Verified Web

பத்­த­ர­முல்லை பெல­வத்த ஆடை­ய­கத்தில் திடீர் தீ

7 days ago Administrator

தலங்­கம பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட பத்­த­ர­முல்லை – -பெல­வத்த சந்­தியில் அமைந்­துள்ள கூல் பிளனட் எனப்­படும் பிர­சித்­த­மான ஆடை­ய­கத்தில் நேற்று திடீர் தீ பரவல் ஏற்­பட்­டுள்­ளது. நேற்று முற்­பகல் 11.10 மணி­ய­ளவில் இந்த தீ பரவல் குறித்து 119 ஊடாக தமக்கு அறி­விக்­கப்பட்­ட­தாக பொலிஸார் தெரி­வித்­தனர். 

இந்­ததீ பரவல் கார­ண­மாக நேற்று பத்­த­ர­முல்லை பகு­தியில் பெரும் பர­ப­ரப்­பேற்­பட்­டது. அத்­துடன் பெரும் போக்­கு­வ­ரத்து நெரி­சலும் காணப்­பட்­டது.

 தைத்த ஆடை­களை விற்­பனை செய்யும் குறித்த நிறு­வனம் பர­ப­ரப்­பாக இயங்­கிக்­கொண்­டி­ருந்த போதே இந்த தீ ­ப­ரவல் ஆரம்­பித்­துள்ள நிலையில், தீ பரவ ஆரம்­பிக்­கும்­போது பெரு­ம­ள­வி­ளான சேவை­யா­ளர்­களும் வாடிக்­கை­யா­ளர்­களும் ஆடை­ய­கத்தில் இருந்­துள்­ளனர்.

 எனினும், அவர்­க­ளுக்கு எவ்­வித ஆபத்தும் ஏற்­ப­டா­வண்ணம்  அவர்கள் மீட்­கப்­பட்­டுள்ள நிலையில், குறித்த ஆடை­ய­க­மா­னது முற்­றாக எரிந்து  நாச­மா­கி­யுள்­ளது. இதனால் பல கோடி ரூபா நட்டம் ஏற்­பட்­டி­ருக்­க­லா­மெனக் கூறும் பொலிசார்,  நட்டம் தொடர்பில் கணக்­கெ­டுப்­புக்கள் உட­ன­டி­யாக இடம்­பெ­றாத நிலையில் துல்­லி­ய­மான விப­ரங்­களை கூற முடி­யா­தெனக் கூறினர்.

 தீ பரவ ஆரம்­பித்­த­தை­ய­டுத்து  கொழும்பு மாந­கர சபைக்கு சொந்­த­மான 7 தீய­ணைப்பு வாக­னங்கள், 25 தீய­ணைப்பு படை­யி­ன­ருடன் பத்­த­ர­முல்­லைக்கு அனுப்­பப்­பட்­டன. இத­னை­விட கோட்டே மாந­கர சபையின் 3 தீய­ணைப்பு வாக­னங்­களும் தெஹி­வளை -– கல்­கி­சையின் 3 தீய­ணைப்பு வாகனங்­களும் தீயை அணைக்கும் பணி­க­ளுக்கு பயன்­ப­டுத்­தப்­பட்­டன.

 எனினும் தீய­ணைப்பு பணிகள் மிகச் சிர­ம­மாக இருந்­ததால் பொலிஸ், இரா­ணுவம் மற்றும் விமா­னப்­ப­டையின் ஒத்­து­ழைப்பும் பெறப்­பட்­டது.

 தீயை அணைக்க விமா­னப்­ப­டையின் பெல் 212 ரக ஹெலி­கொப்டர் ஒன்றும் இதன்­போது உத­விக்கு அழைக்­கப்­பட்டு நட­வ­டிக்­கையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டது.

 இந்­நி­லை­யி­லேயே முற்­பகல் 11.10 மணி­ய­ளவில் பரவ ஆரம்­பித்த தீ சுமார் நான்கு மணி நேரப் போராட்­டத்தின் பின்னர் பிற்­பகல் 3.00 மணி­ய­ளவில் கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வ­ரப்­பட்டு பின்னர் அணைக்­கப்­பட்­டது.

 இந்த தீ பரவல் கார­ண­மாக பத்­த­ர­முல்ல – - பெல­வத்த, கொட்­டாவ –- பத்­த­ர­முல்ல வீதிகள் ஊடான போக்­கு­வ­ரத்துகள் தடைப்­பட்­டன. இதனால் பொது­மக்கள் பெரும் சிர­மங்­களை எதிர்­கொண்­ட­துடன், அவ்­வீ­திகள் ஊடாக வேறு பகு­தி­க­ளுக்கு பய­ணிப்­போரும் கடும் சிர­மங்­களை எதிர்­கொண்­டனர். தீ பர­வலால் பிர­தே­ச­மெங்கும் ஒரே முகை மூட்­டமும், பாதை­களில் போக்­கு­வ­ரத்து நெரி­ச­லையும் அவ­தா­னிக்க முடிந்­தது.

 தீ பர­வ­லுக்­கான காரணம் உட­ன­டி­யாகத் தெரி­ய­வ­ராத நிலையில் தலங்­கம பொலிஸ் நிலை­யத்தின் சிறப்புக் குழுவூடாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர கூறினார். அரச இரசாயன பகுப்பாய்வாளரை அழைத்து அவ்விடத்தை சோதனை செய்யவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸ் விசாரணைகள் நேற்று உடனடியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli