Verified Web

முதற் பட்டியலில் ரொனால்டோ

7 days ago Administrator

இந்த ஆண்­டுக்­கான பலூன் டி.ஆர். விரு­திற்கு உலகப் புகழ்­பெற்ற கிறிஸ்­டி­யானோ ரொனால்டோ உட்­பட 10 பேர் கொண்ட முதற்­கட்ட வீரர்கள் பட்­டி­யலை பிபா நேற்று  வெளி­யி­ட்­டுள்­ளது. கால்­பந்து விளை­யாட்டில் சிறப்­பான ஆட்­டத்தை வெளிப்­ப­டுத்தும் வீரர்­க­ளுக்கு ஆண்­டு­தோறும் மதிப்­பிற்­கு­ரிய பலூன்  டி.ஆர். விருது பிரான்ஸின் பிர­ப­ல­மான  கால்­பந்து சஞ்­சி­கையின் சார்பில் வழங்­கப்­ப­டு­கி­றது.  இந்த வரு­டத்­திற்­கான விரு­திற்­காக  ஜூவெண்டஸ் அணிக்­காக தற்­ச­மயம் விளை­யா­டி­வரும் நட்­சத்­திர வீர­ரான கிறிஸ்­டி­யானோ ரொனால்டோ உட்­பட 10 பேர் கொண்ட முதற்­கட்ட வீரர்கள் பட்­டியல் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

இந்த ஆண்­டுக்­கான முதற்­கட்ட 10 வீரர்கள் பட்­டி­யலில்  ஸ்பெய்னின் கழ­க­மான ரியல் மெட்­ரிட்டில் இருந்து கேரத் பேலே மற்றும் கரீம் பென்­ஸமா, டிபாயட் கோர்ட்டாய்ஸ் ஆகியோர் பெய­ரி­டப்­பட்­டுள்­ளனர். இப்­பட்­டி­யலில் லிவர்பூல் கழகம் சார்பில் அலிசன் பெக்கர் மற்றும் பேர்­மினோ ஆகிய இரு வீரர்­களும், மென்­சஸ்டர்  சிட்டி கழகம் சார்பில் சேர்­ஜியோ அக்­யூரோ  மற்றும்  கெவின் டி ப்ரூய்ன் ஆகிய இரு­வரும் பெய­ரி­டப்­பட்­டுள்­ளனர்.

மேலும் இப்­பட்­டி­யலில் ஜூவெண்டஸ் சார்பில் ரொனால்­டோவும், பி.எஸ்.ஜி  சார்பில் கவா­னியும், அட்­லான்­டிக்கா மெட்ரிட் சார்பில் டியாகோ கார்டின் ஆகிய மூவ­ரோடு சேர்த்து மொத்­த­மாக 10 வீரர்கள் இம் முதல் கட்ட வீரர்கள் பட்­டி­யலில் இடம்­பி­டித்­துள்­ளனர். இந்த விருதை கிறிஸ்­டி­யானோ ரொனால்டோ மற்றும் பார்சிலோனாவின் அணித்தலைவரான லயனல் மெஸ்ஸி  ஆகியோர் தலா ஐந்து முறை வென்றெடுத் துள்ளமை குறிப்பிடத் தக்கது.
-Vidivelli