Verified Web

முஸ்லிம் கட்சி தலைமைகள் முன்னுள்ள சமூக பொறுப்பு

15 days ago Administrator

நாட்டில் ஏற்­பட்­டுள்ள 'அர­சி­ய­ல­மைப்பு சர்ச்சை' மேலும் தீவி­ர­ம­டைந்து வரு­வதை அவ­தா­னிக்க முடி­கி­றது. கடந்த வெள்­ளிக்­கி­ழமை ரணில் விக்­ர­ம­சிங்­கவை பிர­தமர் பத­வி­யி­லி­ருந்து நீக்­கி­விட்டு, அவ்­வி­டத்­துக்கு தனது அர­சியல் எதி­ரி­யாகக் கரு­தப்­படும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்­சவை பிர­த­ம­ராக நிய­மித்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் நட­வ­டிக்­கையே இந்த அர­சி­ய­ல­மைப்பு சர்ச்­சைக்கும் நெருக்­க­டி­க­ளுக்கும் பிர­தான கார­ண­மாகும்.

ஜனா­தி­ப­தியின் இந்த செயற்­பாடு உள்­நாட்டில் மாத்­தி­ர­மன்றி சர்­வ­தேச அரங்­கிலும் பலத்த கோபக் கணை­களை தோற்­று­வித்­துள்­ளது. பிர­த­ம­ராக மஹிந்த ராஜ­பக்­சவை நிய­மித்­தமை ஒரு­பு­ற­மி­ருக்க, மக்­களால் தெரிவு செய்­யப்­பட்ட பிர­தமர் ஒரு­வரை பதவி நீக்கம் செய்­த­மையும் ஜன­நா­ய­கத்தின் தூணாக விளங்கும் பாரா­ளு­மன்­றத்தை 20 நாட்­க­ளுக்கு மேல் ஒத்­தி­வைத்­த­மை­யுமே இந்த எதிர்ப்­ப­லை­க­ளுக்கு பிர­தான கார­ண­மாகும்.

நிலைமை இவ்­வா­றி­ருக்க, தற்­போது பாரா­ளு­மன்­றத்தில் பெரும்­பான்­மையை நிரூ­பிப்­பது யார் என்­ப­தற்­கான போட்­டியே திரை­ம­றைவில் நடந்து கொண்­டி­ருக்­கி­றது. நேற்று மாலை வரை ஐக்­கிய தேசியக் கட்­சியைச் சேர்ந்த ஐந்து பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் மைத்­தி­ரி-­ம­ஹிந்த தரப்­புக்கு ஆத­ர­வ­ளித்­துள்­ள­துடன் அமைச்சப் பொறுப்­புக்­க­ளையும் பெற்­றுள்­ளனர். மேலும் பலரை தமது பக்கம் ஈர்ப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை மைத்­தி­ரி-­ம­ஹிந்த அணி முன்­னெ­டுத்து வரு­கி­றது. இதற்­காக பல கோடிகள் வரை பேசப்­ப­டு­வ­தா­கவும் ஐக்­கிய தேசியக் கட்­சியின் பின்­வ­ரிசை எம்.பி.க்களே பெரும்­பாலும் இலக்கு வைக்­கப்­பட்­டி­ருப்­ப­தா­கவும் அர­சியல் வட்­டா­ரங்கள் கூறு­கின்­றன.

இந் நிலை­யில்தான் சிறு­பான்மைக் கட்­சிகள் இவ்­விரு தரப்­பு­க­ளிலும் யாரை ஆத­ரிக்கப் போகி­றார்கள் என்ற கேள்வி பிர­தா­ன­மாக எழுப்­பப்­ப­டு­கி­றது. தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் ஆத­ரவைக் கூட மஹிந்த ராஜ­பக்ச கோரு­ம­ள­வுக்கு நிலைமை வந்­துள்­ளது. த.தே. கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்­தனை நேற்­றைய தினம் தனது இல்­லத்­துக்கு அழைத்து பிர­தமர் மஹிந்த பேசி­யி­ருக்­கிறார். இனப் பிரச்­சினைத் தீர்வு தொடர்­பிலும் தமிழ் மக்­களின் தீர்க்­கப்­ப­டாத முக்­கிய பிரச்­சி­னைகள் குறித்தும் எழுத்து மூல உறு­தி­மொழி வழங்­கும்­பட்­சத்தில் ஆத­ர­வ­ளிப்­பது பற்றி பரி­சீ­லிக்க முடியும் என சம்­பந்தன் மஹிந்­த­வுக்கு பதி­ல­ளித்­துள்ளார்.

அந்த வகையில், மஹிந்த தரப்பின் அடுத்த இலக்கு முஸ்லிம் கட்­சி­களை தம் பக்கம் ஈர்ப்­ப­தாகும். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் 7 எம்.பி.க்களும் அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் 5 எம்.பி.க்களு­மாக மொத்தம் 12 பேரை இலக்­கு­வைத்த காய் நகர்த்­தல்­களை மஹிந்த அணி முடுக்கி விட்­டி­ருக்­கி­றது. ஆனாலும், தமது ஆத­ரவு ரணில் விக்­ர­ம­சிங்­க­வுக்கே இருக்கும் என இவ்­விரு முஸ்லிம் கட்­சி­களின் தலை­வர்­களும் கடந்த சனிக்­கி­ழமை அலரி மாளி­கையில் நடை­பெற்ற ஊடக சந்­திப்பில் தெரி­வித்­தி­ருந்­தனர். எனினும் அதன் பின்­ன­ரான காலப் பகு­தியில் மேற்­படி தீர்­மானம் தொடர்பில் இரு முஸ்லிம் கட்­சி­களும் அடிக்­கடி கூடி மீள்­ப­ரி­சீ­லனை செய்து வரு­வ­தாக தெரி­கி­றது.

முஸ்லிம் கட்­சிகள் கடந்த காலங்­களில் தமது கட்சி மற்றும் தனிப்­பட்ட அர­சியல்  நலன்­களை முன்­னி­றுத்­தியே தீர்­மா­னங்­களை எடுத்து வந்­துள்­ளது வர­லாறு. கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் கூட மிகவும் இறுதிக் கட்­டத்­தி­லேயே மஹிந்த தரப்­பி­லி­ருந்து விலகி, பொது வேட்­பா­ளரை ஆத­ரிக்க முன்­வந்­ததை நாம் அறிவோம். அந்த வகை­யிலும் பாரா­ளு­மன்றம் கூடி வாக்­கெ­டுப்பு நடக்கும் கணம் வரைக்கும் முஸ்லிம் கட்­சி­களின் நிலைப்­பாட்டை உறு­தி­படக் கூற முடி­யாது என்­பதே நிதர்­ச­ன­மாகும்.

எனினும் முஸ்லிம் கட்­சிகள் முஸ்லிம் சமூ­கத்தின் நலன், எதிர்­காலம், பாது­காப்பு மற்றும் சமூகம் எதிர்நோக்கும் நீண்ட காலப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை முன்னிறுத்தியே தீர்மானம் மேற்கொள்ள வேண்டும். மாறாக தனி நபர் மற்றும் கட்சி நலன்களை முன்வைத்து எடுக்கும் தீர்மானமானது நிச்சயம் முஸ்லிம் சமூகத்தை மேலும் இருண்ட யுகத்தில் தள்ளவே வழிவகுக்கும். இது தொடர்பில் முஸ்லிம் கட்சித் தலைவர்கள் தமது சமூகப் பொறுப்பை உணர்ந்து செயற்படுவார்கள் என நம்புகிறோம்.
-Vidivelli