Verified Web

மாகா­ண­சபைத் தேர்தல் குறித்து விரைவில் விஷேட அறி­விப்பு

7 days ago Administrator

தேர்­தலை நடத்தி 2020 ஆம் ஆண்­டுக்கு பின்­னரும் ஐக்­கிய தேசிய கட்சி ஆட்சி அதி­கா­ரத்தைத் தொடரும். மாகாண சபை தேர்தல் குறித்து அறி­விப்பு விரைவில் வெளி­வரும் என்று தெரி­வித்த ஐக்­கிய தேசியக் கட்­சியின் பொதுச் செய­லாளர் அமைச்சர் அகி­ல­விராஜ் காரி­ய­வசம், தேர்­தலை காலம் கடத்­து­வ­தாகக் கூறும் எதி­ர­ணியின் குற்­றச்­சாட்­டுக்கள் அடிப்­ப­டை­யற்­றவை எனவும் கூறினார். சுயா­தீன தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலைவர் மஹிந்த தேசப்­பி­ரி­ய­வு­ட­னான சந்­திப்பு நேற்று வியா­ழக்­கி­ழமை இடம்­பெற்­றது. இதன் பின்னர் ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அமைச்சர் அகி­ல­விராஜ் காரி­ய­வசம் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்தும் கூறு­கையில்,

விரைவில் தேர்­தலை நடத்த வேண்­டு­மென்ற எதிர்­பார்ப்­பு­ட­னேயே ஐக்­கிய தேசிய கட்சி அர­சாங்­கத்­திற்குள் செயற்­பட்டு வரு­கின்­றது. என­வேதான் எந்த முறை­மை­யி­னா­லேனும் தேர்­தலை நடத்­தி­விட வேண்டும் என்ற நோக்­குடன் பாரா­ளு­மன்­றத்தில் மூன்றில் இரண்டு ஆத­ரவைக் கோரி நிற்­கின்­றது. பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஸ்தாபித்த குழு­வா­னது இன்னும் இரண்டு மாதங்­க­ளுக்குள் தேர்தல் குறித்த அறி­விப்பை பிர­த­ம­ருக்கு அறி­விக்கும். அதன் பின்னர் ஏனைய நட­வ­டிக்­கை­களை எடுக்க முடியும்.

தேர்­தலை காலம் கடத்த வேண்­டிய தேவை எமக்கு கிடை­யாது. மாகாண சபை தேர்தல் முறை­மையில் குறை­களை வைத்துக் கொண்டு தேர்­த­லுக்குச் செல்ல முடி­யாது. தேர்தல் முறை­மையில் காணப்­ப­டு­கின்ற குறை­பா­டு­களை கவ­னத்தி்ல் கொள்ள வேண்­டி­யுள்­ளது. பெரும்­பான்­மையைப் பெற்றுக் கொண்­டுள்ள சில மாகாண சபை­களில் ஆட்­சியை முன்­னெ­டுக்க முடி­யாத நிலை­மையே காணப்­ப­டு­கின்­றது.

எனவே, மாகாண சபை முறை­மையை கீழ்­மட்­டத்­திற்குj; தள்­ளி­விட முடி­யாது. எனவே பிரச்­சி­னை­களைத் தீர்த்து புதிய முறை­மையா அல்­லது பழைய முறை­மையா என்ற இறுதி தீர்­மா­னத்தை எடுக்க வேண்டும் என்றார்.
-Vidivelli