Verified Web

கிழக்கின் சுற்றுலா துறை மேம்பாடுமா

28 days ago Administrator

எம்.எம்.ஏ.ஸமட்

அமெ­ரிக்க டொல­ருடன் ஒப்­பி­டு­கையில். இலங்கை ரூபாவின் பெறு­மதி தொடர்ச்­சி­யாக வீழ்ச்­சி­ய­டைந்து வரு­வதும், உலக சந்­தையில் மசகு எண்­ணெயின் விலை அதி­க­ரிப்பும் இலங்­கையை பொரு­ள­ாதார, நிதி நெருக்­க­டிக்குள் தள்­ளி­யி­ருக்கும் சூழலில் பொருட்கள் மற்றும் விலை­களின் அதி­க­ரிப்­பினால் சாதா­ரண வரு­மானம் பெறும் குடும்­பங்கள் பல்­வேறு பொரு­ளா­தார நெருக்­க­டி­க­ளையும், பாதிப்­புக்­க­ளையும் சந்­தித்து வரு­வ­தாக அறி­ய­மு­டி­கி­றது.

இதனால், இலங்­கையின் பொரு­ளா­தாரக் கட்­ட­மைப்பைப் பாது­காப்­ப­தற்கும், நிதி­யீட்­டலை அதி­க­ரிப்­ப­தற்­கு­மான கட்­டா­யத்­திற்குள் அர­சாங்கம் தள்­ளப்­பட்­டுள்­ள­தாக பொரு­ளா­தார நிபு­ணர்கள் தெரி­வித்து வரு­வ­தையும் அவ­தா­னிக்க முடி­கி­றது. இத­ன­டிப்­ப­டையில் இலங்­கைக்­கான அந்­நிய செலா­வ­ணியை அதி­க­ரிப்­ப­தற்கும், மக்கள் வரு­மா­னத்தை அதி­க­ரித்துக் கொள்­வ­தற்­கான புதிய முயற்­சி­களை அறி­மு­கப்­ப­டுத்­து­வதும் அவற்றில் மக்­களை ஈடு­படச் செய்­வதும்,  ஊக்­கு­விப்­ப­தற்­கு­மான பல்­வேறு திட்­டங்கள் நடை­மு­றைப்­ப­டுத்த வேண்­டிய தேவை­யுள்ள நிலையில்,  அர­சாங்கம் பல அபிவி­ருத்தித் திட்­டங்­களை நடை­மு­றைப்­ப­டுத்தி வரு­வ­தையும் காணக் கூடி­ய­தா­க­வுள்­ளது.

அத­ன­டிப்­ப­டையில், இலங்­கையின் நிதி­யீட்­டத்தில் குறிப்­பிட்டுச் சொல்லக் கூடி­ய அள­விற்கு வகி­பங்கு வகிக்கும் சுற்­று­லாத்­து­றையை அபி­வி­ருத்தி செய்­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­வதைச் சுட்­டிக்­காட்ட வேண்டும். கடந்த காலங்­களை விடவும் அண்­மைக்­கா­ல­மாக வெளி­நாட்டு உல்­லாசப் பய­ணி­களின் வருகை அதி­க­ரித்­துள்­ள­துடன், உள்­நாட்­டி­லுள்ள பல சுற்­றுலாப் பிர­தே­சங்­களை சென்று பார்­வை­யிடும் உள்ளூர் சுற்­று­லா­வா­சி­களின் எண்­ணிக்­கையும் அதி­க­ரித்­துள்­ள­தாக வெளி­நாட்டு மற்றும் உள்ளூர் சுற்­றுலா பய­ணிகள் தொடர்­பான அறிக்­கை­க­ளி­னூ­டாக அறியக் கூடி­ய­தா­க­வுள்­ளது.

இலங்­கையும் சுற்­று­லாவும்

கொழும்பு, கண்டி, நுவ­ரெ­லிய, களுத்­துறை, காலி, அநு­ரா­த­புரம், பொல­ன­றுவை, யாழ்ப்­பாணம், திரு­கோ­ண­மலை உட்­பட நாட்­டி­லுள்ள 25 மாவட்­டங்­க­ளிலும் 101 சிறந்த சுற்­று­லாத்­த­லங்கள் காணப்­ப­டு­கின்­றன. இத்­த­லங்­களைப் பார்­வை­யி­டு­வ­தற்கு உள்­நாட்­டிலும், வெளி­நா­டு­க­ளி­லு­மி­ருந்து பல்­லா­யி­ரக்­க­ணக்­கானோர் தினமும் குறித்த தலங்­க­ளுக்கு சென்று வரு­கின்­றனர். இதனால், சுற்­று­லாத்­துறை சமூக, பொரு­ளா­தார ரீதியில் செல்­வாக்கு செலுத்தும் துறை­யாக வளர்ந்து வரு­கின்­றது என்­பதைக் குறிப்­பிட்­டாக வேண்டும்.

