Verified Web

சத்தியத்தை உரைப்போம் மனிதர்களை மதிப்போம்

T.M.Mufaris Rashadi

விரி­­வு­ரை­யா­ளர், பாதி­ஹ் கல்வி நிறு­வ­னம்

20 days ago T.M.Mufaris Rashadi

நபித்­தோழர் அப்­துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் அறி­விக்­கி­றார்கள்: “யாரு­டைய உள்­ளத்தில் அணு­வ­ளவு தற்­பெ­ருமை இருக்­கி­றதோ அவர் சொர்க்­கத்தில் நுழை­ய­மாட்டார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறி­னார்கள். அப்­போது ஒருவர், “தமது ஆடை அழ­காக இருக்க வேண்டும், தமது காலணி அழ­காக இருக்க வேண்டும் என ஒருவர் விரும்­பு­கிறார். (இதுவும் தற்­பெ­ரு­மையில் சேருமா?)” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ் அழ­கா­னவன், அழ­கையே அவன் விரும்­பு­கிறான். தற்­பெ­ருமை என்­பது சத்­தி­யத்தை ஏற்­றுக்­கொள்ள மறுப்­பதும் மக்­களை அவ­ம­திப்­ப­தும்தான்” என்று கூறி­னார்கள். (ஆதாரம் : முஸ்லிம்)

சத்­தி­யத்தை மக்­க­ளுக்கு எடுத்­து­ரைப்­பதும் அதன் பால் மக்­களை அழைப்­பதும் எப்­படி எம்­மீது கட­மை­யாக உள்­ளதோ அது போன்று மனி­தர்­களை மதிப்­பதும் அவர்­களை நேசிப்­பதும் எம்­மீது கட­மை­யாக ஆக்­கப்­பட்­டுள்­ளது, ஏனெனில் சுவ­னத்தை எமக்கு ஹரா­மாக ஆக்­கக்­கூ­டிய மிகப்­பெரும் கொடிய பாவ­மான பெருமை என்­பதன் வரை­வி­லக்­க­ணமே சத்­தி­யத்தை புறக்­க­ணிப்­பதும் மனி­தர்­களை அவ­ம­திப்­ப­து­மாகும், இந்த இரண்டு தீய குணங்­க­ளி­லி­ருந்தும் விடு­பட்டு சத்­தி­யத்தை ஏற்று அதனை உரைத்து, மனி­தர்­களை மதித்து அவர்­க­ளது உணர்­வு­களைப் புரிந்து செயற்­ப­டு­வதே இறை­வி­சு­வா­சி­களின் குறிப்­பாக அழைப்­பா­ளர்­களின் அத்­தி­ய­வ­சியக் கட­மை­யாகும்.

மேலுள்ள அடிப்­படைப் புரி­த­லோடு சத்­தி­யத்தை உரைத்தல், மார்க்­கத்தை மக்­க­ளுக்கு எத்­தி­வைத்தல், நன்­மையை ஏவி, தீமையை தடுத்தல் போன்ற அம்­சத்தின் அவ­சி­யத்தை இறை செய்­தி­க­ளி­லி­ருந்து நாம் புரிந்து கொள்ள முயற்­சிப்போம்.

இந்த உம்மத் செய்ய வேண்­டிய பணியைப் பற்றி அல்லாஹ் தனது திரு­ம­றையில் கூறும் போது இவ்­வாறு கூறு­கிறான்; "மனி­தர்­க­ளுக்­காக தோற்­று­விக்­கப்­பட்ட (சமு­தா­யத்தில்) சிறந்த சமு­தா­ய­மாக நீங்கள் இருக்­கி­றீர்கள்; (ஏனெனில்) நீங்கள் நல்­லதைக் கொண்டு ஏவு­கி­றீர்கள்; தீயதை விட்டும் விலக்­கு­கி­றீர்கள்; இன்னும் அல்­லாஹ்வின் மீது (திட­மாக) நம்­பிக்கை கொள்­கி­றீர்கள்; வேதத்­தை­யு­டை­யோரும் (உங்­களைப் போன்றே) நம்­பிக்கை கொண்­டி­ருப்பின், (அது) அவர்­க­ளுக்கு நன்­மை­யாகும் அவர்­களில் (சிலர்) நம்­பிக்கை கொண்­ட­வர்­க­ளா­கவும் இருக்­கின்­றனர்; எனினும் அவர்­களில் பலர் (இறை கட்­ட­ளையை மீறும்) பாவி­க­ளா­கவே இருக்­கின்­றனர்" (ஆலு இம்ரான்)

சத்­தி­யத்தின் பால் மக்­களை அழைத்து நன்­மையை ஏவி, தீமை­களை விட்டும் அவர்­களைத் தடுப்­பது இந்த உம்­மத்தின் மீது கட­மை­யாகும் இந்த பணியை நிறை­வேற்­று­வதில் ஒரு போதும் எந்த ஒரு முஸ்­லிமும் பின்­வாங்க முடி­யாது.

தாரிக் பின் ஷிஹாப் (ரஹ்) அவர்கள் கூறு­கி­றார்கள் முதன் முதலில் பெருநாள் தினத்தில் தொழு­கைக்கு முன் சொற்­பொ­ழிவு (குத்பா) நிகழ்த்­தி­யவர் மர்வான் பின் ஹகம் ஆவார். (அவ்­வாறு அவர் சொற்­பொ­ழிவு நிகழ்த்திக் கொண்­டி­ருந்தார்.) அப்­போது அவரை நோக்கி ஒருவர் எழுந்து நின்று, "சொற்­பொ­ழி­வுக்கு முன்பே (பெருநாள் தொழுகை) தொழ வேண்டும்'' என்று கூறினார். அதற்கு மர்வான் "முன்பு நடை­பெற்­றது கைவி­டப்­பட்டு விட்­டது (இப்­போது அது நடை­மு­றையில் இல்லை)'' என்று கூறினார். (அப்­போது அங்­கி­ருந்த) அபூ­சயீத் அல்­குத்ரீ (ரலி) அவர்கள், "இதோ இந்த மனிதர் தமது கட­மையை நிறை­வேற்றி விட்டார். அல்­லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பின்­வ­ரு­மாறு) கூற நான் கேட்­டுள்ளேன்:

உங்­களில் ஒருவர் ஒரு தீமையை (மார்க்­கத்­திற்கு முர­ணான ஒரு செயலை)கண்டால் அவர் அதைத் தமது கரத்தால் தடுக்­கட்டும். முடி­யா­விட்டால் தமது நாவால் (சொல்லித் தடுக்­கட்டும்). அதுவும் முடி­யா­விட்டால் தமது உள்­ளத்தால் (அதை வெறுத்து ஒதுக்­கட்டும்). இதுவே இறை நம்­பிக்­கையின் பல­வீ­னமா(ன நிலையா)கும் எனக்­கூ­றி­னார்கள் (நூல்: முஸ்லிம் 78) .

நுஃமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் அறி­விக்­கி­றார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறி­னார்கள்: அல்­லாஹ்வின் சட்­டங்­களில் விட்டுக் கொடுப்­ப­வ­ருக்கும், அதை மீறு­ப­வ­ருக்கும் உதா­ரணம் ஒரு கூட்­டத்­தாரின் நிலை­யாகும். அவர்கள் ஒரு கப்­பலில் இடம் பிடிப்­ப­தற்­காக சீட்டுக் குலுக்கிப் போட்­டார்கள். அவர்­களில் சில­ருக்குக் கப்­பலின் கீழ்த்­த­ளத்­திலும் சில­ருக்குக் கப்­பலின் மேல் தளத்­திலும் இடம் கிடைத்­தது. கப்­பலின் கீழ்த்­த­ளத்தில் இருந்­த­வர்கள் தண்­ணீரை எடுத்துக் கொண்டு மேல் தளத்தில் இருந்­த­வர்­களைக் கடந்து சென்று கொண்­டி­ருந்­தார்கள். அதனால் மேல் தளத்­தி­லி­ருந்­த­வர்கள் துன்­ப­ம­டைந்­தார்கள். ஆகவே, கீழ்த்­த­ளத்தில் இருந்த ஒருவர் ஒரு கோட­ரியை எடுத்து, கப்­பலின் கீழ்த்­த­ளத்தைத் துளை­யிடத் தொடங்­கினார். மேல் தளத்­தி­லி­ருந்­த­வர்கள் அவ­ரிடம் வந்து, "உனக்கு என்ன நேர்ந்­தது?'' என்று கேட்­டார்கள். அவர், "நீங்கள் என்னால் துன்­பத்­திற்­குள்­ளா­னீர்கள். எனக்குத் தண்ணீர் அவ­சியம் தேவைப்­ப­டு­கின்­றது. (அதனால், கப்­பலின் கீழ்த்­த­ளத்தில் துளை­யிட்டு அதில் வரும் தண்­ணீரைப் பயன்­ப­டுத்திக் கொள்வேன்)'' என்று கூறினார். (துளை­யிட விடாமல்) அவ­னது இரு கைக­ளையும் அவர்கள் பிடித்துக் கொண்டால் அவர்கள் அவ­ரையும் காப்­பாற்­று­வார்கள்; தங்­க­ளையும் காப்­பாற்றிக் கொள்­வார்கள். அவரை அவர்கள் (கப்­பலில் துளை­யிட) விட்டு விட்டால் அவ­ரையும் அழித்து விடு­வார்கள்; தங்­க­ளையும் அழித்துக் கொள்­வார்கள்.  (நூல்: புகாரி 2686)

