Verified Web

சுய விசாரணை

2018-10-11 06:18:37 Administrator

சமூ­கத்­தி­லுள்ள ஒவ்­வொரு துறை­சார்ந்­தோரும் அத்­து­றையில் தமக்­க­ளிக்­கப்­பட்­டுள்ள பொறுப்­புக்கள் அல்­லது தாமாகத் தெரிவு செய்­து­கொண்ட துறை­களில் தமக்­குள்ள பொறுப்­புக்கள், மேற்­கொண்­டு­வரும் பணிகள், சேவைகள் குறித்து சுய­வி­சா­ரணை செய்­ய­வேண்­டிய தேவை­யினை காலம் வலி­யு­றுத்தி நிற்­கி­றது.

சுய­வி­சா­ரணை என்­பது நாம் தூங்­கும்­போது அன்­றைய காலைப் பொழுது முதல் இரவு தூங்­கச்­செல்லும் வரை­யான நேரத்­திற்குள்  நடந்­த­வற்­றை­யெல்லாம் ஒரு­முறை நினை­வு­ப­டுத்­தி­விட்டு தூங்­கு­வ­து­மல்ல, நம்மால் தயா­ரிக்­கப்­பட்ட பட்­டியல் ஒன்றை வைத்­துக்­கொண்டு தினமும் புள்­ள­டி­யிட்டு வரு­வ­து­மல்ல. இவை சுய­வி­சா­ரணை செய்­வ­தற்­கான பொறி­மு­றை­க­ளாக இருந்­தாலும், சுய­வி­சா­ரணை என்­பது உணர்­வுடன் தொடர்­பு­பட்­டது. அது நம்மில் இயல்­பா­கவே காணப்­பட வேண்டிய இயை­பாக்க செயற்­பா­டாகும். 

நம்மால் புரி­யப்­படும் ஒவ்­வொரு பணி தொடர்­பிலும் அப்­ப­ணி­யினை செய்ய முன்பும் செய்­த­பின்பும் மனச்­சாட்­சி­யிடம் ஒரு­கணம் கேட்­டுக்­கொள்­வதே சுய­வி­சா­ர­ணைக்குப் போது­மா­னது. அந்­த­வ­கையில், ஆரோக்­கி­ய­மிக்க எதிர்­கால சமூ­கத்தை உரு­வாக்கும் பொறுப்பை சுமந்­துள்ள பாட­சாலை ஆசி­ரி­யத்­துவ ஆசி­ரி­யர்கள் தங்­க­ளது பணி தொடர்பில் சமூகம் பெரும் எதிர்­பார்ப்பைக் கொண்­டுள்­ளது. நமது பணி ஆசி­ரி­யத்­து­வத்தின் புனி­தத்­து­வத்தை கௌர­விக்­கி­றதா அல்­லது மாசு­ப­டுத்­து­கி­ற­தா என்ற சுய­வி­சா­ரணை மேற்­கொள்­வதும், தமது பணியின் மூலம் சமூகம் எதிர்­பார்க்கும் இலக்­குகள் நிறை­வேற்­றப்­ப­ட­வில்­லை­யாயின் சமூ­கத்தின் எதிர்­பார்ப்­புக்­களை நிறை­வேற்றி வைக்க  ஆசி­ரி­யத்­துவ ஆசி­ரி­யர்கள் தங்­களை புடம்­போட்­டுக்­கொள்ள வேண்­டு­மென்­பதும் சமூக ஆர்­வ­லர்­களின் எதிர்­பார்ப்­பா­க­வுள்­ளது

