Verified Web

ரணிலுடனே இருப்போம்

16 days ago ARA.Fareel

Image result for ரிஷாட் vidivelli

அர­சியல் களத்தில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நடந்­து­கொண்­ட­விதம் நியா­ய­மற்­ற­தாகும். நன்­றி­யீ­ன­மாகும். அவர் தீர்­மானம் ஒன்று மேற்­கொள்ளும் முன்பு சிறு­பான்மை சமூ­கத்தைப் பிர­தி­நிதித்­து­வப்­ப­டுத்­து­ப­வர்­க­ளுடன் கலந்­தா­லோ­சித்­தி­ருக்க வேண்டும்.

ஜனா­தி­பதி பத­வியில் அமர்த்­து­வ­தற்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் மற்றும் தமிழ் கட்­சிகள் பெரும் பங்­க­ளிப்­பினை செய்­துள்­ளன. இதனால் எம்­முடன், கலந்­து­ரை­யா­டியே ஜனா­தி­பதி அர­சியல் மாற்­றங்­களை செய்­தி­ருக்க வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் தலை­வரும் முன்னாள் அமைச்­ச­ரு­மான ரிஷாட் பதி­யுதீன் தெரி­வித்தார்.

ஜனா­தி­பதி மேற்­கொண்ட தீர்மானம் தொடர்பில் கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் குறிப்­பிட்­டதா­வது,

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு நேர்ந்­துள்ள இந்த இக்­கட்­டான நிலை­மையில் நல்­லாட்­சியின் பங்­காளர் என்ற வகை­யில் நாம் அவ­ருடன் இருப்­ப­தற்கே தீர்­மா­னித்­துள்ளோம். எமது கட்­சியின் அர­சியல் உயர் பீடம் இம்­மு­டி­வினை எடுத்­துள்­ளது.

என்­றாலும் ரணில் விக்­கி­ரம சிங்­கவின் தலை­மை­யி­லான அரசு முஸ்­லிம்கள் விட­யங்கள் பல­வற்றில் கண்டும் காணா­த­தும்போல் இருந்­துள்­ளது.

ஒலுவில் பிரச்­சினை, வடக்கு மீள்­கு­டி­யேற்றம், காணிப்­பி­ரச்­சி­னைகள், தம்­புள்ளை பள்­ளி­வாசல் முதல் கிரேண்ட்பாஸ், பாத்­தி­யா­மா­வத்தை பள்­ளி­வா­சல்கள் விவ­கா­ரங்­களில் அரசு தீர்­வினைப் பெற்றுத் தர­வில்லை.

எமது கட்­சியின் உயர்­பீடம் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து இவற்றுக்கு தீர்வுகள் பெற்றுத் தருவதாக உறுதியளிக்கும் படியும் நாம் அவருக்கு பக்கபலமாக இருப்போம் என்றும் கூறியுள்ளோம் என்றார்.
-Vidivelli