Verified Web

தாங்கிப் பிடிக்க ஆள் இருந்தால் தூங்கித் தூங்கி விழுமாம் பிள்ளை

2018-09-25 05:39:30 Administrator

இஸ்­மாயில் ஸலபி

இலங்கை ஒரு சின்னத் தீவாகும். இந்த அழ­கிய சின்­னஞ்­சிறு தீவை பயங்­க­ர­வா­தமும், இன­வா­தமும் அழித்து வந்­தது போதா­தென்று இன்று அத­னுடன் போதை­வஸ்தும் கைகோர்த்­துள்­ளது. இலங்­கையின் திறந்த பொரு­ளா­தாரக் கொள்கை, சுற்­று­லாத்­து­றையின் வளர்ச்சி என்­ப­வற்­றுடன் இலங்கை சர்­வ­தேச போதைக் கடத்தல் மாபி­யாக்­களின் மத்­திய தள­மாக மாறி வரு­கின்­றதோ என்று ஐயப்­படும் நிலை உரு­வா­கி­யுள்­ளது.

1981 மே 26 இல் 70 கிராம் ஹெரோயின் இலங்­கையில் கைப்­பற்­றப்­பட்­டது. இன்று நூற்­றுக்­க­ணக்­கான கிலோ போதை வஸ்த்­துக்கள் கைப்­பற்­றப்­படும் நிலைக்கு சென்­றுள்­ளது. யுத்­தத்­திற்குப் பின்­ன­ரான சமா­தான சூழலில் கடந்த மூன்று வரு­டங்­களில் சுமார் 2500 கிலோ போதை வஸ்­துக்கள் கைப்­பற்­றப்­பட்­டுள்­ள­தாகத் தக­வல்கள் கூறு­கின்­றன.

போதைக்கு எதி­ரான பிர­சாரம், அதைத் தடுப்­ப­தற்­கான சட்ட நட­வ­டிக்­கைகள் இருந்தும் போதைக்­க­டத்தல் கொடி­கட்டிப் பறக்­கின்­றது என்றால் இதற்குப் பின்னால் அர­சியல் தலை­மைகள், அதி­கார வர்க்கம் இல்­லா­ம­லி­ருக்க முடி­யாது. அமைச்­சர்கள், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் வாக­னங்­களே போதை­வஸ்துக் கடத்­த­லுக்குப் பயன்­ப­டுத்­தப்­ப­டு­வ­தாக அர­சியல் தலை­மை­களே கூறி வரு­கின்­றன.

போதைப் பொருட்­களை வியா­பாரம் செய்யும் சாதா­ரண கூலிகள் கைது செய்­யப்­ப­டு­வதால் இந்த நாச­கார செயலை நிறுத்­தி­விட முடி­யாது. ஆணி­வேர்கள் அடை­யாளம் காணப்­பட்டு வேரடி மண்­ணோடு பிடுங்­கப்­பட வேண்டும். அதைச் செய்யும் சக்தி ஆளும் வர்க்­கத்­திற்கு இருக்­குமா என்­பது ஐயமே!

அடுத்து மது, போதை தொடர்­பான நிலை­யான சரி­யான ஒரு பார்வை தேவை­யாகும். சட்­ட­ரீ­தி­யான மது­பானம், சட்­ட­வி­ரோத மது­பானம் என்ற எந்த பேத­மு­மின்றி எல்லா மது வகை­களும் ஆபத்­தா­னதே! அழிவை ஏற்­ப­டுத்தக் கூடி­யதே!

எனவே, சட்­ட­பூர்வ மது­பான சாலை­களும் தடை­செய்­யப்­பட வேண்டும். இது நடக்­கு­மெனக் கன­வு­கூட காண­மு­டி­யாத நிலைதான் உள்­ளது.

ஆளும் வர்க்கம் மது­வுக்கு வரி விதித்து அந்த வரி­யி­னூ­டாக தேச நலனை, அரச செலவை நிறைவு செய்ய நினைக்­கின்­றது. இப்­படி இருக்­கும்­போது போதை­வஸ்துப் பேயி­ட­மி­ருந்து நாட்டைக் காப்­பது எவ்­வாறு?

போதை­யற்ற தேசம் என்ற கோஷத்­தோடு ஆட்­சி­பீடம் ஏறு­கின்­ற­வர்கள் அதி­காரக் கட்­டிலில் அமர்ந்­த­பின்னர் புதிய மது­பான உற்­பத்தி நிலை­யங்­க­ளுக்கும் சாராயக் கடை­க­ளுக்கும் அனு­மதி (லைசன்ஸ்) கொடுக்­கின்­றனர். பெரும்­பாலும் எமது அர­சியல் தலை­வர்­களின் கைக­ளில்தான் அதிக சாராயக் கடைகள் உள்­ளன. எமது நாட்டில் இயங்கும் மது­பான சாலை­களில் 65% வீத­மா­னவை சட்­ட­வி­ரோ­த­மா­னவை என்று கூறப்­ப­டு­கின்­றது பகி­ரங்­க­மாக இயங்கும் மது­பா­ன­சா­லை­களின் நிலையே இது­வென்றால் சட்­ட­வி­ரோத போதை­வி­யா­பா­ரத்தின் நிலையை என்­ன­வென்று சொல்­வது? அதை எப்­படிக் கட்­டுப்­ப­டுத்­து­வது?

