Verified Web

சிறுவர் முதியோர் உரி­மை­களை காப்போம்

17 days ago Administrator

எம்.ஏ.எம்.அஹ்ஸன்

ஐக்­கிய நாடுகள் சபையினால் 1954 ஆம் ஆண்டு டிசம்பர் 14 ஆம் திகதி கூட்­டப்­பட்ட கூட்­டத்தில் சிறு­வர்­க­ளு­டைய நலன்­க­ருதி நவம்பர் 20 ஆம் திகதி சர்­வ­தேச சிறுவர் தின­மாக அறி­விக்­கப்­பட்­டது. குறிப்­பிட்ட கூட்­டத்தில் சிறு­வர்­க­ளு­டைய உரி­மைகள், கட­மைகள், சிறு­வர்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றைகள் என்­பன கலந்­து­ரை­யா­டப்­பட்­டன. சர்­வ­தேச சிறுவர் தின­ம் எமது இலங்கை உட்­பட பல நாடு­களில் வெவ்­வே­றான திக­தி­க­ளிலே கொண்­டா­டப்­ப­டு­கி­ன்றது. அந்த வகையில் இலங்­கையில் ஒக்­டோபர் முதலாம் திகதி சிறுவர் தினம் கொண்­டா­டப்­ப­டு­கி­றது.

கனடா, நியூ­சி­லாந்து ஆகிய நாடுகள் சிறுவர் தினத்தை நவம்பர் 20 ஆம் திகதி கொண்­டா­டு­கின்­றன. அவுஸ்­தி­ரே­லியா ஒக்­டோபர் மாதத்தின் நான்­கா­வது புதன் கிழ­மையை சிறுவர் தின­மாக கொண்­டா­டு­கி­றது. அமெ­ரிக்கா ஜூன் மாதத்தின் முத­லா­வது ஞாயிற்­றுக்­கி­ழ­மையை சிறுவர் தின­மாக கொண்­டா­டு­கி­றது. ஜவ­ஹர்லால் நேருவின் பிறந்த தின­மான நவம்பர் 14 ஆம் திக­தி­யினை இந்­தியா சிறுவர் தின­மாக பிர­க­டனம் செய்து கொண்­டா­டு­கி­றது. இவ்­வாறு சர்­வ­தேச சிறுவர் தினம் நவம்பர் 20 ஆக இருந்த போதும் பல்­வேறு நாடு­களில் வெவ்­வே­றான திக­தி­களில் கொண்­டா­டப்­ப­டு­வது குறிப்­பி­டத்­தக்க அம்­ச­மாகும்.

ஒக்­டோபர் முதலாம் திகதி சிறுவர் தினம் எமது நாட்டில் கொண்­டா­டப்­ப­டு­வது போல சர்­வ­தேச முதியோர் தினமும் ஒக்­டோபர் முதலாம் திக­தியே கொண்­டா­டப்­ப­டு­கின்­றது. 1990 ஆம் ஆண்டு டிசம்பர் 14 ஆம் திகதி கூட்­டப்­பட்ட ஐ.நா. கூட்­டத்தில் முதி­யோர்­க­ளு­டைய நலன் பெரிதும் கலந்­து­ரை­யா­டப்­பட்­டது. முதியோர் துஷ்­பி­ர­யோகம், முதி­யோரைக் கைவி­டுதல் போன்ற முதி­யோர்­க­ளுக்­கெ­தி­ரான வன்­மு­றைகள் பல கலந்­து­ரை­யா­டப்­பட்ட நிலையில் ஒக்­டோபர் முதலாம் திகதி சர்­வ­தேச முதியோர் தின­மாக பிர­க­ட­னப்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டது. இதன் அடிப்­ப­டையில் 1991 ஆம் ஆண்டு ஒக்­டோபர் மாதம் முதலாம் திகதி முதன்­மு­றை­யாக சிறுவர் தினம் கொண்­டா­டப்­பட்­டது. சிறு­வர்கள் மற்றும் முதி­ய­வர்­க­ளு­டைய உரி­மை­களை பேணிப் பாது­காத்து, அவர்­க­ளு­டைய கட­மை­களை உணர்த்தும் நாளாக இந்நாள் காணப்­ப­டு­கின்­றது. சிறு­வர்­க­ளு­டைய வய­தெல்லை சர்­வ­தேச ரீதி­யாக 14 எனக் கூறப்­பட்­டாலும் இலங்­கையைப் பொறுத்­த­வ­ரையில் 18 வய­திற்­குட்­பட்ட அனை­வரும் சிறு­வர்கள் என்ற வரை­ய­றைக்குள் உள்­வாங்­கப்­ப­டுவர்.

