Verified Web

நாட்டில் ஸ்திரமற்ற நிலை தொடர்வது ஆபத்தானது

16 days ago Administrator

நாட்டில் ஏற்­பட்ட திடீர் அர­சியல் மாற்­றங்­களைத் தொடர்ந்து தலை­நகர் கொழும்­பிலும் ஏனைய பகு­தி­க­ளிலும் சற்று அச்­ச­மான நிலைமை நீடிப்­பதை உணர முடி­கி­றது. நேற்று முன்­தினம் மாலை பெற்­றோ­லிய கூட்­டுத்­தா­பன வளா­கத்தில் இடம்­பெற்ற துப்­பாக்கிச் சூட்டுச் சம்­ப­வத்தில் ஒருவர் உயி­ரி­ழந்­துள்­ள­துடன் மேலும் மூவர் காய­ம­டைந்­துள்­ளனர். இச் சம்­பவம் தொடர்பில் முன்னாள் பெற்­றோ­லிய வளம் மற்றும் துறை­முக அமைச்சர் அர்­ஜுன ரண­துங்க நேற்­றைய தினம் கைது செய்­யப்­பட்டு பிணையில் விடு­விக்­கப்­பட்­டுள்ளார்.

இதற்­கி­டையில் நாட்டின் பல பாகங்­க­ளிலும் ஐக்­கிய தேசியக் கட்சி அமைச்­சர்கள், எம்.பி.க்களின் அபி­வி­ருத்தித் திட்­டங்­களின் பெயர்ப்­ப­ல­கைகள் கிழித்து வீசப்­பட்­டுள்­ள­துடன் பல்­வேறு அமைச்­சுக்­க­ளினுள் ஐ.தே.க. சார்­பா­ன­வர்கள் செல்­வ­தற்கும் தடைகள் ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

இதற்­கி­டையில் ரணில் விக்­ர­ம­சிங்­க­வுக்கு வழங்­கப்­பட்­டி­ருந்த பாது­காப்பு அதி­கா­ரி­களின் எண்­ணிக்கை 1008 இலி­ருந்து 10 ஆக குறைக்­கப்­பட்­டுள்­ள­துடன் மங்­கள சம­ர­வீர, சம்­பிக்க ரண­வக்க உள்­ளிட்ட பல முன்னாள் அமைச்­சர்­களின் பாது­காப்­பு­களும் வாபஸ் பெறப்­பட்­டுள்­ளன.

அலரி மாளி­கை­யி­லி­ருந்து வெளி­யே­று­மாறு ஏலவே ரணில் விக்­ர­ம­சிங்­க­வுக்கு அறி­வு­றுத்­தப்­பட்­டுள்ள போதிலும் அவர் தொடர்ந்தும் அங்­கேயே தங்­கி­யுள்ளார். இந் நிலையில் அலரி மாளி­கையின் சுத்­தி­க­ரிப்பு ஊழி­யர்கள், சார­திகள் இட­மாற்­றப்­பட்­டுள்­ள­தாக ஐ.தே.க. தெரி­வித்­துள்­ளது.

இன்­றைய தினம் ஐக்­கிய தேசிய முன்­னணி கொழும்பில் பாரிய ஆர்ப்­பாட்டம் ஒன்­றுக்கு அழைப்­பு­வி­டுத்­துள்­ளது. ஆயிரக் கணக்­கான ஐ.தே.க. மற்றும் அதன் ஆத­ரவுக் கட்­சி­களின் ஆத­ர­வா­ளர்கள் இதில் பங்­கேற்பர் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

பாரா­ளு­மன்­றத்தைக் கூட்­டு­மாறு பெரும்­பா­லான கட்­சிகள் சபா­நா­ய­க­ரிடம் வேண்­டு­கோள்­வி­டுத்­துள்­ளன. மொத்­த­மாக 128 எம்.பி.க்கள் இந்தக் கோரிக்­கையை எழுத்து மூலம் விடுத்­துள்­ளனர். சர்­வ­தேச நாடு­களும் பௌத்த மத பீடங்­களும் பாரா­ளு­மன்­றத்தைக் கூட்டி இந்த அர­சியல் நெருக்­க­டிக்குத் தீர்வு காணு­மாறு சபா­நா­ய­கரைக் கோரி­யுள்­ளன.

எனினும் ஜனா­தி­பதி பாரா­ளு­மன்­றத்தை நவம்பர் 16 ஆம் திகதி வரை ஒத்­தி­வைத்­துள்­ளதால் அந்த தீர்­மா­னத்தை மீறி சபா­நா­ய­கரால் சபையைக் கூட்ட முடி­யுமா என்­பதில் இன்­னமும் சட்டச் சிக்கல் நீடிக்­கி­றது. இது குறித்து இன்று காலை நடை­பெ­ற­வுள்ள கட்சித் தலை­வர்கள் கூட்­டத்தில் இறு­தித்­தீர்­மானம் எடுக்­கப்­ப­டலாம் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

மொத்­தத்தில் நாட்டில் ஸ்திர­மற்ற ஒரு சூழல் தோற்­று­விக்­கப்­பட்­டுள்­ளது. இந் நிலை தொடர்­வது ஆரோக்­கி­ய­மா­ன­தல்ல. இதற்குத் தீர்வு காணப்­பட வேண்­டு­மானால் பாரா­ளு­மன்றம் கூட்­டப்­பட்டு சட்­ட­ரீ­தி­யான பிர­தமர் யார் என்­பதை நிரூ­பிக்க இட­ம­ளிக்­கப்­பட வேண்டும். இதுவிடயத்தில் ஜனாதிபதி தனது கட்சி, அரசியல் நலன்களைப் புறந்தள்ளி நாட்டின் ஜனநாயகத்திற்கும் 2018 ஜனவரியில் மக்கள் வழங்கிய ஆணைக்கும் மதிப்பளிக்க வேண்டும். நாட்டை மீண்டும் வன்முறைக் கலாசாரத்துக்குள் தள்ள எவரும் இடமளிக்கக் கூடாது என வலியுறுத்த விரும்புகிறோம்.
-Vidivelli