Verified Web

புத்தளம் குப்பைத் தொட்டியா?

6 days ago Administrator

புத்­த­ளத்­தி­லி­ருந்து பிறவ்ஸ்

திண்­மக்­க­ழி­வ­கற்றல் பிரச்­சி­னைக்கு முறை­யா­ன­தொரு தீர்­வில்­லாமல் அர­சாங்கம் திண்­டா­டிக்­கொண்­டி­ருக்­கி­றது. அதிலும் குறிப்­பாக இலங்கை சனத்­தொ­கையில் 22% மக்கள் செறிந்து வாழக்­கூ­டிய நக­ரங்­களில் இப்­பி­ரச்­சினை அதி­க­ளவில் காணப்­ப­டு­கின்­றன.

இப்­ப­டி­யான சூழலில், கம்­பளை பிர­தே­சத்தின் குப்­பை­களை அங்­கேயே கொட்­டு­வ­தற்கு எதி­ராக மக்கள் ஆர்ப்­பாட்­டங்­களில் ஈடு­பட்­டு­வரும் ஒரு நிலையில், ஒரு மாவட்­டத்தின் குப்­பை­களை இன்­னொரு மாவட்­டத்­துக்கு கொண்­டுபோய் கொட்­டு­வ­தற்கு அர­சாங்கம் முன்­னெ­டுத்­துள்ள முயற்­சி­யானது பல சிக்­கல்­களை உரு­வாக்­கி­யுள்­ளன. இதற்­கெ­தி­ராக புத்­தளம் மக்கள் போராட்­டத்தில் இறங்­கி­யுள்­ளனர்.

நுரைச்­சோலை அனல் மின் நிலையம், பாலாவி சீமெந்து தொழிற்­சாலை, இறால் பண்­ணைகள், தும்புக் கைத்­தொ­ழிற்­சாலை என சூழ­லுக்கு அச்­சு­றுத்­த­லான பல விட­யங்­களை பரீட்­சித்துப் பார்க்கும் மாவட்­ட­மாக புத்­தளம் பயன்­ப­டுத்­தப்­பட்டு வந்­தி­ருக்­கின்­றது. அந்­த­வ­ரி­சையில் புத்­த­ளத்தை குப்­பைக்­கி­டங்­காக மாற்றும் அர­சாங்­கத்தின் திட்­டத்தை எப்­ப­டி­யா­வது முறி­ய­டிப்­போ­மென ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டு­வ­ரு­கின்ற மக்கள் கூறு­கின்­றனர்.

அறு­வக்­காடும் குப்­பை­மேடும்

பாலாவி சீமெந்து தொழிற்­சா­லைக்­குத் தேவை­யான சுண்­ணாம்புக் கல்லை அகழ்ந்­தெ­டுப்­ப­தற்­காக அறு­வக்­காடு பிர­தே­சத்தை அர­சாங்கம் ஒப்­பந்த அடிப்­ப­டையில் வழங்­கி­யது. இங்கு ஏற்­படும் கிடங்­கு­களை மூடி மீள்­கா­டாக்கம் செய்­ய­வேண்­டு­மென அந்த ஒப்­பந்­தத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. அதில் ஒரு­ப­குதி மூடப்­பட்­டுள்ள நிலையில், எஞ்­சிய பகு­திகள் இன்னும் குழி­க­ளா­கவே கிடக்­கின்­றன.

எஞ்­சிய கிடங்­குகளை நிரப்­பு­வ­தற்­கான பணத்தை சீமெந்து தொழிற்­சாலை வழங்­கி­யுள்­ள­தாக கூறப்­படும் நிலையில், கொழும்­பி­லுள்ள குப்­பை­களை அதில் கொட்டி நிரப்­பு­வ­தற்கு அர­சாங்கம் தீர்­மா­னித்­தது. 2014ஆம் ஆண்டு இதற்­காக தயா­ரிக்­கப்­பட்ட சுற்­றாடல் தாக்க மதிப்­பீட்டு அறிக்­கையின் பிர­காரம், உயிர்ப்­பல்­வ­கைமை பாதிக்­கப்­படும் என்­பதை கார­ணம்­காட்டி, சுற்­றாடல் அதி­கார சபையும் வன ஜீவ­ரா­சிகள் திணைக்­க­ளமும் இதற்கு அனு­மதி வழங்க மறுத்­து­விட்­டன.