சுற்­று­லாத்­து­றையின் வளர்ச்சி வீதத்தை 2017ஆம் ஆண்டு செப்­டம்பர் மாதத்­துடன் ஒப்­பி­டு­கை­யில 2018 செப்­டம்பர் மாதத்தில் 11.6 வீதம் வளர்ச்­சி­ய­டைந்­தி­ருப்­பதை சுற்­றுலாப் பய­ணி­களின் வருகை தொடர்­பான அறிக்­கை­களின் மூலம் அறிய முடி­கி­றது.

2017 ஜன­வரி மாதம் முதல் செம்­டம்பர் மாதம் வரை­யான காலப்­ப­கு­தியில் பல்­வேறு நாடு­க­ளி­லி­ருந்து இலங்­கைக்கு வந்த சுற்­றுலாப் பய­ணி­களின் எண்­ணிக்கை 1,551,931 ஆகும். 2018 ஜன­வரி மாதம் முதல் செப்­டம்பர் மாதம் வரை­யான காலப்­ப­கு­தியில் இலங்­கைக்கு வரு­கை­தந்த சுற்­றுலாப் பய­ணி­களின் எண்­ணிக்கை 1,731,922 ஆகும். இந்­நி­லையில், 2017ஆம் ஆண்டு 2.1 மில்­லியன் வெளி­நாட்டு உல்­லாசப் பய­ணிகள் இலங்­கைக்கு வருகை தந்­துள்­ள­துடன் இவ்­வ­ருடம் வெளி­நாட்டு உல்­லாசப் பய­ணி­களின் வரு­கை­யா­னது 2.5 வீத­மாக இருக்­கு­மென எதிர்­பார்க்­கப்­பட்­டுள்­ளது.

இவ்­வாறு சுற்­றுலாப் பய­ணி­களின் இலங்­கைக்­கான வரு­கையின் வளர்ச்­சியை அதி­க­ரிப்­ப­தற்­காக இலங்கை எடுத்து வரும் பல்­வேறு முயற்­சி­களின் பய­னாக இந்த அதி­க­ரிப்பு ஏற்­பட்­டி­ருப்­ப­தாக சுற்­று­லாத்­து­றைசார் நிபு­ணர்கள் மற்றும் ஆய்­வா­ளர்கள் குறிப்­பி­டு­வ­தையும் அவ­தா­னிக்க முடி­கி­றது. யுத்தம் நிறை­வ­டைந்து 9 வரு­டங்­க­ளாக நாட்டில் நிலவும் அமைதிச் சூழலின் கார­ண­மாக இலங்கை வரும் வெளி­நாட்டு சுற்­றுலாப் பய­ணி­களின் எண்­ணிக்கை அதி­க­ரித்­துள்ள நிலையில் 2020ஆம் ஆண்­ட­ளவில் 4.5 மில்­லி­ய­னுக்கும் மேற்­பட்ட வரு­மா­னத்தை ஈட்ட முடி­யு­மென எதிர்­பார்க்­கப்­பட்­டுள்­ளது.

சமூக ரீதியில் பிரத்­தி­யே­க­மா­னதும் சுற்­றாடல் ரீதியில் பொறுப்பு வாய்ந்­த­து­மான இலங்­கையின் இயற்கை மற்றும் கலா­சார மர­பு­ரி­மை­களைப் பிர­தி­ப­லிக்கும் அதி­வி­சே­ட­மான சுற்­றுலா அனு­ப­வங்­க­ளையும், அதே­நேரம் நாட்­டிற்கும், மக்­க­ளுக்கும் பொரு­ளா­தார நன்­மை­க­ளையும் பெற்றுக் கொடுக்­கின்ற மிக உயர் பெறு­மா­ன­மு­டைய ஒரு சுற்­றுலாத் தல­மாக இலங்­கையை விளங்­கச்­செய்தல் என்ற குறிக்­கோ­ளுடன் சுற்­று­லாத்­து­றையை அபி­வி­ருத்தி செய்­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் அர­சினால் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றது.

இந்­நி­லையில், இலங்­கையின் கிழக்கு மாகாண மாவட்­டங்­க­ளான திரு­கோ­ண­மலை, மட்­டக்­க­ளப்பு மற்றும் அம்­பாறை ஆகிய மாவட்­டங்­களில் பல பிர­சித்­தி­பெற்ற சுற்­று­லாத்­த­லங்கள் காணப்­ப­டு­கின்­றன. திரு­கோ­ண­மலை மாவட்­டத்தின் நிலா­வெளிக் கடற்­கரை, மாபில் கடற்­கரை, திருக்­கோணேஸ்­வர ஆலயம், கன்­னியா சுடுநீர் கிணறு போன்ற பிர­தே­சங்­களும், மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் பாசிக்­குடா, அம்­பாறை மாவட்­டத்தில்  பொத்­துவில், உல்லை மற்றும் அரு­கம்பை ஆகிய பிர­தே­சங்கள் பிர­சித்­தி­பெற்ற சுற்­று­லாத்­த­லங்­க­ளாகக் காணப்­ப­டு­கின்ற போதிலும் இம்­மா­வட்­டங்­களில் இன்னும் பல பிர­தே­சங்கள் சுற்­று­லாத்­த­லங்­க­ளாக காணப்­ப­டு­கின்­றன.

