Verified Web

ஆப்­கா­னிஸ்­தானில் தற்­கொலைத் தாக்­குதல்

7 days ago M.I.Abdul Nazar

ஆப்­கா­னிஸ்­தானின் ஹெல்மண்ட் மாகா­ணத்தில் தேர்தல் பிர­சாரக் கூட்­ட­மொன்றில் தற்­கொலை குண்­டு­தாரி ஒருவர் தனது குண்­டினை வெடிக்க வைத்­ததில் நடை­பெ­ற­வுள்ள பாரா­ளு­மன்றத் தேர்­தலில் போட்­டி­யிடும் வேட்­பாளர் உள்­ள­டங்­க­லாக குறைந்­தது எட்­டுப்பேர் கொல்­லப்­பட்­டுள்­ள­தாக மாகாண அதி­கா­ரி­யொ­ருவர் தெரி­வித்தார்.

சாலெஹ் மொஹமட் செக்ஸாய், ஹெல்­மண்ட்டின் தலை­ந­க­ரான லஷ்கர் காஹ்வில் அமைந்­துள்ள தனது வீட்­டிற்கு முன்­பு­ற­மாக தனது பிர­சாரக் கூட்­டத்தை நடத்­திக்­கொண்­டி­ருந்­த­போது கடந்த செவ்­வாய்க்­கி­ழ­மை­யன்று தற்­கொலை குண்­டு­தா­ரியின் இத் தாக்­குதல் மேற்­கொள்­ளப்­பட்­டது.

இத்­தாக்­குதல் சம்­ப­வத்தில் செக்­ஸா­யியின் மெய்ப்­பா­து­கா­வ­லர்கள் பலர் கொல்­லப்­பட்­டுள்­ள­தாக தெற்கு ஹெல்மண்ட் மாகாண சபைத் தலைவர் அதா­ஹுல்லா ஆப்கான் தொலை­பேசி மூலம் ஊட­க­மொன்­றிற்கு வழங்­கிய நேர்­கா­ணலில் தெரி­வித்­துள்ளார்.

இம்­மாதம் 20 ஆம் திகதி நடை­பெ­ற­வுள்ள பாரா­ளு­மன்றத் தேர்­த­லுக்­கான தேர்தல் பிர­சாரம் கடந்த செப்­டம்பர் மாதம் 28 ஆம் திகதி ஆரம்­பிக்­கப்­பட்­ட­தி­லி­ருந்து பாரா­ளு­மன்ற தேர்தல் வேட்­பா­ளர்­களை இலக்­கு­வைத்து மேற்­கொள்­ளப்­படும் இரண்­டா­வது தாக்­குதல் சம்­பவம் இது­வாகும்.

249 பேர் கொண்ட அவைக்­காக 417 பெண் வேட்­பா­ளர்கள் உள்­ள­டங்­க­லாக 2,565 வேட்­பா­ளர்கள் போட்­டி­யி­டு­கின்­றனர்.

 இம்­மாதம் 02 ஆம் திகதி கிழக்கு மாகா­ண­மான நன்­கர்­ஹாரில் இடம்­பெற்ற பேர­ணி­யொன்றில் மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­கு­தலில் 13 பேர் கொல்­லப்­பட்­ட­தோடு 40 இற்கும் மேற்­பட்டோர் காய­ம­டைந்­தனர்.

இலக்கு வைக்­கப்­பட்டு மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­கு­தல்­களில் குறைந்­தது 05 பேர் கொல்­லப்­பட்­டுள்­ள­தாக சுதந்­திர தேர்தல் ஆணைக்­குழு தெரி­வித்­துள்­ளது.

ஏற்­க­னவே மூன்று மாதங்கள் தாம­த­மாகி நடை­பெறும் தேர்­த­லுக்­கான ஆயத்­தங்கள் பல மாதங்­க­ளாக குள­று­படி நிலையில் காணப்­பட்­ட­தோடு, தேர்தல் நடத்­தப்­ப­டுமா என­பது தொடர்பில் சந்­தேகம் எழுந்­துள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

அதி­கா­ரி­களின் அச­மந்தம், மோசடி தொடர்­பான குற்­றச்­சாட்­டுக்கள், பயோ­மெற்றிக் சரி­பார்ப்பு உப­க­ர­ணங்கள் இறுதி நேரத்தில் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளமை வாக்­கா­ளர்­க­ளுக்கு அச்­சத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­தோடு, நம்­ப­க­மான பெறு­பேறு கிடைக்­கப்­பெ­றுமா என்­பது தொடர்பில் சந்­தே­கமும் உரு­வா­கி­யுள்­ளது.

தலிபான் ஆயு­தக்­குழு தேர்­தலை புறக்­க­ணிக்­கும்­படி கோரிக்கை விடுத்­துள்­ளது.

பாது­காப்பை வழங்­கு­வ­த­னூ­டாக தேர்­தலை வெற்­றி­க­ர­மாக நடத்­து­வ­தற்கு ஒத்­து­ழைப்பு வழங்கும் அனை­வரும் இலக்கு வைக்­கப்­ப­டு­வார்கள். தேர்­தலைத் தடுப்­ப­தற்கும் தோல்­வி­ய­டையச் செய்­வ­தற்கும் அனைத்­து­வி­த­மான நட­வ­டிக்­கை­களும் எடுக்­கப்­படும் என தலிபான் பேச்­சாளர் ஸெய்­புல்லாஹ் முஜாஹிட் முன்னதாக அறிக்கை யொன்றில் தெரிவித்திருந்தார்.

பாகிஸ்தானை எல்லையாகக் கொண்ட ஹெல்மண்ட் மாகாணம் நீண்ட காலமாக தலிபான்களின் கட்டுப்பாட்டுப் பிரதேசமாகக் காணப்படுகின்றது. 2001 ஆம் ஆண்டு அமெரிக்கப் படையினால் ஆப்கானிஸ்தானின் அதிகாரத்திலிருந்து அகற்றப்பட்டதைத் தொடர்ந்து இவ்வமைப்பு ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றது.
-விடிவெள்ளி