Verified Web

சிறுபான்மையினர் துச்சமாக கணிக்கப்படுகிறார்கள்

20 days ago Administrator

Image result for ரவூப் ஹக்கீம் in vidivelli
Q ஜனா­தி­ப­திக்கும், பிர­த­ம­ருக்கும் இடையில் பிணக்கு இருப்­ப­தா­கவும், அர­சாங்­கத்­துக்­குள்­ளேயே முரண்­பா­டுகள் நில­வு­வ­தா­கவும் இப்­பொ­ழுது நாங்கள் ஊட­கங்­களில் காண்­கிறோம்.  அவற்றை நீங்கள் எவ்­வாறு நோக்­கு­கின்­றீர்கள்?


வேறு­பட்ட கொள்­கை­களை கொண்ட பிர­தான இரண்டு கட்­சி­களை உள்­ள­டக்­கிய தேசிய அர­சாங்­கத்தில் அடிக்­கடி அதிர்­வ­லைகள் ஏற்­ப­டு­வ­துண்டு. அர­சியல் விவ­கா­ரங்­களை பொறுத்­த­வ­ரையில் சில வேறு­பா­டுகள் காணப்­ப­டலாம். அர­சாங்­கத்தின் பொரு­ளா­தாரம் மற்றும் நிதி முகா­மைத்­துவம் சம்­பந்­தப்­பட்ட விவ­கா­ரங்­களில் மோதல்கள் இடம்­பெறக் கூடாது என்­பது தான் முக்­கி­ய­மா­ன­தாகும். ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் அவர்­க­ளது கட்­சியை சேர்ந்­த­வர்­க­ளுக்கு பதி­ல­ளிக்க கட­மைப்­பட்­ட­வர்கள். உள்­ளக கட்­ட­மைப்பு, அபி­வி­ருத்தி போன்ற விட­யங்­களில் உடன்­பா­டின்மை ஏற்­ப­டு­வது தவிர்க்க முடி­யா­த­தாகும். ஒரு விட­யத்தை எடுத்துக் கொண்டால் அதனால் ஏற்­படும் பிர­தி­ப­லனை பகிர்ந்­து­கொள்­வதில் இவ்­வாறு சம்­ப­விக்­கின்­றது. 


முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிக்கா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­ண­துங்­கவின் ஆட்சிக் காலத்தில் 2002 – 2004 ஆம் ஆண்­டு­களில் நாங்கள் அர­சாங்­கத்தின் பங்­கா­ளி­க­ளாக சக வாழ்வு நடத்­திய காலத்தில் இவ்­வா­றான அனு­பவம் எங்­க­ளுக்கும் ஏற்­பட்­டி­ருந்­தது. அது முற்­றிலும் வேறு­பட்­டது. ஐக்­கிய தேசிய கட்சி அப்­பொ­ழுது பாரா­ளு­மன்­றத்தில் பெரும்­பான்மை கொண்­டி­ருந்­தது. 

இந்த அர­சாங்­கத்தில், உள்­ளூ­ராட்சி தேர்­தலில் ஏற்­பட்ட பின்­ன­டைவை தொடர்ந்து அதன் போக்கு வித்­தி­யா­ச­மா­ன­தாக இருக்­கின்­றது. அர­சி­யல்­வா­திகள் தேர்தல் பின்­ன­டை­வி­லி­ருந்து தங்­களை தூர­மாக்கி கொள்­ளவே எத்­த­னிக்­கின்­றனர். இவ்­வா­றா­ன­வையே இன்­றைய பிரச்­சி­னை­க­ளுக்கு வழி­வ­குத்­தன. ஆட்­சியை பற்­றிய முதிர்ச்­சி­யான அணு­கு­முறை அவ­சி­ய­மா­னது.