கிழக்கு மாகா­ணமும் சுற்­று­லாத்­து­றையும்

இயற்­கைத்­து­றை­மு­கத்தைக் கொண்ட திரு­கோ­ண­மலை முதல், உல்­லா­சத்தின் சொர்க்­க­பு­ரி­யாக விளங்கும் பொத்­துவில், அரு­கம்பை வரை­யான கிழக்கின் கரை­யோரப் பிர­தே­சங்­க­ளிலும் கரை­யோரம் சாராத  பல பிர­தே­சங்­க­ளிலும் சுற்­றுலாப் பய­ணி­களைக் கவ­ரக்­கூ­டிய பல சுற்­று­லாத்­த­லங்கள் காணப்­ப­டு­கின்­றன. இருப்­பினும், இத்­த­லங்கள் சுற்­றுலாப் பய­ணி­களின் குறிப்­பாக வெளி­நாட்டு சுற்­றுலாப் பய­ணி­களின் பார்­வைக்குப் படாமல் காணப்­ப­டு­கின்­றன.

இச்­சுற்­று­லாத்­த­லங்கள் அபி­வி­ருத்தி செய்­யப்­ப­டா­மலும், இத்­த­லங்­க­ளுக்­கு­ரிய முறை­யான போக்­கு­வ­ரத்து கட்­ட­மைப்பு உரு­வாக்­கப்­ப­டா­மலும் காணப்­ப­டு­வ­தனால் இத்­த­லங்­களை நோக்­கிய சுற்­றுலாப் பய­ணி­களின் வருகை கிழக்கின் பிர­சித்­தி­பெற்ற சுற்­று­லாத்­த­லங்­க­ளுக்­கான சுற்­றுலாப் பய­ணி­களின் வரு­கை­யுடன் ஒப்­பி­டு­கையில் குறிப்­பிட்டுச் சொல்­லத்­தக்­க­ளவு  வளர்ச்­சி­ய­டைந்­த­தாகக் காணப்­ப­ட­வில்லை என்­றுதான் கூற வேண்டும்.

ஆனால், இப்­பி­ர­தே­சங்கள் அபி­வி­ருத்தி செய்­யப்­பட்டு போக்­கு­வ­ரத்துக் கட்­ட­மைப்­புக்­களும் முறை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­மானால் இச்­சுற்­று­லாத்­த­லங்­க­ளி­னூ­டாக பிர­தேச இளைஞர், யுவ­திகள் தொழில் வாய்ப்பைப் பெறவும் பிர­தேச பொரு­ளாதார அபி­வி­ருத்­திக்கும் வழி­வ­குக்கும்.

இருப்­பினும், இச்­சுற்­று­லாத்­த­லங்­களின் அபி­வி­ருத்தி என்­பது வெறு­மனே பொரு­ளா­தார வளர்ச்சி, வேலை­வாய்ப்பு உள்­ளிட்ட பயன்­களை மாத்­திரம் கருத்தில் கொள்­ளத்­தக்­க­தல்ல. மாறாக, பிர­தேச பண்­பாட்டுத் தனித்­து­வத்தை சுற்­றுலாப் பய­ணிகள் மதிப்­ப­தற்கு ஏற்ற வகையில் சுற்­றுலாப் பய­ணி­க­ளுக்கு எடுத்­து­ரைக்­கப்­பட்டு பாது­காக்­கப்­ப­டு­வது அவ­சி­ய­மாகும்.

அத்­துடன், சுற்­றுலாப் பய­ணி­களின் இப்­பி­ர­தே­சங்­க­ளுக்­கான வருகை பிர­தேச மக்­களின் தனித்­துவம், பண்­பாடு, விழு­மி­யங்கள், சமூக, குடும்ப உறவு முறைகள் போன்­றவை மாற்­ற­ம­டை­யாமல் பாதுகாக்­கப்­ப­டு­வதும் சுற்­று­லாத்­து­றையை விருத்­தி­செய்ய எடுக்கும் நட­வ­டிக்­கை­களின் முக்­கி­யத்­துவம் வழங்க வேண்டிய தேவை­யு­முள்­ளதை இங்கு சுட்­டிக்­காட்ட வேண்­டி­யுள்­ளது.

