Verified Web

ஜோன்ஸ்டன் விடுதலை

28 days ago MFM.Fazeer

ச.தொ.ச. நிறு­வ­னத்தில் இடம்­பெற்ற  38 இலட்சம் ரூபா­வுக்கும் அதி­க­மான நிதி மோசடி தொடர்பில் குற்றம் சாட்­டப்­பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்­ணான்டோ உள்­ளிட்ட மூவ­ரையும் நிர­ப­ரா­திகள் என அறி­வித்து அனைத்து குற்­றச்­சாட்­டுக்­களில் இருந்தும் குரு­ணாகல் மேல் நீதி­மன்றம் நேற்று விடு­தலை செய்­தது. 

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஜோன்ஸ்டன் பெர்­ணான்டோ, முன்னாள் ச.தொ.ச. பணிப்­பா­ளர்­களில் ஒரு­வ­ரான தாஜா மொஹிதீன் ஷாகிர், ச.தொ.ச. முன்னாள் தலைவர் நலின் ருவன்­ஜீவ ஆகி­யோ­ரையே இவ்­வாறு விடு­தலை செய்து குரு­ணாகல் மேல் நீதி­மன்ற நீதி­பதி மேனகா விஜே­சுந்­தர நேற்று தீர்ப்­ப­ளித்தார். குறித்த மோசடி குற்­றச்­சாட்டு தொடர்பில் மேல் நீதி­மன்ற விசா­ர­ணைகள் தொடர்ந்து இடம்­பெற்று வந்த நிலையில், அவ்­வி­சா­ரணை நிறை­வுறும் வரையில் ஜோன்ஸ்டன் உள்­ளிட்ட மூவரும் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டி­ருந்­தனர். இந்­நி­லை­யி­லேயே வழக்கில் பிர­தி­வா­திகள் தரப்பு சாட்­சி­யங்­களை ஆரா­யா­ம­லேயே குற்­ற­வியல் சட்­டக்­கோ­வையின் 200 ஆவது அத்­தி­யா­யத்­துக்கு அமை­வாக தீர்ப்­ப­றி­வித்து நீதி­பதி மேனகா விஜே­சூ­ரிய பிர­தி­வா­தி­களை விடு­வித்தார்.

கடந்த 2016 மே 5 ஆம் திகதி அல்­லது அதனை அண்­டிய திக­தியில் நிதிக் குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரி­வி­னரால், முன்னாள் கூட்­டு­றவு வர்த்­தக அமைச்­சரும் தற்­போ­தைய பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான  ஜோன்ஸ்டன் பெர்­ணான்டோ கைது செய்­யப்­பட்டார்.

தான் அமைச்­ச­ராகப் பதவி வகித்­த­போது, 2013 ஆம் ஆண்டு இடம்­பெற்ற வடமேல் மாகாண சபைத் தேர்தல் காலப்­ப­கு­தியில் குரு­ணாகல், யந்­தம்­ப­லாவ ச.தொ.ச நிறு­வ­னங்­க­ளி­லி­ருந்து 3828596 ரூபா 50 சதத்தைத் தவ­றாகப் பயன்­ப­டுத்­தி­யமை தொடர்பில் அவர் இவ்­வாறு கைது செய்­யப்­பட்டார்.

நிதி மோசடி தொடர்­பாக வாக்­கு­மூலம் பெறு­வ­தற்­காகப் பொலிஸ் நிதி மோசடி விசா­ரணைப் பிரி­விற்கு அன்­றைய தினம் அழைக்­கப்­பட்­டி­ருந்த முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்­ணான்டோ இவ்­வாறு கைது செய்­யப்­பட்­டி­ருந்தார்.

லங்கா ச.தொ.ச. பிர­தான அலு­வ­லக சிரேஷ்ட கணக்­காளர் வழங்­கி­யி­ருந்த முறைப்­பாட்­டுக்கு அமைய இந்த கைது அப்­போது இடம்­பெற்­றி­ருந்­தது. இது தொடர்­பாக நிதிக் குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரி­வினர் முதல் பீ அறிக்­கையை கடந்த 2016 மார்ச் மாதம் 22 ஆம் திகதி சமர்ப்­பித்­தி­ருந்­தனர்.

இந்­நி­லையில் இது குறித்த நீதிவான் நீதி­மன்ற விசா­ர­ணை­களின் பின்னர் கடந்த 2017.10.23 அன்று குரு­ணாகல் மேல் நீதி­மன்றில் எச்.சி. 08/16 எனும் இலக்­கத்தின் கீழ் ஜோன்ஸ்டன் உள்­ளிட்ட மூவ­ரையும் பிர­தி­வா­தி­க­ளாகக் குறிப்­பிட்டு குற்­றப்­பத்­தி­ரிகை தாக்கல் செய்­யப்­பட்­டது.

