபந்­த­னை­களைப் பூர்த்தி செய்த  மேற்­படி சந்­தேக நபர்கள், சுமார் 7 மாதங்­களின் பின்னர் நேற்று முன்­தினம் சிறை­யி­லி­ருந்து விடு­த­லை­யா­கினர்.

அமித்­துக்கு வர­வேற்பு

சிறை­யி­லி­ருந்து பிணையில் விடு­த­லை­யான அமித் வீர­சிங்­க­வுக்கு அவ­ரது சகாக்­களால் மாலை அணி­வித்து வர­வேற்­ப­ளிக்­கப்­பட்­டது. முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான இன­வாதக் கருத்­துக்­களை தொட­ராக வெளி­யிட்டு வரும் டான் பிரி­யசாத் தலை­மை­யி­லான குழு­வி­னரே அமித்­துக்கு வர­வேற்­ப­ளித்­தனர்.

இந்த வர­வேற்பின் போது அமித் வீர­சிங்க ஊட­கங்­க­ளுக்கு கருத்த வெ ளியிட்டார். இதன்­போது அவர் பல்­வேறு தக­வல்­களை வெளி­யிட்டார். அவர் குறிப்­பிட்ட கருத்­துக்கள் வரு­மாறு:

 “மார்ச் மாதம் கூட்டு எதிர்க்­கட்­சி­யினால் ரணில் விக்­ர­ம­சிங்­க­விற்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லாத் தீர்­மா­னத்தை வெற்­றி­கொள்­வ­தற்கு ஏதேனும் கார­ணத்தை தேடிக்­கொண்­டி­ருந்த போது, லொத்தர் சீட்டு கிடைத்­தது போன்று கண்டி தெல்­தெ­னிய சம்­பவம் இடம்­பெற்­றது. முஸ்லிம் காங்­கி­ரஸின் ஆத­ர­வினை பெற்றுக் கொள்­வ­தற்­கா­கவே இந்த முயற்சி மேற்­கொள்­ளப்­பட்­டது.

ரணிலின் நண்­ப­ரான பிரதிப் பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வா, அப்­பாவி இளை­ஞர்­களை கைது செய்தார். மார்ச் மாதம் 8 ஆம் திகதி என்­னு­டைய வீட்டில் 10 பேர் கைது செய்­யப்­பட்­ட­தாக ஊட­கங்­களில் செய்தி வெளி­யி­டப்­பட்­டன, ஆனால் அது பொய். என் வீட்­டி­லி­ருந்து 11 பேர் கைது செய்­யப்­பட்­டனர். கைது செய்­யப்­பட்ட 11ஆம் நபர்தான் இந்த நாமல் குமார. எனது வீட்டின் சோபாவில் பிட்டு சாப்­பிட்­டு­விட்டு உறங்­கிக்­கொண்­டி­ருந்­தவர் தான் இந்த நாமல் குமார.

எங்­களை வாக­னத்தில் ஏற்றிச் சென்ற போது சிறிது தூரம் சென்­றதன் பின்னர் நாமல் குமா­ரவின் கைவி­லங்கை அகற்றி பிரதிப் பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வா வேறு வாக­னத்தில் அனுப்பி வைத்தார். என்னைக் கைது செய்­வ­தற்கு சன்­மா­ன­மாக ஐந்து இலட்சம் ரூபா வழங்­கு­வ­தாக பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜய­சுந்­தர உறு­தி­ய­ளித்­தி­ருந்தார்.

வழங்­கப்­பட்ட இந்த ஐந்து இலட்சம் சன்­மா­னத்தை பிரதிப் பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வா பெற்றுக் கொண்டார், அதனை நாமல் குமா­ர­விற்கு வழங்­க­வில்லை. இந்த ஐந்து இலட்சம் ரூபா­வினை பிரித்துக் கொள்ள முடி­யாது, பாதாள உலகக் குழு­வினர் வங்­கியைக் கொள்­ளை­யிட்டு பணத்தைப் பிரித்துக் கொள்ளும் போது மோதிக் கொள்­வது போன்று இரு­வரும் மோதிக் கொள்­கின்­றனர்.

