Verified Web

சிறகுடையும் சிட்டுக்கள்

2018-09-27 04:57:26 Administrator

எம்.எம்.ஏ.ஸமட்

குழந்­தைகள் பறக்கும் சிட்­டுக்­க­ளுக்கு ஒப்­பி­டப்­ப­டு­கி­றார்கள். இன்­றைய குழந்­தைகள் அல்­லது சிறு­வர்­களே நாளை துறைசார் ஆளு­மைகள். இத்­த­கைய ஆளு­மைகள் இயற்கை மற்றும் சூழலின் நெருக்­க­டி­க­ளினால் சிற­கு­டைந்த சிட்­டுக்­க­ளாக வாழும் நிலையை உல­கெங்­கிலும் காணலாம்.

குழந்­தை­களும், சிறு­வர்­களும் தெளி­வான அறி­வையும், ஆரோக்­கி­யத்­தையும் பெற முடி­யா­த­தொரு சூழ்­நி­லையை சம­காலம் தோற்­று­வித்­தி­ருக்­கி­றது. குழந்­தைகள் அல்­லது சிறு­வர்­களின் விளை­யாட்­டுக்கள், ஆசைகள், கன­வுகள், கற்­ப­னைகள் எல்லாம் முளை­வி­டும்­போது அவை கிள்­ளி­யெ­றி­யப்­ப­டு­கி­றது. அல்­லது அவர்­க­ளது ஆசை­க­ளையும், கன­வு­க­ளையும், கற்­ப­னை­க­ளையும் அக, புறச் சூழல்கள் பாதித்துக் கொண்­டி­ருக்­கின்­றன. குறிப்­பாக பெற்­றோர்­க­ளினால் கல்­விக்கு அளிக்கும் முக்­கி­யத்­துவம், அதிலும் கல்விக் கடை­க­ளுக்கு அனுப்பும் முக்­கி­யத்­துவம் அவர்­களின் உடல், உள ஆரோக்­கி­யங்­களை கேள்­விக்­கு­றி­யாக்கிக் கொண்­டி­ருக்­கி­றது.

காலை எழுந்­த­வுடன் அவ­சர அவ­ச­ர­மாக பாட­சா­லைக்கு செல்­வ­தற்கு ஆயத்­தப்­ப­டுத்தல், பின்னர் பாட­சாலை முடிந்­த­வுடன் மேல­திக வகுப்பு, மேலதி வகுப்பு முடிந்து வீடு வந்­ததும் பெற்­றோரின் வற்­பு­றுத்­தலின் பேரில் மீண்டும் படிப்பு. இப்­படி, படிப்பு மட்­டுமே வாழ்க்கை என்­கின்ற சிந்­த­னை­யினால், உடல், உள ஆரோக்­கி­ய­மின்றி பிள்­ளை­களின் உள்ளம் நெருக்­க­டி­களை சந்­திப்­ப­தனால் அப்­ப­டிப்பில் அவர்கள் வெறுப்­ப­டைந்து கல்­வியில் தோல்­வி­ய­டையும் நிலைக்கு சில சிறு­வர்கள் தள்­ளப்­ப­டு­கி­றார்கள்.

இவற்றின் கார­ண­மாக, பெற்­றோர்கள் மற்றும் ஆசி­ரி­யர்கள் மீதும் வெறுப்பு ஏற்­ப­டு­வ­தையும். இந்த வெறுப்­பு­ணர்­வா­னது வீணான விளை­வு­க­ளுக்கு அவர்­களின் மன­வெ­ழுச்­சியை இட்டுச் செல்­லவும் வழி­யேற்­ப­டுத்­து­கி­றது. இதனால், படிப்பு மாத்­தி­ரம்தான் வாழ்க்கை என்ற சித்­தாந்­தத்தை முதலில் பெற்­றோர்கள் களைய வேண்டும். பாடப்­ப­டிப்பைத் தவிர இன்னும் ஏரா­ள­மான விட­யங்கள் இந்த உலகில் உள்­ளன. வாழ்க்கை என்­பது படிப்பு மாத்­தி­ர­மல்ல என்ற எண்­ணத்தைப் பெற்­றோர்கள் நம் பிள்­ளைகள் மனதில் விதைக்க வேண்டும்.