Q உண்­மையில் முன்­னைய அர­சாங்­கத்தை கவிழ்ப்­ப­தற்கு தமிழ் மற்றும் முஸ்லிம் கட்­சிகள் கடு­மை­யாக பாடு­பட்­டன. இந்தப் பின்­ன­ணியில் முஸ்லிம் கட்­சி­யொன்றின் தலைவர் என்ற முறையில்  உங்­க­ளது நட­வ­டிக்கை பற்றி என்ன நினைக்­கின்­றீர்கள்? 


அம்­பாறை மற்றும் திகன சம்­பவங்கள் பாது­காப்பு தொடர்­பான அச்­சு­றுத்­தலை ஏற்­ப­டுத்­தின. அது எங்­க­ளது சமூ­கத்தின் பாது­காப்பு தொடர்­பா­னது.  நிச்­ச­ய­மாக அது சட்டம் ஒழுங்கு பொறி­மு­றையில் காணப்­பட்ட பாரிய தவ­றாகும். உட­ன­டி­யாக உரிய நேரத்தில் நட­வ­டிக்கை எடுக்க எங்­க­ளது புல­னாய்வு துறை­யி­னரும் தவ­றி­விட்­டார்கள். முன்­னைய ஆட்­சி­யி­னரை எடுத்­து­க்கொண்டால் எங்கள் சமூ­கத்தின் மீது அவர்கள் வேண்­டு­மென்றே அசட்­டை­யாக இருந்­து­விட்­டார்கள். அத­னா­லேயே அந்தக் காலத்தில்  சிறு­பான்­மை­யினர் அதிகம் கோப­ம­டைந்­தனர். 


யுத்த வெற்­றியை தொடர்ந்து பெரும்­பான்­மை­யினர் மனங்­களில் அவர்­க­ளுக்கு பாது­காப்­பின்மை என்ற அச்­சத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு சிறு­பான்­மை­யினர் பற்­றிய அடிப்­ப­டையற்ற, ஆதா­ர­மற்ற வெவ்­வேறு விட­யங்­களை முன்­னைய ஆட்­சி­யாளர் கையாண்­டனர். அதே­வே­ளையில், தங்­க­ளது வணக்க தலங்­க­ளுக்கு ஆபத்து இருப்­ப­தையும் அவை திட்­ட­மிட்டு தாக்­கப்­ப­டு­வ­தையும் சிறு­பான்­மை­யினர் கண்­டு­கொண்­டனர்.  

Q அப்­ப­டி­யானால், குறை­பா­டுகள் இருந்­தாலும், இந்த ஆட்சி முன்­னைய ஆட்­சியை விட சிறந்­ததா?


ஆம் நிச்­ச­ய­மாக, அதனை மறுக்க முடி­யாது. எங்­க­ளுக்­கென்றோர் இட­மி­ருக்­கின்­றது. நாங்கள் எதைப் பற்­றி­யா­வது குர­லெ­ழுப்பும் பொழுது அதற்கு செவி­ம­டுக்­கின்­றார்கள். சட்­டமும் ஒழுங்கும் ஓர­ளவு நில­வு­கின்­றது. அவர்கள் அச்­ச­மின்றி குடி­யியல், அர­சியல் உரி­மை­க­ளுக்­கான சர்­வ­தேச ஒப்­பந்­தத்தை அமுல்­ப­டுத்த விளைகி­றார்கள். வெறுப்­பு­ணர்ச்­சியை தூண்டக் கூடிய குற்­றங்­களும், வெறுப்­பூட்டக் கூடிய பேச்­சுக்­களும் முன்னர் இதை­விட அதி­க­மாக இடம்­பி­டித்­தி­ருந்­தன. எனினும் கசப்­பான குற்றச் செயல்­களை கையாள்­வதில் அர­சாங்கப் பொறி­முறை மேலும் விழிப்­பாக இருக்க வேண்டும். அதனை மெத்­த­ன­மான கையு­றை­களை அணிந்­து­கொண்டு கையாள முடி­யாது. முன்­னைய ஆட்­சியில் அது தான் அதி­க­மாக நடந்­தது. 


