Verified Web

அமெ­ரிக்­காவின் ஆத­ர­வின்றி இரண்டு வாரங்கள் கூட சவூதி மன்­னரால் தாக்­குப்­பி­டிக்க முடி­யாது

2018-10-04 06:01:42 M.I.Abdul Nazar

கடந்த செவ்­வாய்க்­கி­ழமை அமெ­ரிக்­காவின் மிஸ்­ஸி­சிப்­பியில் நடை­பெற்ற கூட்­ட­மொன்றில் உரை­யாற்­றிய அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால் ட்ரம்ப், தமது நெருங்­கிய நேச­நா­டான சவூதி அரே­பி­யா­வி­னாலும் அதன் மன்­ன­ராலும் அமெ­ரிக்­காவின் இரா­ணுவ ஆத­ர­வின்­றி இரு வாரங்­கள்­கூட தாக்­குப்­பி­டிக்க முடி­யாது எனத் தெரி­வித்தார்.

நாம் சவூ­தியைப் பாது­காக்­கின்றோம், அவர்­களை பணக்­கா­ரர்கள் என்று சொல்ல முடி­யுமா, நான் மன்னர் சல்­மானை நேசிக்­கின்றேன். நாமே உங்­களை பாது­காக்­கின்றோம், நாமில்­லா­விட்டால் இரு வாரங்கள் கூட உங்­களால் இங்கு இருக்க முடி­யாது உங்­க­ளது இரா­ணு­வத்­திற்­காக நீங்கள் கொடுப்­ப­னவை மேற்­கொள்ள வேண்டும் என நான் மன்­ன­ரிடம் கூறியி­ருக்­கின்றேன் என மக்கள் ஆர­வா­ரத்­திற்கு மத்­தியில் ட்ரம் தெரி­வித்தார். 

இவ்­வாறு மன்­ன­ரிடம் எப்­போது கூறினார் என ட்ரம்ப் தெரி­விக்­க­வில்லை. எனினும், அமெ­ரிக்­காவில் எண்ணெய் விலை அதி­க­ரித்­துள்­ள­தை­ய­டுத்தே இக்­க­ருத்து வெளி­யா­கி­யுள்­ளது.

உலகின் முதன்மை எண்ணெய் ஏற்­று­மதி நாடாக சவூதி அரே­பியா காணப்­ப­டு­வ­தோடு எண்ணெய் ஏற்­று­மதி நாடு­களின் கூட்­ட­மைப்­பான ஒபெக் அமைப்பின் தலைமைப் பத­வி­யி­னையும் வகிக்­கின்­றது.

எண்ணெய் விலையை அதி­க­ரித்­த­மை­யிட்டு அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால் ட்ரம்ப் ஒபெக் அமைப்பை விமர்­சித்து வரு­கின்றார்.

கடந்த சனிக்­கி­ழமை மன்னர் சல்­மா­னுடன் உரை­யா­டிய ட்ரம்ப் எண்ணெய்ச் சந்­தையின் ஸ்திரத்­தன்­மையை உறு­திப்­ப­டுத்­த­ுவ­தற்கு விநி­யோக செயற்­பா­டு­களை பேணு­வ­தற்­கான முயற்­சிகள் தொடர்­பிலும், உல­க­ளா­விய பொரு­ளா­தார முன்­னேற்றம் தொடர்­பிலும் கலந்­து­ரை­யா­டி­ய­தாக சவூதி அரே­பி­யாவின் உத்­தி­யோ­க­பூர்வ ஊடகம் தெரி­வித்­துள்­ளது.

கடந்­த­வார இறு­தியில் குவைத்­திற்கு விஜயம் செய்த சவூ­தியின் பட்­டத்­திற்­கு­ரிய இள­வ­ரசர் மொஹமட் பின் சல்மான் எண்ணெய் உற்­பத்­தி­யினை அதி­க­ரிப்­பது தொடர்பில் குவைத் அமிர் ஷெய்க் சபாஹ் அல்-­அஹ்மட் அல்-­ஜாபிர் அல்-­சா­பா­ஹுடன் உரை­யா­டி­ய­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. குவைத் சந்­திப்புத் தொடர்பில் மேல­திகத் தக­வல்கள் வெளி­யா­க­வில்லை. ஆனால், பேச்­சு­வார்த்­தையில் ஒரு விட­ய­மாக வளை­குடா பிரச்­சி­னைகள் இடம்­பெற்­றி­ருந்­த­தாக ஊடக அறிக்­கைகள் தெரி­விக்­கின்­றன. கடந்த மாதம் நியூ­யோர்க்கில் நடை­பெற்ற ஐக்­கிய நாடுகள் சபையின் பொதுச்­சபைக் கூட்­டத்தில் உரை­யாற்­றிய ட்ரம்ப் ஒபெக் அமைப்பின் உறுப்­பி­னர்கள் வழக்­கம்­போல மீத­முள்ள உல­கத்தைச் சித­ற­டித்­துள்­ளனர் எனத் தெரி­வித்தார்.

எண்ணெய் விலை அதி­க­ரித்து வரு­கின்­றது. ஒரு பீப்பாய் எண்ணெய் சுமார் 75 டொல­ராகக் காணப்படுகின்றது, கடந்த ஒரு வருட காலமாக அதன் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றது. கடந்த 2017 ஒக்டோபர் மாதம் ஒரு பீப்பாய் எண்ணெயின் விலை சுமார் 50 டொலராக இருந்தது.

கடந்த மே மாதம் அமெரிக்காவில் ஒரு லீற்றர் (கலன் 3.78) பெற்றோலின் விலை 3 டொலராக இருந்தது.