சுற்­றுலா அபி­வி­ருத்தி என்­பது வெறு­மனே வெளி­நாட்டு பய­ணிகள் இங்கு வந்து கடற்­க­ரை­களில் உறங்கி எழும்­பு­வதும் கடலில் நீரா­டு­வதும் என்ற மக்­களின் மனப்­ப­தி­வுகள் அகற்­றப்­பட்டு பிர­தேச அபி­வி­ருத்­தி­யிலும், பொரு­ளா­தார விருத்­தி­யிலும் பிர­தேச வளங்­களை பயன்­ப­டுத்­த­ுவ­தற்­கா­ன­தொரு சந்­தர்ப்­பத்தை சுற்­று­லாத்­த­லங்­களின் அபி­வி­ருத்­தியும்  பய­ணி­களின் வரு­கையும் அமை­யப்­பெறும் என்ற மன­நி­லையை உரு­வாக்க வேண்­டிய பொறுப்பும், மக்­க­ளி­டையே சுற்­று­லாத்­துறை தொடர்­பான உள­வ­ளத்­துணை வழங்க வேண்­டு­மென்­பதும் குறிப்­பிட்டுச் சுட்­டிக்­காட்ட வேண்­டி­யுள்­ளது.

இத்­துடன் சுற்­று­லாத்­து­றை­யி­னூ­டாக இப்­பி­ர­தே­சங்­களை அபி­வி­ருத்தி செய்து இப்­பி­ர­தே­சங்­களில் வேலை­யற்ற இளைஞர், யுவ­தி­க­ளுக்கு வேலை­வாய்ப்பைப் பெற்­றுக்­கொ­டுக்கும் முயற்­சிகள் பல முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. இத­னூ­டாக, தொழில்­வாய்ப்­பின்மை என்ற பிரச்­சி­னைக்கும் தீர்வைக் கண்­டு­கொள்ள முடியும்.  இவற்றைக் கருத்­திற்­கொண்டு, கிழக்கில் சுற்­று­லாத்­து­றையை அபி­வி­ருத்தி செய்­வ­தற்­கான பல நட­வ­டிக்­கைகள் யுத்தம் நிறை­வ­டைந்­த­தான காலப்­ப­கு­தியில் அர­சினால் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்ற­மையை அவ­தா­னிக்கக் கூடி­ய­தா­க­வுள்­ளது.

இதன் பிர­காரம், மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தின் ஏறாவூர் களப்பு பிர­தேசம் மற்றும் ஏறாவூர் கடற்­கரைப் பிர­தேசம் என்ப­வற்றை அபி­வி­ருத்தி செய்­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் கடந்த வருடம் சுற்­று­லாத்­துறை அமைச்­சினால் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. இருப்­பினும் மட்­டக்­க­ளப்பில் இன்னும் பல சுற்­றுலாப் பிர­தே­சங்கள் அபி­வி­ருத்தி செய்­யப்­ப­டாமல் காணப்­ப­டு­கின்­றன என்­பதும் சுட்­டிக்­காட்­டத்­தக்­கது.

இம்­மா­வட்­டத்தின் சுற்­றுலா விருத்­தியில் இயற்கை வளங்­களை நிலை­யாக பயன்­ப­டுத்­து­வதை இலக்­காகக் கொண்டு சுற்­று­லாத்­துறைப் பய­ண­மொன்­றாக ஏறாவூர் களப்பு பிர­தே­சத்­தினை விருத்தி செய்தல், உள்­நாட்டு, வெளி­நாட்டு சுற்­றுலாப் பய­ணி­களின் வரு­கை­யினை அதி­க­ரிப்­ப­தோடு, உயர் தரத்­தி­லான ஓய்­வு­பெறும் இடங்­களை தாபித்தல். தனித்­து­வ­மான சூழல் கலா­சார வளங்கள் மற்றும் பொழு­து­போக்­குடன் கூடிய சுற்­று­லாத்­து­றையின் அனு­பவம் மற்றும் திருப்­தி­யி­னையும் அதி­க­ரித்தல், பசு­மைச்­சூழல், பொழுது போக்கு அம்­சங்­களை மேம்­ப­டுத்தல், சிறு நடுத்­தர தொழில்­து­றை­களை ஊக்­கு­வித்தல், தொழில் வாய்ப்­புக்­களை உரு­வாக்­கு­தலும் வரு­மான வழி­களை மேம்­ப­டுத்­தலும், கிரா­மப்­புற சுய­தொழில் வாய்ப்­புக்­களை உரு­வாக்­குதல்  என்ற அரசின் இலக்­குகள் இருந்­தாலும், இவ்­வி­லக்கை நோக்­கிய பய­ணத்தில் ஏற்­ப­டு­கின்ற துஷ்­பி­ர­யோக, மோச­டி­களும் தவிர்க்­கப்­ப­டு­வது அவ­சி­ய­மென வலி­யு­றுத்­தப்­ப­டு­வ­தையும் புடம்­போட்டுக் காட்ட வேண்­டி­யுள்­ளது.

