Verified Web

வடக்கு மாகாண முஸ்லிம்களின் வெளியேற்றம் இனச்சுத்திகரிப்பே

13 days ago Administrator

ப.அகிந்தன்

வடக்கு முஸ்­லிம்கள் இனச் சுத்­தி­க­ரிப்பை எதிர்­கொண்டு 28 ஆண்டு நிறைவைக் குறிக்கும் விசேட கருத்­தாடல் நிகழ்­வொன்று “தமிழ் மக்­களின் அர­சியல் தீர்­வுக்­கான பாதையில் வடக்கு முஸ்லிம் மக்கள்” எனும் கருப்­பொ­ருளில் செவ்­வாய்க்­கி­ழமை மாலை யாழ். பொது நூலக மாநாட்டு மண்­ட­பத்தில் நடை­பெற்­றது. இதன்போது சிவில் சமூ­கத்தின் தலைவர் அப்துல் றஹீம் அப்துல் றமீஸ், முன்னாள் வடக்கு மாகாண எதிர்க்­கட்சித் தலைவர் தவ­ராசா, யாழ். மாந­கர சபை ஆணை­யளார் இமா­னுவேல் ஆர்னோல்ட், முன்னாள் வட­மா­காண சபை உறுப்­பினர் அஸ்மின் எனப் பலரும் கலந்து கொண்டு உரை­யாற்­றினர்.

இந்  நிகழ்வில் உரை­யாற்­றிய வடக்கு சிவில் சமூ­கத்தின் தலைவர் அப்துல் றஹீம் அப்துல் றமீஸ் தெரி­விக்­கையில்,

1990 ஆம் ஆண்டு வடக்கில் இருந்த முஸ்­லிம்கள் வெளி­யேற்­றப்­பட்­டமை இனச் சுத்­தி­க­ரிப்பே. அதா­வது 1983 ஆம் ஆண்டு ஜூலைக் கல­வ­ரத்தில் தமிழ் மக்கள் அனு­ப­வித்த துன்ப துய­ரங்­க­ளுக்கு அனைத்துத்  தலை­வர்­களும் குரல் கொடுத்­தனர். ஆனால் வடக்கில் இருந்து வெளி­யேற்­றப்­பட்ட முஸ்­லிம்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு எட்­டப்­ப­ட­வில்லை. எல்லாத் தலை­வர்­களும் புலிகள் கூறி­யது போல இது ஒரு துர­திஷ்ட சம்­பவம் எனக் கூறு­கின்­றார்கள். இதே சம்­பவம் சிங்­கள மக்­க­ளுக்கு ஏற்­பட்­டி­ருந்தால் நிலைமை எப்­படி இருந்­தி­ருக்கும்? நாவற்­குழிப் பகு­தியில் சிங்­க­ள­வர்­களை கொண்­டு­வந்து குடி­யேற்­று­கி­றார்கள். ஆனால் வடக்கு முஸ்லிம் மக்­களின் மீள் குடி­யேற்றம் தொடர்பில் இதுரை காலமும் தீர்வு காணப்­ப­ட­வில்லை. வடக்கில் இருந்து முஸ்லிம் மக்கள் வெளி­யேற்­றப்­பட்­டமை இனச் சுத்­தி­க­ரிப்பே அன்றி வேறில்லை.

முஸ்­லிம்கள் வெளி­யேற்­றப்­பட்ட நாளை ஒரு பெரு­நாளைக் கொண்­டா­டு­வது போல அல்­லது சாவு வீட்டு நிகழ்வைப் போல நடத்தி விட்டு செல்­கின்­றார்­களே தவிர இவர்­களை மீளக் குடி­யேற்றி இவர்கள் வாழ்ந்த மண்ணில் வாழ என்ன உத­விகள் செய்­தி­ருக்­கின்­றார்கள் என சிந்­திக்க வேண்டி ஏற்­பட்­டுள்­ளது.

வடக்கில் இருந்து முஸ்­லிம்கள் வெளி­யேற்­றப்­பட்­டமை தவ­றா­னது என்­பதை மிகவும் ஆணித்­த­ர­மாக பேசிய வடக்கு மாகாண முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் தவ­ராசா இந்த நிகழ்வில் கலந்து கொண்­டி­ருப்­பது எமக்கு மகிழ்­வினைத் தரு­கின்­றது. எமது சமூ­கத்­திற்கு விடி­வினைத் தேடித்­தர சகல தலை­வர்­களும் ஒத்­து­ழைப்புத் தரவேண்டும். ஆனால், நாடு போகின்ற போக்கைப் பார்த்தால் எதிர்­கா­லத்தில் சிங்­க­ள­வர்கள் தமக்குள் தாமே அடி­பட்டு சாகும் நிiலைமை ஏற்­படும் போல தெரி­கி­றது.