கல்விப் பரப்பும் ஆசிரியத்துவமும்

கல்­விப்­ப­ரப்பு மிக விசா­ல­மா­னது. விசா­ல­மான இக்­கல்விப் பரப்பில் ஆசி­ரி­யத்­து­வத்தின் வகி­பாகம் அளப்­ப­ரி­யது. கல்விப் பரப்­பி­லுள்ள பல்­க­லைக்­க­ழ­கங்கள், ஆசி­ரிய கலா­சா­லைகள், கல்­வி­யியல் கல்­லூ­ரிகள், தொழில்­நுட்பக் கல்­லூ­ரிகள், தொழில் பயிற்சிக் கல்­லூ­ரிகள் என்ற உயர் கல்­வி­யினைப் போதிக்­கின்ற கல்வி நிலை­யங்­களில் கற்­பித்தல் பணியில் ஈடு­ப­டு­கின்­ற­வர்கள் விரி­வு­ரை­யா­ளர்கள் என்றும் போத­னா­சி­ரி­யர்கள் எனவும் அழைக்­கப்­பட்­டாலும் அவர்­க­ளது பணி­யா­னது கற்­பித்தல் பணி­யென்­பதால் அவர்­களும் ஒரு­வ­கையில் ஆசி­ரி­யர்­க­ளாகக் கரு­தப்­பட்­டாலும், பொது­வாக பாட­சா­லை­களில் கற்­பித்தல் பணியில் ஈடு­ப­டு­கின்­ற­வர்­களே கல்விப் பரப்பில் ஆசி­ரி­யத்­துவ ஆசி­ரி­யர்­க­ளாக நோக்­கப்­ப­டு­கி­றார்கள்.

ஏனெனில், பாட­சாலை வகுப்­ப­றை­க­ளி­லேயே நாட்­டுக்கும், பிர­தே­சத்­திற்கும், சமூ­கத்­திற்கும் தேவை­யான நல்ல தலை­வர்­க­ளையும், துறைசார் நிபு­ணர்­க­ளையும் உரு­வாக்­கு­வ­தற்கு வித்­தி­டப்­பட்டு வளர்க்­கப்­ப­டு­கி­றது. ஆரோக்­கிய எதிர்­கால சந்­த­தி­களை உரு­வாக்கும் பாட­சாலை ஆசி­ரி­யத்­துவ ஆசி­ரி­யர்­களின் பணி­யா­னது ஒரு புனி­த­மிக்­கது என்­பதில் மாற்றுக் கருத்­துக்­க­ளில்லை. இத­னா­லேதான், ஆசி­ரி­யத்­துவ ஆசி­ரி­யர்­க­ளி­னது சேவை­யா­னது என்றும் போற்­றத்­தக்­க­தா­க­வுள்­ளது. இத்­த­கையை போற்­றத்­தக்க பணியைப் புரி­கின்ற ஆசி­ரி­யர்கள் என்றும் மதிக்­கப்­ப­டு­கி­றார்கள். அவ்­வா­றான நல்­லா­சி­ரி­யர்­களை வரு­டத்தில் ஒரு­தினம் மாத்­திரம் நினைவு கூரப்­ப­டு­வது அவர்­க­ளது அர்ப்­ப­ணிப்­புக்குப் மோது­ம­ன­தல்ல.

இந்­நி­லையில், ஆசி­ரி­யத்­துவம் பற்றி பல்­வேறு தளங்­களில் இந்­நாட்­களில் பேசப்­ப­டு­கின்­றன. ஏனெனில், கடந்த 6ஆம் திகதி உலக ஆசி­ரியர் தினம் இலங்­கையில் அனுஷ்­டிக்­கப்­ப­ட்­டது. ஆசி­ரி­யத்­துவ ஆசி­ரி­யர்கள் தங்­க­ளது ஆசி­ரி­யர்கள் என்ற ரீதியில் மாண­வர்­க­ளினால் பாராட்­டப்­பட்டும், பரி­சில்கள் வழங்­கியும் கௌர­விக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்கள். இருந்தும், கிடைத்த இப்­பா­ராட்­டு­தல்­க­ளுக்கும், பெற்ற கௌர­வத்­திற்கும் உரி­ய­வர்­களா நாங்கள் என்று பாராட்­டு­தல்­களும், கௌர­வமும் பெற்ற ஒவ்­வொரு ஆசி­ரி­யர்­களும் தங்­களை தாங்­க­ளா­கவே சுய­வி­சா­ரணை செய்­து­கொள்ள வேண்­டி­யது காலத்தின் அவ­சி­ய­மாகும். ஏனெனில், புனி­த­மான பணி­யாகப் போற்­றப்­படும் ஆசி­ரி­யத்­துவம் வர்த்­த­க­ம­யப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கி­றது. இதனை அதி­க­ரித்து வரும் ‘டியூசன் சென்­றர்கள்' புடம்­போ­டு­கின்­றன.