இலங்கைச் சிறு­வர்கள் சக­லரும் கல்வி கற்கும் உரி­மையைப் பெற்­றுள்­ளனர். சிறு­வர்­களின் நலன் கருதி இல­வசக் கல்­வியை அறி­முகம் செய்­துள்ள இலங்கை அனைத்துச் சிறு­வர்­களும் கல்வி கற்க வேண்டும் என்ற கட்­டா­யத்தை வலி­யு­றுத்­தி­யுள்­ளது. சிறு­வர்­க­ளுக்கு கல்வித் தடை விதித்து வேலைக்­க­மர்த்தும் நபர்­களை இனங்­கண்டு அவர்­க­ளுக்கு கடு­மை­யான தண்­டனை வழங்க எமது அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது.

சிறு­வர்கள் பேசும் உரி­மையை பெற்­றுள்­ளனர். தத்­த­மது தேவைகள் உணர்­வு­களை தெரி­விக்கும் உரிமை சிறு­வர்­க­ளுக்கு உண்டு. இதற்கு மாற்­ற­மாக பெற்­றோர்கள் வீட்டுச் சிறையில் சிறு­வர்­களை வைப்­பதும் உண்டு. மேலும், சிறு­வர்­க­ளுக்கு பாது­காப்­பாக வாழும் உரிமை உண்டு. இன்­றைய சிறு­வர்கள் பலர் உள ரீதி­யா­கவும், உணர்வு ரீதி­யா­கவும், உடல் ரீதி­யா­கவும், துஷ்­பி­ர­யோகம் செய்­யப்­ப­டு­கின்­றனர்.

சிறு­வர்கள் பெரி­ய­வர்­களை விட சிந்­திக்கும் ஆற்றல் மற்றும் பகுத்­த­றி­விலும் குறைந்­த­வர்கள். சிறு­வர்­க­ளு­டைய இந்த மனோ­பா­வத்தை தமக்கு சாத­க­மாக பயன்­ப­டுத்திக் கொள்­கிற சில கயவர்கள் சிறு­வர்­களை துஷ்­பி­ர­யோகம் செய்ய முனை­கின்­றனர்.

சிறு­வர்­களை சொல் ரீதி­யாக ஏசுதல், அவர்­க­ளிடம் ஆபாச வார்த்­தை­களை கூறுதல், தவ­றான நோக்­கத்­துடன் சிறு­வர்­களை தொடுதல் அல்­லது தீண்­டுதல், தனி­மைப்­ப­டுத்தல் மற்றும் சிறு­வர்­களின் விருப்­பத்­து­டனோ, விருப்­ப­மின்­றியோ பாலியல் உறவு கொள்­ளுதல் போன்­றன தண்­டிக்­கப்­பட்ட வேண்­டிய குற்­றங்கள் ஆகும்.

சிறு­வர்­களை மென்­மை­யாக நாம் கையாள வேண்டும். சிறு­வர்கள் செய்யும் தவ­று­களை பெற்­றோர்கள் மென்­மை­யாக கையாள வேண்டும். மாறாக, சிறு­வர்­களை கடு­மை­யாக தண்­டித்தல், அடித்தல், சொல்­லால் தாக்­குதல் என்­பன கூடாது. இன்­றைய பெற்­றோர்கள் செய்யும் பிர­தான தவ­று­களில் ஒன்­றுதான் தமது குழந்­தை­களை ஏனைய சிறு­வர்­க­ளுடன் ஒப்­பிட்டு பேசு­வது. இது முற்­றிலும் தவறு. இவ்­வாறு நடந்து கொள்­வதன் மூலம் சிறு­வர்கள் தாழ்வு மனப்­பான்மை கொண்­ட­வர்­க­ளாக மாறு­கின்­றனர். தம்மால் எதுவும் செய்­ய­மு­டி­யாது என்ற மனப்­பான்­மையை அடை­கின்­றனர். தாய்­மார்­களின் இச்­செ­யற்­பாடு தமது பிள்­ளை­களின் எதிர்­கா­லத்தை கேள்­விக்­கு­றி­யாக மாற்­று­கின்­றது. பெற்­றோர்கள் தமது பிள்­ளை­களின் சகல செயற்­பா­டு­க­ளிலும் கவ­ன­மாக இருக்க வேண்டும். பிள்­ளையின் நண்­பர்கள், வகுப்­பா­சி­ரியர், பாட ஆசி­ரி­யர்கள், பாட­சா­லைக்குச் செல்லும் வழி­முறை, வாக­னத்தில் செல்­வ­தாயின் வாகன சார­தியின் நடத்தை என­பல விட­யங்­களில் கவனம் செலுத்த வேண்டும்.

