Verified Web

மாகாண சபை தேர்தல் விவகாரம்: தீர்க்கமான முடிவு எட்டப்படவில்லை

6 days ago Administrator

Image result for மஹிந்த தேசப்­பி­ரிய vidivelli

எல்லை நிர்ணய  மீளாய்வு குழுவின் அறிக்கை ஜனாதிபதிக்கு  சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னரே மாகாண சபை தேர்தலை எந்த முறையில்  நடத்த வேண்டும் என்ற நிலைப்­பாட்­டிற்கு வர முடியும் என தெரி­வித்த தேர்தல் ஆணைக்­கு­ழுவின்  தலைவர் மஹிந்த தேசப்­பி­ரிய, மாகாண சபை தேர்தல் தொடர்பில் அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் கட்­சிகள் தங்­களின்  நிலைப்­பாட்­டினை முன்­வைக்­கின்­ற­னவே தவிர இது­வ­ரையில் பொது­வான நிலைப்­பாட்­டினை குறிப்­பி­ட­வில்லை என்றும் கூறினார்.

மாகாண சபை தேர்தல் தொடர்­பி­லான கட்சி தலை­வர்­களின் சந்­திப்பு நேற்று  தேர்தல் ஆணை­ய­கத்தில் இடம் பெற்­றது . இதன் பின்னர்  இச்­சந்­திப்பு தொடர்பில் குறிப்­பிடும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

இழுத்­த­டிக்­கப்­பட்டு கொண்டு இருக்­கின்ற மாகாண சபை தேர்­தலை காலம் தாழ்த்­து­வ­தற்கு எவ்­வி­த­மான அவ­சி­யமும் அர­சாங்­கத்­திற்கு கிடை­யாது. அர­சாங்­கத்தின் முயற்­சி­க­ளுக்கு பிறர் குறிப்­பி­டு­வது போன்று  தேர்தல் ஆணைக்­கு­ழுவும் துணை­போ­க­வில்லை .எவ்­வி­த­மான அழுத்­தங்­களும் இன்றி சுயா­தீ­ன­மா­கவே தேர்தல் ஆணை­யகம் செயற்­ப­டு­கின்­றது. தேர்தல் முறைமை திருத்­தங்கள் தொடர்பில் அர­சாங்கம்  உறு­தி­யான  தீர்­மான ங்களை மேற்­கொண்டால் மாகாண சபை தேர்­தலை இவ்­வ­ரு­டத்­திலே நடத்த தயா­ரா­க­வுள்ளோம்.
-Vidivelli

இடம்பெற்ற கட்சி தலை­வர்­களின்  சந்­திப்பில் அனை­வரும் மாகாண சபை தேர்­தலை துரி­தப்­ப­டுத்த வேண்டும் என்­கின்­றனர். ஆனால் ஒரு­மித்த கருத்­திற்கு வர மறுக்­கின்­றனர். ஐக்­கிய தேசிய கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்­திர கட்சி, மக்கள் விடு­தலை முன்­னணி போன்ற கட்­சிகள் தங்­களின்  கருத்­துக்­களை மாத்­தி­ரமே குறிப்­பி­டு­கின்­றன. 

இடம் பெற்று முடிந்த உள்­ளூ­ராட்சி மன்ற தேர்தல் முறை­மையில் சில குறை­பா­டுகள் காணப்­ப­டு­கின்­றன. அவற்­றினை நிவர்த்தி செய்து கொண்டு மாகாண சபை தேர்­தலை நடத்­து­வ­தாக இருந்தால் குறு­கிய காலத்­திற்குள் மாகாண சபை தேர்­தலை இவ்­வ­ரு­டத்­திற்குள்  நடத்த முடியும் ஆனால் இதற்கு மறு­த­ரப்­பினர் எதிர்ப்­பினை வெளிப்­ப­டுத்­து­கின்­றனர்.

பாரா­ளு­மன்­றத்தில் எல்லை நிர்­ணய அறிக்கை தோல்­வி­ய­டைந்­ததை தொடர்ந்து தேர்­தலை விரை­வு­ப­டுத்த  வேண்டும் என்ற நோக்­கத்தில்  பிர­தமர் தலை­மை­யி­லான  எல்லை நிர்­ணய மீளாய்வு குழு நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது. இக் குழு இரண்டு மாத காலத்­திற்குள் தமது அறிக்­கை­யினை ஜனா­தி­ப­திக்கு சமர்ப்­பிக்க வேண்டும். குறித்த அறிக்­கை­யினை ஜனா­தி­பதி வர்த்­த­மா­னியில் வெளி­யிட்­டதன் பின்னர் மாகாண சபை தேர்­தலை எவ்­வி­த­மான கலந்­து­ரை­யா­டலும் இன்றி நடத்­தலாம். ஆனால் தற்­போது மீளாய்வுக் குழு­வினர் மேலும்  இரண்டு மாத கால­வ­காசம் கோரி­யுள்­ளனர்.  இவர்­க­ளது கருத்­துக்­களும் கவ­னத்திற் கொள்­ளப்­பட வேண்டும்.

பிறர் குறிப்­பி­டு­வதை போன்று மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டும் என்ற நோக்கில்  தேர்தல் திருத்தத்தில் உள்ள குறைபாடுகளுடன் ஒரு போதும் மாகாண சபை தேர்தலை நடத்த முடியாது. சரியான சிறந்த ஜனநாயக முறையிலான நிரந்தர தீர்வு கிடைத்த பின்னரே தேர்தல் இடம் பெறும் என்றார்.
-Vidivelli