“எங்கே நடப்­ப­டு­கி­றாயோ அங்கே மல­ராகு” என்ற பொன்­மொ­ழிக்கு எடுத்­துக்­காட்­டாக இருப்­ப­வர்கள் ஆசி­ரி­யர்கள். ஆசி­ரி­யர்கள் என்­ப­வர்கள் புனித பணி­யொன்றின் கர்த்­தாக்கள், வளரும் சமு­தா­யத்தின் ஒளி­ம­ய­மான வாழ்க்­கைக்கு வழி­காட்­டு­ப­வர்கள். பொது­வாக ஆசி­ரி­யர்கள் நாளைய சமு­தா­யத்தின் தலை­வி­தியை இன்றே நிர்­ண­யிப்­ப­வர்­க­ளாகக் கூட இருக்­கலாம்.

வழ­மை­யாக ஆசி­ரி­யர்கள் மர­பு­க­ளையும் மரபு வழித்­தி­றன்­க­ளையும் கைய­ளித்து வந்­தார்கள். ஆனால், சம­கால ஆசி­ரி­யர்கள் பற்­றிய எதிர்­பார்ப்பு இதற்கு அப்பால் செல்­கின்­றது, இல்­லங்­களில் வழங்க முடி­யாத புதிய அறி­வையும், திறன்­க­ளையும் வளரும் மாணவ சமு­தா­யத்­திற்கு அறி­முகம் செய்ய வேண்­டிய பொறுப்பில் ஆசி­ரி­யர்கள் உள்­ளனர். இப்­பொ­றுப்பை முன்­னெ­டுப்­ப­தற்கு தன்­ன­ல­மற்ற தியாக மனப்­பாங்­கு­க­ளுக்­கப்பால் கற்­பிக்கும் தொழிலை நேசிப்­ப­வ­ரா­கவும் ஆசி­ரி­யர்கள் இருக்க வேண்டும். இத்­த­கை­ய­தொரு எதிர்­பார்ப்பே ஆசி­ரி­யர்கள் தொடர்­பான சமூ­கப்­பார்­வை­யா­க­வு­முள்­ளது என்­பது சுட்­டிக்­காட்­டத்­தக்­கது.

செய்யும் தொழில் மீது பற்றும், அதன் கௌர­வத்தைப் பாது­காக்க வேண்­டு­மென்ற நல்­லெண்­ணமும் இருக்­கும்­போ­துதான், அத்­தொ­ழிலில் வெற்­றியும் அதனால் சமூ­கத்தில் கௌர­வமும் கிடைக்கும். பொரு­ளா­தார விருத்தி மற்றும் பதவி உயர்வு என்­ப­வற்றை மைய­மாகக் கொண்டு அவை­க­ளுக்­காக மாத்­திரம் அத்­தொழில் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­ற­போது, அதனால் வெற்­றிக்குப் பதி­லாக தோல்­வியும் கௌர­வத்­திற்குப் பதி­லாக அகௌ­ர­வ­முமே கிடைப்­பது வர­லா­றுகள் கற்றுத் தரும் பாடங்­க­ளாகும். அத்­த­கைய வர­லா­றுகள் ஒரு­சில ஆசி­ரி­யர்கள் மீது பதி­வா­கி­யி­ருப்­பது புனித மிக்க பணி­யினை புரிந்­து­வ­ரு­கின்ற ஆசி­ரி­யத்­துவம் மீது அதி­க­ள­வி­லான கேள்­விக்­க­ணை­களை சம­கா­லத்தில் சமூக மட்­டத்தில் எழுப்­பி­யி­ருப்­ப­தை அவ­தா­னிக்கக் கூடி­ய­தா­க­வுள்­ளது.  ஏனெனில், எதிர்­கால நற்­பி­ர­ஜை­களை உரு­வாக்கும் பொறுப்பை சுமந்த நிறு­வ­ன­மாக பாட­சா­லை­களும் அப்­பா­ட­சா­லையின் ஆசி­ரி­யர்­களும் விளங்­கு­கி­றார்கள் என்­பதில் மாற்­றுக்­க­ருத்­தி­ருக்க முடி­யாது.

