Verified Web

காதி நீதிமன்றங்கள் தரமுயர வேண்டும்

7 days ago ARA.Fareel

Image result for உலமா சபை vidivelli

முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தை அமுல்­ப­டுத்தும் காதி நீதி­மன்­றங்கள் தர­மு­யர்த்­தப்­ப­டு­வ­துடன் சில மாவட்­டங்­களில் அவை நீதிவான் நீதி­மன்­றங்­களின் தரத்தை ஒத்­த­தாக அமைய வேண்டும் என முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளு­ட­னான ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் கலந்­து­ரை­யா­டலில் தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­டது.

முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளு­ட­னான அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் கலந்­து­ரை­யாடல் நேற்று முன்­தினம் இரவு கொழும்பில் உலமா சபையின் தலைமைக் காரி­யா­ல­யத்தில் இடம்­பெற்­றது. உலமா சபையின் மேற்­கு­றிப்­பிட்ட தீர்­மா­னத்தைப் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அங்­கீ­க­ரித்­தனர்.

காதி நீதி­ப­தி­களின் தரமும் உயர்த்­தப்­பட வேண்­டு­மெ­னவும் காதி நீதி­ப­தி­க­ளாக நிய­மனம் பெறு­ப­வர்­க­ளுக்கு ஒரு வருட காலத்தில் பயிற்­சி­களின் பின்பு பரீட்­சை­யொன்று நடாத்­தப்­பட்டு பரீட்­சையில் சித்­தி­ய­டை­ப­வர்­க­ளுக்கே பத­விக்­காலம் நீடிக்­கப்­பட வேண்­டு­மெ­னவும் தீர்­மா­னிக்­கப்­பட்­டது. தாப­ரிப்பு வ-ழக்­கு­களில் தாப­ரிப்பு செலுத்­தாத பிர­தி­வா­தி­க­ளி­ட­மி­ருந்து தாப­ரிப்பு பணத்தைப் பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்கு தற்­போ­துள்ள சட்­டத்தின் கீழ் காதி நீதி­பதி நீதிவான் நீதி­மன்­றங்­களை நாட வேண்­டி­யுள்­ளது. வலி­யு­றுத்தக் கட்­ட­ளை­களை நீதிவான் நீதி­மன்­றுக்கு அனுப்ப வேண்­டி­யுள்­ளது. இந்த அதி­காரம் காதி நீதி­ப­தி­க­ளுக்கே வழங்­கப்­பட வேண்டும் என்றும் தீர்­மா­னிக்­கப்­பட்­ட­துடன் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் இதனை அங்­கீ­க­ரித்­தனர். முஸ்லிம் விவா­க­ரத்துச் சட்­டத்­தி­ருத்த சிபா­ரி­சு­களில் வயது, மத்தாஹ், பெண் காதி நிய­மனம், ‘வலி’ என்­பன பற்­றியும் கலந்­து­ரை­யா­டப்­பட்­டன. அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை தனது நிலைப்­பாட்­டினை முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்குத் தெளி­வு­ப­டுத்­தி­யது. பெண்கள் காதி­க­ளாக நிய­மிக்­கப்­ப­டாது காதி நீதி­மன்­றங்­களில் ஜுரி­க­ளாக, ஆலோ­சனைச் சபையில் உறுப்­பி­னர்­க­ளாக, விவாக பதி­வா­ளர்­க­ளாக நிய­மனம் பெறு­வதை பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் ஏற்­றுக்­கொண்­டனர். ‘வலி’ இல்­லாது திரு­மணம் நடை­பெ­றக்­கூ­டாது என்­ப­திலும் உடன்­பாடு காணப்­பட்­டது. பெண்­களின் திரு­மண வய­தெல்லை 16 – 18 ஆக இருக்க வேண்­டு­மெ­னவும் இவ்­வ­ய­துக்குக் குறைந்த பெண்­களின் திரு­மணம் விசேட தேவை நிமித்தம் நடை­பெற வேண்­டு­மென்றால் காதி நீதி­ப­தியின் அனு­மதி பெறப்­பட வேண்டும் என்­பதும் இணக்­கப்­பாடு எட்­டப்­பட்­டது.உலமா சபையுடனான சந்திப்பில் அமைச்சர் ரவூப் ஹக்கீம், பிரதி அமைச்சர் அமீர் அலி, அலிசாஹிர் மௌலானா, பைசல் காசிம், ஹரீஸ், இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், பாராளுமன்ற உறுப்பினர்கள் முஜிபுர் ரஹ்மான், அப்துல்லா மஹ்ரூப், பிரதியமைச்சர் காதர் மஸ்தான் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். உலமா சபையின் சார்பில் அதன் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ரிஸ்வி முப்தி செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ.முபாரக் உட்பட பிரதிநிதிகள் பங்கு கொண்டிருந்தனர்.
-Vidivelli