படிப்பு, படிப்பு என்ற காலத்­தி­லி­ருந்து சற்று விலகி, இத்­த­லை­மு­றை­யினர் வாழ்வை ரசிக்கக் கூடி­ய­வர்­க­ளாக மாற்ற வேண்­டிய கடமை பெற்­றோர்­க­ளுக்­குள்­ளது. முந்­தைய காலங்­களில் குழந்­தைகள் வெளி விளை­யாட்­டுக்­களில் அதிகம் ஈடு­ப­டு­ப­வர்­க­ளாக இருந்­தனர். அதில் தோல்­வியும் வெற்­றியும் மாறி மாறி ஏற்­படும். ஒரு தடவை நண்பன் தோற்றால் மற்­றைய தடவை நானும் தோற்பேன் என்ற யதார்த்­தத்தைக் கண்டு கொள்ளும் சந்­தர்ப்பம் கிடைத்­தது. ஆனால், இவ்­வா­றான சந்­தர்ப்பம் தற்­போ­தைய அகப்­புறச் சூழலின் அழுத்­தங்­க­ளினால் பிள்­ளை­க­ளுக்கு கிடைக்கச் செய்­யா­ம­லாக்­கப்­ப­டு­கின்­றன. இதனால், பிள்­ளைகள் வாழ்க்­கையில் சந்­திக்­கின்ற விட­யங்­களில் வெற்­றியும், தோல்­வியும் சக­ஜ­மென விளங்­கிக்­கொள்ள முடி­யாத நிலைக்குத் தள்­ளப்­ப­டு­வதே தங்­களைத் தாங்­க­ளா­கவே அழித்­துக்­கொள்ள முனை­வ­தாகும்.

குழந்­தை­க­ளது, சிறு­வர்­க­ளது மன­வெ­ழுச்­சியை ஆரோக்­கி­ய­மாக்க வேண்­டு­மென்றால் வய­துக்­கேற்ற வாழ்க்­கைச்­சூ­ழலை வழங்க வேண்­டி­யது பெற்­றோர்­க­ளி­னதும், பாது­கா­வ­லர்­க­ளி­னதும், ஆசி­ரிய சமூ­கத்­தி­னதும் கடப்­ப­ாடா­க­வுள்­ளது. இக்­க­டப்­பாடு நிறை­வேற்­றப்­ப­டா­த­வி­டத்து எதிர்­கால தலை­மு­றை­யினர் வழி­த­வ­றிய வாழ்க்கைப் பய­ணத்­திற்குள் வழுக்கி விழு­வதைத் தவிர்க்­க­மு­டி­யாது. அத்­தோடு அவர்கள் சிற­கு­டைந்த சிட்­டுக்­க­ளாக மூலையில் ஒதுங்­கிக்­கி­டக்க வேண்­டிய நிலைக்­குள்­ளாக வேண்­டியும் ஏற்­ப­டலாம்.

இவ்­வா­றான நிலை­மைகள் சிறு­வர்­களை பாதிக்­கா­ம­லி­ருக்கும் பொருட்டு மன­வெ­ழுச்­சியில் மாற்­றத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கா­கவே சர்­வ­தேச சிறுவர் தினம் ஒவ்­வொரு வரு­டமும் அனுஷ்­டிக்­கப்­பட்டு வரு­வ­தாகக் கொள்­ளலாம். எதிர்­வரும் ஒக்­டோபர் முதலாம் திகதி திங்­கட்­ழமை சர்­வ­தேச சிறுவர் தினம் உல­க­ளவில் அனுஷ்­டிக்­கப்­ப­ட­வுள்­ளது. இத்­தி­னத்தில் சிறு­வர்­களின் உரிமை, பாது­காப்பு, நலன்­களை வலி­யு­றுத்தி பேரு­ரை­களும், நடை­ப­வனி­களும் நிகழ்ச்­சி­களும் விழிப்­பு­ணர்­வு­களும் நாடு­பூ­ரா­கவும் ஏற்­பாடு செய்­யப்­பட்டு நடந்­தேறும். இந்­நி­கழ்ச்­சிகள், அதி­கா­ரி­களின் கட்­ட­ளை­க­ளுக்­கா­கவும் நிறு­வன மற்றும் சுய விளம்­ப­ரங்­க­ளுக்­கா­கவும் நடந்­தே­றலாம்.