சத்­தி­யத்தை எடுத்­து­ரைத்தல் என்ற அடிப்­படைக் கட­மையை நன்­மையை ஏவுதல், தீமையை தடுத்தல் என்ற இரண்டு அம்­சங்­க­ளி­னூ­டாக நாம் செய்து வரு­கின்றோம், இந்த இரண்டில் ஒன்றை இந்த சமூகம் விட்டு விட்­டாலும் இந்த சமூ­கத்தின் அழி­வுக்கு அதுவே கார­ண­மா­கி­விடும் என்­ப­தற்கு மேலுள்ள செய்தி மிகப்­பெரும் சான்­றாகும்.

சத்­தி­யத்தை எடுத்­து­ரைப்­பது போன்று மனி­தர்­களை மதிக்­கவும் நாம் கற்­றுக்­கொள்ள வேண்டும், உல­கத்­துக்கே சத்­தி­யத்தை எத்­தி­வைக்க அல்­லாஹ்­வினால் தேர்வு செய்து அனுப்­பப்பட்ட நபி­க­ளாரின் வாழ்வே நமக்கு சிறந்த முன்­மா­தி­ரி­யாகும்.

நபி (ஸல்) அவர்கள் மக்­காவை வெற்றி கொண்ட போது அவர்­க­ளு­டைய எதி­ரிகள் அனை­வரும் அவர்கள் முன்­னி­லையில் நின்­றார்கள், அந்த சந்­தர்ப்­பத்தில் கருணை உள்ளம்  கொண்ட நபி (ஸல்) அவர்கள் அனை­வ­ருக்கும் பொது­வான  மன்­னிப்பை வழங்கி விட்­டார்கள்.

நபி (ஸல்) அவர்­களின் சிறிய தந்­தை­யான ஹம்ஸா (ரலி) அவர்­களை வஹ்ஷீ என்ற கறுப்பு நிற அடிமை கொலை செய்­தி­ருந்தார். பெரு­மா­னா­ருக்கு மிகவும் விருப்­ப­மாக இருந்த ஹம்ஸா (ரலி) அவர்கள் கொலை­யுண்­டதை அவர்­களால் தாங்கிக் கொள்ள முடி­ய­வில்லை.

மக்­காவை அவர்கள் கைப்­பற்­றிய போது வஹ்­ஷியும் பெரு­மா­னா­ருக்கு முன்னால் இருந்தார். நபி (ஸல்) அவர்கள் அவரைப் பார்த்து ''நீ தான் வஹ்­ஷீயா? ஹம்­ஸாவைக் கொன்­றவர் நீ தானா?'' என்று கேட்­டார்கள். அதற்கு அவர் ஆம் என்று கூறினார்.

வஹ்­ஷீயைப் பார்க்கும் போதெல்லாம் ஹம்ஸா (ரலி) அவர்­களின் ஞாபகம் வந்­ததால் அவ­ரி­டத்தில் நபி (ஸல்) அவர்கள், ''தயவு செய்து உங்கள் முகத்தை என்­னி­டத்தில் காட்­டாமல் இருக்க முடி­யுமா?'' என்று பணி­வுடன் வேண்டிக் கொண்­டார்கள். இதன் பின்பு வஹ்ஷீ இஸ்­லாத்தைத் தழுவிக் கொண்டார். அறி­விப்­பவர்: உபை­துல்லாஹ் பின் அதீ (ரழி) நூல்: புகாரி 4072

யூதர் ஒருவர் (சந்­தையில்) தம் சரக்கை எடுத்துக் காட்­டிய போது மிகக் குறைந்த விலை அவ­ருக்குக் கொடுக்­கப்­பட்­டது, அதை அவர் விரும்­ப­வில்லை. உடனே அவர் ''மனி­தர்கள் அனை­வ­ரையும் விட (சிறந்­த­வ­ராக) மூசாவைத் தேர்ந்­தெ­டுத்துக் கொண்­ட­வனின் மீது சத்­தி­ய­மாக! (நான் இந்த விலையை வாங்கிக் கொள்ள) மாட்டேன்'' என்று கூறினார். இதை அன்­சா­ரி­களில் ஒருவர் கேட்டு விட்டார். உடனே எழுந்து அந்த யூதரின் முகத்தில் அறைந்து, ''நபி (ஸல்) அவர்கள் நமக்­கி­டையே வாழ்ந்து கொண்­டி­ருக்க மனி­தர்கள் அனை­வ­ரையும் விட மூசாவைத் தேர்ந்­தெ­டுத்துக் கொண்­ட­வனின் மீது சத்­தி­ய­மாக என்றா கூறு­கிறாய்?'' என்று கேட்டார்.

