Verified Web

இனி ஹஜ் வழிகாட்டிகள் பயிற்சி பெறவேண்டும்

7 days ago ARA.Fareel

Image result for ஹஜ் vidivelli

 எதிர்­வரும்  காலங்­களில் ஹஜ் கட­மைக்­காக ஹஜ் முக­வர்­களால் அழைத்துச் செல்­லப்­படும் ஹஜ் யாத்­தி­ரி­கர்­க­ளுக்கு வழி­காட்­டி­யாகச் செல்லும் மௌல­வி­மார்கள் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லுல்கள்  திணைக்­க­ளத்­தினால் வழங்­கப்­படும் பயிற்சிச் சான்­றி­தழ்­களைப் பெற்­ற­வர்­க­ளாக இருக்­க­வேண்டும்.  இச்­சான்­றி­தழைப் பெற்­றி­ராத மௌல­விகள்  ஹஜ் வழி­காட்­டி­க­ளாகச் செல்­ல­மு­டி­யாது என முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது.

 ஹஜ் வழி­காட்­டி­க­ளாகச் செல்லும் மௌல­விமார் 110 பேருக்கு  முஸ்லிம் சமய  பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் அடுத்­த­மாதம் தேவை­யான  பயிற்­சி­களை  கொத்­தட்­டு­வ­யி­லுள்ள  பயிற்சி நிலை­யத்தில் வழங்­கு­வ­தற்­கான ஏற்­பா­டு­களைச் செய்­துள்­ள­தா­கவும்  இப்­ப­யிற்சி நெறியில் கலந்­து­கொள்ளும்  மௌல­வி­க­ளுக்கு  அதற்­கான சான்­றிதழ்  திணைக்­க­ளத்­தினால்   வழங்­கப்­ப­ட­வுள்­ள­தா­கவும் முஸ்லிம் சமய  பண்­பாட்­ட­லு­வல்கள்  திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர்  அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம்.மலிக்  தெரி­வித்தார்.

 மேலும் அவர்  கருத்து தெரி­விக்­கையில்  ஹஜ் முக­வர்­களின் பய­ணிகள் குழுவில் ஹஜ் வழி­காட்­டி­க­ளாகப் பணி­யாற்றும்  மௌல­விகள் குறித்து ஹஜ் யாத்­தி­ரி­கர்கள்  பல முறைப்­பா­டு­களை முன்­வைத்­துள்­ளனர். சில மௌல­விமார் எவ்­வித  அனு­ப­வமும்  பயிற்­சி­யு­மின்­றி­யி­ருப்­ப­தா­கவும்  முறை­யாக  ஹஜ் வழி­காட்­டல்­களை  வழங்­கு­வ­தில்லை எனவும் அவர்கள் புகார் செய்­துள்­ளனர். இத­னை­ய­டுத்து ஹஜ் வழி­காட்­டி­க­ளான  மௌலவி மார்­க­ளுக்கு பயிற்­சி­களை வழங்க திணைக்­களம்  ஏற்­பாடு செய்­துள்­ளது.

 பயிற்சியில் கலந்துகொண்டு அதற்கான சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளும் மௌலவிமார்கள் எதிர்காலத்தில் ஹஜ் வழிகாட்டிகளாக யாத்திகர்கள் குழுவில் இணைந்துகொள்ள முடியும் என்றார்.  
-VIdivelli