இந்­நி­கழ்­சி­க­ளையும் ஏனைய நிகழ்­வு­க­ளையும் நடத்தக் கூடா­தென்றோ அல்­லது நடத்­து­வது பிழை­யென்றோ நடத்­தாமல் இருப்­பது தவ­றெ­ன்றோ தெரி­விப்­பது நோக்­க­மில்லை. மாறாக, விலை­ம­திக்க முடி­யாத வருங்­காலச் சிறு­வர்கள் நெருக்­க­டி­க­ளி­லி­ருந்தும், வன்­மு­றை­க­ளி­லி­ருந்தும், துஷ்­பி­ர­யோ­கங்­க­ளி­லி­ருந்தும் பாது­காக்­கப்­பட வேண்டும். அதற்­காக நிரந்­த­ரமான, முறை­யான பொறி­மு­றைகள் உரு­வாக்­கப்­பட வேண்டும். அந்தப் பொறி­மு­றைகள் சமூக மயப்­ப­டுத்­தப்­பட வேண்டும். அத­ன­டிப்­ப­டையில் சிறு­வர்­களை பாதிப்­புக்­க­ளி­லி­ருந்து பாது­காப்­பதன் ஊடா­கவே சிறுவர் தினத்தை அர்த்­த­முள்­ள­தாக்க முடியும். இவை சமூ­கப்­பொ­றுப்­பாக மாற்­றப்­பட வேண்டும். அவை தொடர்ச்­சி­யாக ஆரோக்­கி­ய­மாக சமூ­கத்தின் ஒவ்­வொரு பிர­ஜை­யி­னாலும் முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும். அவற்றின் மூலமே இச்­சி­று­வன் தின நிகழ்­வுகள் வெற்­றி­ய­ளித்­த­தாகக் கொள்­ளப்­படும்.

சர்­வ­தேச சிறுவர் தினம்

சர்­வ­தேச புள்­ளி­வி­ப­ரங்­களின் பிர­காரம் உலகின் 7.7 பில்­லியன் மக்கள் தொகையில் 1.89 வீத­மா­ன­வர்கள் சிறு­வர்­க­ளாவர். 2016ஆம் ஆண்டு ஜன­வரி முதல் ஜூன் மாதம் வரை­யான காலப்­ப­கு­தியில் மேற்­கொள்­ளப்­பட்ட ஆய்­வு­களின் பிர­காரம், இலங்­கையின் ஏறக்­கு­றைய 20 கோடி முப்­பது இலட்சம் மக்கள் தொகையில் சிறு­வர்­க­ளாகக் கணிக்­கப்­படும் 15- –17 வய­துக்­குட்­பட்­ட­வர்­களின் எண்­ணிக்கை 4571,442ஆகும்.

இந்­நி­லையில், உல­க­ளா­விய ரீதி­யிலும் நம்­நாட்­டிலும் வாழும் சிறு­வர்­க­ளுக்­காக அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்ற சிறுவர் தின­மா­னது வெவ்­வேறு நாடு­களில் வெவ்­வேறு தினங்­களில் அனுஷ்­டிக்­கப்­பட்டு வரு­வதைக் காணக்­கூ­டி­ய­தா­க­வுள்­ளது.

இச்­சர்­வ­தேச சிறுவர் தின­மா­னது முதன்­மு­த­லாக 1920ஆம் ஆண்டு துருக்­கியில் கொண்­டா­டப்­பட்­டது. பின்னர். 1925ஆம் ஆண்டு சுவிட்­ச­ர்லாந்து மற்றும் ஜெனீ­வா­விலும் கொண்­டாடப்­பட்­டது. இருப்­பினும், 1955ஆம் ஆண்டே உலகம் முழு­வ­திலும் இந்த சிறுவர் தினம். அனுஷ்­டிக்­கப்­பட்­டது. இருப்­பினும், இத்­தி­னத்தை உலக நாடுகள் பல வெவ்­வெறு தினங்­களில் அனுஷ்­டித்து வரும் நிலையில் உலக முதியோர் தினம் 1990ஆம் ஆண்­டி­லி­ருந்து அனுஷ்­டிக்­கப்­பட்டு வரு­வ­தையும் சுட்­டிக்­காட்ட வேண்டும்.