Q ஆனால், உங்­க­ளது கட்சி கூட்­ட­மொன்றில் தற்­போ­தைய அர­சாங்­கத்தை எச்­ச­ரித்­தி­ருந்­தீர்கள். நீங்கள் இந்த அர­சாங்­கத்தில் மகிழ்ச்­சி­யோடு இருந்தால் ஏன் அதற்கு எதி­ராக எச்­ச­ரிக்கை விடுக்­கின்­றீர்கள்? 


அதா­வது, தேர்தல் சீர்த்­தி­ருத்தம் போன்ற விவ­கா­ரங்­களில் சிறு­பான்மை சமூ­கத்­தினர்  துச்­ச­மாக கணிக்­கப்­ப­டு­கின்­றார்கள். கலப்பு தேர்தல் சீர்த்­தி­ருத்தம் எங்கள் மீது திணிக்­கப்­பட்­டதை நான் எதிர்க்­கின்றேன். பெப்­ர­வரி 10 ஆம் திகதி தேர்தல் முடி­வு­களின் பின்னர் கலப்பு முறைத் தேர்தல் முறைமை முழு­மை­யாக சிக்­க­லா­னது என்­பதை ஒவ்­வொ­ரு­வரும் உணர்ந்­தி­ருக்­கின்­றார்கள். இருந்தும் அர­சாங்­கத்தின் ஒரு சாரார் புதிய தேர்தல் முறை­மையே தேவை என வற்­பு­றுத்தி வரு­கின்­றனர். ஐக்­கிய தேசிய கட்­சியும், கூட்டு எதிர்­கட்­சியும் பழைய தேர்தல் முறை­மை­யையே வர­வேற்­கின்­றன. ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சியினர் புதிய முறை­மையே தேவை­யென வலி­யு­றுத்­து­கின்­றனர். அது எங்­களை அதி­ருப்­தி­ய­டைய செய்­கின்­றது. அது பற்றி நாங்கள் வெளிப்­ப­டை­யாக பேசி வரு­கின்றோம்.


Q அர­சாங்கம் உங்­க­ளது கோரிக்­கை­க­ளுக்கு செவி­ம­டுக்­கா­விட்டால், அடுத்த கட்ட நட­வ­டிக்கை எது­வாக இருக்கும்? 
அர­சாங்கம் எனக்கு காது கொடுக்­காது என நான் நினைக்­க­வில்லை. புதிய தேர்தல் முறைமை பல முரண்­பா­டு­களை கொண்­டி­ருப்­பதை ஒவ்­வொ­ரு­வரும் நன்­றாக உணர்ந்­தி­ருக்­கின்­றார்கள். தற்­போ­தைய நிலை­மையில் தேர்­த­லொன்­றுக்கு முகம் கொடுப்­பதில் நம்­பிக்­கை­யீனம் ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. அது மடைத்­த­ன­மா­னது என்­ப­துவே எனது அபிப்­பி­ரா­ய­மாகும்.

Q ஓர் இடைக்­கால அர­சாங்கம் பற்றி பேச்­ச­டி­ப­டு­கின்­றது. தற்­போ­தைய அர­சாங்கம் கவிழ்க்­கப்­பட்டு விடும் என நீங்கள் கவ­லைப்­ப­டு­கின்­றீர்­களா?


அறவே இல்லை. அவ்­வா­றான முன்­னெ­டுப்பு வெற்­றி­ய­டை­யாது என்­பது முத­லி­லி­ருந்தே எனக்கு தெரியும். கப்­பலை கவிழ்க்க முடி­யாது என்று ஒன்­றி­ணைந்த எதிர்­கட்­சி­யினர் சில­ரி­டத்தில் கூறி­யி­ருக்­கிறேன். அது நடக்­காது என எங்­க­ளுக்கு திட்­ட­வட்­ட­மாக தெரியும். அவர்கள் சில அதிர்­வ­லை­களை உண்­டாக்க நினைக்­கி­றார்கள். வேலியின் மீது குந்­திக்­கொண்­டி­ருக்கும் சிலரை உசுப்­பேத்தி அவர்­களை வெளிக்­காட்ட நினைக்­கி­றார்கள். அது அவர்­க­ளுக்கு ஆதா­ய­மா­னது. 


