Verified Web

எரிபொருள் விலை சூத்திரத்தை வெளிப்படுத்தாமலிருப்பது ஏன்

7 days ago Administrator

எரி­பொருள் விலை சூத்­திரம் என கூறிக்­கொண்டு  ஒவ்­வொரு மாதமும் 10ஆம் திகதி  மக்­களை ஏமாற்றி கொள்­ளை­ய­டிக்கும் நோக்கில்  அர­சாங்கம் செயற்­பட்டு வரு­கின்­றது, அர­சாங்­கத்­தினால் தயா­ரிக்­கப்­பட்­டுள்­ள­தாக கூறப்­படும் எரி­பொருள் விலை சூத்­தி­ரத்தை யாருக்கும் காட்­டா­தி­ருப்­பதன் கார­ண­மென்ன  என   எதிர்க்­கட்­சி­களின் பிர­தம கொர­டா­வான ஜே.வி.பி தலைவர் அனு­ர­கு­மார திஸா­நா­யக்க சபையில் பிர­த­ம­ரிடம் கேள்வி எழுப்­பினார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை பிர­த­ம­ரி­டத்­தி­லான கேள்வி நேரத்தின் போது  அனு­ர­கு­மார திஸா­நா­யக்க இவ்­வாறு கேள்வி எழுப்­பினார்.

அவர் தொடர்ந்து கூறு­கையில்,

எரி­பொருள் விலை சூத்­திரம் ஒன்­றினை அர­சாங்கம் உரு­வாக்கி அதற்­க­மைய எரி­பொருள் விலையை நிர்­ண­யித்து வரு­கின்­றது. ஆனால் இந்த விலை சூத்­திரம் குறித்து எவ­ருக்கும் எந்த தெளிவும் இல்லை. விலை சூத்­திரம் குறித்து தகவல் அறியும் சட்­ட­மூ­லத்தின் மூல­மாக கோரிக்கை விடுத்தும் அவர்கள் எமக்கு தர­வில்லை. ஆகவே பிர­தமர் இந்த சூத்­திரம் என்ன என்­ப­தையும், எவ்­வாறு தயா­ரிக்­கப்­ப­டு­கின்­றது என்­ப­தையும் சபைக்கும் மக்­க­ளுக்கும் அறி­விக்க வேண்டும்.

ஒவ்­வொரு மாதமும் 10ஆம் திக­தியில் எரி­பொருள் விலைகள் அதி­க­ரிக்­கப்­ப­டு­கின்­றன. இதற்­காக அர­சாங்கம் விலை சூத்­திரம் இருப்­ப­தாக கூறு­கின்­றது. ஆனால் அந்த சூத்­தி­ரத்தை இது­வரை வெளியில் கூறி­ய­தில்லை. அமைச்­ச­ர­வைக்கு சமர்­பிக்­கப்­ப­டவும் இல்லை. நாங்கள் அதனை பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கு­மாறு நிதி அமைச்­ச­ரிடம் கோரிய போதும் அது இன்னும் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வில்லை.

எரி­பொருள் விலைகள் அதி­க­ரிக்­கப்­படும் போது விலை சூத்­தி­ரத்­திற்­க­மைய இடம்­பெ­று­வ­தாக கூறி­னாலும் அதனை மக்­க­ளுக்கு காட்­டு­வ­தில்லை. மக்­களை ஏமாற்­றியே விலை அதி­க­ரிக்­கப்­ப­டு­கின்­றது. அர­சாங்கம் சூத்­தி­ரத்தை மறைப்­பது ஏன்?சர்­வ­தேச சந்­தையில் எண்ணெய் அதி­க­ரிக்கும் போது விலை சூத்­தி­ரத்­திற்­க­மைய இங்கு விலைகள் அதி­க­ரிக்­கப்­ப­டு­வ­தாக கூறும் போதும் அதற்­காக அற­வி­டப்­படும் வரியில் மாற்றம் மேற்­கொள்­ளப்­ப­டாது இருப்­பது ஏன்? எரி­பொருள் விலையை விடவும் அதற்­கான வரியே அதிகமாகும். ஆகவே வரிகளில் குறைப்புகளை செய்து எண்ணெய் விலையை ஒரே அளவில் வைத்துகொள்ள முடியும். எனினும் அரசாங்கம் சர்வதேசத்தை காட்டி மக்களின் பணத்தை கொள்ளையடிக்கவே முயற்சித்து வருகின்றது எனவும் குறிப்பிட்டார்.  
-Vidivelli