 

பாட­சாலைக் கட்­ட­மைப்பில் ஆசிரியர்கள்

இலங்­கையின் பாட­சாலைக் கட்­ட­மைப்பு  நான்கு வகை­யாக உள்­ளன. 1 ஏபி, 1 சீ, வகை 2 மற்றும் வகை 3 ஆகிய வகைப் பாட­சா­லை­களே அவை­யாகும். கல்­வி­ய­மைச்சின் 2016ஆம் ஆண்டின் புள்­ளி­வி­ப­ரங்­களின் பிர­காரம் 1 ஏபி பாட­சா­லைகள் 1,016உம், 1சீ பாட­சா­லைகள் 1,805உம் வகை 2 பாட­சா­லைகள் 3,408உம் மற்றும் வகை 3 பாட­சா­லைகள் 3,993உம் என மொத்­த­மாக 10,162 பாட­சா­லைகள் உள்­ளன. இப்­பா­ட­சா­லை­களின் மொத்த எண்­ணிக்­கை­க­ளுக்­குள்­ளேயே தேசிய பாட­சா­லைகள் 353உம் மாகாணப் பாட­சா­லைகள் 9, 809உம் அடங்குகின்றன.

10,162 பாட­சா­லை­க­ளிலும் 2,32,555 ஆசி­ரி­யர்கள் கல்வி கற்­பிக்­கின்­றனர். இவ்­வா­சி­ரியர் எண்­ணிக்­கையில் பட்­ட­தாரி ஆசி­ரி­யர்கள் 99,724 பேரும் பயிற்­றப்­பட்ட ஆசி­ரி­யர்கள் 127,857 பேரும் பயிற்­றப்­ப­டாத ஆசி­ரி­யர்கள் 2,426 பேரும் பயி­லுநர் ஆசி­ரி­யர்கள் 4,887 பேரும் ஏனைய ஆசி­ரி­யர்கள் 661 பேரும் உள்­ள­தாக அப்­புள்ளி விபரம் குறிப்­பி­டு­கி­றது. இவற்றின் பிர­காரம் மொத்­த­மா­க­வுள்ள 353 தேசிய பாட­சா­லை­களில்  உள்ள 803,499 மாண­வர்­க­ளுக்கு கற்­பிப்­ப­தற்­காக 36,759 ஆசி­ரி­யர்கன் நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­தோடு 9,809 மாகாணப் பாட­சா­லை­களில் உள்ள  3,339,831 மாண­வர்­க­ளுக்கு கல்வி கற்­பிப்­ப­தற்­காக 195,864 ஆசி­ரி­யர்கள் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர்.

இவ்­வாறு நிய­மிக்­கப்­பட்­டுள்ள ஆசி­ரி­யர்­களின் பணி என்­பது கல்­வியை மட்டும் போதிப்­ப­தல்ல. ஒழுக்கம், பண்பு, ஆன்­மீகம், பொது அறிவு என அனைத்­தையும் மாண­வர்­க­ளுக்கு எடுத்­துக்­கூறி, அவர்­களை சிறந்த மனி­தர்­க­ளாக்கும் உன்­னத பொறுப்பும் நிறைந்­த­தாகும். ஏனெனில், நவீன கலா­சாரத் தாக்­கங்­களின் கார­ண­மாக மாணவ சமூகம் சுல­ப­மாக வழி­த­வறும் வாய்ப்­புக்கள் இக்­கா­லத்தில் அதிகம் காணப்­ப­டு­வதை அவ­தா­னிக்க முடி­கி­றது.