யாருமே பத­றவோ அவ­ச­ரப்­ப­டவோ தேவை­யில்லை. அர­சாங்­க­மொன்றை அமைப்­ப­தற்­காக  வெறு­மனே ஒரு புறத்­தி­லி­ருந்து மறு­பு­றத்­துக்கு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை தாவச் செய்­வ­தற்கு தான் ஆத­ர­வ­ளிக்கப் போவ­தில்லை என பஷில் ராஜ­பக் ஷ கூறி­யி­ருக்­கிறார். ஆட்­களை மாற்­று­வதால் அர­சாங்­கத்தை மாற்­றலாம் என்­பது இல­கு­வா­னது. அதை விட பிர­பல்­ய­மான பேரி­யக்க தொழிற்­பாட்டின் ஊடாக ஆட்சி மாற்றம் ஏற்­ப­டுத்­து­வதே சிறப்­பா­னது. எதிர்­கட்சி வரி­சை­களில் கூர்­மை­யான கருத்து வேறு­பா­டுகள் நில­வி­வ­ரு­கின்­றன. 


Q அர­சியல் காற்று வீசும் திசையை கண்­ட­றி­வதில் கைதேர்ந்­தவர் என உங்­களை கரு­து­கின்­றனர். இன்­றைய சூழ்­நி­லையில் அர­சியல் காற்று எந்த திசையில் வீசும்?


(புன்­ன­கைக்­கின்றார்) நாட்டு விவ­கா­ரங்­களை முன்­ன­றி­விப்பு செய்­வ­தற்கு ஒருவர் தீர்க்­க­த­ரி­சி­யாக இருக்க வேண்­டி­ய­தில்லை. நீங்கள் மக்­க­ளுக்கு எவற்றை செய்­துள்­ளீர்கள் என்­பதை சந்­தைப்­ப­டுத்­து­வதே முக்­கி­ய­மா­னது. சாதித்­த­வற்றை போதி­ய­ளவு விளம்­ப­ரப்­ப­டுத்­து­வதில் விடும் தவறு தான் இந்த அர­சாங்­கத்தின் அதி­க­மான பின்­ன­டை­வு­க­ளுக்கு கார­ண­மாகும். இதில் நாங்கள் தவ­றி­விட்டோம். அதே­வே­ளையில், நாங்கள் ஆள் மாறி ஆள் மாறி பரஸ்­பரம் விமர்­சிக்­கின்றோம்.


Qநீங்கள் செய்த எவ்­வா­றான விட­யங்கள் உரிய முறையில் சந்­தைப்­ப­டுத்த வில்லை? 


எனது அமைச்சில் மட்டும் நாங்கள் ஏரா­ள­மான பாரிய செயற்­றிட்­டங்­களை நடை­மு­றைப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்றோம். அவற்­றிற்கு உரிய பிர­சித்தம் கிடைப்­ப­தில்லை. மக்கள் உணர்ச்­சி­வ­ச­மான செய்­தி­க­ளையே விரும்­பு­கின்­றனர். ஊட­கங்கள் கூட உணர்ச்­சி­யூட்டக் கூடிய செய்­தி­க­ளையே எதிர்­பார்க்­­கின்­றன. ஏதா­வது உட்­பூசல் அல்­லது பிணக்கு என்றால் அதனை ஊதிப் பெருப்­பிக்­கின்­றார்கள். எடுத்­து­காட்­டாக இந்த அர­சாங்­கத்­தினால் மேற்­கொள்­ளப்­பட்ட நல்­லாட்­சிக்­கான சட்­டங்­களின் எண்­ணிக்கை மற்றும் நிறை­வேற்று அதி­கார முறை­மையில் ஏற்­ப­டுத்­திய குறைப்பு என்­ப­வற்றைக் குறிப்­பி­டலாம்.

