Verified Web

தனியார் சட்ட விவகாரம்: ஷரீஆ தெளிவுகளின் பின் மீண்டும் கலந்துரையாடல்

7 days ago ARA.Fareel

 

உல­மாக்கள், புத்­தி­ஜீ­விகள் மற்றும் சிவில் சமூகப் பிர­தி­நி­தி­களை உள்­ள­டக்கி  அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. நடாத்­திய முஸ்லிம் விவாக, விவா­க­ரத்து சட்டத் திருத்த சிபா­ரிசு அறிக்கை  தொடர்­பான மாநாட்­டினையடுத்து அறிக்­கை­யொன்று தயாரிக்கப்பட்­டுள்­ளது.  அகில இலங்கை  வை.எம்.எம்.ஏ.யினால் தயா­ரிக்­கப்பட்டுள்ள  இந்த அறிக்கை ஷரீ­ஆவின் தெளி­வு­க­ளுக்­காக ஷரீஆ கவுன்ஸில் மற்றும் அகில இலங்கை ஜம் இய்­யத்துல்  உல­மா­ச­பையின் பத்வா குழு­வுக்கு கைய­ளிக்­கப்­ப­ட­வுள்­ளது.

அறிக்­கையின் ஷரீஆ தொடர்­பான தெளி­வு­களைப் பெற்­றுக்­கொண்­டபின் அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. முஸ்லிம்  விவாக, விவா­க­ரத்துச்  சட்ட திருத்த சிபா­ரிசு குழுவின் தலைவர் முன்னாள் நீதி­ய­ரசர்  சலீம் மர்­சூபையும், ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி பாயிஸ் முஸ்­த­பா­வையும் சந்­தித்து  கலந்­து­ரை­யா­டல்­களை  மேற்­கொள்­ள­வுள்­ள­தாக அகில இலங்கை வை.எம்.எம்.ஏ.யின் தேசிய பொதுச் செய­லாளர் சஹீட் எம். ரிஸ்மி ‘விடி­வெள்ளி’ க்குத் தெரி­வித்தார்.

இரு­த­ரப்­பி­னரும் தங்­க­ளது முரண்­பா­டு­க­ளி­லி­ருந்தும்  வெளி­யேறி இணக்­கப்­பாட்­டுக்கு வரா­விட்டால் அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. தயா­ரித்­துள்ள அறிக்கை நீதியமைச்சர்  தலதா அத்துகோரளயிடம் சமர்ப்பிக்கப்படும் எனவும்  அவர் கூறினார்.
-Vidivelli