Verified Web

புல்­மோட்டை உள்­ளிட்ட பிர­தேச முஸ்­லிம்­களின் காணி­களை பகு­தி­ய­ளவில் விடு­விக்க அர­சாங்க அதிபர் இணக்கம்

7 days ago Administrator

யுத்­த­கா­லத்தில் தமது வாழ்­வி­டங்­க­ளையும், விவ­சாயக் காணி­க­ளையும் இழந்த திரு­கோ­ண­மலை மாவட்­டத்­தி­லுள்ள குச்­ச­வெளி மற்றும் சேரு­வில பிர­தேச செய­ல­கங்­க­ளுக்­குட்­பட்ட பொது­மக்­களின் காணிகள், யுத்தம் நிறை­வுக்கு  வந்­த­பின்­னரும் உரி­மை­யா­ளர்­க­ளுக்கு மீண்டும் வழங்­கு­வ­திலும்  அல்­லது அவர்கள் பயிர்ச்­செய்கை மேற்­கொண்ட காணி­களை விடு­விப்­ப­திலும் இது­வரை கால­மாக நில­விய இழு­பறி நிலைக்கு நிரந்­தர தீர்வை எட்டும் விதத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸின் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்­கீமின் ஏற்­பாட்டில் காணி அமைச்சர் கயந்த கருணா திலக மற்றும் சம்­பந்­தப்­பட்ட உயர் அதி­கா­ரி­க­ளுடன் நடை­பெற்ற கூட்­டத்தில்  இணக்கம் காணப்­பட்­டது.

கிழக்கு மாகா­ணத்தின் காணிப்­பி­ரச்­சி­னைகள் தொடர்பில் ஜனா­தி­ப­தி­யினால் நிய­மிக்­கப்­பட்­டுள்ள செய­ல­ணிக்கும், மாகாண ஆளு­ந­ருக்­கு­மி­டை­யி­லான விசேட கூட்டம் அடுத்த வாரத்தில் நடை­பெ­ற­வுள்­ளது. அதில்  அமைச்­சர்­க­ளான ரவூப் ஹக்கீம், கயந்த கரு­ணா­தி­லக, கிழக்­கு­மா­கா­ணத்­தி­லுள்ள முஸ்லிம் காங்­கி­ரசின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள்  மற்றும் சம்­பந்­தப்­பட்ட உய­ர­தி­கா­ரி­களும் கலந்து கொள்­ள­வுள்­ளனர்.

இந்­தக்­கூட்­டத்தில் பிர­தி­ய­மைச்சர் பைசல் காசிம், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான எம்.எஸ்.தெளபீக், ஏ.எல்.நசீர், எம்.ஐ.எம்.மன்சூர், முன்னாள் கிழக்­கு­மா­காண சபை உறுப்­பினர் ஆர்.எம்.அன்வர், குச்­ச­வெளி பிர­தேச சபை தவி­சாளர் ஏ.பி.முபாரக்,  மாவட்ட அர­சாங்க அதிபர் புஸ்­ப­கு­மார, குச்­ச­வெளி பிர­தேச செய­லாளர் தனேஸ்­வரன், சேரு­வில பிர­தேச செய­லாளர் பி.ஆர்.ஜய­ரத்­தன, காணி அமைச்சின் மேல­திக செய­லாளர், பிர­தேச சபை உறுப்­பி­னர்­க­ளான மீஸான், அமீன் பாரிஸ், புல்­மோட்டை பிர­தேச ஜம்­இய்­யத்துல் உல­மாத்­த­லைவர் மௌலவி அப்துல் சமத், பிர­தேச பள்­ளி­வா­சல்­களின் தலை­வர்கள் உள்­ளிட்ட முக்­கி­யஸ்­தர்கள் என பலரும் கலந்­து­கொண்­டனர்.

மேல­திக காணி­க­ளையும், விவ­சாய நிலங்­க­ளையும் விடு­விப்­பது தொடர்பில் வண­ப­ரி­பா­லன திணைக்­க­ளத்­து­ட­னான பேச்­சு­வார்த்­தை­களின் பின்னர் தீர்­மா­னங்கள் மேற்­கொள்­ளப்­படும் என இந்த கூட்­டத்தில் முடி­வெ­டுக்­கப்­பட்­டது. காணி­க­ளுக்­கான  அனு­ம­திப்­பத்­தி­ரங்­க­ளுக்கு விண்­ணப்­பித்­த­வர்­க­ளுக்கு  உரிய முறையில் காணிகளை பகிர்ந்தளிப்பது தொடர்பிலும் ஏலவே காணிக்கச்சேரி நடாத்தப்பட்டு அடையாளம் காணப்பட்ட விண்ணப்பதாரிகளுக்கும் பகிர்ந்தளிப்பது தொடர்பிலும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சரினால் அரசாங்க அதிபருக்கு பணிப்புரை வழங்கப்பட்டது.
-Vidivelli