வாழ்க்­கையில் உயர்ந்­த­வர்கள் ஒவ்­வொ­ரு­வ­ருக்கும் ஒவ்­வொ­ருத்தர் ஆசா­னாக இருந்­தி­ருக்­கி­றார்கள். அதேபோல், இன்று பாட­சா­லை­களில் கல்வி பயிலும் ஒவ்­வொரு மாணவ, மாண­வி­க­ளுக்கும் இன்­றைய ஒவ்­வொரு ஆசி­ரி­யரும் வாழ்­வியல் வழி­காட்­டி­க­ளாக இருக்­கத்தான் செய்­கி­றார்கள். மாறு­பட்ட குணா­தி­ச­யங்கள், மாறு­பட்ட சிந்­த­னைகள், மாறு­பட்ட நடத்தைக் கோலங்­களைக் கொண்ட ஒவ்­வொ­ரு­வ­ரையும் காண வேண்­டு­மாயின் ஒரு வகுப்­ப­றையை நோக்­கினால் போதும் என்று சொல்­வார்கள். அவ்­வா­றான மாறு­பட்ட பண்­பு­களை உடைய மாண­வர்­களின் மத்­தியில் எல்­லோ­ரி­னதும் கவனம் திசை திருப்­பப்­ப­டாமல், சிந்­தனைச் சித­றல்கள் ஏற்­ப­டாமல் ஓர் ஆசி­ரி­யரால்  கற்­பித்தல் பணி புரி­வ­தென்­பது இலே­சான கரு­ம­மல்ல.

இந்­நி­லையில், தவ­றி­ழைக்கும் அல்­லது வகுப்­பறைக் கற்­பித்­த­லின்­போது எண்ணச் சித­றல்­களை ஏற்­ப­டுத்தும் மாண­வர்­களால் தற்­கா­லத்தில் ஆசி­ரி­யர்கள் மிகவும் மனம் நொருங்­கிய நிலையில் தமது பணியைப் புரி­கி­றார்கள் என்­ப­தையும் சமூகம் அறிந்து கொள்ள வேண்டும் என்­பது முக்­கி­ய­மாகும்.

சிறுவர் உரி­மை­களின் பக்க விளை­வுகள்

மாண­வர்கள் சிறு­வர்கள் என்ற ரீதியில் அவர்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்ள உரி­மைகள் சில­வேளை மாண­வர்­க­ளா­லேயே துஷ்­பி­ர­யோகம் செய்­யப்­ப­டு­கிறா? என்று சிந்­திக்கும் அள­வுக்கு ஒரு­சில மாண­வர்கள் நடந்­து­கொள்­வ­தாக ஆசி­ரி­யர்கள் புலம்­பு­கின்­றனர்.

குற்­ற­மி­ழைக்­கின்ற மாண­வர்­களை நோக்கி பிரம்­பைக்­கூட காட்ட முடி­யாத அளவை ஒத்­த­தாக சிறு­வர்­க­ளுக்­கான உரி­மைகள் வகுக்­கப்­பட்­டுள்ள நிலையில், வகுப்­ப­றையில் குழப்­ப­மி­ழைக்கும் மாண­வர்­க­ளுக்­கெ­தி­ராக எத்­த­கைய தண்­ட­னையை வழங்க வேண்டும் என்­பது தொடர்­பாக 12/2016 இலக்கம் கொண்ட சுற்று நிருபம் கல்வி அமைச்­சினால் ஒவ்­வொரு பாட­சா­லைக்கும்  வழங்­கப்­பட்­டி­ருக்­கி­றது. இருப்­பினும், இச்­சுற்­று­நி­ரு­பத்தின் அடிப்­படை அம்­சங்கள் எத்­தனை பாட­சா­லை­களில் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன. அவ்­வாறு நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­வ­தனால் அப்­பா­ட­சாலை நிர்­வாகம் எதிர்­நோக்கும் சவால்கள் எவை என்­பது தொடர்பில் பரீட்­சிக்­கப்­ப­டு­வது அவ­சி­ய­மாகும்.