இவற்­றுடன், சுற்­றுலாக் கைத்­தொ­ழிலின் ஊடாக மக்கள் வலு­வூட்­டப்­ப­டு­வதை மேம்­ப­டுத்­து­வ­தற்­காக அடி­மட்­டத்­தி­லான சுற்­று­லாக்­கைத்­தொ­ழில்­களில் ஈடு­பட்­டு­வரும் தரப்­பி­னர்­க­ளுக்­கி­டையே உண்­மை­யான வேறு­பா­டு­களை முன்­வைத்தல், சுற்­றுலாக் கைத்­தொழில் தற்­போ­துள்ள மற்றும் அது பர­வி­வரும் பிர­தே­சங்­களைச் சேர்ந்த இளைஞர் யுவ­தி­க­ளு­க்­கான புதிய தொழில் வாய்ப்­பு­களை உரு­வாக்கல், நாட்டின் நிலை­யான அபி­வி­ருத்தி தொடர்பில் அடி­மட்­டத்­தி­லான சுற்­றுலாக் கைத்­தொ­ழிலின் தரப்­பி­ன­ரி­ட­மி­ருந்து தர­மான சேவையைப் பெற்­றுக்­கொள்­வதை உறு­திப்­ப­டுத்தல், சுற்­றுலாப் பய­ணி­களின் திருப்­தியை அதி­க­ரிப்­ப­தற்­காக சுற்­று­லாவின் இயல்­பி­னையும் தரத்­தையும் மேம்­ப­டுத்தல் போன்ற நோக்­கங்­களை அடை­வ­தற்­காக கிழக்கின் மூன்று மாவட்­டங்­க­ளிலும் சுற்­று­லாத்­துறை விருத்­திக்­கான நடவ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வந்­தாலும், இந்­ந­ட­வ­டிக்­கைகள் திருப்­தி­யான முறையில் நிறைவு செய்­யப்­ப­டு­கின்­றனவா என்ற கேள்­வியும் நில­வு­கி­றது.

இந்­நி­லையில், இப்­பி­ர­தே­சங்­களில் சுற்­று­லாத்­து­றைக்­கான விருத்திச் செயற்­பா­டு­க­ளிலும் அத­னூ­டாக கிடைக்கும் பயன்­களைப் பெற்­றுக்­கொள்­வ­தி­லும, பிர­தேச வளங்­களை பயன்­ப­டுத்தி சுற்­று­லாத்­து­றை­சார்ந்த தொழில் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­ப­திலும்  பிர­தேச மக்­க­ளி­டையே ஆர்­வ­மின்மை காணப்­ப­டு­வ­தாக ஆய்வுத் தக­வல்கள் சுட்­டிக்­காட்­டு­வ­தையும் குறிப்­பிட்­டாக வேண்டும்.

கிழக்கு மாகா­ணத்தில் சுற்­று­லாத்­து­றையை அபி­வி­ருத்தி செய்யும் நட­வ­டிக்­கைகள் துரி­த­மாக முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ள­தா­கவும் இதன் மூலம் கிழக்கில் இளைஞர், யுவ­தி­க­ளுக்கு வேலை­வாய்ப்­புக்கள் ஏற்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ள­தா­கவும்  பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அண்­மையில் மட்­டக்­க­ளப்பில் நடை­பெற்ற பொது நிகழ்­வொன்றில் பிர­தம அதி­தி­யாகக் கலந்­து­கொண்­ட­போது குறிப்­பிட்­டி­ருந்தார்.

அத்­துடன் மட்­டக்­க­ளப்­புக்­கான உள்ளூர் விமான போக்­கு­வ­ரத்­திலும் துரித மாற்­றங்­களை கொண்­டு­வ­ரவும் பிர­தமர் குறிப்­பிட்­டி­ருந்த நிலையில் மட்­டக்­க­ளப்பு முதல் பொத்­துவில் வரை­யான ரயில்­பாதை தொடர்பில் கடந்த ஜனா­தி­பதி தேர்தல் மற்றும் பாரா­ளு­மன்றத் தேர்தல் காலங்­களில் அளிக்­கப்­பட்ட வாக்­கு­று­திகள் மறக்­கப்­பட்டு விட்­ட­தா? என மக்கள் கேள்வி எழுப்­பு­வ­தையும் சுட்­டிக்­காட்ட வேண்டும்.