இந்­நி­லையில், கடந்த வருடம் மீதொட்­ட­முல்ல குப்­பை­மேடு சரிந்­து­வி­ழுந்த கார­ணத்­தினால், கொழும்பில் திண்மக் கழி­வ­கற்றல் என்­பது அர­சுக்கு இன்னும் பாரிய தலை­யி­டியை கொடுத்­துள்­ளது. இதனால் எப்­பாடு பட்­டா­வது, 170 கிலோ மீற்றர் தொலை­வி­லுள்ள புத்­தளம், அறு­வக்­காட்டில் குப்­பை­களை கொட்­டி­விட வேண்டும் என்ற திட்­டத்தில் அர­சாங்கம் குறி­யாக இருந்து வரு­கின்­றது.

கொழும்பு மாந­க­ர­சபை, தெஹி­வளை – கல்­கிசை மாந­க­ர­சபை, கொலன்­னாவ மாந­க­ர­சபை மற்றும் கோட்டே மாந­க­ர­சபை ஆகிய 4 உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளி­லி­ருந்து நாளாந்தம் 120 மெற்றிக் தொன் குப்­பைகள் சேக­ரிக்­கப்­ப­டு­கின்­றன. இவை கள­னி­யி­லுள்ள நகர அபி­வி­ருத்தி அதி­கார சபைக்கு சொந்­த­மான 45 ஏக்கர் பரப்­ப­ள­வு­டைய காணிக்குள் கொண்­டு­வ­ரப்­ப­ட­வுள்­ளன.

கள­னியில் ஒன்­று­சேர்க்­கப்­படும் இக்­குப்­பைகள் விசேட ரயில் மூலம் புத்­தளம் மாவட்­டத்­தி­லுள்ள அறு­வக்­காடு எனும் பிர­தே­சத்தில் கொட்­டப்­ப­ட­வுள்­ளன. இதற்­கென தனி­யான ரயில் மற்றும் இயந்­தி­ரத்தை கொள்­வ­னவு செய்­வ­தற்­கான கேள்­விப்­பத்­திரம் தற்­போது கோரப்­பட்­டுள்­ளது.

10 வரு­டங்­க­ளுக்கு நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்ள இத்­திட்­டத்­துக்கு 274 மில்­லியன் டொலர் செல­வா­கு­மென மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது. சீன நிறு­வ­ன­மொன்று நடை­மு­றைப்­ப­டுத்தும் இத்­திட்­டத்­துக்கு உலக வங்கி 115 மில்­லியன் டொலர்­களை வழங்க முன்­வந்­தி­ருந்­தது. எனினும், குறித்த சீன நிறு­வ­னத்தின் மீதுள்ள அவ­நம்­பிக்கை கார­ண­மா­கவும், இத்­திட்டம் தங்­க­ளது விதி­மு­றை­க­ளுக்கு அப்பால் இருப்­ப­தி­னாலும் உலக வங்கி தனது நிதி­யொ­துக்­கீட்டை ரத்துச் செய்­துள்­ளது.

சுண்­ணாம்­புக்கல் அக­ழப்­பட்ட கிடங்­கு­களில் மேற்­கொள்­ளப்­ப­ட­வி­ருந்த இத்­திட்டம், உலக வங்­கியின் வேண்­டு­கோளின் பேரில் இட­மாற்றம் செய்­யப்­பட்­டது. அதா­வது, சுண்­ணாம்­புக்கல் அக­ழப்­பட்ட குழி­க­ளி­லி­ருந்து ஒரு கிலோ மீற்றர் தொலைவில் கரை­தீ­வுக்கு இடைப்­பட்ட பிர­தே­சத்தில் புதிய கிடங்­கு­களை அமைத்து, அதில் குப்­பை­களை கொட்­ட­வுள்­ள­தாக சொல்­லப்­ப­டு­கி­றது.

அர­சாங்கம் இதற்­கான நிதி­யொ­துக்­கீட்டை மாற்று வழி­களில் பெற்று இத்­திட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்த தீர்­மா­னித்­துள்­ளது. இதன்­மூலம் அறு­வக்­காடு பிர­தே­சத்தில் 64 ஏக்கர் நிலத்தை குப்­பைகள் மூலம் நிரப்­பு­வ­தற்கு திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது.