இன்­றைய சிறு­வர்கள் நாளைய முதி­ய­வர்கள் என்ற அடிப்­ப­டையில் இவ்­விரு தினங்­களும் இலங்­கையில் ஒக்­டோபர் மாதம் முதலாம் திகதி அனுஷ்­டிக்­கப்­பட்டு வரு­வது பொருத்த முடை­ய­தாகும்.

இலங்­கையில் இவ்­வாண்டின் சிறுவர் தினத்­துக்­கான தொனிப்­பொருள் ‘தைரி­ய­மாக முன்­னோக்கிச் செல்­வ­தற்­காக சிறு­வர்­களைப் பலப்­ப­டுத்­துவோம்’ என்­ப­தாகும். மகளிர் மற்றும் சிறுவர் விவ­கார அமைச்­சினால் வெளி­யி­டப்­பட்­டுள்ள இக்­க­ருப்­பொ­ருளை உள்­ள­டக்­கி­ய­தா­கவே சகல பாட­சா­லை­க­ளிலும் இச்­சி­றுவர் தினம் அனுஷ்­டிக்­கப்­பட வேண்­டு­மென கல்வி அமைச்சின் செய­லாளர் பாட­சா­லை­க­ளுக்கு அறி­வித்­துள்ளார்.

இவ்­வாண்டின் கருப்­பொ­ருளை அடிப்­ப­டை­யாகக் கொண்டு சிறுவர் தினம் அனுஷ்­டிக்­கப்­பட்­டாலும் சிறு­வர்­க­ளுக்­­கெ­தி­ராக அரங்­கேற்­றப்­பட்டு வரு­கின்ற அழுத்­தங்­க­ளையும், அநீ­தி­க­ளையும், துஷ்­பி­ர­யோ­கங்­க­ளையும் இயன்­ற­ளவு குறைப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை எடுப்­ப­தற்கு சக­லரும் பங்­க­ளிப்புச் செய்ய வேண்­டிய கால­கட்டம் ஏற்­பட்­டுள்­ளது.

சிறு­வர்கள் மீதான அழுத்­தங்கள் பல்­வேறு கோணங்­களில் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டாலும் அவற்றில் முக்­கி­ய­மா­ன­தாக கரு­தப்­ப­டு­வது சிறுவர் துஷ்­பி­ர­யோ­கங்­க­ளாகும். துஷ்­பி­ர­யோக வடி­வங்கள் பல­வற்­றுக்கு முகம்­கொ­டுத்து பல சிறு­வர்கள் சிற­கு­டைந்த சிட்­டுக்­க­ளாக வாழ்ந்து கொண்­டி­ருக்­கி­றார்கள்.

சிறு­வர்கள் என்போர் மனி­த­கு­லத்தின் மிக முக்­கிய பரு­வத்­தினர். இவர்கள் அடுத்­த­வர்­களில் தங்கி வாழ்­கின்ற பல­வீ­னர்­க­ளாகக் காணப்­ப­டு­வ­த­னா­லேயே வாழும் வீட்­டி­னுள்ளும், சூழ­லிலும், பாட­சா­லை­க­ளிலும் பல்­வேறு அழுத்­தங்­க­ளுக்கு உள்­ளாக்­கப்­ப­டு­கின்­றனர். சிறு­வர்கள் மீதான அழுத்­தங்­களைக் குறைப்­ப­தற்கு அல்­லது தவிர்ப்­ப­தற்கு சிறு­வர்­களின் உரி­மை­களைப் பாது­காப்­ப­தற்­காக ஐக்­கிய நாடுகள் சபை­யினால் சிறுவர் உரி­மைகள் சாசனம் வகுக்கப்­பட்­டி­ருந்­தாலும், அபி­வி­ருத்­தி­ய­டைந்த மற்றும் அபி­வி­ருத்­தி­ய­டைந்து வரும் நாடு­களில் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான சிறு­வர்கள் தினமும் துஷ்­பி­ர­யோ­கத்­திற்­குள்­ளாக்­கப்­பட்டுக் கொண்­டி­ருக்­கி­றார்கள்.