28 வரு­டங்­க­ளுக்கு பின்னர் இந்த வெளி­யேற்­றத்தை ஞாப­கப்­ப­டுத்­து­கின்றோம் என்றால் இன்னும் எத்­தனை வரு­டங்­க­ளுக்கு ஞாப­கப்­ப­டுத்தப் போகின்றோம் என்­பது தான் அடுத்த பிரச்­சினை. எமது மக்­க­ளு­டைய பிரச்­சி­னைக்கு முடிவு கண்டால் ஓர­ளவு மன­தார மறந்து விடுவோம். ஆனால் எமக்குப் பின் வரு­கின்ற சமூ­கங்கள் மறப்­பார்­களா மன்­னிப்­பார்­களா என்­ப­தற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும் என்றார்.

முன்னாள் எதிர்க்­கட்சித் தலைவர் தவ­ராச கருத்துத் தெரி­விக்­கையில்,

இங்கு ஆற்­றப்­பட்ட உரையில் அவ­தா­னித்த சில விட­யங்­களில் ஒட்டு மொத்தத் தமி­ழர்­க­ளையும் குற்ற நோக்­கோடு பார்ப்­ப­தாகத் தான் இருந்­தது. முஸ்­லிம்கள் குறிப்­பாக மன்­னாரைச் சேர்ந்த முஸ்­லிம்கள் கொழும்பு, புத்­த­ளத்­திற்கும் வந்­த­போது ஒரு மனி­தா­பி­ன­மான நோக்கில் ஒருவர் தானும் முஸ்­லிம்­க­ளுக்­காக குரல் கொடுக்க முன்­வ­ராத நேரத்தில், நானும் எனதும் கட்­சி­யி­னரும் புத்­த­ளத்­திற்கு சென்று 92 குடும்­பங்­க­ளுக்கு காணி­களை பகிர்ந்­த­ளித்தோம்.இது மட்­டு­மன்றி கொழும்பில் குடி­ய­மர்ந்த முஸ்­லிம்­க­ளுக்கும் பல உத­வி­களை செய்தோம். இதனைச் செய்­த­தனால் துரோகி என்ற பெய­ரைக்­கூட சுமந்­த­வர்­களில் நானும் ஒருவன். இப்­படி நான் மட்­டு­மல்ல பல தமி­ழர்கள் உதவி செய்­தார்கள். மேலும் வட மாகாண சபை முஸ்­லிம்­களின் மீள் குடி­யேற்­றத்­திற்கு எந்­த­வித திட்­ட­மி­ட­லையும் செய்­ய­வில்லை என்று கூறப்­பட்­டது. இந்த கருத்­துடன் நான் முரண்­ப­ட­வில்லை ஏனென்றால் வட மாகாண சபை ஒன்­றி­லுமே திட்­ட­மிடல் செய்­ய­வில்லை. இது ஒட்­டு­மொத்த குறை­பாட்டின் அம்சம். இது சமூ­கத்தின் குறை­பாடு. மேலும் சிங்­கள அரசு எங்­க­ளுக்கு எத­னையும் தர­வில்லை என்று சொல்ல முடி­யாது. எமக்கு கிடைத்த சந்­தர்ப்­பங்­களை எல்லாம் உதறித் தள்­ளி­யி­ருக்­கின்றோம். இனியும் சந்­தர்ப்பம் வராது என்­றில்லை. வரும்­போது சரி­யாக பயன்­ப­டுத்த வேண்டும். நடந்­தவை நடந்­த­வை­யாக இருக்­கட்டும். நாம் அனை­வரும் ஒற்­று­மை­யாக நகர்ந்து இழந்­த­வற்றை பெற்றுக் கொள்வோம் என்றார்.

யாழ். மாந­க­ர­சபை ஆணை­யாளர் இமா­னுவேல் ஆர்னோல்ட் இங்கு கருத்துத் தெரி­விக்­கையில், இன்­றைய நாள் இந்த மண்ணில் இருந்து தமி­ழர்­களும் 1995 இல் இடம்­பெ­யர்ந்த நாளாகப் பார்க்­கின்றோம். தமி­ழர்­க­ளுக்கோ தமிழ் பேசும் மக்­க­ளுக்கோ இந்த நாள் பொருத்­த­மான நாளாகக் கரு­த­வில்லை. இருந்­தாலும் வர­லாற்றில் நடந்த பல்­வேறு சம்­ப­வங்கள் எங்­க­ளுக்கு கசப்­பான அனு­பங்­களை எமது மனதில் வைத்­தி­ருக்­கி­றது. முஸ்­லிம்கள் வெளி­யேற்­றப்­பட்­டதன் பிற்­பாடு அதா­வது 1990 ஆம் ஆண்­டுக்குப் பின்னர் முஸ்லிம், தமிழ் மக்­க­ளுக்­கி­டை­யி­லான உற­வினை கட்­டி­யெ­ழுப்பும் பொருட்டு பல்­வேறு நிகழ்­வுகள் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த போதிலும் இன்­னமும் ஒரு தூய்­மை­யான இன ஒற்­றுமை வர­வில்லை என்­பதை நாங்கள் உணர்­கின்றோம்.