பல­வந்­த­மான திட்டம்

கலா­நிதி அஜந்த பெரேரா மற்றும் புத்­தளம் பாது­காப்பு அலு­வ­ல­கத்தின் செய­லா­ளரும் சுற்­றுச்­சூழல் நீதிக்­கான மையத்தின் அங்­கத்­த­வ­ரு­மான முபாறக் ஆகியோர் இணைந்து திண்­மக்­க­ழிவு முகா­மைத்­துவம் தொடர்­பாக 1991ஆம் ஆண்டு திட்ட வரை­பொன்றை வெளி­யிட்­ட­போது அதனை செயற்­ப­டுத்த அர­சாங்கம் முன்­வ­ர­வில்லை. 1993ஆம் ஆண்டும் இப்­ப­டி­யா­ன­தொரு முயற்சி மேற்­கொள்­ளப்­பட்டு அதுவும் கைகூ­ட­வில்­லை­யென தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

சுற்­றுச்­சூழல் நீதிக்­கான மையம் என்ற அரச சார்­பற்ற நிறு­வனம் சூழலை மாசு­ப­டுத்தும் செயற்­றிட்­டங்­க­ளுக்கு எதி­ராக வழக்குத் தாக்கல் செய்து வரு­கின்­றது. இந்­நி­று­வனம் சார்­பாக அறு­வக்­காடு குப்பைக் கிடங்­கினால் ஏற்­படும் சூழல் பிரச்­சி­னைகள் தொடர்­பாக கேள்­வி­யெ­ழுப்­பப்­பட்­ட­போது, அதற்கு அர­சாங்­கத்­தினால் உரிய பதில் வழங்­கப்­ப­ட­வில்­லை­யென குற்­றஞ்­சாட்­டப்­ப­டு­கி­றது.

இத்­திட்­டத்­துடன் சம்­பந்­தப்­பட்ட அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க வண்­ணாத்­தி­வில்லு பிர­தேச சபையில் நடை­பெற்ற நிகழ்­வொன்றில் தெரி­வித்த சில கருத்­துகள் இப்­பி­ரச்­சி­னையை இன்னும் கொந்­த­ளிக்க வைத்­துள்­ளது. இதனால், குப்பை பற்­றிய பீதி மக்­க­ளி­டையே மேலும் அதி­க­ரித்­துள்­ளதை அவ­தா­னிக்க கூடி­ய­தா­க­வுள்­ளது.

குப்பை கொட்­டு­வதால் அவற்றைக் கிளர்­வ­தற்­காக யானைகள் வரத்தான் செய்யும், கிடங்­குகள் தோண்­டு­வதால் வெள்ளம் வரத்தான் செய்யும். அதற்­காக இத்­திட்­டத்தை கைவி­ட­மு­டி­யா­தென புத்­தளம் பிர­தேச செய­ல­கத்தில் நடை­பெற்ற கலந்­து­ரை­யா­ட­லொன்றில் கூறப்­பட்­டது, அரசின் தான்­தோன்­றித்­த­ன­மான செய­லையே காட்­டு­வ­தாக சூழ­லி­யலாளர் முபாறக் விசனம் தெரி­விக்­கிறார்.

இந்தக் குப்­பை­களை வைத்து, சிங்­கப்பூர் அர­சாங்­கத்­துடன் இணைந்து மின்­சாரம் தயா­ரிக்­க­வுள்­ள­தா­கவும், அது­மாத்­தி­ர­மின்றி சிங்­கப்பூர் குப்­பை­க­ளையும் இவற்­றுடன் சேர்த்துக் கொட்­ட­வுள்­ள­தா­கவும் ஒரு கதை­யாடல் உள்­ளது. இதன் பார­தூ­ரங்கள் பற்­றியும் மக்கள் மிகுந்த தெளி­வுடன் இருக்­கின்­றனர். “கொழும்பு குப்­பையும் வேண்டாம், நாட்டு குப்­பையும் வேண்டாம், சிங்­கப்பூர் குப்­பையும் வேண்டாம்” என கொழும்­பு­முகத் திடலில் போராட்­டத்தில் ஈடு­பட்­ட­வர்கள் கோஷம் எழுப்­பி­ய­தையும் அவ­தா­னிக்க முடிந்­தது.