சிறுவர் உரி­மை­களும்

துஷ்­பி­ர­யோக வடி­வங்­களும்

பிறப்­பின்­போது பெய­ரொன்­றையும் இன அடை­யா­ளத்­தையும் பெற்­றுக்­கொள்ளும் உரிமை, பெற்­றோரைத் தெரிந்து கொள்­வ­தற்கும் அவர்­க­ளது பாது­காப்பைப் பெற்றுக் கொள்­வ­தற்­கு­மான உரிமை, பெற்­றோ­ரி­ட­மி­ருந்து தம்மைத் தனி­மைப்­ப­டுத்­தா­தி­ருப்­ப­தற்­கான உரிமை, வாழ்­வ­தற்கும் முன்­னே­று­வ­தற்­கு­மான உரிமை, தமது கருத்தை வெளிப்­ப­டுத்தும் உரிமை, சிந்­திப்­ப­தற்கும் மனச்­சாட்­சிப்­படி நடப்­ப­தற்கும், சம­ய­மொன்றைப் பின்­பற்­று­வ­தற்­கு­மான உரிமை, போதிய கல்வி பெறும் உரிமை, சமூக உரிமை, தனி­யு­ரிமை, சுகா­தார வச­திகள் பெறும் உரிமை, ஓய்­வெ­டுக்­கவும் விளை­யா­டவும் உரிமை, சித்­தி­ர­வதை குரூ­ர­மான தண்­ட­னை­க­ளி­லி­ருந்து தவிர்ந்து கொள்ளும் உரிமை, சாதா­ரண வழக்கு விசா­ர­ணை­க­ளுக்­குள்ள உரிமை, சுதந்­தி­ரத்­திற்கும் பாது­காப்­பிற்­கு­மான உரிமை போன்ற பல்­வேறு உரி­மை­களை அனு­ப­விக்கும் உரிமை சிறு­வர்­க­ளுக்­குண்டு. இத்­த­கைய உரி­மைகள் மறுக்­கப்­ப­டு­வதும் துஷ்­பி­ர­யோ­க­மா­கவே கரு­தப்­ப­டு­கி­றது.

பொது­வாக சிறுவர் துஷ்­பி­ர­யோ­க­மா­னது பல்­வேறு வடி­வங்­களில் அரங்­கேற்­றப்­ப­டு­கின்­றன. உட­லியல் ரீதி­யான துஷ்­பி­ர­யோகம், உள­வியல் ரீதி­யான துஷ்­பி­ர­யோகம், பாலியல் ரீதி­யான துஷ்­பி­ர­யோகம், உணர்வு ரீதி­யான துஷ்­பி­ர­யோகம், புறக்­க­ணிப்பு ரீதி­யி­லான துஷ்­பி­ர­யோகம் என பல்­வேறு கோணங்­களில் சிறு­வர்கள் துஷ்­பி­ர­யோ­கங்­க­ளுக்கு ஆளாக்­கப்­ப­டு­கின்­றனர்.

சிறு­வர்­க­ளுக்கு உடல் ரீதி­யாக தீங்­கி­ழைக்­கப்­படின் அது உட­லியல் ரீதி­யான துஷ்­பி­ர­யோ­க­மாகக் கரு­தப்­ப­டு­கி­றது. இதில் அடித்தல், காயப்­ப­டுத்தல், அங்­கங்­களைச் சிதைத்தல் போன்ற மட்­டுப்­ப­டுத்­தப்­ப­டாத தண்­ட­னை­களும் அடங்­கு­கின்­றன. குறிப்­பாக பெரும்­பா­லான உட­லியல் ரீதி­யி­லான துஷ்­பி­ர­யோ­கங்கள் வீடு­களில் இடம்­பெ­று­கின்­றன. பெற்­றோர்கள், பாது­கா­வ­லர்கள், வயது வந்த சகோ­த­ரர்கள், சில ஆசி­ரி­யர்கள், கள்ளக் காத­லர்கள், காத­லிகள், எஜ­மா­னர்கள் போன்­றோ­ரினால் சிறு­வர்கள் உட­லியல் ரீதி­யான துஷ்­பி­ர­யோ­கங்­க­ளுக்­கா­ளாகி வரு­கின்­றனர்.