தமது குடும்­பத்தில் உள்­ள­வர்­க­ளா­லேயே குழந்தை பாதிக்கக் கூடிய வாய்ப்­புகள் உள்­ளன. பல்­வேறு சந்­தர்ப்­பங்­களில் பிள்­ளைகள் துஷ்­பி­ர­யோகம் செய்­யப்­ப­டு­வது வேலியே பயிரை மேய்ந்த கதைதான். ஆகவே வீட்­டுக்கு வரும் நண்­பர்கள், உற­வி­னர்கள் போன்றோர் தமது பிள்­ளை­யுடன் எவ்­வாறு நடந்து கொள்­கி­றார்கள்- அவர்­க­ளு­டைய தொடுகை எவ்­வாறு அமை­கி­ன்றன? என்­பது பற்றி பெற்றோர் கூடு­த­லான கவனம் செலுத்த வேண்டும்.

தாய், தந்தை என இரு­வரும் வேலைக்கு செல்லும் சந்­தர்ப்­பங்­களில் பிள்­ளை­யு­டைய நிலைமை என்ன என்­பது பற்றி கூடு­த­லாக கவனம் செலுத்த வேண்டும். தமது பிள்­ளையை பாது­காப்­பான இடத்தில் தான் விட்டுச் செல்­கின்றோம். பிள்­ளையை திரும்பச் சந்­திக்கும் நேரம் உற­வினர் வீடாக இருக்கும் பட்­சத்­திலும் கொண்டு சென்­று­விடும் நேரம் பிள்­ளை­யு­டைய மன­நிலை எவ்­வாறு இருக்­கி­றது என்­பது பற்றி கூடுதல் கவ­னம் செலுத்த வேண்டும்.

வேலைக்குச் செல்லும் பெற்றோர் குழந்­தை­களை வளர்ப்­ப­தற்­கென  செவிலித் தாய்­மார்­களை வேலைக்கு வைத்­துள்­ளனர். அவ்­வாறு வேலைக்­க­மர்த்தும் செவி­லி­க­ளு­டைய தனிப்­பட்ட வாழ்க்கை, அவர்­க­ளு­டைய நடத்தை என்­ப­வற்றை அறிந்து ஆராய்­வது கட்­டா­ய­மாகும். வேலைக்குச் செல்லும் பெற்றோர் தனக்கு வந்­தால்தான் தலை­வலி என்­றி­ருக்­காமல் தமது  குழந்­தை­களை மேற்­கூ­றப்­பட்ட பிரச்­சி­னை­களில் இருந்து பாது­காக்க வெள்ளம் வரும் முன்­னரே அணை­கட்ட வேண்டும்.

இன்­றைய சிறுவர்கள் சமூக வலைத்­த­ளங்­களை பாவிப்­பதில் ஆர்வம் காட்­டு­கின்­றனர். பிர­தா­ன­மாக ஸ்மார்ட் தொலை­பே­சி­களை பாவிப்­பதை பெரிதும் விரும்பும் சிறு­வர்­களை எவ்­வாறு கையாள வேண்டும் என்ற தெளிவு பெற்­றோ­ருக்கு இல்லை என்­பதே நிதர்­ச­ன­மான உண்மை. “குழந்தை அழு­ததால் போனைக் கொடுத்தேன்” என்று கூறும் பெற்­றோர்­க­ளுக்கு ஏன் அத­னு­டைய பார­தூரம் புரி­வ­தில்லை.

