Verified Web

அமெரிக்க இராஜாங்க செயலாளர் சவூதியிலிருந்து துருக்கிக்குப் பயணம்

28 days ago M.I.Abdul Nazar

காணா­மல்­போ­யுள்ள சவூதி அரே­பிய ஊட­க­வி­ய­லாளர் ஜமால் கஷோக்கி விவ­காரம் தொடர்பில் சவூதி அரே­பிய மன்னர் சல்மான் மற்றும் பட்­டத்­திற்­கு­ரிய இள­வ­ரசர் மொஹமட் பின் சல்மான் ஆகி­யோரைச் சந்­தித்த அமெ­ரிக்க இரா­ஜாங்க செய­லாளர் மைக் பொம்­பியோ நேற்று துருக்கி நோக்கிப் பய­ண­மானார்.

மன்­ன­ரு­ட­னான சுருக்­க­மான சந்­திப்­பினைத் தொடர்ந்து பட்­டத்­திற்­கு­ரிய இள­வ­ரசர் மொஹமட் பின் சல்­மா­னு­ட­னான 40 நிமிட நீண்ட நேர கலந்­து ரை­யா­டலில் பொம்­பியோ ஈடு­பட்டார். பொம்­பி­யோ­வுக்கு உற்­சா­க­மான வர­வேற்பை வழங்­கிய பட்­டத்­திற்­கு­ரிய இள­வ­ரசர் மொஹமட் பின் சல்மான் நாம் உறு­தி­யான நீண்­ட­கால நட்பு நாடுகள். நாம் எமது சவால்­களை ஒரு­மித்தே எதிர்­கொள்ள வேண்டும் எனத் தெரி­வித்தார். பின்னர் பட்­டத்­திற்­கு­ரிய இள­வ­ரசர் மொஹமட் விசா­ர­ணைகள் தொடர்பில் அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால் ட்ரம்­புடன் தொலை­பே­சியில் உரை­யா­டினார்.  

சவூதி அரே­பிய வெளி­வி­வ­கார அமைச்சர் அப்தெல் அல் ஜுபெ­யிரும் பொம்­பி­யோ­வுடன் பேச்­சு­வார்த்தை நடத்­தினார். அமெ­ரிக்க இரா­ஜாங்க செய­லா­ளரும், சவூதி அரே­பிய வெளி­வி­வ­கார அமைச்­சரும் முழு­மை­யா­னதும், வெளிப்­ப­டைத்­தன்­மை­யு­ட­னா­னதும், உரிய காலத்­திலும் விசா­ரணை மேற்­கொள்­ளப்­ப­டு­வதன் முக்­கி­யத்­துவம் தொடர்பில் இணக்கம் கண்­டனர்.

பொம்­பியோ துருக்­கிய வெளி­நாட்­ட­மைச்சர் மெவ்லட் கவு­சொக்­லுவை துருக்­கியில் சந்­திக்­க­வுள்ளார்.

அமெ­ரிக்­காவில் வசித்­து­வரும் சவூதி பிர­ஜை­யான கஷோக்கி தனது விவா­க­ரத்து தொடர்­பான ஆவ­ணங்­களை பூர­ணப்­ப­டுத்­து­வ­தற்­காக இஸ்­தான்­பூ­லி­லுள்ள சவூதி அரே­பிய துணைத் தூத­ர­கத்­திற்கு கடந்த ஒக்­டோபர் 02 ஆம் திகதி விஜயம் செய்த வேளையில் காணாமல் போயி­ருந்தார். காணாமல் போனமை தொடர்பில் விசா­ர­ணை­களை மேற்­கொள்­வ­தற்­காக சவூதி அரே­பி­யாவும் துருக்­கியும் இணைந்து ஒரு குழுவை அமைத்­துள்­ளன. விசா­ர­ணை­களை மேற்­கொள்­வாற்­காக கடந்த சனிக்­கி­ழ­மை­யன்று சவூதி விசா­ர­ணை­யா­ளர்­களைக் கொண்ட பாது­காப்புத் தூதுக்­கு­ழு­வொன்று இஸ்­தான்­பூலை சென்­ற­டைந்­துள்­ளது

ஊட­க­வி­ய­லாளர் கஷோக்கி காணாமல் போனமை தொடர்பில் சவூதி அரே­பி­யா­ர­வையும் அதன் மக்­க­ளையும் தொடர்­பு­ப­டுத்தி சில ஊட­கங்­களால் வெளி­யி­டப்­பட்­டுள்ள பொய்­யான குற்­றச்­சாட்­டுக்­களை சவூதி அரே­பிய உள்­துறை அமைச்சர் இள­வ­ரசர் அப்துல் அஸீஸ் பின் சௌத் பின் நாயிப் பின் அப்துல் அஸீஸ் கடந்த சனிக்­கி­ழ­மை­யன்று நிரா­க­ரித்தார்.

கஷோக்­கியை கொல்­லு­மாறு உத்­த­ர­விட்­டது தொடர்­பான தக­வல்கள் பொய்­யா­ன­வையும் அடிப்­ப­டை­யற்­ற­வை­யு­மாகும் என சவூ­தியின் உத்­தி­யோ­க­பூர்வ செய்தித் தாப­னத்தில் வெளியான அமைச்சரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவூதி அரேபிய அரசாங்கம் அதன் கொள்கைகள்,விதிகள் மற்றும் பாரம்பரியங்கள் தொடர்பில் உறுதியாக இருப்பதோடு சர்வதேச சட்டங்கள் மற்றும் பிரகடனங்களுக்கு அமைவாகவும் செயற்பட்டு வருகின்றது எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
-Vidivelli