இவ்­வா­றான உட­லியல் ரீதி­யான சிறுவர் துஷ்­பி­ர­யோக சம்­ப­வங்கள் ஒரு­சில வெளிக்­கொ­ண­ரப்­ப­டு­கின்ற போதிலும் பல சம்­ப­வங்கள் வெளிக்­கொ­ண­ரப்­ப­டாமல் மூடி­ம­றைக்­கப்­பட்டு வரு­கின்­றன.

பொது­வாக, சிறு­வர்கள் சுய­மாக விளை­யா­டுதல், கற்றல், நாளாந்த கரு­மங்­களைச் செய்தல், ஒளிவு மறை­வின்றிப் பேசுதல், விருப்­பங்­களை வெளிப்­ப­டுத்­துதல், அறி­யாத விட­யங்­களை அறிந்­து­கொள்ள முய­லுதல், சுய­மாகச் சிந்­தித்தல், ஆராய்தல் போன்ற செயற்­பா­டு­களில் ஈடு­ப­டு­கின்­ற­போது அவை பல­வந்­த­மாகத் தடுக்­கப்­ப­டு­மி­டத்து, உள­வியல் ரீதி­யான தாக்­கங்­க­ளுக்­குள்­ளா­வார்கள்.

இதனால் அவர்­களின் ஆற்றல், ஆளுமை, திறன், நுண்­ண­றிவு, விவேகம் போன்ற உள­நி­லைகள் பாதிப்­ப­டையும். இவ்­வாறு சிறு­வர்­களைப் பாதிப்­ப­டையச் செய்யும் செயற்­பா­டுகள் உள­வியல் ரீதி­யான துஷ்­பி­ர­யோ­க­மாகக் கொள்­ளப்­ப­டு­கின்­றன.

அநேக வீடு­களில் பிள்­ளை­களின் சுதந்­தி­ரங்கள் பறிக்­கப்­படும் வகையில் தங்­க­ளது எண்­ணங்­க­ளையும் ஆசை­க­ளையும் பெற்­றோர்கள் பிள்­ளைகள் மீது திணிக்­கின்­றனர். இதனால், சிறு­வ­யதில் ஏற்­ப­டு­கின்ற உளத்­தாக்­கங்கள் அப்­பிள்­ளையின் எதிர்­கா­லத்தைப் பாதிக்­கு­மென்­பதை அநேக பெற்­றோர்கள் மறந்து செயற்­ப­டு­வது அவர்­களின் அறி­யா­மை­யாகும்.

ஐந்­தாம்­தர புல­மைப்­ப­ரிசில் பரீட்­சைக்­காக பிள்­ளை­களைத் தயார்­ப­டுத்­தும்­போது பெற்­றோர்­களால் பிள்­ளைகள் மன அழுத்­தத்­திற்­குள்­ளா­கின்ற சம்­ப­வங்கள் கடந்த காலங்­களில் இடம்­பெற்­றுள்­ளன. அதே­போன்று இப்­ப­ரீட்சை முடி­வுகள் வெளி வந்த பின்­னரும் தகை­மை­பெ­றாத சிறு­வர்கள் பலர் வதைக்­கப்­பட்­டிக்­கி­றார்கள் என்­பதை இங்கு சுட்­டிக்­காட்­டு­வது பொருத்­த­மாகும்.

சிறு­வர்­களை ஏதா­வது பாலியல் செயற்­பாட்டில் ஈடு­ப­டுத்தும் போது சிறு­வர்கள் பாலியல் ரீதி­யாக துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டு­கின்­றனர். பாலியல் துஷ்­பி­ர­யோகம் என்­பது பாலியல் இச்­சைக்­காக சிறு­வர்­களைப் பயன்­ப­டுத்­து­வது மாத்­தி­ர­மின்றி, சிறு­வர்­களைத் தொடுதல், வரு­டுதல், பொருத்­த­மற்ற பாலியல் சொற்­களைப் பயன்­ப­டுத்­துதல், பாலியல் நொந்­த­ர­வு­களைக் கொடுத்தல், பாலியல் செயற்­பா­டு­களை பார்ப்­பதில் ஈடு­ப­டுத்தல், ஆபாசப் படங்கள், புத்­த­கங்­களை பார்க்கச் செய்தல் போன்ற செயற்­பா­டு­களில் சிறு­வர்­களை ஈடு­படச் செய்­வ­தா­னது பாலியல் ரீதி­யான சிறுவர் துஷ்­பி­ர­யோ­க­மாகக் கொள்­ளப்­ப­டு­கி­றது.