வீடியோ கேம்ஸ் மற்றும் சமூக வலைத்­த­ளங்­களால் கட்டிப் போடப்­பட்ட சிறு­வர்கள் ஆபாச காணொ­ளி­களால் பாதிக்­கப்­ப­ட­மாட்­டார்கள் என்­பதில் என்ன நிச்­சயம். இன்­றைய பெற்­றோர்கள் கூறும் பிர­தான கருத்து தனக்கு தெரி­யாத பல விட­யங்­களை தொலைப்­பே­சியில் தன்­னு­டைய மகன் அல்­லது மகள் இயக்­கு­கிறார் என்­பதே. எத்­த­னையோ பெற்­றோர்கள் இதனை பெரு­மை­யாகக் கூறு­கி­றார்கள். இது பெரு­மை­ப­டு­வ­தற்­கு­ரிய விட­ய­மன்று. மாறாக வருத்­தப்­பட வேண்­டிய விட­யமே என்று கூறினால் அது மிகை­யா­காது.

பெற்­றோர்கள் தொலை­பே­சியை தமது பிள்­ளை­க­ளுக்கு பாவிக்க கொடுக்க வேண்­டிய கட்­டாயம் இருந்தால் முதலில் தொலை­பேசி பற்­றியும் சமூக வலைத்­த­ளங்கள் பற்­றியும் தெரிந்து கொள்ள வேண்டும். நிதமும் தொலை­பே­சியை பரி­சோ­திக்கும் வகையில்  தமது கண்­கா­ணிப்பில் தொலை­பேசி உள்­ள­வாறு செயற்­ப­டுத்­து­வதே சாலச் சிறந்­தது.

பெற்­றோர்கள் சிறு­வர்­க­ளு­டைய விட­யத்தில் கூடுதல் கவனம் செலுத்­தாத வரை சிறு­வர்­க­ளது எதிர்­காலம் என்­ன­வாகும் என்­பதை தீர்­மா­னிக்க முடி­யாது. பெற்­றோர்கள் சிறு­வர்கள் எதிர்­நோக்கும் சவால்­களை முறி­ய­டித்து அவர்­களை வெற்றிப் பாதையில் வெற்றி நடை­போட நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். சிறந்த பத்­தி­ரி­கைகள், சஞ்­சி­கைகள் மற்றும் அர­சாங்க அனு­ச­ர­ணை­யுடன் நடாத்­தப்­படும் ஈ – பாட­ஷாலா, ஈ – நென­சல, ஈ – த­க் ஷிலா போன்ற வலைத்­த­ளங்­களை பயன்­ப­டுத்தி உச்ச பயனைப் பெற வழி சமைக்க வேண்டும். இவ்­வாறு செய்­வதன் மூலம் நிச்­ச­ய­மாக நாளைய தலை­வர்­களை உரு­வாக்­கலாம்.

அடுத்­த­தாக பிர­தான கவனம் எடுக்­கப்­பட வேண்­டி­ய­வர்கள் முதி­யோர்கள் ஆவர். முதி­யோர்­க­ளு­டைய ஆழ்ந்த அறிவும் அனு­ப­வ­முமே இளை­ஞர்­க­ளு­டைய வெற்­றிக்கு வித்­தாக அமைந்­தி­ருக்­கி­றது. முதி­யோர்­களை ஒரு சுமை­யாக எண்­ணாமல் அவர்­க­ளு­டைய உணர்­வு­க­ளுக்கு மதிப்­ப­ளிக்க வேண்டும்.

முதி­ய­வர்கள் வய­த­டை­கி­றார்­களே தவிர அவர்­க­ளு­டைய அனு­பவ அறிவு ஒரு­நாளும் வய­த­டை­வ­தில்லை. முதி­ய­வர்­களை மதிக்கும் பண்பு நம்பில் பல­ருக்கு இல்லை என்­பது வருத்­தப்­பட வேண்­டிய விடயம் ஆகும். இளை­ஞர்­களைப் போலவே வயோ­திபப் பெண்கள் மற்றும் ஆண்­க­ளுக்கும் தேவைகள், ஆசைகள், நிரா­சைகள் என்­பன இருப்­பது இயல்­பான ஒரு விடயம்.

தம்மை வளர்த்து ஆளாக்­கிய பெற்­றோர்­களை எல்லாம் முடிந்த பின்னர் எந்­த­வி­த­மான குற்ற உணர்வும் இன்றி முதியோர் இல்­லத்தில் சேர்த்து விடும் மகன்­மார்­க­ளு­டைய செயற்­பா­டுகள் நாளுக்கு நாள் குறைந்த பாடில்லை. சமூக வலைத்­த­ளங்­களில் எத்­தனை விழிப்­பு­ணர்­வுகள் வழங்­கிய போதிலும் உணர்­வில்­லாத ஜடங்­க­ளு­டைய எண்­ணிக்கை நாளுக்கு நாள் கூடிக் கொண்டே வரு­வதும் விழிப்­பு­ணர்­வா­ளர்­க­ளுக்கு ஏமாற்­றத்தை தரு­வதும் காலம் செய்த கோலம் என்றே கூற வேண்டும்.