சிறு­வர்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்ள உரி­மைகள் அவர்கள் ஆசி­ரி­யர்­க­ளையும், பாட­சா­லை­க­ளையும் அகௌ­ர­வப்­ப­டுத்தும் நிலைக்கு இட்டுச் சென்­றுள்­ளது. ஆசி­ரி­யர்­களை எதிர்த்துப் பேசும் அள­விற்கு, ஆசி­ரி­யர்கள் மீது உட­லியல் ரீதி­யா­கவும், உள­வியல் ரீதி­யா­கவும் தாக்­கு­ம­ள­வுக்கு இந்தச் சிறுவர் உரி­மைகள் இடம்­கொ­டுத்­துள்­ளதா? என சமூக ஆய்­வா­ளர்கள் வின­வு­கின்­றனர்.

சிறு­வர்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்ள உரி­மைகள் அவர்­களை வழி தவறச் செய்­யு­ம­ள­விற்கு, ஒழுக்க விழு­மி­யங்­களைக் கடைப்­பி­டிக்­காத நிலையைத் தோற்­று­விக்­கு­ம­ள­விற்கு எல்­லை­தாண்டிச் செல்­லு­மாயின் அவ்­வு­ரி­மைகள் தொடர்பில் மறு­ப­ரி­சீ­லனை செய்­ய­வேண்­டிய பொறுப்­பு­ரிமை வகுப்­பா­ளர்­க­ளையே சாரும். ஒழுக்க விழு­மி­யங்­க­ளி­லி­ருந்து நெறி­பி­றழும் மாண­வர்கள் சமூ­க­வி­ரோத செயற்­பா­டு­களில் ஈடு­ப­டு­வதும், ஈடு­ப­டுத்­தப்­ப­டு­வதும் அதி­க­ரித்­துள்ள நிலையில், கல்­வி­ய­மைச்சின் அறி­வு­றுத்­தல்­க­ளுக்­க­மைய சகல பாட­சா­லை­க­ளிலும் ஒழுக்­காற்­றுச்­சபை உரு­வாக்­கப்­பட்­டி­ருப்­ப­தையும், இச்­ச­பையின் நட­வ­டிக்­கைகள் மாணவ சமூ­கத்தின்  பாட­சாலை ஒழுக்க விழு­மி­யத்தில் எத்­த­கைய அடை­வு­களை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது என்­பது குறித்தும் அதி­கா­ரிகள் பரீட்­சிப்­பது அவ­சி­ய­மாகும்.

 இருப்­பினும், ஒரு நாட்டின் எதிர்­காலத் தலை­விதி ஒவ்­வொரு வகுப்­ப­றை­க­ளிலும் உரு­வாக்­கப்­ப­டு­கின்­றன என்­பதை ஆசி­ரி­யர்கள் தெரிந்து பணி­பு­ரி­கின்­ற­போது, இத்­த­கைய மாண­வர்­களால் ஏற்­ப­டு­கின்ற அழுத்­தங்கள்,  சிர­மங்கள் பொருட்­டாக அமை­யாது என்­பது ஒரு­வகை நேர்­சிந்­த­னை­யாகும். அதேபோல், மாண­வர்­களை சிறந்த பண்­போடு உரு­வாக்க நினைக்கும் ஆசி­ரி­யர்கள் முதலில் ஒழுக்க விழு­மி­ய­முள்­ள­வர்­க­ளாக இருக்க வேண்­டி­யதும் அவ­சி­ய­மாகும். ஆசி­ரி­யர்­களால் மாண­வர்கள்  துஷ்­பி­ர­யோகம் செய்­யப்­ப­டு­கின்ற செய்தி நாளாந்தம் ஊட­கங்­களில் வெளி­வந்து கொண்­டி­ருக்­கின்­றன. பயிரை மேயும் வேலிகள் என்ற நிலை உரு­வா­கி­யுள்­ளது. இந்­நி­லை­மையை உரு­வாக்­கி­யுள்ள ஒரு­சில  ஆசி­ரி­யர்­களின் செயற்­பா­டுகள் ஆசி­ரிய சமூ­கத்­திற்கே வர­லாற்றுப் பழி­யாக அமைந்­து­வி­டு­கின்­றன.