இந்­நி­லையில் அவ்­வ­ழக்கின் சாட்சி விசா­ர­ணைகள் கடந்த செப்­டம்பர் 3 ஆம் திகதி ஆரம்­ப­மா­ன­போது, ச.தொ.ச. முன்னாள் கணக்­காளர் போஞ்சு என்­ப­வரின் சாட்­சியம் விசா­ரிக்­கப்­பட்­டது. இந்த சாட்­சியின் பின்­ன­ரேயே, இந்த வழக்கை ஒவ்­வொரு நாளும் விசா­ரித்து நிறைவு செய்ய தீர்­மா­ன­மெ­டுத்த நீதி­பதி மேனகா விஜே­சுந்­தர, வழக்கு விசா­ர­ணைகள் நிறை­வு­றும்­வரை பிர­தி­வா­தி­க­ளான பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஜோன்ஸ்டன் பெர்­ணான்டோ உள்­ளிட்ட மூவ­ரையும் விளக்­க­ம­றி­யலில் வைக்க உத்­த­ர­விட்­டி­ருந்தார்.

இந்­நி­லையில் குறித்த வழக்கு தொடர்ச்­சி­யாக விசா­ரணை செய்­யப்­பட்­டது. இதன்­போது பிர­தி­வா­திகள் சார்பில் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி காலிங்க இந்­தி­ர­திஸ்ஸ, ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி அனில் சில்வா, ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி சவேந்ர பெர்­ணான்டோ உள்­ளிட்ட சட்­டத்­த­ர­ணிகள் குழு மன்றில் ஆஜ­ரா­னது.

முறைப்­பாட்­டா­ள­ரான சட்­டமா அதிபர் சார்பில் சிரேஷ்ட பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் ரொஹந்த அபே­சூ­ரிய மற்றும் சிரேஷ்ட அரச சட்­ட­வாதி விராஜ் வீர­சூ­ரிய ஆகியோர் மன்றில் ஆஜ­ரா­கினர்.

இந்­நி­லையில் இவ்­வ­ழக்கின் முறைப்­பாட்­டாளர் தரப்பு சாட்சி விசா­ர­ணை­களும் குறுக்கு விசா­ர­ணை­களும் கடந்த ஒக்­டோபர் 9 ஆம் திக­தி­யுடன் நிறை­வுக்கு வந்­தது. இதன்­போது மன்றில் விஷேட வாதம் ஒன்­றினை முன்­வைத்த ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி காலிங்க இந்­தி­ர­திஸ்ஸ, இவ்­வ­ழக்கின் முறைப்­பாட்­டாளர் தரப்பு சாட்­சி­யங்­க­ளுக்கு இடையே பரஸ்­பர முரண்­பா­டுகள் இருப்­ப­தா­கவும், அதனால் அதன் நம்­ப­கத்­தன்மை குறித்து கேள்வி எழு­வ­தா­கவும் சுட்­டிக்­காட்­டினார். அதனால் இவ்­வ­ழக்கை குற்­ற­வியல் சட்­டக்­கோ­வையின் 200 ஆவது அத்­தி­யா­யத்­துக்கு அமைய பிர­தி­வாதி தரப்பு சாட்­சி­யங்­களை விசா­ரிக்­கா­ம­லேயே தீர்ப்­ப­ளித்து பிர­தி­வா­தி­களை விடு­விக்­கு­மாறும் கோரினார்.

ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி காலிங்க இந்­தி­ர­திஸ்­ஸவின் இந்த வாதம் தொடர்பில் இன்று தீர்­மா­னத்தை அறி­விப்­ப­தாக கடந்த 9 ஆம் திகதி நீதிபதி மேனகா அறிவித்திருந்தார்.

இந்நிலையில் அந்த தீர்ப்புக்காக நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது. இதன்போது ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்திரதிஸ்ஸவின் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி மேனகா விஜேசுந்தர, வழக்கை முன்கொண்டு செல்வதற்கான போதிய சாட்சி இல்லாமை மற்றும் வழக்கின் உறுதியற்றத்தன்மை காரணமாக பிரதிவாதிகளை விடுதலை செய்வதாக அறிவித்து அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் ஜோன்ஸ்டன் உள்ளிட்ட மூவரையும் விடுதலை செய்தார்.
-Vidivelli