சுற்­றாடல் அதி­கார சபையும், வன ஜீவ­ரா­சிகள் திணைக்­க­ளமும் அனு­மதி வழங்க மறுத்த, உலக வங்கி தனது நிதி­யொ­துக்­கீட்டை ரத்­துச்­செய்த ஒரு திட்­டத்தை மக்­களின் எதிர்ப்­புக்கு மத்­தியில், அர­சாங்கம் பல­வந்­த­மாக செயற்­ப­டுத்த முற்­ப­டு­கின்­ற­போது, இத்­திட்டம் தொடர்பில் மக்கள் மிகுந்த பீதி­ய­டைந்து காணப்­ப­டு­கின்­றனர்.

ஏற்­படும் பாதிப்­புகள்

அறு­வக்­காட்டில் குப்பை கொட்­டும்­போது அவை தரம் பிரிக்­கா­ம­லேயே கொட்­டப்­ப­ட­வுள்­ள­தாக சொல்­லப்­ப­டு­கி­றது. அப்­ப­டி­யாயின் பிஸாஸ்ரிக், பொலித்தீன், சிலிக்கன் பொருட்கள், இலத்­தி­ர­னியல் கழி­வுகள், மருத்­துவக் கழி­வு­கள், இர­சா­யனப் பொருட்கள் என எல்­லாமே ஒன்­றா­கவே கொட்­டப்­படும்.

இதில், இலத்­தி­ர­னியல் கழி­வு­களும், மருத்­துவ கழி­வு­களும், இர­சா­யன கழி­வு­களும் மிகவும் ஆபத்­தா­னவை. பல தலை­மு­றை­களை பாதிக்­கக்­கூ­டிய இப்­பொ­ருட்கள் நிலப்­ப­ரப்பில் தேக்­க­ம­டை­வது மிகவும் ஆபத்­தா­னது. இவை உக்­கிய குப்­பை­க­ளுடன் திர­வ­மாக கலக்­கும்­போது மனி­தர்­களில் உடம்பில் இல­கு­வாக சென்­ற­டையும்.

உணவுச் சங்­கி­லியில் கடை­சி­யா­க­வுள்ள மனி­தான்தான் அதிகம் பாதிக்­கப்­ப­டுவான். தேக்க நிலை­யி­லுள்ள இர­சா­யனப் பொருட்கள் கலந்த நீரி­லுள்ள மீன்­க­ளையோ அல்­லது இறால்­க­ளையோ மனிதன் சாப்­பி­டும்­போது நேர­டி­யாக பாதிக்­கப்­ப­டுவான். இதனால் தோல் வியாதி, பிறவிக் குறை­பாடு உள்­ளிட்ட பல நோய்கள் உண்­டாகும். இதில் சில இர­சா­ய­னங்கள் உயிரைக் கொல்லும் அள­வுக்கு விஷத்­தன்மை வாய்ந்­தவை.

குப்­பைகள் கொட்­டப்­ப­டும்­போது அடியில் கொங்­கிறீட் கற்கள் இடப்­ப­ட­வேண்டும். ஆனால், இத்­திட்டத்தில் கொங்றீட் கற்கள் இடப்­ப­டு­வ­தாக சொல்­லப்­ப­ட­வில்லை என்­கிறார் சூழ­லி­யலாளர் முபாறக். அப்­படி கொங்றீட் கற்கள் இடப்­ப­டா­விட்டால், 10 வரு­டங்­களின் பின் அடி­யி­லுள்ள பொலித்தீன் போன்ற உக்­காத பொருட்­களில் வெடிப்­புகள் ஏற்­பட்டு, குப்பை அழுகி திரவம் வடியும். அதிக நச்­சுத்­தன்மை வாய்ந்த இத்­தி­ரவம் நிலத்­தடி நீரில் கலப்­ப­தினால் இயற்கை நீர் மாச­டையும். இதனால் பயிர்ச்­செய்கை நேர­டி­யாக பாதிக்­கப்­படும்.