சமூகப் பார்வை

தற்­கா­லத்தில் ஆசி­ரி­யர்கள் சமூ­கத்­தினால் உன்­னிப்­பாக அவ­தா­னிக்­கப்­பட்டு வரு­கி­றார்கள் என்­பது புரி­த­லுக்­கு­ரி­ய­தாகும்.  பாட­சாலை நேரத்தில் பாட­வே­ளையில் தனக்­கு­ரிய நேர­சூ­சிக்­க­மைய பாடங்­களைக் கற்­பிக்­காது ‘டியூசன்' வகுப்­பு­க­ளுக்கு மாண­வர்களை வர­வ­ழைத்து கற்­பிக்கும் ஆசி­ரி­யர்­கள் குறித்து சமூ­கத்தின் மத்­தியில் பல விமர்­ச­னங்கள் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன.

இருப்­பினும், இவ்­வி­மர்­ச­னங்கள் ஒரு பொருட்­டாக குறித்த ஆசி­ரி­யர்­க­ளினால் கவ­னத்­திற்­கொள்­ளப்­ப­டு­வ­தில்லை. ஏனெனில், வகுப்­பறை மையக் கற்­பித்தல் என்ற முறைமை மாற்­றப்­பட்டு பண மையக் கற்­பித்தல் முறை என்­ற­தொரு முறை­மையை இக்­கு­றித்த ஆசி­ரி­யர்கள் உரு­வாக்­கி­யி­ருக்­கி­றார்கள் என்று  சமூ­கத்­தினால் சுட்­டிக்­காட்­டப்­ப­டு­வதை தவ­றென்று கூற முடி­யாது.

ஆசி­ரி­யர்கள் பாட­சாலை  வகுப்­புக்­க­ளுக்குத் தவ­றாமல் சமு­க­ம­ளித்து அந்த வகுப்­புக்­க­ளின்­போது பாடங்­களை முழு அவ­தா­னத்­துடன் மாண­வர்­க­ளுக்குப் புரி­யக்­கூ­டிய வகையில் கற்­றுக்­கொ­டுப்­பார்­க­ளே­யானால் ஆசி­ரியர் மீதான சமூ­கத்தின் பார்வை ஆரோக்­கி­ய­மா­ன­தாக அமையும்.  அவ்­வாறு ஆசி­ரி­யர்கள் செயற்­ப­டு­கின்­ற­போது மாண­வர்கள் மேல­திக தனியார் வகுப்­புக்­க­ளுக்கு செல்­வ­தற்­கான தேவை ஏற்­ப­டாது. வகுப்பு நேரத்தில் பாடங்­களை கற்­றுக்­கொ­டுக்­காமல் மாண­வர்­களை ‘டியுசன்’ வகுப்­புக்­க­ளுக்கு வரு­மாறு கோரும் ஆசி­ரி­யர்­களின் பணம் சம்­பா­திக்கும் ஆசையின் பொறுப்­பற்­ற­தன்­மையே இன்று ‘டியுசன்’; வகுப்­புக்கள் நாடெங்­கிலும் பெருகி வரு­வ­தற்­கான பிர­தான கார­ண­மாகும்.

சுமார் 50 வரு­டங்­க­ளுக்கு முன்னர் நம்­நாட்டில்; தனியார் ‘டியுசன்’ வகுப்­புக்கள் என்­றி­ருந்­த­தில்லை. பாட­சாலை வகுப்­புக்­களில் கற்­றுக்­கொ­டுக்­கப்­படும் பாடங்­களைக் கவ­ன­மாக கற்­றுக்­கொள்ளும் மாண­வர்கள் அன்று பொதுப் பரீட்­சைகளில் சிறப்பு சித்­தி­பெற்று வைத்­தி­யர்­க­ளா­கவும், பொறி­யிய­லா­ளர்­க­ளா­கவும், சட்­டத்­த­ர­ணி­க­ளா­கவும் கணக்­கா­ளர்­க­ளா­கவும் உரு­வா­கி­யி­ருக்­கி­றார்கள்.