Q எந்த திசையில் அர­சியல் காற்று வீசு­கின்­றது? 


அர­சாங்­கத்­துக்கு இன்னும் திருத்திக் கொள்ள வாய்ப்­புக்கள் உள்­ளன. நாங்கள் அடி­மட்­டத்தில் இன்னும் சில ஆக்­க­பூர்­வ­மான காரி­யங்­களை செய்ய வேண்டும். கம்­பெ­ர­லிய (கிரா­மிய பிறழ்வு), என்­டர்­பி­ரைஸ்­ஸ்ரீ­லங்கா மற்றும் கிராம சக்தி என்­பன அபி­வி­ருத்­தியை அடி­மட்­டத்­திற்கு கொண்டு செல்­கின்­றன. அதுவே சரி­யான வழி­யாகும். அதுதான் கீழி­ருந்து மேல் நோக்கி செல்லும் நடை­மு­றை­யாகும். அரச துறையில் தொழில் வாய்ப்­புக்­களை ஏற்­ப­டுத்­து­வது வேலை­யில்லா திண்­டாட்­டத்­துக்கு தீர்­வாக மாட்­டாது. எனது நோக்கில் ஐக்­கிய தேசிய கட்சி அர­சாங்­கங்கள் இந்த விடயத்தில் வித்­தி­யா­ச­மான போக்கை கொண்­டி­ருந்­தன. அது கடந்த ஆட்­சி­யிலும் வித்­தி­யா­ச­மா­னதா­கவே இருந்­தது. அவர்கள் அரச தொழில் வாய்ப்­பு­களை அள்ளிக் கொடுத்­தார்கள். அது அர­சாங்­கத்தின் பலம் என கிரா­ம­வா­சிகள் நம்­பினர். நாங்கள் அரச துறையின் செயற்­பாட்டை அதி­க­ரிக்கச் செய்ய வேண்டும். இந்த அர­சாங்கத்தினர் சில பிர­சித்­த­மில்­லாத செயலில் இறங்­கி­னார்கள். அவர்கள் ஓய்­வூ­திய திட்­டத்தை சீர்­தி­ருத்த முயற்­சித்­தனர். எதிர்ப்பை சமா­ளிக்க முடி­யாமல் நிறுத்­தி­விட்­டனர். 

ஆர்­வத்­துடன் எதையும் மேற்­கொள்ள முன்­வந்­து­விட்டு பின்னர் சடு­தி­யாக பின்­வாங்­கு­கின்­றார்கள். செயற் திறனை அதி­க­ரிக்கச் செய்ய வேண்­டு­மானால் சில சீர்­தி­ருத்­தங்­களை மேற்­கொண்­டே­யாக வேண்டும். அதற்கு உறு­தி­யான அர­சியல் பலம் தேவை. தேசிய அர­சாங்­க­மாக இருந்­தாலும் கூட, சிர­மங்­க­ளுக்கு மத்­தியில் ஒன்­றித்து செல்ல வேண்டி இருக்­கின்­றது. அது தேசிய அரசாங்கத்தின் எதிர்­பார்ப்­புக்­களை தவறச் செய்­கின்­றது. 

Qஜனா­தி­பதி தேர்தல் பற்றி உங்­க­ளது அபிப்­பி­ராயம் என்ன? 

ஏலவே, சிலர் தங்கள் தொப்­பி­களை வளை­யங்­க­ளுக்குள் எறிந்­துள்­ளனர். ஆனாலும், நிச்­ச­ய­மற்ற நிலைமை உள்­ளது. அர­சியல் அமைப்பு சீர்­தி­ருத்த செயற்­பாடு நிஜ­மா­கு­மென ஒவ்­வொ­ரு­வரும் எதிர்­பார்த்­தனர். நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறைமை வெஸ்ட் மின்ஸ்டர் முறை­யினால் மாற்­றி­ய­மைக்­கப்­படும் என நினைத்­தனர். தேர்தல் சீர்த்­தி­ருத்தம் என்­பது பகுதி பகு­தி­யாக மேற்­கொள்ளக் கூடி­யது அல்ல. 
19ஆவது சீர்த்­தி­ருத்தம் ஒரு வரை­ய­றைக்­குட்­பட்ட செயற்­பாடு; அது ஓர் அடைவு. சிறு­பான்மை சமூ­கங்­களைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் நாங்கள் அர­சியல் அமைப்பில் முழு­மை­யான மாற்­றத்­தையே எதிர்­பார்க்­கின்றோம்.