பொத்­துவில் வரை­யான ரயில்­பா­தையும் சுற்­று­லாவும்

அம்­பாறை மாவட்­டத்தின் பொத்­துவில் பிர­தேசம் சம­கா­லத்தில் உள்ளூர் மற்றும் வெளி­நாட்டு உல்­லாசப் பணி­களின் சொர்க்­கபு­ரி­யாக மாறி­வ­ரு­கி­றது. பொத்­து­வி­லி­ருந்து அருகம்­பைக்­குடா மற்றும் அதை அண்­டிய பிர­தே­சங்கள் உல்­லாசப் பய­ணி­க­ளி­னாலும். உல்­லாச விடு­தி­க­ளி­னாலும் நிறைந்து காணப்­ப­டு­கின்­றன, வரு­மானம் ஈட்­டித்­தரக் கூடிய துறை­யாக காணப்­படும் உல்­லாசத் துறையை அபி­வி­ருத்தி செய்­வ­திலும் உல்­லாசப் பய­ணி­களைக் கவர்­வ­திலும் அர­சாங்கம் முழுக்­க­வனம் செலத்தி வந்­தாலும் அதற்­கான விரை­வா­னதும் திருப்தி­க­ர­மா­ன­து­மான போக்­கு­வ­ரத்துக் கட்­ட­மைப்பு உரு­வாக்­கப்­ப­ட­வில்லை. கடந்த 2014ஆம் ஆண்டு கிழக்கு மாகா­ணத்தில் முத­லீடு செய்­யுங்கள் என்ற தலைப்பில் சர்­வ­தேச முத­லீட்டு ஊக்­கு­விப்பு மகா­நாடு ஒன்று கொழும்பில் நடை­பெற்­றது. இம்­ம­கா­நாட்டில் கலந்­து­கொண்ட பலர் கிழக்கு மாகாணப் பிர­தே­சங்கள் முத­லீடு செய்­வ­தற்கு சிறந்த பிர­தே­சங்கள் என்ற கருத்­துக்­களைத் தெரி­வித்­தி­ருந்­தனர்.

இருப்­பினும், பொரு­ளா­தார நிபு­ணர்­களின் கருத்­துப்­படி, ஒரு நாட்­டி­னதோ அல்­லது ஒரு பிர­தேசத்­தி­னதோ அபி­வி­ருத்­திக்கு சிறந்த போக்­கு­வ­ரத்து வச­திகள் அவ­சி­ய­மாகும். மட்­டக்­க­ளப்பு முதல் பொத்­துவில் வரை­யான கிழக்குப் பிர­தே­சங்­களில் முத­லீடு செய்து  தொழிற்­பேட்­டைகள் ஆரம்­பிக்­கப்­டு­வ­தாயின் அவற்­றுக்கு முது­கெ­லும்­பாக இருக்க வேண்­டி­யது சிறந்த போக்­கு­வ­ரத்­தாகும். அதிலும் ரயில் சேவை மிக முக்­கி­ய­மா­ன­தாகும்.

கடந்த ஆட்­சியில் பல்­வேறு பிர­தே­சங்­களில் ரயில் பாதை விஸ்­த­ரிப்­புக்­கான நட­வ­டிக்­கைகள் பல மில்­லியன் ரூபா செலவில் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. ஆனால், 1993ஆம் ஆண்டு ஈரான் அர­சாங்­கத்தின் நிதி­யு­த­வி­யுடன் ஆரம்­பிக்­கப்­ப­ட­வி­ருந்த 100 கிலோ மீற்றர் தூரம் கொண்ட மட்­டக்­க­ளப்பு நகர் முதல் பொத்­துவில் வரை­யான ரயில் பாதை விஸ்­த­ரிப்பை மேற்­கொள்ள நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வில்லை. இது­தொ­டர்பில் கடந்த ஆட்­சியில் பங்­கா­ளி­க­ளாக இருந்த கிழக்கு மாகா­ணத்தைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­திய எந்­த­வொரு அதி­கா­ரத்­த­ரப்பும் அக்­க­றை­காட்­டா­மலும் அதன் அவ­சி­யத்தை உண­ரா­மலும் இருந்­தமை போன்று இந்த நல்­லாட்­சி­யி­லுள்ள அமைச்­சர்­களும், பிரதி அமைச்­சர்­களும் உள்­ள­தாக மக்கள் பேசிக்­கொள்­கி­றார்கள்.

ஏனெனில், நெடுஞ்­சாலை அபி­வி­ருத்­திக்­கான அமைச்­ச­ரவை அமை­ச்சர் மற்றும் பிரதி அமைச்­சர்­க­ளாக முஸ்லிம் சமூ­கத்தைப் பிர­தி­நி­தித்­துவப்படுத்­து­ப­வர்­களே உள்­ளனர். ஆனால் இப்­பாதை விஸ்­த­ரிப்பு தொடர்­பாக அமைச்­ச­ர­வையில் மூச்­சு­விட்­ட­தா­கக்­கூட அறி­ய­மு­டி­ய­வில்லை என்ற கிழக்கு கரை­யோர மக்­களின் மனக்­க­வ­லை­யையும் சுட்­டிக்­காட்ட வேண்­டி­யுள்ள நிலையில், கடந்த மாதம் சபா­நா­யகர் தலை­மையில் இந்­தி­யா­வுக்குச் சென்ற உயர்­மட்டக் குழுவில் அங்­கம்­வ­கித்த அமைச்சர் ரவூப் ஹக்கீம் இந்­தியப் பிர­த­ம­ரிடம் இந்த ரயில் பாதை விஸ்­த­ரிப்பு தொடர்­பாக பேசி­ய­தாக முஸ்லிம் காங்­கிரஸ் ஆத­ர­வா­ளர்­களும் அர­சி­யல்­வா­தி­களும் அறிக்­கை­களை விட்டு ஊட­கங்­களை அலங்­க­ரித்­தி­ருந்­தனர். இந்த அலங்­க­ரிப்பு எப்போ­து நிஜ­மாகும் என்ற கரை­யோர மக்­களின் கேள்­விக்கும் உரிய தரப்­புக்கள் விடை­ய­ளிக்க வேண்­டி­யுள்­ள­தையும் சுட்­டிக்­காட்ட வேண்டும்.

