Verified Web

மதகுருவை விடுதலை செய்தமைக்கு ட்ரம்ப் துருக்கிக்கு நன்றி தெரிவிப்பு

2018-10-15 06:13:03 M.I.Abdul Nazar

இரண்டு வரு­டங்­க­ளா­கத தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்­ததன் பின்னர் அமெ­ரிக்க மத­குரு அன்ரூ பிரன்­சனை விடு­தலை செய்­த­மைக்­காக கடந்த சனிக்­கி­ழமை அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால் ட்ரம்ப் துருக்­கிக்கு நன்­றி­யினைத் தெரி­வித்துக் கொண்­ட­தோடு, பாதிக்­கப்­பட்­டி­ருந்த உற­வு­களை மேம்­ப­டுத்­திக்­கொள்ள இது உதவும் எனவும் தெரி­வித்தார். பிரன்­சனை விடு­தலை செய்­வ­தற்கு இர­க­சிய உடன்­பாடு எட்­டப்­பட்­டது என்­பதை அவர் மறுத்­துள்ளார்.

கைதி­க­ளுக்­காக நான் எவ்­வித உடன்­ப­டிக்­கை­க­ளையும் செய்து கொள்­வ­தில்லை. எவ்­வா­றெ­னினும் அமெ­ரிக்க தரப்­பி­லி­ருந்து மிகப் பெரும் பாராட்­டுக்கள் குவி­கின்­றன. இது துருக்­கிக்கும் அமெ­ரிக்­கா­வுக்கும் இடையே மிகச் சிறந்த உற­வு­க­ளுக்கு வழி­வ­குக்கும் எனவும் அவர் தெரி­வித்தார். கடந்த ஜுலை மாதம் தொடக்கம் வீட்டுக் காவலில் வைக்­கப்­பட்­டி­ருந்த பிரன்­சன் கடந்த வெள்­ளிக்­கி­ழ­மை­யன்னு துருக்­கி­யி­லி­ருந்து புறப்­பட்டார். அவ­ரது விடு­த­லையை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்கு நட­வ­டிக்கை எடுத்­த­மைக்கு  அமெ­ரிக்க ஜனா­தி­பதி நன்றி தெரி­வித்­ததைத் தொடர்ந்து கடந்த சனிக்­கி­ழ­மை­யன்று கருத்து வெளி­யிட்ட துருக்­கிய ஜனா­தி­பதி தைய்யிப் அர்துகான், அமெ­ரிக்க மத­கு­ருவை விடு­தலை செய்­வ­தற்கு நீதி­மன்­றத்­தினால் எடுக்­கப்­பட்ட தீர்­மானம் சுதந்­தி­ர­மா­னது எனத் தெரி­வித்தார். எப்­போதும் துருக்­கிய நீதி­மன்றத் தீர்ப்­புக்கள் சுதந்­த­ிர­மா­கவே எடுக்­கப்­ப­டு­கின்­றன என நான் எப்­போதும் கூறி வரு­கின்றேன் என அர்துகான் தனது டுவிட்­டரில் தெரி­வித்­துள்ளார்.

வடக்கு சிரி­யாவில் குர்திஷ் கிளர்ச்­சி­யா­ளர்­க­ளுக்கு அமெ­ரிக்­காவின் ஆத­ரவு, ரஷ்­யா­வி­ட­மி­ருந்து துருக்கி ஏவு­கணை முறி­ய­டிப்பு முறை­மை­யினைக் கொள்­வ­னவு செய்­வது, ஈரான் மீது விதிக்­கப்­பட்­டுள்ள தடை­யினை மீறி­ய­மைக்­காக துருக்­கிய அரச வங்­கியின் நிறை­வேற்று அதி­கா­ரி­யொ­ரு­வரை அமெ­ரிக்கா சிறை­யி­ல­டைத்­தமை போன்­றவை நேட்டோ அமைப்பின் அங்­கத்­துவ நாடு­க­ளான துருக்­கிக்கும் அமெ­ரிக்­கா­வுக்கும் இடை­யே­யான விரி­சலை அதி­க­ரித்­தன.

அன்ரூ பிரன்சன் தடுத்து வைக்­கப்­பட்­டமை தொடர்­பான பிரச்­சினை மேலும் சிக்­கலை ஏற்­ப­டுத்­தி­யது. கடந்த ஆகஸ்ட் மாதம் துருக்­கியின் அலு­மி­னியம் மற்றும் உருக்குப் பொருட்­க­ளுக்­கான இறக்­கு­மதி வரி­யினை இரட்­டிப்­பாக்­கு­வ­தற்கு ட்ரம்ப் அங்­கீ­காரம் வழங்­கினார். அதற்கு பதி­ல­டி­யாக துருக்­கியும் அமெ­ரிக்க கார்கள், மது­பானம் மற்றும் புகை­யிலை இறக்­கு­ம­தி­க­ளுக்­கான வரி­களை இரட்­டிப்­பாக்­கி­யது. 

அத­னை­ய­டுத்து துருக்­கியின் நாணயப் பெறு­ம­தியில் பாரிய வீழ்ச்சி ஏற்­பட்­டது.  கடந்த சனிக்­கி­ழ­மை­யன்று ட்ரம்ப் அர்­து­கா­னுக்கு பிரத்­தி­யே­க­மாக நன்­றி­யினைத் தெரி­வித்­துக்­கொண்டார்

குர்திஷ் கிளர்ச்­சிக்­கா­ரர்கள் மற்றும் 2016 ஆம் ஆண்டு சதிப்­பு­ரட்­சிக்கு காரணமாக அமைந்த பெதுல்லாஹ் குலெனின் ஆதரவாளர்களுடனும் தொடர்புகளைக் கொண்டிருந்த தாக பிரன்சன் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக துருக்கியில் வசித்துவரும் பிரன்சன் இக் குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளார். அவரை உடனடியாக விடுவிக்குமாறு அமெரிக்கா கோரி வந்தது.
-Vidivelli