Qஅர­சி­ய­ல­மைப்பு சீர்­தி­ருத்த செயற்­பாடு உண்­மை­யா­னதா? 

எந்­த­வொரு அர­சி­ய­ல­மைப்பு செயற்­பாடும் 6 மாதங்­க­ளி­லி­ருந்து ஓராண்­டுக்குள் நிறைவு செய்­யப்­ப­டா­விட்டால் அது பிரச்­சி­னையில் சிக்­குண்­டு­விடும். 


Qகடந்த 2015 ஆம் ஆண்டு தேர்­தலில் ஒன்­றாக தேர்­தலில் குதித்த கட்­சிகள் தொடர்ந்தும் ஒரே குடையின் கீழ் இருக்க வேண்டும் என சிலர் கூறு­கின்­றனர். இந்த கூற்­றொடு நீங்கள் உடன்­ப­டு­கின்­றீர்­களா? 

நாங்­களும் அதே நிலைப்­பாட்­டி­லேயே இருக்கின்றோம். நாங்கள் எங்களது நோக்கங்களை அடைய வேண்டியிருக்கின்றது. எங்களுக்கொரு தெளிவான இலக்கு இருக்க வேண்டும். பெரும் தேசியவாத சக்திகள் எதிர்க்கின்றன என்பதற்காக நாங்கள் எங்களது தூர நோக்கு பார்வையிலிருந்து விடுபடத் தேவை இல்லை. எங்களது கோரிக்கைகளை வென்றெடுப்பதற்கு போதிய அரசியல் சீர்திருத்தம் அவசியம். அபிவிருத்தி வேலைகளை முன்னெடுப்பதன் காரணமாக மக்கள் உரிமைகளை மறந்துவிடுவார்கள் என்ற தவறான எண்ணத்துடன் மக்கள் வாழ்வதற்கு இடமளிக்கக் கூடாது. உரிமை கோரிக்கைகள் எப்பொழுதுமே காத்திரமானவை.


Q ஜனாதிபதித் தேர்தல் நடந்தால் யாரை ஆதரிப்பீர்கள்? 

பதில் : இதே சக்திகளே இருக்க வேண்டும் என நாம் நம்புகின்றோம். இன்றைய அரசியலில் ஜனாதிபதியும், பிரதமரும் ஒற்றுமையாக செயற்படுவதற்கான வழிவகைகளை கடைப்பிடிக்க வேண்டும்.  பலமான நிலையில் ஐக்கிய தேசிய கட்சி எந்தொருவரையும், எந்த வேளையிலும் எதிர் கொள்ள கூடும். முன்னறிவிப்பு செய்வதற்கு இன்னும் காலம் கனிந்துவிடவில்லை. நாடு தழுவிய தேர்தலில் ஆதரவாளர்கள் மத்தியில் பேரார்வத்தை கட்டியெழுப்ப வேண்டும். ஐக்கிய தேசியக் கட்சி தானாகவே மீளெழுச்சி பெற வேண்டும். 


Q கோத்தாபய ராஜபக்ஷ எதிரணி வேட்பாளர் என்பதை பற்றி என்ன நினைக்கின்றீர்கள்? 
 கோத்தாபய ராஜபக் ஷ ஒரு பிரபல வேட்பாளர். ஆனால், அவர் மஹிந்த ராஜபக் ஷ அளவு பிரசித்தமானவர் அல்லர். 

நன்றி: டெய்லி மிரர்
-Vidivelli