ஏனெனில், கிழக்கில் உல்­லாசப் பய­ணி­களின் கவ­னத்தை வெகு­வாக ஈர்த்­துள்ள இப்­பொத்­து­வி­லுக்கு இல­கு­வான வழியில் அசௌ­க­ரி­ய­மின்றி போக்­கு­வ­ரத்து செய்­வதில் பல்­வேறு சிர­மங்களை எதிர்­கொள்­வ­தாக உல்­லா­சப்­ப­ய­ணிகள் மத்­தியில் கருத்து நில­வு­கி­றது. குறிப்­பாக நேர விர­யங்கள் ஏற்­ப­டு­வ­தாக அவர்கள் கூறு­வ­தா­னது கவ­னத்­திற்­கொள்­ளத்­தக்­க­தா­க­வுள்­ளது.

சுற்­றுலா பய­ணத்­து­றையை வெற்­றி­க­ர­மாக முன்­னெ­டுத்து தொழில்­வாய்ப்­பற்ற இளைஞர், யுவ­தி­க­ளுக்கு வேலை­வாய்ப்பை பெற்­றுக்­கொ­டுக்க அரசு பல்­வேறு சுற்­றுலா அபி­வி­ருத்தி நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­துள்ள நிலை­யிலும், சுற்­று­லாத்­து­றையை அதன் நேர்த்­தி­யான தொழில்­நுட்­பங்­க­ளுடன் விருத்தி செய்­யும்­போது கிழக்கில் 10 ஆயிரம் இளைஞர் யுவ­தி­க­ளுக்கு உட­ன­டி­யாக நல்ல வரு­மா­னத்­துடன் கூடிய வேலை வாய்ப்பை வழங்க முடி­யு­மென சுற்­று­லாத்­துறை தொடர்­பான ஆய்­வா­ளர்கள் கூறி­வரும் சூழலில்,  தனியார் சமூக அமைப்­பொன்று புதிய முயற்­சி­யொன்றை சுற்­று­லாத்­து­றை­யி­னூ­டாக  கிழக்கில் முன்­னெ­டுக்­க­வுள்­ளது.

அதில் முதற்­ப­டி­யாக அம்­பாறை மாவட்­டத்தில் இம்­மு­யற்­சியை முன்­னெ­டுப்­பது  தொடர்பில் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை இவ்­வ­மைப்பு  அம்­பாறை மாவட்ட ஊட­க­வி­ய­லா­ளர்­களைத் தெளி­வு­ப­டுத்தும் நிக­ழ்ச்­சி­யொன்­றையும் நடாத்­தி­யி­ருந்­தது. ஆனால், இம்­மு­யற்­சிக்கு சமூக ஒத்­து­ழைப்பே பெரிதும் அவ­சி­ய­மாகும் எனச் சுட்­டிக்­காட்­டப்­பட்­ட­தையும் குறிப்­பிட்­டாக வேண்டும்.

புதிய முயற்­சியும் சமூக ஒத்­து­ழைப்பும்

மன­வெ­ழுச்சி நுட்ப வாழ்க்­கைத்­திறன் விருத்­திக்­கான Emotional Intelligence and Life Skills Training Team (Gte) Ltd என்ற  அமைப்பு சுற்­று­லாத்­து­றையில் வேலை­யற்ற வல­து­கு­றைந்­தோரை உட்­ப­டுத்­துத்தும் புதிய முயற்­சிக்­கான செயற்­றிட்­டத்தை சுற்­று­லாத்­த­லங்கள் நிறைந்த அம்­பா­றை மாவட்­டத்தில் நடை­மு­றைப்­ப­டுத்­த­வுள்­ளது. இது தொடர்­பாக அம்­பாறை மாவட்ட ஊட­க­வி­ய­லா­ளர்­களைத் தெளி­வூட்டும் நிகழ்ச்சி கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை நடத்­தி­யி­ருந்­தது.

இலங்­கையில் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­கின்ற இத்­திட்­டத்தின் செயற்­பாட்­டா­ளர்­க­ளாக செயற்­ப­டு­கின்ற இவ்­மைப்­பி­னரின் இத்­திட்­ட­மா­னது இலங்கை அர­சாங்­கமும் அவுஸ்­தி­ரே­லிய அர­சாங்­கமும் இணைந்து திறன் விருத்தி அமைச்­சி­னூ­டாக நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்டு வரு­வ­தாகும்.