முதி­ய­வர்கள் ஒவ்­வொரு வீட்­டிலும் தந்­தை­யாக தாயாக தாத்­தா­வாக அல்­லது பாட்­டி­யாக இருந்து கொண்­டுதான் இருக்­கி­றார்கள். முதி­யோர்­க­ளுக்கு மரி­யாதை செலுத்­து­வது மட்டும் நமது கட­மை­யல்ல ! மாறாக அவர்­க­ளுக்கு அன்பு செலுத்த வேண்டும். அவர்­க­ளு­டைய குழந்தை தனத்தை விரும்பாதுவிட்­டாலும் பர­வா­யில்லை, அவர்­களை அதற்­காக காயப்­ப­டுத்தி விடக்­கூ­டாது.

சுற்­று­லாக்கள் அழைத்துச் செல்லல், வணக்­கஸ்­த­ளங்­க­ளுக்கு அழைத்து செல்லல், அவர்­க­ளுக்கு பிடித்த நூல்கள் மற்றும் திண்­பண்­டங்­களை பெற்றுக் கொடுத்­தலின் மூலம் அவர்­களை மகிழ்ச்­சி­யாக வைத்துக் கொள்ள வேண்டும்.

முதி­யவர்கள் தன்­னு­டைய தாயாக, தந்­தை­யாக இருக்கும் பட்­சத்தில் அவர்கள் மீது கூடுதல் கரி­சனை காட்­டு­வது அவர்­களை மகிழ்ச்­சியின் ஆழத்­துக்கு இட்டுச் செல்லும். அவர்­க­ளுடன் உரை­யாட நாம் நேரம் ஒதுக்க வேண்டும். முதி­ய­வர்­க­ளு­டைய பெரும் எதிர்­பார்ப்­புகள் தமது  பேரக்­கு­ழந்­தை­க­ளா­கத்தான் இருக்க முடியும். அவ்­வா­றான பேரக் குழ­தை­களை அவர்­க­ளுடன் விளை­யாட நெறிப்­ப­டுத்த வேண்டும்.

இன்­றைய வீடு­களில் முதி­ய­வர்கள் விரும்­பிய உண­வு­களை அவர்கள் வீட்டில் இருக்கும் நிலை­யிலும் அவர்கள் அறி­யாத வண்ணம் பகி­ராமல் உண்ணும் பிள்­ளைகள் பலரும் நம்மில் உள்­ளனர். இது போன்ற சின்­னச்­சின்னத் தவ­று­களில் அவர்­க­ளு­டைய மனம் பெரி­ய­ளவில் பாதிப்­ப­டை­யக்­கூடும். தள்­ளா­டிய வயதில் அவர்­க­ளுக்கு இருப்­பது இது போன்ற சின்­னச்­சின்ன சந்­தோ­ஷங்­கள்தான் என்­பதை இன்­றைய வயோ­தி­பர்­களின் பிள்ளைகள் உணர்ந்து செயற்படுவது காலத்தின் கட்டாயத் தேவையாகும்.

எனவே, நாட்டின் சிறுவர்களு­டையதும் முதியவர்­க­ளு­டை­ய­து­மான உரி­மை­களை நாம் பாதுகாக்க முன் வர வேண்டும். ஒரு நாட்டின் பிர­தான அபி­வி­ருத்தி சிறு­வர்­க­ளு­டைய மற்றும் முதி­ய­வர்­க­ளு­டைய ஆரோக்­கி­யத்­திலேயே தங்­கி­யுள்­ளது. இந்த சிறுவர் மற்றும் முதியோர் தினத்தில் அவர்­க­ளு­டைய நல­னுக்­காக நாம் குரல் கொடுக்க வேண்டும். இவ்­வி­ரு­சாரார் மீதும் நடாத்தும் வன்­மு­றை­க­ளையும் துஷ்­பி­ரரோ­ய­கங்­க­ளையும் உரி­மை­க­ளையும் வென்­­­றெ­டுக்க அனை­வரும் கள­மி­றங்கி செயற்­பட  அர­சாங்கம் மற்றும் அரச சார்­பற்ற நிறு­வ­னங்கள் முன் வர வேண்­­­டும்.
-Vidivelli