குப்பை கொட்­டப்­ப­ட­வுள்ள பிர­தேசம் புத்­தளம் களப்­புக்கு மிக அருகில் இருக்­கின்ற கார­ணத்­தினால், குப்­பை­யி­லி­ருந்து வடியும் நச்­சுத்­தி­ரவம் நிலக்கீழ் நீரோட்­டத்தின் மூலம் களப்பில் கலக்கும். இதனால் மீன்­பிடி, இறால் பண்ணை, உப்புத் தொழிற்­சாலை என்­பன நேர­டி­யாகப் பாதிக்­கப்­படும்.

குப்­பைகள் திடல்­க­ளாக குவிக்­கப்­ப­டும்­போது காலப்­போக்கில் அதி­லி­ருந்து  மெதேன் வாயு வெளி­யேறும். இது இல­குவில் தீப்­பற்­றக்­கூ­டி­யது. வறண்ட வலயப் பிர­தே­ச­மான புத்­த­ளத்தில் காட்­டுத்தீ போன்ற இயற்கை அழி­வு­க­ளுக்கு இது சாத­க­மாக அமையும். இது­த­விர, வெப்­ப­நி­லையும் அதி­க­ரிக்கும். இதனால் புத்­தளம் கால­நி­லையில் பாரிய மாற்­றங்கள் ஏற்­படும்.

கால­நிலை மாற்­றத்­தினால் ஏற்­படும் வெள்ளம் அபாயம் பற்றி அர­சாங்­கத்­திடம் கேள்­வி­யெ­ழுப்­பி­ய­போது, வெள்ளம் சாதா­ர­ண­மாக 3 மீற்றர் உய­ரத்­துக்கே செல்லும். அறு­வக்­காட்டில் 4 மீற்றர் ஆழத்தில் கிடங்­குகள் தோண்­டப்­ப­டு­வதால் பாதிப்­புகள் ஏற்­ப­டா­தென தெரி­வித்த­தாக ஆர்ப்­பாட்­டக்­காரர் ஒருவர் தெரி­வித்தார். ஆனால், 1957ஆம் ஆண்டு கொலன்­னா­வையில் 6 மீற்றர் உய­ரத்­துக்கு வெள்ளம் ஏற்­பட்­ட­தையும் அவர் ஞாப­கப்­ப­டுத்­தினார்.

இத்­திட்டம் நடை­மு­றைக்கு வரு­மானால் விவ­சாயம், மீன­வர்கள், உப்புத் தொழி­லா­ளர்கள், இறால் பண்­ணை­யா­ளர்கள் என 16,000 குடும்­பங்கள் நேர­டி­யாக பாதிக்­கப்­படும். இதை­விட இரு மடங்கு குடும்­பங்கள் மறை­மு­க­மாக பாதிக்­கப்­படும் அபாயம் உள்­ள­தாக சுற்­றுச்­சூழல் நீதிக்­கான மையம் தெரி­விக்­கின்­றது.

சத்­தி­யாக்­கி­ரக போராட்டம்

அறு­வக்­காட்டில் குப்பை கொட்­டு­வ­தற்கு எதி­ராக கொழும்பு முகத்­தி­டலில் செப்­டம்பர் 29 முதல் பொது­மக்கள் போராட்­டத்தில் ஈடு­பட்டு வரு­கின்­றனர். ஆரம்­பத்தில் உண்­ணா­வி­ரதப் போராட்­ட­மாக ஆரம்­பி­த்து, பின்னர் மக்­களின் சாத்­வீகப் போராட்­ட­மாக மாற்­றம்­பெற்­றது.

கட்சி பேதங்­க­ளுக்கு அப்பால், அனை­வரும் இப்­போ­ராட்­டத்தில் கைகோர்த்­துள்­ளனர். ஆண்கள், பெண்கள், இளை­ஞர்கள், யுவ­திகள், சிறு­வர்கள் அனை­வரும் இந்த சாத்­வீகப் போராட்­டத்தில் ஈடு­பட்டு வரு­கின்­றனர். முஸ்­லிம்கள் மாத்­தி­ர­மின்றி தமி­ழர்­களும், சிங்­க­ள­வர்­களும் இப்­போ­ராட்­டத்தில் ஈடு­பட்டு வரு­கின்­றனர்.