இத்­திட்­டத்தின் முக்­கிய நோக்­க­மாக நாட்டில் இனங்­கா­ணப்­பட்­டுள்ள சுற்­றுலாப் பிர­தேசங்­க­ளி­லுள்ள  வளங்­களைப் பயன்­ப­டுத்தி, தொழில்­வாய்ப்­பற்ற ஆண், பெண் குறிப்­பாக மாற்­றுத்­தி­ற­னா­ளி­க­ளுக்கு பயிற்­சி­ வ­ழங்கி அவர்­க­ளுக்கு தொழில்­வாய்ப்பை ஏற்­ப­டுத்திக் கொடுப்­ப­தாகும்.

இத்­திட்டம் தொடர்­பாக பல பிர­தே­சங்­க­ளிலும் தெளி­வூட்டும் நிகழ்ச்­சி­களை நடாத்­தி­வரும் இவ்­வ­மைப்­பா­னது அம்­பாறை மாவட்­டத்தைச் சேர்ந்த மூவின ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளையும் இத்­திட்டம் தொடர்­பாக தெளி­வூட்­டு­வதும், அவற்றினை மக்கள் மத்தியில் முன்கொண்டு செல்வதையும் இலக்காகக் கொண்டிருந்தமையை சுட்டிக்காட்ட வேண்டும்.

இத்தெளிவூட்டும் நிகழ்ச்சியில் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் சுற்றுலா முகாமைத்துவ பீடத்தின் சுற்றுலா முகாமைத்துவ பேராசிரியர் எம்.எஸ்.எம். அஸ்லம் வளவாளராகக் கலந்து கொண்டு சுற்றுலாத்துறையின் அவசியம், பிரதேச சமூக பொருளாதார அடைவு உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு தெளிவுபடுத்தியதுடன் கிழக்கில் சுற்றுலாத்துறை விருத்தி செய்வதற்கான நடவடிக்கைகளின் ஓர் அங்கமாக சுற்றுலாத்துறை தொடர்பான எதிர்மறை எண்ணங்களும், கருத்துக்களும் மக்களிடமிருந்து அகற்றப்பட வேண்டியுள்ளது. அதன் பொறுப்பை ஊடகவியலாளர்கள் சுமந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசம் மற்றும் கரையோரம் சாரா பிரதேசங்களில் சுற்றுலாத்துறைக்கான சிறந்த தலங்கள் காணப்படுகின்றன. அவை உரியவாறு கண்டுகொள்ளப்படவில்லை. பல்வேறு வளங்கள் இப்பிரதேசத்தில் காணப்பட்டும் அவற்றை உரிய துறைகளினூடாக பயன்படுத்தாமல், புதிய சிந்தனைகளுக்கு இடம்கொடுக்காமல், மாற்றங்களால் மாற்றத்தை ஏற்படுத்தாமல் இன்னும் இப்பிரதேசத்தில் அரைத்த மாவையே அரைத்துக்கொண்டிருப்பது கவலையளிப்பதாக பேராசிரியர் அஸ்லம் குறிப்பிட்டமை சிந்திக்க வேண்டிய விடயமாகும்.

சுற்றுலாத்துறையில் மாற்றுத் திறனாளிகளையும் உள்வாங்கி அவர்களுக்கு பயிற்சியளித்து இத்துறையினூடாக அவர்கள் தொழில் வாய்ப்பைப் பெற்று அவர்களது வாழ்க்கையில் ஒளியேற்றும் இப்புதிய முயற்சியானது வெற்றியளிப்பதும் வெற்றிபெறாமல் தவிர்க்கப்படுவதும் மாற்றுத் திறனாளிகளைக் கொண்டுள்ள குடும்பங்களினதும் சமூக ஆர்வலர்களினதும் ஒத்துழைப்பிலேயே தங்கியுள்ளது. ஏனெனில் கிழக்கிலுள்ள வயதுவந்த மாற்றுத்திறனாளிகள் பலர் எவ்வித முற்சிகளிலும் ஊக்கப்படுத்தப்படாமல் வீடுகளில் வீணாக பெறுமதியான நேரங்களைக் கழித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் சுமைகளாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் அவர்களுக்குள் காணப்படும் திறன்கள் அடையாளம் காணப்படாமலுள்ளமை கவலைக்குரிய விடயமாகும்.

மாற்றுத்திறனாளிகளை ஒரு சுமையாகக் கருதும் ஒருசில குடும்பங்களும், சமூக ஆர்வலர்களும் மாற்றுத்திறனாளிகள் சுமையல்ல அவர்களுக்குள்ளும் வாழ்க்கைத் திறன் இருக்கிறது என்பதை இந்த மனவெழுச்சி நுட்ப வாழ்க்கைத் திறன் விருத்தி அமைப்பின் புதிய முயற்சியினூடாக புடம்போடுவதற்கு சந்தர்ப்பத்தையும், ஒத்துழைப்பையும் வழங்க வேண்டியது மாற்றுத் திறனாளிகளை உறுப்பினராகக் கொண்ட ஒவ்வொரு குடும்ப அங்கத்தினரதும், சமூக ஆர்வலர்களினதும் தார்மீகப் பொறுப்பாகும்.

-Vidivelli