கொலைச் சதித் திட்­டத்­துடன் இரு­வ­ருக்கும் தொடர்பு உண்டு. பிரதிப் பொலிஸ்மா அதிபர் மீது மட்டும் குற்றம் சுமத்­து­வதில் பய­னில்லை. நாமல் குமார சொல்­வ­தனைப் போன்று அவர் நல்­லவர் கிடை­யாது.

அனு­ரா­த­புர சிறைச்­சா­லையில் நான் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த போது டென் பிரி­யசாத் என்னை சந்­திக்க வந்தார். பயங்­க­ர­வாத விசா­ரணைப் பிரி­வினர் என்னை அழைத்­துள்­ளனர். நான் எவ்­வாறு பேச வேண்­டு­மென அவர் என்­னிடம் கேட்டார்.

அதற்கு நான் “உங்­க­ளுக்குத் தெரிந்த உண்­மை­களை வெளிப்­ப­டுத்­து­மாறு” கூறினேன். இறு­தி­யாக ஒரு பொய்­யையும் சொல்­லு­மாறு நான் கூறினேன்.

அந்தப் பொய் என்­ன­வென்றால் “நாமல் குமார உங்­க­ளது (நாலக டி சில்­வா­வி­னது) குரல் பதிவு ஒன்றை என்னைக் கேட்கச் செய்தார்” என கூறு­மாறு நான் டான் பிரி­ய­சாத்­திடம் கூறினேன்.

ஏனென்றால் இந்த இரு­வரும் செய்யும் செயல்­களை தாங்­கிக்­கொள்ள முடி­யாமல் இவ்­வாறு ஓர் பொய் சொல்ல திட்­ட­மிட்டோம்.

இதனைக் கூறிய போது நாலக டி சில்வா எத­னையும் சிந்­திக்­காது கோபப்­பட்டு, நமால் குமா­ரவை கடு­மை­யாக திட்­டினார். ஏன் அமித் வீர­சிங்க பற்­றிய விட­யங்­களை கூறினாய் என நாலக டி சில்வா கடு­மை­யாக சாடினார். உயிர் அச்­சு­றுத்தல் கார­ண­மாக நாமல் குமார அனைத்து விட­யங்­க­ளையும் உள­றி­விட்டார்.

எனக்கு செய்த காரி­யத்­தையே நமால் குமார, பிரதிப் பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்­வா­விற்கும் செய்­து­விட்டார். நாங்­களும் எதிர்­பார்க்­க­வில்லை, இரு­வரும் நீண்ட நாட்­க­ளாக உரையாடியவற்றை பதிவு செய்து வைத்திருந்து அவற்றை ஊடகங்களுக்கு வெளிப்படுத்தினார். ஒரு பாதாள உலகக்குழு இணைந்து செய்த காரியம் தற்பொழுது ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்த நேரிட்டுள்ளது. இந்த விடயம் அரசாங்கமொன்று மாறும் அளவிற்கு பாரதூரமாக அமைந்துவிட்டது” என அமித் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

அமித் விடுதலையின் பின்னணி என்ன?

அமித் வீரசிங்கவுக்கு 7 மாதங்களின் பின்னர் பிணை வழங்கப்பட்டமையானது கடந்த திங்கட் கிழமை காலையிலாகும். அதாவது மஹிந்த ராஜபக்ச பிரதமராக பதவியேற்ற மூன்று நாட்களில் இவர் பிணையில் விடுதலையானார்.  இந்நிலையில் அமித்திற்கு பிணை வழங்கப்பட்டதன் பின்னணியில் அரசியல் தலையீடுகள் உள்ளனவா எனும் சந்தேகத்தை பலரும் வெளியிட்டுள்ளனர்.
-Vidivelli