ஒவ்­வொரு நாளும் ஒவ்­வொரு அமைப்­புகள் இப்­போ­ராட்­டத்தை முன்­னெ­டுத்து நடாத்­து­கின்­றன. இதன்­பி­ர­காரம் 3 மாதங்­க­ளுக்கு போராட்­டத்தை முன்­னெ­டுப்­ப­தற்­காக முழு ஏற்­பா­டு­களும் செய்­யப்­பட்­டுள்­ள­தாக மக்கள் பிர­தி­நி­தி­யொ­ருவர் எம்­மிடம் தெரி­வித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் வடமேல் மாகா­ண­சபை உறுப்­பினர் எஸ்.எச்.எம். நியாஸ், புத்­தளம் நக­ர­சபை தவி­சாளர் கே.ஏ. பாயிஸ் ஆகியோர் இப்­போ­ராட்­டத்தில் முழு­நே­ர­மாக ஈடு­பட்டு வரு­கின்­றனர். இவர்­க­ளுடன் சேர்ந்து உள்ளூர் மற்றும் வெளியூர் அர­சி­யல்­வா­தி­களும் இன, கட்சி பேதங்­களை மறந்து ஒரு­மித்து குரல்­கொ­டுத்து வரு­கின்­றனர்.

சபை­களில் தீர்­மானம்

புத்­த­ளத்தில் குப்பை கொட்­டு­வ­தற்கு எதி­ராக புத்­தளம் நக­ர­சபை, புத்­தளம் பிர­தே­ச­சபை, கற்­பிட்டி பிர­தேச சபை, வண்­ணாத்­தி­வில்லு ஆகிய பிர­தேச சபை­களில் தீர்­மா­னங்கள் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளன.

அந்­தந்த மாவட்­டங்­களில் சேக­ரிக்­கப்­படும் திண்மக் கழி­வு­களை அந்­தந்த மாவட்­டங்­க­ளி­லேயே முகா­மைத்­துவம் செய்­ய­வேண்டும். கொழும்பில் குப்­பை­களை புத்­த­ளத்தில் கொட்­டு­வதை முற்­றாக எதிர்ப்­பது என்றும் இத்­தீர்­மா­னத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

கொழும்பின் திண்மக் கழி­வு­களை அந்த மாவட்­டத்­துக்குள் முகா­மைத்­துவம் செய்­ய­மு­டி­யா­விட்டால், அதனை ஒவ்­வொரு மாவட்­டங்­க­ளுக்கும் பகிர்ந்­த­ளிக்க வேண்­டு­மெ­னவும் அதில் புத்­த­ளத்­துக்கு வரு­கின்ற பங்கை மாத்­திரம் ஏற்­றுக்­கொள்ளத் தயா­ராக இருப்­ப­தா­கவும் இதில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

புத்­தளம் நக­ர­ச­பையில் தீர்­மானம் கொண்­டு­வ­ரப்­பட்­ட­போது, ஐ.தே.க. உறுப்­பி­னர்கள் அதற்கு ஆத­ர­வ­ளிப்­பதில் பின்­னின்­ற­தா­கவும், பின்னர் ஒரு­வாறு அவர்­க­ளின் அனு­ம­தி­யு­ட­னேயே பிரே­ர­ணை நிறை­வேற்­றப்­பட்­ட­தா­கவும் நகர சபையின் தவி­சாளர் கே.ஏ. பாயிஸ் தெரி­வித்தார்.

இதே­வேளை, அறு­வக்­காட்டில் குப்பை கொட்டும் நகர அபி­வி­ருத்தி அமைச்சின் தீர்­மானம் மீள்­ப­ரி­சீ­ல­னைக்கு உட்­ப­டுத்­தப்­பட வேண்­டு­மென வடக்கு மாகாண சபை­யிலும் தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது. சபையின் 133ஆவது அமர்­வின்­போது வடக்கு மாகாண சபை உறுப்­பினர் அய்யூப் அஸ்மின் விசேட ஒத்­தி­வைப்பு வேளை பிரே­ர­ணை­யாக இதனை கொண்­டு­வந்து உரை­யாற்­றினார்.

