Verified Web

கட்டார் எரி­பொருள் காஸாவை வந்­த­டைந்­தது

2018-10-11 05:53:36 M.I.Abdul Nazar

முற்­று­கை­யி­டப்­பட்ட பிர­தே­சங்­களின் நிலை­மை­களை சீர்­ப­டுத்­து­வ­தற்­கா­கவும், இஸ்ரேல் - பலஸ்­தீன வன்­மு­றைகள் அதி­க­ரிப்­பதைத் தடுப்­ப­தற்­கா­கவும் இஸ்­ரேலை ஊட­றுத்து காஸாவின் ஒரே­யொரு மின் நிலை­யத்­திற்கு கட்­டா­ரி­லி­ருந்து கொண்­டு­வ­ரப்­பட்ட எரி­பொருள் வந்­த­டைந்­தது.

ஐக்­கிய நாடுகள் சபையின் மேற்­பார்­வையின் கீழ் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை 450,000 லீற்றர் எரி­பொ­ருளை ஏற்­றிய ஆறு ட்ரக் வண்­டிகள் எல்­லை­யினைத் தாண்டி வந்­த­டைந்­த­தாக தெற்கு காஸாவில் அமைந்­துள்ள கரெம் ஷாலோம் அல்­லது காராம் அபூ சலெம் என அழைக்­கப்­படும் எல்லைக் கட­­வை­யி­லுள்ள பலஸ்­தீன வட்­டாரம் தெரி­வித்­துள்­ளது.

இன்று காஸா பள்­ளத்­தாக்­கி­லுள்ள மின்­னுற்­பத்தி நிலை­யத்­திற்கு கொண்­டு­வ­ரப்­பட்ட கட்டார் எரி­பொ­ருளைக் கொண்டு காஸாவின் பகு­தி­ய­ளவில் மின்­வி­நி­யோ­கத்தை சீராக்க முடி­யு­மென ஹமாஸ் பேச்­சாளர் ஹாஸெம் காசெம் சர்­வ­தேச ஊட­க­மொன்­றிற்குத் தெரி­வித்தார்.

இவ்­வாறு எரி­பொருள் வழங்­கப்­பட்­டமை ஒரு தசாப்­தத்­திற்கும் அதி­க­மான கால­மாக இஸ்ரேல் மற்றும் எகிப்தின் தடை­க­ளுக்கு உள்­ளா­கி­யி­ருக்கும் காஸா­வினை நிரு­வ­கிக்கும் ஹமா­ஸுக்கும் இஸ்­ரே­லுக்கும் இடையே எல்லை நெடு­கிலும் நடை­பெறும் மோதல்கள் மற்றும் பல மாத கால ஆர்ப்­பாட்­டங்­களைத் தணிப்­ப­தற்கு உதவும்.

தடைகள் கார­ண­மாக காஸா பள்­ள­த்தாக்கில் வசிக்கும் சுமார் இரண்டு மில்­லியன் மக்கள் உணவு, எரி­பொருள் மற்றும் மருந்துப் பொருட்கள் உள்­ளிட்ட பல முக்­கிய பயன்­பாட்டுப் பொருட்கள் கிடைக்­கா­ததால் பெரும் கஷ்­டங்­களை எதிர்­நோக்­கு­கின்­றனர்.

மின்­னுற்­பத்தி நிலை­யத்தை ஆறு மாதங்­க­ளுக்கு செயற்­ப­டுத்­து­வ­தற்குத் தேவை­யான 60 மில்­லியன் டொலர் பெறு­ம­தி­யான கட்டார் அன்­ப­ளிப்­பாக வழங்­கிய முத­லா­வது தொகுதி எரி­பொ­ருளை ஏற்­றிய ட்ரக் வண்­டிகள் காஸாவை வந்­த­டைந்­தன என உள்ளூர் வட்­டா­ரங்கள் தெரி­வித்­துள்­ளன. கடந்த பல மாதங்­க­ளாக காஸா மக்­க­ளுக்கு சரா­ச­ரி­யாக நாளொன்­றிற்கு நான்கு மணித்­தி­யா­லங்கள் மாத்­தி­ரமே மின்­சாரம் வழங்­கப்­பட்டு வரு­கின்­றது.

