Verified Web

இன­வா­தத்தை தோற்­று­விக்க எதி­ரணி முன்­னெ­டுத்த பிர­சாரம் பொய் என நிரூ­ப­ணமா­கி­யுள்­ளது

7 days ago Administrator

 

நான் ஒரு முஸ்லிம் என்ற கார­ணத்தால், நாட்டில் முஸ்லிம் சிங்­கள இன விரி­சலை ஏற்­ப­டுத்­து­ம் நோக்கில் கூட்டு எதி­ர­ணி­யி­னரால் என் மீது பால் பக்­கெட்டில் விஷம் கலந்­த­தாக குற்­றச்­சாட்­டுகள் முன்­வைக்­கப்­பட்­டன. பாலில் எவ்­வி­த­மான விஷமும்  கலக்­கப்­ப­ட­வில்லை என்று  இர­சா­யன பகுப்­பாய்வு திணைக்­களம்   அறிக்கை  வெளி­யிட்­டுள்­ளது. இந்­நி­லையில், குறித்த குற்­றச்­சாட்­டுகள் இன்று பொய் என நிரூ­ப­ண­மா­கி­யுள்­ளது என கொழும்பு மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் தெரி­வித்தார்.

கூட்டு எதி­ர­ணி­யினர் நாட்டில் இனப் பிரச்­சி­னையை தோற்­று­விக்க முயற்­சித்­த­தோடு, எனது பெய­ருக்கு அப­கீர்த்­தியை ஏற்­ப­டுத்தும் வகையில் கருத்து வெளி­யிட்­டனர். இது குறித்து இரு முறைப்­பா­டு­களை பொலிஸில் அளித்­துள்ளேன். அவ்­வி­டயம் குறித்து துரித விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்க வேண்டும் என்று பொலிஸ் மா அதி­பரை வலி­யு­றுத்­து­வ­தாக அவர் மேலும் தெரி­வித்தார்.  

ஐக்­கிய தேசிய கட்­சியின் தலை­மை­ய­க­மான சிறி­கொத்­தாவில்  நேற்று இடம் பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்து  கொண்டு கருத்து வெ ளியி­டு­கை­யி­லேயே  அவர் மேற்­கண்­ட­வாறு  குறிப்­பிட்டார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்

அர­சாங்­கத்தை வீழ்த்தி ஆட்­சி­யினை கைப்­பற்­றுவோம் என்று சூளு­ரைத்துக் கொண்டு  மஹிந்த தரப்­பினர்  கடந்த மாதம் 05ம் திகதி ' மக்கள் சக்தி "   என்ற பெயரில் போராட்­டத்தில் ஈடு­பட்­டனர். குறித்த போரட்டம் தோல்வியில் முடி­வ­டைந்­தது. போராட்­டத்­திற்கு மறுநாள் கூட்டு எதி­ர­ணி­யினர் பாரா­ளு­மன்­றுக்­குக்­கு­கூட வர­வில்லை. போராட்ட தோல்­விக்­கான கார­ணத்தை தேடிக்­கொண்­டி­ருந்­தனர். இந்­நி­லையில் பால் பக்­கெட்டில் விஷம் கலந்­த­தாக ஒரு கருத்தை சோடித்து அதனை இன­வா­தத்தை பரப்பும் நோக்கில் பிர­சா­ரத்தை முன்­னெ­டுத்­தனர்.

பாலில் விஷம் கலக்­கப்­பட்­டுள்­ளது என்று  கடந்த  செப்­டம்பர் மாதம்  10 ஆம் திகதி வென்­னப்­புவ பிர­தேச உள்­ளூ­ராட்சி மன்ற உறுப்­பினர் ஒரு­வரால் பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டது .  அவர் பொலிஸ் நிலை­யத்தில் சமர்ப்­பித்த பால் பக்கெட்  அரச இர­சா­யன பகுப்­பாய்வு திணைக்­க­ளத்­திற்கு அனுப்­பப்­பட்­டது.

தற்­போது குறித்த பால்­பெக்­கெட்டில்  எவ்­வி­த­மாக  விஷமும்  கலக்­கப்­ப­ட­வில்லை என்று அரச இர­சா­யண பகுப்­பாய்வு திணைக்­களம் அறி­வித்­துள்­ளது. எதி­ர­ணி­யினர் குறித்த பிரசாரத்தை முன்னெடுக்க கையாண்ட விதம் மோசமானதாகும். அவர்கள் எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதத்தில் நடந்துகொண்டனர்.  இது குறித்து பொலிஸ் மா அதிபர் துரிதகரமான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்றார்.
-Vidivelli