இனச்­சுத்­தி­க­ரிப்பு என்ற சொற்­பி­ர­யோ­கத்தை தவிர்த்து மாற்­றீ­டாக வேறு ஒரு சொற்­பி­ர­யோ­கத்தை பாவிப்­பது நல்­லது எனத் தோன்­று­கி­றது.  இந்த மண்ணில் நடந்த விட­யத்தை யாரும் மறக்க வேண்டாம். நடந்த துன்ப துய­ரங்­களை நாங்கள் ஏற்றுக் கொள்­கின்றோம். ஆனால் நீண்ட இடை­வெ­ளிக்குப் பின்­னரும் அவ்­வா­றான ஒரு சொற்­பி­ர­யோகம் தமிழ் மக்­களின் மன­நி­லையில் ஒரு தாக்­கத்தை ஏற்­ப­டுத்­து­கின்­றது என்­பது என்­னு­டைய தனிப்­பட்ட கருத்து. நாங்கள் என்ன நோக்­கத்தை நோக்கிப் பய­ணிக்­கின்‍றோம் என்­பதை  எண்­ணிக்‍­கொண்டு, நாங்கள் அவ்­வா­றான வார்த்தைப் பிர­யோ­கத்தை இனி­வரும் காலங்­களில் பயன்­ப­டுத்­தாமல் அதற்கு வேறொரு அர்த்­தத்தைக் கண்­டு­பி­டிக்க வேண்டும் என்றார்.

முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்­பினர் அஸ்மின் கருத்து வெளி­யி­டு­கையில், தமிழ் மக்­க­ளுக்கும் முஸ்லிம் மக்­க­ளுக்­கு­மான உறவு ஒரு அச்­ச­முள்­ள­தாக, ஐயப்­பா­டுள்­ள­தாக உள்­ளது. இதில் நாம் ஒரு மாற்­றத்தைக் காண வேண்டும். 2009 ஆம் ஆண்­டு­க­ளுக்கு முன்னர் இப்­ப­டி­யான நிகழ்­வு­களை நடத்­து­வ­தற்கு எதிர்ப்­பு­கள்தான் அதி­க­மா­ன­தாக இருந்­தது. நல்­லி­ணக்கம் காணப்­ப­ட­வில்லை. ‍பெரும்­பா­லான நிகழ்­வுகள் புத்­தளம் மற்றும் கொழும்­பிலும் தான் நடை­பெற்­றி­ருந்­தது. இந்த நிகழ்­வுகள் புலி­க­ளுக்கு எதி­ரான கருத்­துக்­களை முன்­வைப்­பதும் அல்­லது தமிழ் மக்­க­ளுக்கு எதி­ரான கரு­துக்­களை முன்­வைப்­ப­தா­க­வுமே இருந்­தது. அதற்கு கார­ணமும் இருந்­தது. அதா­வது வெளி­யேற்­றப்­பட்ட முஸ்லிம் மக்கள் மீள்­கு­டி­யேற்­றப்­ப­டாமை மற்றும் அவர்கள் பட்ட அவஸ்­தைகள், பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காணப்­ப­ட­வில்லை. அதனால் அதற்கு கார­ண­மா­ன­வர்கள் மீது தமது எதிர்ப்பைக் காட்­டி­யி­ருந்­தனர். குறிப்­பாக வடக்கைப் பொறுத்த வரையில் முஸ்லிம் மக்களின் அபிலாசை என்னவென்றால் இந் நிகழ்வுகளின் ஊடாக தமிழ் மக்களுடன் இணைந்ததான ஒரு நல்லிணக்கத்தோடு கூ‍‍‍‍‍டியதான முன்னோக்கிய பயணம் அவசியமாகின்றது. அந்தப் பயணத்தில் மனிதத்தை முதன்மைப்படுத்த வேண்டும். மொழியை முதன்மைப்படுத்த வேண்டும் என்பது தான் எங்களது எதிர்பார்ப்பாக உள்ளது என்றார்.

மேலும் நிகழ்வின் இறுதியில்  வடக்கில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமை இனச் சுத்திகரிப்பே மற்றும் இரண்டு இனங்களுக்குமிடைமயில் இன நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட வேண்டும் என பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு  பிரகடனம் ஒன்றும் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli