Verified Web

அக்­கு­றணை வெள்ள பாதிப்­புகள் குறித்து அறிக்கை கோரினார் ரணில்

2018-10-15 06:07:51 Administrator

 

அக்­கு­ற­ணையில் ஏற்­பட்ட வெள்ள அனர்த்தம் குறித்­த­தான பூரண அறிக்­கை­யொன்றை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர் எம்.எச்.அப்துல் ஹலீ­முடன் கோரி­யுள்ளார்.

அமைச்சர் ஹலீம் கடந்த வெள்­ளி­யன்று பாரா­ளு­மன்­றத்­தி­லுள்ள பிர­த­ம­ருக்­கான அறையில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை சந்­தித்து அக்­கு­றணை வெள்ள நிலை­மைகள் குறித்து எடுத்­து­ரைத்­த­போதே இவ்­வாறு அறிக்­கை­யொன்றை அவர் கோரி­யுள்ளார்.

பல்­வேறு  பிரச்­சி­னைகள் கார­ண­மாக கடந்த 25 வரு­டங்­க­ளாக அடிக்­கடி அக்­கு­ற­ணையில் வெள்ள நிலைமை ஏற்­ப­டு­கின்­றது. அக்­கு­ற­ணையில் இம்­முறை ஏற்­பட்ட வெள்ள அனர்த்தம் கார­ண­மாக பாரிய நஷ்டம் ஏற்­பட்­டுள்­ளது. இம்­மக்­க­ளுக்­கு­ரிய நஷ்­ட­ஈட்டை அர­சாங்கம் வழங்க வேண்டும் என அமைச்சர் ஹலீம் பிர­த­ம­ரிடம் தெரி­வித்தார்.

இதற்கு பதி­ல­ளித்த பிர­தமர், நாட்டில் பல பாகங்­க­ளிலும் மழை கார­ண­மாக வெள்ள அனர்த்தம் ஏற்­பட்­டுள்­ளது. அக்­கு­ற­ணைக்கு மாத்­திரம் நஷ்­ட­ஈடு வழங்­கினால் சிக்­கல்கள் உரு­வாகும் என பிர­தமர் தெரி­வித்தார்.

 இதற்கு அமைச்சர் ஹலீம், அக்­கு­றணை மக்­க­ளுக்கு 40 கோடிக்கு மேல் நஷ்­ட­மேற்­பட்­டி­ருக்­கி­றது. அவர்­க­ளுக்கு கட்­டாயம் நஷ்­ட­ஈடு வழங்­கி­யாக வேண்டும் என்றார்.

இதன்­போது,  அக்­கு­றணை வெள்ள அனர்த்தம் குறித்த பூரண அறிக்­கை­யொன்றை சமர்­பிக்­க­வேண்டும் என பிர­தமர் கோரி­ய­துடன், கடந்த வாரம் அரச திணைக்­க­ளங்கள் மற்றும் அமைச்­சுக்­க­ளு­ட­னான சந்திப்பின்போது எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கமைய அனைத்து நடவடிக்கைகளை முன்னெடுக்க அரசு ஒத்தாசை வழங்கும் எனவும் தெரிவித்தார்.