சம­கா­லத்தில் சிறு­வர்கள் மிக மோச­மான முறையில் பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­திற்கு உள்­ளாக்­கப்­பட்டு வரு­கி­றார்கள். இவ்­வாறு பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்தில் ஈடு­ப­டுட்­டுள்­ள­வர்கள் ‘சேடி­சம்’, ‘பிடோ­பீ­லியா’, ‘பெடி­சி­ஷம்’, ‘மஸோ­சியம்’ போன்ற பாலியல் விலகல் நடத்தை உளக் கோளா­று­க­ளினால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளாக இருப்­பார்கள் என உள­வியல் நுபு­ணர்கள் குறிப்­பி­டு­கின்­றனர்.

உணர்ச்சி ரீதி­யான துஷ்­பி­ர­யோ­க­மென்­பது வெளிப்­ப­டை­யா­கவே மறுத்து விலக்­குதல், தனி­மைப்­ப­டுத்தல், அவ­மா­னப்­ப­டுத்தல், பய­மு­றுத்தல், கெடுத்தல், சுரண்­டிப்­பி­ழைத்தல், உணர்ச்சி ரீதி­யான துலங்­கலை மறுத்தல் மற்றும் சூழ­லுடன் இடைத்­தொ­டர்பை மேற்­கொள்ளும் சிறு­வர்­க­ளது பிர­யத்­த­னங்­க­ளுக்கு தண்­ட­னை­ய­ளித்தல் போன்ற செயற்­பா­டுகள் உணர்ச்சி ரீதி­யி­லான சிறுவர் துஷ்­பி­ர­யோ­க­மாகக் கொள்­ளப்­ப­டு­கி­றது. இவ்­வ­கை­யான துஷ்­பி­ர­யோக செயற்­பா­டு­களும் பெரு­வா­ரி­யாக இடம்­பெற்­றுத்தான் வரு­கின்­றன.

ஒரு சிறு­வ­னுக்­கு­ரிய உடை, உணவு, சுகா­தாரம், பாது­காப்பு, மருத்­துவம், கல்வி போன்ற அடிப்­படைத் தேவைகள் மறுக்­கப்­ப­டு­கின்­ற­போது அச்­சி­றுவன் புறக்­க­ணிப்பு ரீதியி­லான துஷ்­பி­ர­யோ­கத்­திற்­குள்­ளா­கின்றான். அது­த­விர, சிறு­வர்கள் தொழி­லுக்கு அமர்த்­தப்­ப­டு­வதும் அதனால் ஏற்­ப­டு­கின்ற இறுக்­க­மான செயற்­பா­டு­க­ளு­ம்­கூட சிறுவர் துஷ்­பி­ர­யோக வடி­வங்­க­ளாகக் கரு­தப்­ப­டு­கின்­றன.

துஷ்­பி­ர­யோகம் பற்­றிய உண்­மை­யான தக­வல்­களை சிறு­வர்­க­ளுக்கு கற்­பித்தல் மற்றும் சிறு­வர்கள் துஷ்­பி­ர­யோ­கத்­தினால் இல­குவில் பாதிக்­கப்­படும் தன்­மையைக் குறைப்­ப­தற்கும் ஆரோக்­கி­ய­மான உற­வு­களை மேம்­ப­டுத்­து­வ­தற்கும் தேவை­யான திறன்­க­ளையும் பண்­பு­க­ளையும் அவர்­களில் விருத்தி செய்தல் அவ­சியம். இந்த அவ­சிய நட­வ­டிக்­கை­களில் பாட­சாலை மற்றும் தனியார் கல்வி நிறு­வன ஆசி­ரி­யர்­களின் வகி­பங்கு அளப்­ப­ரி­யது.