புத்­த­ளத்தில் வண்­ணாத்­தி­வில்லு பிர­தே­சத்­துக்கு வரு­கை­தந்த பிர­தமர் இந்த குப்பை விவ­கா­ரத்தை கணக்கில் எடுக்­க­வில்லை. இப்­பி­ரச்­சி­னையை பாரா­ளு­மன்­ற­துக்கு கொண்­டு­செல்­வ­தற்­காக புத்­த­ளத்­தி­லுள்ள சுதந்­திரக் கட்சி மற்றும் ஐக்­கிய தேசியக் கட்­சியின் அமைச்­சர்­களும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் பயப்­ப­டு­வ­தாக நக­ர­பிதா கே.ஏ. பாயிஸ் தெரி­வித்தார்.

அமைச்­சர்கள் விஜயம்

இந்­நி­லையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் கடந்த 5 ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை புத்­த­ளத்­துக்கு சென்று போராட்­டத்தில் ஈடு­ப­டு­ப­வர்­க­ளுடன் கலந்­து­ரை­யாடி, அதற்­கான தீர்வைப் பெற்­றுத்­த­ரு­வதாக உறு­தி­ய­ளித்தார்.

சூழ­லுக்கும், எதிர்­கால சந்­ததி­யி­ன­ருக்கும் அச்­சு­றுத்­த­லா­க­வுள்ள இத்­திட்­டத்­துக்கு எதி­ராக கட்சி, இன, மத பேதங்­க­ளுக்கு அப்பால், புத்­தளம் மக்கள் அனை­வரும் ஏகோபித்த அடிப்படையில் சத்தியாக்கிரக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்ற நிலையில், யாரும் இப்பிரச்சினையை மூடிமறைத்து அரசியல்செய்ய முடியாது. அரசாங்கம் இத்திட்டத்தை மீள்பரிசீலனை செய்யவேண்டும் என்றார்.

இப்பிரச்சினை தொடர்பில் அதன் திட்டப் பணிப்பாளருடன் கதைத்துள்ளதாகவும், இத்திட்டம் தொடர்பில், அதன் பின்னணிகளை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்குவதற்கு பாராளுமன்றத்துக்கு வருகை தருமாறு அமைச்சர் ரவூப் ஹக்கீம் வேண்டுகோள் விடுத்துள்ளார். பணிப்பாளரும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சகிதம் வருகை தருவதாக இணக்கம் தெரிவித்துள்ளார்.

இப்பிரச்சினையை அரசாங்கத்தின் மேலிடத்துக்கு கொண்டுசெல்வதற்கு சினேகபூர்வ கட்சிகளுடன் பேசவுள்ளதாகவும், தங்களது அனைத்துப் பலத்தையும் பிரயோகித்து மாற்று நடவடிக்கைக்கு அழுத்தம் கொடுப்பதாகவும், அதுவரை உங்களது போராட்டத்தை தொடருமாறும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் புத்தளம் மக்களிடம் தெரிவித்தார்.

அத்துடன் கடந்த ஞாயிறன்று 7 ஆம் திகதி அமைச்சர் ரிஷாட் பதியுதீனும் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் இணைந்து கொண்டார்.

சாத்வீகப் போராட்டத்திற்கும் தமது ஒத்துழைப்பு முழுமையாக இருக்குமெனவும்,   மேற்கொண்டு எடுக்கப்படும் முயற்சிகளுக்கும் ஆதரவளிப்பதாகவும் அமைச்சர் ரிஷாட் தெரிவித்தார். அரசின் உயர்மட்டத்திற்கு இந்த விடயத்தை மீண்டும் கொண்டுசென்று இந்த மக்களின் மனக்குமுறல்களையும், பாதிப்புக்களையும் எடுத்துரைப்பதாக உறுதியளித்தார்.

இந்தப் பிரச்சினை ஒரு சமூகத்திற்கோ, கட்சிக்கோ மட்டுப்படுத்தப்பட்டதல்ல.  புத்தளத்தில் வாழும் ஒட்டுமொத்த அனைத்து  சமூகத்திற்கும் தீங்கு விளைவிக்கக்கூடியது. எனவே,  அனைவரும் இதனை உணர்ந்து, இந்த திட்டத்தை கைவிடுவதற்கான சகல முயற்சிகளையும்  மேற்கொள்ளவேண்டுமென கோரிக்கை விடுத்தார்.
Vidivelli