Verified Web

முஸ்லிம் தனியார் சட்ட பாயிஸ் முஸ்தபா தரப்பின் சிபாரிசுகளே பொருத்தம்

2018-10-11 05:48:44 ARA.Fareel

 

முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்ட திருத்த சிபா­ரிசு  அறிக்­கையில்  ஜனா­தி­பதி  சட்­டத்­த­ரணி  பாயிஸ் முஸ்­தபா  தரப்­பினர்  முன்­மொ­ழிந்­துள்ள  சிபா­ரி­சு­களே  சமூ­கத்­திற்கு  மிகவும் பொருத்­த­மா­ன­தா­க­வுள்­ளன. அதனால்  அந்தச் சிபா­ரி­சு­க­ளையே  அங்­கீ­க­ரிக்­கு­மாறு  கோரும் மக­ஜ­ரொன்று  கொழும்பு மாவட்ட பள்­ளி­வா­சல்கள் சம்­மே­ள­னத்­தினால்  நாளை வெள்­ளிக்­கி­ழமை நீதி மற்றும்  சிறைச்­சா­லைகள் புன­ர­மைப்பு அமைச்சர்  தலதா அத்­து­கோ­ர­ள­விடம் கைய­ளிக்­கப்­ப­ட­வுள்­ளது.

கொழும்பு மாவட்­டத்­தி­லுள்ள 182 பள்­ளி­வா­சல்­களைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் பள்­ளி­வா­சல்கள் சம்­மே­ளனம் நாளை நீதி­ய­மைச்சர் தலதா அத்­து­கோ­ர­ள­வுடன் முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தில் திருத்­தங்கள் தொடர்பில் கலந்­து­ரை­யா­ட­லொன்­றி­னையும் மேற்­கொள்­ள­வுள்­ளது.

கொழும்பு மாவட்ட பள்­ளி­வா­சல்கள் சம்­மே­ள­னத்தின் தலைவர் அஸ்லம் ஒத்மான் இது தொடர்பில் கருத்து தெரி­விக்­கையில்; கொழும்பு மாவட்டப் பள்­ளி­வா­சல்கள் சம்­மே­ளனம் நாட்­டி­லுள்ள ஏனைய மாவட்ட பள்­ளி­வா­சல்கள் சம்­மே­ள­னங்­களின் அபிப்­பி­ர­யா­யங்­க­ளையும் கேட்­ட­றிந்­துள்­ளது. அவற்றின் கருத்­து­களும் ஷரீ­ஆ­வுக்கு முர­ணற்ற, ஷாபிஈ மத்­ஹபைப் பிற­ழாத திருத்­தங்­களே தேவை என்­ப­தாக அமைந்­துள்­ளன.

காதி நீதி­மன்ற முறையில் நிர்­வாக ரீதி­யான மாற்­றங்கள் கொண்­டு­வ­ரப்­பட வேண்டும், காதி நீதி­மன்ற கட்­ட­மைப்பு தர­மு­யர்த்­தப்­ப­டு­வ­துடன் காதி நீதி­ப­தி­க­ளுக்­கான கொடுப்­ப­ன­வுகள் அதி­க­ரிக்­கப்­ப­ட­வேண்டும் எனும் திருத்­தங்­களை பள்­ளி­வா­சல்கள் சம்­மே­ளனம் நீதி­ய­மைச்­ச­ரிடம் முன்­வைக்­க­வுள்­ளது. சில முஸ்லிம் விவாகப் பதி­வா­ளர்கள் சட்­டத்­துக்கு முர­ணான விவாகப் பதி­வு­களை நடத்­து­வ­தாலே சமூ­கத்தில் குடும்பப் பிரச்­சி­னைகள் அதி­க­ரித்­துள்­ளன. இவ்­வா­றான முஸ்லிம் விவாகப் பதி­வா­ளர்­க­ளுக்கு தண்­டனை வழங்­கப்­பட வேண்­டு­மெ­னவும் நீதி­ய­மைச்­ச­ரிடம் கோரிக்கை விடுக்­க­வுள்ளோம். 

முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்களை காலம்  தாழ்த்தாது மேற்கொள்ளும் படியும், காலத்தாமதமாவது பிரச்சினைகளை அதிகரிக்கச் செய்யுமெனவும் நீதியமைச்சரை கோரவுள்ளதாவும் அவர் கூறினார்.