அந்த யூதர் நபி (ஸல்) அவர்­க­ளிடம் சென்று, ''அபுல்­காசிம் அவர்­களே! (என் உயிர், உடைமை, மானத்தைப் பாது­காப்­ப­தாக) எனக்கு நீங்கள் பொறுப்­பேற்று ஒப்­பந்தம் செய்து தந்­துள்­ளீர்கள். என் முகத்தில் அறைந்­த­வரின் நிலை என்ன?'' என்று கேட்டார், நபி (ஸல்) அவர்கள் அந்த முஸ்­லிமை நோக்கி, ''நீ ஏன் இவ­ரு­டைய முகத்தில் அறைந்தாய்?'' என்று கேட்­டார்கள். அவர் விட­யத்தை நபி (ஸல்) அவர்­க­ளிடம் சொன்னார். உடனே நபி (ஸல்) அவர்­களின் முகத்தில் கோபக்­குறி தென்­ப­டு­கின்ற அள­விற்கு அவர்கள் கோப­ம­டைந்­தார்கள். பிறகு ''அல்­லாஹ்வின் நேசர்­க­ளுக்­கி­டையே ஏற்­றத்­தாழ்வு பாராட்­டா­தீர்கள்'' என்று கூறி­னார்கள். அறி­விப்­பவர்: அபூ­ஹு­ரைரா (ரலி) நூல்: புகாரி 3414

யூத­னாக இருந்­தாலும் எவர் எந்த மதத்தைச் சார்ந்­த­வ­ராக இருந்­தாலும் நீதி, நியாயம் என்­பது யாவ­ருக்கும் பொது­வா­னதே என்­ப­தனை நபி­க­ளாரின் வாழ்­வி­லி­ருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும், இறைத் தூத­ராக இருந்து கொண்டே மாற்று மதத்­த­வர்­களின் உரி­மை­க­ளுக்­காக குரல் கொடுக்­கின்ற, மனி­தர்­களை மதிக்­கின்ற மிக அழ­கிய இந்த முன்­மா­தி­ரியை நாமும் கடைப்­பி­டிக்க முயற்­சிக்க வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் கூறி­னார்கள் : உங்­களில் ஒரு­வ­ரிடம் அவ­ரு­டைய பணியாள் அவ­ரது உணவைக் கொண்டு வந்தால் அவர் அப்­ப­ணி­யா­ளனைத் தம்­முடன் (உட்­கார வைத்துக் கொள்­ளட்டும். அவ்­வாறு) உட்­கார வைக்க வில்­லை­யென்­றாலும் அவ­ருக்கு ஒரு கவளம் அல்­லது இரு கவ­ளங்கள் அல்­லது ஒரு வாய் அல்­லது இரு வாய்கள் கொடுக்­கட்டும். ஏனெனில் அதைத் தயா­ரிக்க அந்தப் பணியாள் பாடு­பட்­டி­ருப்பார். அறி­விப்­பவர்: அபூ­ஹு­ரைரா (ர­லி) நூல்: புகாரி 2557

முஸ்லிமல்லாதவர்கள், அடிமைகள், பணியாட்கள், தமது எதிரிகள் என எல்லா மனிதர்களையும் மனிதர்களாக மதித்து அவர்களுக்கு வழங்க வேண்டிய கண்ணியத்தையும் கௌரவத்தையும் நபிகளார் வழங்கியிருக்கிறார்கள், எவ்வித பாகுபாடுமின்றி நீதியை நிலை நாட்டி மக்களிடையே அன்பையும் சகோதரத்துவத்தையும் ஏற்படுத்தியிருக்கிறார்கள், அனைத்து மனிதர்களையும் கருணைக்கண் கொண்டு பார்த்து மன்னிப்பை வாரி வழங்கியிருக்கறார்கள்,  இந்தப் பண்புகள் தான் உலகமே பாராட்டும் உத்தம நபியின் வெற்றிக்கு அடிப்படைக் காரணமாகும், நாமும் எமது வாழ்க்கையில் குறிப்பாக தஃவா களத்தில் சத்தியத்தை உரைப்பது போன்று மனிதர்களை மனிதர்களாக மதித்து இந்த தூதை உலகில் மோலோங்கச் செய்வோமாக!  
-விடிவெள்ளி