கல்விச் சமூ­கத்தின் கடப்­பாடு

18 வய­திற்குக் குறைந்­த­வர்­களே சிறு­வர்­களாகக் கரு­தப்­ப­டு­கி­றார்கள். இந்த வயதுச் சிறு­வர்­களே பாட­சாலை மாண­வர்­க­ளா­கவும் உள்­ளனர். நாடு பூரா­க­வு­முள்ள 10 ஆயி­ரத்­துக்கு மேற்­பட்ட பாட­சா­லை­களில் 40 இலட்­சத்­துக்­கு­ம­தி­க­மான மாண­வர்கள் கல்வி கற்­கி­றார்கள். இவர்­களின் கற்­பித்தல் நட­வ­டிக்­கை­க­ளுக்­காக ஏறக்­கு­றைய 2இல­ட்சத்து 30 ஆயிரம் ஆசி­ரி­யர்கள் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர். ஆனால், ஆசி­ரி­யர்கள் என்­ப­வர்­களின் பணி கற்­பித்தல் மாத்­திரம் என்­ப­தற்கு அப்பால் மாண­வர்­களின் ஏனைய விட­யங்­க­ளிலும் தாக்கம் செலுத்­து­வ­தாக இருக்­க­வேண்டும்.

மாண­வர்­களின் கல்வி, பரீட்சை அடைவு மட்­டங்­களை அதி­க­ரிப்­ப­தற்­கான நடவடிக்கைகள் பாடசாலைகளிலும் தனியார் கல்வி நிறுவனங்களிலும் ஆசிரியர்களினால் முன்னெடுக்கப்படுவதுடன் மாணவர்களின் ஆளுமை, ஆற்றல், திறன் விருத்தி அவர்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு விடயங்களிலும் நல்ல ஆலோசனைகள் பாடசாலைகளிலும் தனியார் கல்வி நிறுவனங்களிலும் வழங்கப்படுவது காலத்தின் தேவையாகவுள்ளது.

குறிப்பாக சமகாலத்தில் மாணவர்கள் துஷ்பிரயோகங்களுக்கு உட்படுவது அதிகரித்துள்ளது. 25 மாவட்டங்களிலும் சிறுவர் துஷ்பிரயோக நடவடிக்கை தொடர்பான முறைப்பாடுகள் பதியப்பட்டுள்ளதுடன், கொழும்பு மாவட்டத்தில்தான் அதிகளவிலான முறைப்பாடுகள் பதியப்பட்டுள்ளதாக தரவுகள் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது.

சிறுவர்கள் என்பவர்கள் பாடசாலை மாணவர்கள் எனக் கருதி அவர்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும், தைரியமாக முன்னோக்கிச் செல்வதற்காக அவர்களைப் பலப்படுத்த வேண்டிய கடப்பாடும் கல்விச் சமூகத்தில் முக்கிய தூணாகக் கருதப்படுகின்ற ஆசிரியர்களுக்குண்டு.

அத்துடன் சிறுவர் துஷ்பிரயோக செயற்பாடுகளிலிருந்து மாணவர்கள் எவ்வாறு தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆலோசனைகளும் விழிப்புணர்வும் பாடசாலைகளில் முறையாகவும் தொடராகவும் வழங்கப்படுவது காலத்தின் கட்டாய செயற்பாடு எனக்கருதி அவற்றிற்கு முக்கியத்துவம் வழங்குவதன் மூலம் ஆசிரியர்கள் மாணவர்கள் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகுவதைத் தடுப்பதற்கான வகிபங்கை ஆற்ற முடியும்.

ஆனால் பயிரை வேலி மேய்ந்த சம்பவங்களாக சில ஆசிரியர்களால் மாணவர்கள் துஷ்பிரயோகத்திற்குள்ளான சம்பவங்களும் நாட்டில் இடம்பெறுவது துர்ப்பாக்கிய நிலை என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

சிறுவர்கள் துஷ்பிரயோகங்களுக்கு ஆளாகாமல் அவர்களை பாதுகாப்பதற்கும் அவர்கள் ஆளுமையோடு தங்களது பணிகளை அச்சமின்றி முன்கொண்டு செல்வதற்கும், பலப்படுத்தப்படுவதற்கும் ஒவ்வொரு தரப்பினரும் தமது கடப்பாடாகக் கருதிச் செயற்பட முன்வருவதன் மூலமே ஒவ்வொரு வருடமும் அனுஷ்டிக்கப்படும் சிறுவர் தினத்தை அர்த்தமுள்ளதாக்க முடியும். இல்லையேல், தினமும் சிறகுடைந்த சிட்டுக்களாக மாறும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்லும் என்பதைத் தவிர்க்கமுடியாது.
-Vidivelli