Verified Web

சீரற்ற கால­நி­லையால் 12 பேர் உயி­ரி­ழப்பு 68583 பேர் பாதிப்பு

7 days ago Administrator

கால­நிலை  மாற்­றத்தால் 2050ஆம் ஆண்­ட­ளவில் இலங்கை கடும் வரட்சி நிலை­மைக்கு முகம் கொடுக்கும் என்­ப­துடன் இலங்­கையில் வெப்ப நிலை 2 செல்­சி­ய­ஸினால் அதி­க­ரித்துக் காணப்­படும். இதற்கு முகம்­கொ­டுக்கும் வகையில் தற்­போ­தி­ருந்தே வேலைத்­திட்­டங்­களை ஆரம்­பிக்க வேண்­டு­மென அனர்த்த முகா­மைத்­துவ இரா­ஜங்க அமைச்சர் பாலித்த ரங்கே பண்­டார பாரா­ளு­மன்­றத்தில் தெரி­வித்தார்.

கால­நிலை தொடர்­பாக பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை நிலை­யி­யல்­கட்­டளை  27/2 இன் கீழ் அண்­மையில் இலங்­கையில் நில­விய சீரற்ற கால நிலையால் ஏற்­பட்ட பாதிப்­புகள் தொடர்­பா­கவும்  பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­காக அர­சாங்­கத்­தினால் முன்­னெ­டுக்­கப்­பட்ட வேலைத்­திட்­டங்கள் என்­ன­வெ­னவும்  அத்­துடன் கால­நிலை மாற்­றத்தால் நாடு எதிர்­கொள்ளும் பிரச்­சி­னை­க­ளுக்கு முகம்­கொ­டுக்க அர­சாங்­கத்­தினால் ஏதேனும் நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டுள்­ளதா என ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் தினேஷ் குண­வர்­த­ன­வினால் எழுப்­பப்­பட்ட கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளித்து உரை­யாற்றும் போதே  அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரி­விக்­கையில்,அண்­மையில் நாட்டில் நில­விய சீரற்ற கால­நி­லையால் 17,303 குடும்­பங்­களை சேர்ந்த 68,583 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். இந்தக் காலப் பகு­தியில் 12 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­துடன் 18 பேர் காய­ம­டைந்­துள்­ளனர். இவ்­வா­றாக பாதிக்­கப்­பட்ட  மக்­க­ளுக்குத் தேவை­யான நிவா­ரண நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்கப் படு­கின்­றன. எதிர்­கா­லத்தில் வெள்­ளங்கள் ஏற்­ப­டும்­போது அந்த நீரை சேமிக்கும் வகையில் விசேட வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுக்­க­வுள்ளோம். இதற்­காக நீர்த்­தேக்­கங்கள் அமைக்­கப்­ப­ட­வுள்­ளன.

மேலும்,  2020 ஜனா­தி­பதி வேட்­பாளர் யார் என்­பது தொடர்­பாக எல்­லோரும் கதைக்­கின்­றார்கள். ஆனால் 2050இல் இலங்­கைக்கு ஏற்­படப் போகும் பாதிப்­புகள் தொடர்­பாக யாரும் கதைப்­ப­தில்லை. 2050ஆம் ஆண்டில் இலங்­கையின் வெப்ப நிலையின் அளவு இரண்டு செல்­சி­யசால் அதி­க­ரிக்­கு­மெனக் கூறப்­பட்­டுள்­ளது. அப்­போது வடக்கு உள்­ளிட்ட பிர­தே­சங்­களில் கடும் வரட்சி நிலைமை ஏற்­படும். வெப்பம், கடும் காற்று போன்­ற­வற்­றுக்கு முகம்­கொ­டுப்­ப­தற்குத் தயா­ராக வேண்டும்.  இதனால் இதற்கு முகம்கொடுக்கும் வகையில் தேவையான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். நீரை சேமித்து வைத்துக்கொள்ளும் வகையில் தேவையான நீர்த்தேக்கங்களை அமைக்கும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன என்றார்.
-Vidivelli