ஆனால். இன்று, முன்­பள்ளி வய­தி­லி­ருந்தே மாண­வர்கள் ‘டியூசன்’ வகுப்­புக்­க­ளுக்கு செல்­கின்­றனர். இந்­நி­லைமை உரு­வா­கு­வ­தற்கு பல பெற்­றோர்கள் பொறுப்­பு­தா­ரி­க­ளாவர். ஏனெனில், தனது பிள்ளை கல்வி கற்கும் பாட­சா­லை­யி­னதோ, பாட­சாலை ஆசி­ரி­யர்­க­ளி­னதோ எவ்­வித செயற்பாடுகளிலும் அப்பெற்றோர்கள் அக்கறை கொள்வதில்லை. அவை தொடர்பான பின்னூட்டலைப் பெறுவதில்லை.  அப்பெற்றோரின் இத்தகைய பொறுப்பற்ற இயல்புகள்  ஒருசில ஆசிரியர்கள் தங்களது புனிதமான ஆசிரிய பணியினை துஷ்பிரயோகம் செய்வதற்கு காரணமாயிற்று என்று கூறுவது பொருத்தமாகும்.

ஒருசில ஆசிரியர்களால் மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு மேலாக, ஆசிரியர்களே ஆசிரியர்களுக்கு அநீதியிழைக்கும் நிகழ்வுகளும் ஒருசில பாடசாலைகளில் இடம்பெற்றுவருவது ஆசிரியர் சமூகத்தினதும் ஆசிரிய தொழிலினதும் நம்பிக்கைத் தன்மையை கேள்விக்குறியாக்கும் என்பது சமூக மட்டத்தில் வேதனையை ஏற்படுத்தியிருக்கிறது.

மாணவர்களின் அடைவு மட்டங்களை அதிகரிக்கவும் பாடசாலையை முன்னேற்றவும் சிந்திக்க வேண்டிய, கூட்டம் கூட்ட வேண்டிய, கலந்தாலோசிக்க வேண்டிய ஆசிரிய சமூகம் பாடசாலைகளில் குழுக்களாகச் செயற்பட்டு, அப்பாடசாலையின் அதிபருக்கு எதிராகவும் பிற ஆசிரியர்களை பழி வாங்குவதற்காகவும் தங்களது பாடசாலை  நேரங்களை செலவழித்து செயற்படுவதை அறிகின்றபோது, இரத்தக் கண்ணீர் வடிக்க நேரிடுவதாக ஆசிரிய சமூகத்தை அவதானித்து வருகின்ற சமூக ஆர்வலர்கள் கூறுவதையும் இங்கு குறிப்பிட்டுக் காட்டாமல் இருக்க முடியாது. 

ஆசிரியர்கள் சிறந்த நற்பழக்கங்கள், ஒழுக்கங்கள் கொண்ட முன்மாதிரிமிக்க சமூக முன்னோடிகளாக செயற்பட வேண்டும். அப்போதுதான் ஆசிரியர் சமூகத்தின் மீதும் ஆசிரிய  தொழில் மீதும் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும்,  சமூகத்திற்கும் நம்பிக்கை ஏற்படும். இந்த நம்பிக்கையை வளர்ப்பதற்கும், கட்டியெழுப்புவதற்கும் ஒவ்வொரு ஆசிரியத்துவ ஆசிரியரும் தங்களது பணி தொடர்பில் சுயவிசாரணை செய்து  பிழைகளிலிருந்து சரிகளை நோக்கியதாக தங்களது ஆசிரியத்துவப் பணியினை முன்னெடுக்கின்றபோதுதான் ஆசிரியத்துவம் தொடர்பான எதிர்மறை சமூகப்பார்வையைத் தவிர்க்கமுடியும். அத்தோடு, சுயவிசாரணையின் தேவையை உணர்வதற்கும், வினைத்திறனாக்குவதற்கும், பயன்மிக்கதாக்குவதற்கும் மரண சிந்தனையும், மறுவுலக வாழ்வின் சிந்தனையும் போதுமானதாகும்.
-Vidivelli