Verified Web

தொடர் முரண்பாடுகள் தீர்வுகளை தராது

22 days ago Administrator

எமது  நாட்டில்  தற்­போது 1951 ஆம் ஆண்டின் 13 ஆம்  இலக்க  முஸ்லிம்  விவாக, விவா­க­ரத்து சட்­டமே  அமுலில் இருக்­கி­றது. இச்­சட்­டத்தில் மேற்­கொள்ள வேண்­டிய தேவை­யான  திருத்­தங்­களை சிபா­ரிசு செய்­வ­தற்கு  2009  ஆம் ஆண்டு   அப்­போ­தைய  நீதி­ய­மைச்சர்  மிலிந்த  மொர­கொ­ட­வினால் குழு­வொன்று  நிய­மிக்­கப்­பட்­டது.

18 பேர் கொண்ட இக்­கு­ழுவின் தலை­வ­ராக ஓய்­வு­பெற்ற நீதி­ய­ரசர் சலீம் மர்சூப் நிய­மிக்­கப்­பட்டார். உறுப்­பி­னர்­க­ளாக நீதி­ப­திகள், சிரேஷ்ட சட்­டத்­த­ர­ணிகள் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் தலைவர், செய­லாளர் மற்றும் முஸ்லிம் பெண்கள் செயல் ஆராய்ச்சி முன்­ன­ணியின் பிர­தி­நி­திகள் நிய­மிக்­கப்­பட்­டி­ருந்­தனர்.

முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தில் திருத்­தங்­களைச் சிபா­ரிசு செய்­வ­தற்­கான நிய­மிக்­கப்­பட்ட குழு கடந்த 8 ½ வருட கால­மாக கலந்­து­ரை­யா­டல்­களை நடத்தி அறிக்­கையைத் தயா­ரித்­தது. அறிக்கை சில மாதங்­க­ளுக்கு முன்பே நீதி­ய­மைச்சர் தலதா அத்­து­கோ­ர­ள­விடம் கைய­ளிக்­கப்­பட்­டது.

அறிக்கை நீதி­ய­மைச்­ச­ரிடம் கைய­ளிக்­கப்­பட்­டதன் பின்பே திருத்தம் தொடர்பில் சலீம் மர்சூப் தலை­மையில் நிய­மிக்­கப்­பட்ட குழு இரண்­டாகப் பிள­வு­பட்டு சிபா­ரி­சு­களை முன்­வைத்­தி­ருப்­பது வெளிச்­சத்­துக்கு வந்­தது. குழுவின் அங்­கத்­த­வர்கள் சலீம் மர்­சூபின் தலை­மை­யிலும், ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி பாயிஸ் முஸ்­தபா தலை­மை­யிலும் இரண்­டாகப் பிள­வு­பட்­டி­ருந்­தனர்.

சலீம் மர்சூப் தலை­மை­யி­லான குழுவின் சிபா­ரி­சு­களில் 10 விட­யங்­களில் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல்  உல­மாவின் உறுப்­பி­னர்கள் அடங்­கிய பாயிஸ் முஸ்­தபா தலை­மை­யி­லான குழு­வினர் முரண்­பட்ட சிபா­ரி­சு­களை முன்­வைத்­தி­ருந்­தனர். இவற்றில் பெண்­களின் திரு­மண வய­தெல்லை, பல­தார மணம், பெண் காதி­ நி­ய­மனம் என்­பவை குறிப்பிடத்தக்கவை.

இரு­வே­று­பட்ட சிபா­ரி­சு­களால் நீதி­ய­மைச்சர் சிர­மத்­துக்­குள்­ளானார். அறிக்­கையை அவரால் பாரா­ளு­மன்­றத்­துக்கு சமர்ப்­பிக்க முடி­யா­மற்­போ­னது. இரு பிரி­வி­ன­ரையும் ஒரே நேரத்தில் அழைத்து இணக்­கப்­பாட்­டுக்கு வரு­வ­தற்கு  அமைச்சர் தலதா அத்­து­கோ­ரள முயற்­சித்தார். அவரால் முடி­யா­மற்­போ­னது.

அண்­மையில் நீதி­ய­மைச்சர், முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை இது தொடர்பில் கலந்­து­ரை­யா­ட­லொன்­றுக்கு அழைத்­தி­ருந்தார். ஆனால் 21 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களில் 11 பேரே அதில் கலந்து கொண்­டனர். சமூகம் தொடர்­பான விட­யங்­களில் எமது பிர­தி­நி­திகள் அக்­க­றை­யின்றி இருப்­பதை இது உறு­திப்­ப­டுத்­து­கி­றது.

இவ்­வா­றான நிலை­மையில் முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தில் திருத்­தங்கள் தொடர்ந்தும் கால­தா­ம­த­மாகி வரு­கின்­றன. நீதி­ய­மைச்­ச­ரினால் அறிக்­கையை பாரா­ளு­மன்றில் சமர்ப்­பிக்க முடி­யாத நிலை ஏற்­பட்­டுள்­ளது. குழு அங்­கத்­த­வர்கள் ஒன்­று­பட்டு ஒரு­மித்த கருத்தை எட்­டி­னாலே அமைச்­ச­ரினால் அறிக்­கையை பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்க முடியும்.

இதே­வேளை, முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தில் திருத்த விவ­காரம் இன்று நாட்டில் சூடு­பி­டித்­துள்­ளது. பிள­வு­பட்­டுள்ள குழுக்கள் இரண்டும் ஏட்­டிக்குப் போட்­டி­யாக கருத்­து­களை வெளி­யிட்டு வரு­கின்­றன.

புனி­த­மான பள்­ளி­வா­சல்­களை விமர்­சிக்­கி­றார்கள். மத்­ஹ­புகள் விமர்­சிக்­கப்­ப­டு­கின்­றன. உலமா சபை விமர்­சிக்­கப்­ப-­டு­கி­றது. உரிமைகளுக்காக போராடும் பெண்கள் அமைப்புகள் விமர்சிக்கப்படுகின்றன. உல­மாக்கள் சந்­திக்கு இழுக்­கப்­ப­டு­கி­றார்கள். இவ்­வா­றான சூழ்­நி­லையில் நிலைமை தீவி­ர­ம­டை­வ­தற்கு முன்பு சுமு­க­மான தீர்­மா­னங்கள் எட்­டப்­பட வேண்டும்.

கருத்து முரண்­பா­டு­க­ளைக்­ க­ளை­வ­தற்கு தூய மசூராக்கள் இடம்பெறவேண்டும். சமூகத்தின் அரசியல் தலைவர்களும், புத்திஜீவிகளும், சிவில் சமூக அமைப்புகளும் இதுவிடயத்தில் விரைந்து செயற்பட வேண்டும்.

நாம் எமக்குள்ளே முரண்பட்டுக் கொண்டால்  எமது நாட்டில் காதி நீதிமன்ற கட்டமைப்பே இல்லாமற் செய்யப்பட்டுவிடலாம். எனவே இதுவிடயத்தில் துரிதமாக இயங்க வேண்டியது சமூகத்தின் பொறுப்பாகும் என்பதை வலியுறுத்த விரும்புகிறோம்.
-Vidivelli