இஸ்­ரே­லினால் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட மேற்குக் கரையைத் தள­மாகக் கொண்ட பலஸ்­தீனப் பிர­தமர் ராமி ஹம்­டல்­லாஹ்வின் பேச்­சாளர் எரி­பொருள் வழங்­கப்­பட்­டமை தொடர்பில் அதி­ருப்தி வெளி­யிட்­டுள்ளார். காஸா பள்­ளத்­தாக்­கிற்­கான எந்த சர்­வ­தேச நிதி உத­வியும் பலஸ்­தீன அர­சாங்­கத்தின் ஊடா­கவே அல்­லது பலஸ்­தீன அர­சாங்­கத்­துடன் இணைந்­தேதான் வழங்­கப்­பட வேண்டும். அது பலஸ்­தீன ஒற்­று­மைக்கு உதவும் அதே­வேளை, மேற்குக் கரை­யி­லி­ருந்து காஸாவை பிரிப்­ப­தற்கு எடுக்­கப்­படும் முயற்­சி­களை தடுப்­ப­தற்கும் உத­வு­மென அவர் தெரி­வித்­துள்ளார்.

எரி­பொருள் தொடர்ந்து வழங்­கப்­ப­டு­மானால் அதற்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என பலஸ்­தீன ஜனா­தி­பதி மஹ்மூட் அப்­பா­ஸுக்கு நெருக்­க­மான சிரேஷ்ட அதி­கா­ரி­யான அஸாம் அல்-­அ­ஹமட் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை அறிக்­கை­யொன்றில் தெரி­வித்­துள்ளார்.

காஸா பள்­ளத்­தாக்கு மீதான இஸ்­ரேலின் 11 வரு­ட­காலத் தடை மனி­தா­பி­மானப் பேர­ழிவை ஏற்­ப­டுத்­து­மென ஐக்­கிய நாடுகள் சபை எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது. ஐக்­கிய நாடுகள் சபையின் தலை­யீட்­டுடன் மேற்­கொள்­ளப்­பட்ட உடன்­பாட்டில் ஐக்­கிய நாடுகள் சபையின் கண்­கா­ணிப்­புடன் இஸ்­ரே­லுக்கு ஊடாக எரி­பொ­ருளை வழங்­கு­வ­தற்­கான செல­வினை கட்டார் ஏற்­றுக்­கொண்­டது என ராஜ­தந்­திர வட்­டா­ரங்கள் தெரி­வித்­தன.

தற்­போது காணப்­படும் மனி­தா­பி­மான அனர்த்தம் மேலும் அதி­க­ரிக்­காது தடுப்­ப­தற்­காக ஐக்­கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் உதவி வழங்கும் நாடு­களின் வேண்­டு­கோளின் பேரில் காஸாவின் மின்­சார நெருக்­க­டியை தணிப்­ப­தற்கு உதவ டோஹா திட்­ட­மிட்­டுள்­ள­தாக கட்டார் அதி­கா­ரி­யொ­ருவர் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை தெரி­வித்தார்.

காஸாவில் பாதிப்பு ஏற்­பட்­டு­வி­டா­த­வாறு தடுப்­ப­தற்கு கட்டார் முயன்று வரு­கின்­றது என இஸ்ரேல் சக்­தி­வள அமைச்சர் யூவால் ஸ்ரெனின்ஸ் கடந்த திங்­கட்­கி­ழ­மை­யன்று தெரி­வித்தார்

பலஸ்­தீன அதி­கா­ர­ச­பை­யினால் விடப்­பட்ட வெற்­றிடம் கார­ண­மா­கவே ஐக்­கிய நாடுகள் சபையின் உதவியுடன் குறித்த விநியோகம் இடம்பெறுவதாக ஹமாஸ் பேச்சாளர் காசெம் தெரிவித்தார்.

ஹமாஸுடன் ஒப்பந்தங்களைச் செய்து கொள்வது பலஸ்தீன அதிகாரசபைக்குப் பதிலாக ஹமாஸ் அமைப்பு காஸாவை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதை அங்கீகரிப்பதாக அமையும் என அப்பாஸ் தெரிவித்துள்ளார்.
-Vidivelli