ஆபத்­தான, கடு­மை­யான போதைப் பாவ­னை­யி­லி­ருந்து மக்­களைக் காக்க மென்­மை­யான போதை­களை சில நாடுகள் தாரா­ள­ம­ய­மாக்­கு­கின்­றன. இதனால் சமூ­கத்தில் மது­வுக்கு அடி­மை­யா­கா­த­வர்­களும் அடி­மை­யாகும் நிலைதான் உரு­வா­கு­கின்­றன. தமி­ழ­கத்தில் டாஸ்மார்க் கடைகள் கண்ட கண்ட இடங்­களில் எல்லாம் திறக்­கப்­பட்­டன. இதனால் பள்ளி மாண­வ-­மா­ண­வியர் கூட பள்ளிச் சீரு­டை­யு­ட­னேயே டாஸ்மார்க் கடை­க­ளுக்கு முன்னால் வரி­சையில் நிற்கும் நிலைதான் உரு­வா­னது.

மது­பான வரி­யினால் ஓர­ளவு நிதி கிடைக்­கலாம். ஆனால், அதை­விட அதிக செல­வு­களை போதை ஏற்­ப­டுத்தும். இன்று சிறையில் இருப்­ப­வர்­களில் 38%மான­வர்கள் போதை தொடர்­பான குற்றச் செயல்­க­ளுடன் சம்­பந்­தப்­பட்­ட­வர்கள். இவர்­களைப் பரா­ம­ரிக்க அரசு செல­வ­ழிக்­கின்­றது. போதையால் வைத்­திய சாலையில் அரை­வாசி இடம் ஆக்­கி­ர­மிக்­கப்­ப­டு­கின்­றது. அதற்கும் செல­வ­ழிக்க வேண்­டி­யுள்­ளது.

இன்று ஏற்­படும் விபத்­துக்­களில் 50% இற்கும் அதி­க­மா­னவை போதையால் ஏற்­ப­டு­வ­தாகும். இதனால் உயிர், உடைமை இழப்­புகள் ஏற்­ப­டு­கின்­றன. இவ்­வாறே இன்­றைய குற்றச் செயல்­களில் அதி­க­மா­ன­வை­க­ளுக்குப் பின்­ன­ணி­யாக போதைப் பாவனை இருப்­பதை அவ­தா­னிக்க முடி­கின்­றது.

எனவே, போதையால் வரி­யாக 10 வந்தால் அதனால் ஏற்­படும் இழப்­புக்கள் மூலம் 50 போய்­விடும். வரு­வது மதுவால் என்­பது தெளி­வாகத் தெரி­வதால் இலாபம் விளங்­கு­கின்­றது. போவது போதையால் என்­பது தெளி­வாகத் தெரி­யாத கார­ணத்­தினால் இழப்பு புரி­வ­தில்லை.

‘நம்­பிக்கை கொண்­டோரே! மதுவும், சூதாட்­டமும், (வணக்­கத்­திற்­காக) நடப்­பட்­ட­வை­களும், குறி­பார்க்கும் அம்­பு­களும் ஷைத்­தானின் அரு­வ­ருக்­கத்­தக்க செய­லி­லுள்­ள­வை­க­ளாகும். எனவே, நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு அதைத் தவிர்ந்து கொள்­ளுங்கள்.’ (9:90)

போதை, ஷைத்­தானின் அரு­வ­ருக்­கத்­தக்க செய­லாகும். அதை விட்டும் விலகிக் கொண்டால் வெற்­றி­யுண்­டென இந்த வசனம் கூறு­கின்­றது. எனவே, முழு­மை­யாகப் போதை­யி­லி­ருந்து நாட்டைப் பாது­காக்கும் நட­வ­டிக்­கைதான் முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும்.

போதை­யி­லி­ருந்து நாட்டைப் பாது­காப்­ப­தென்றால் முழு­மை­யான மது­பா­னத்­தடை அமு­லுக்குக் கொண்­டு­வ­ரப்­பட வேண்டும். அதை உட­ன­டி­யாகச் செய்ய முடி­யா­துதான். ஆனால் கட்டம் கட்­ட­மாக அந்த இலக்கை நோக்கிப் பய­ணிக்க வேண்டும்.

இதே­வேளை, மதுப் பாவ­னைக்கு எதி­ரான விழிப்­பு­ணர்­வுகள் சகல மட்­டத்­திலும் முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும். அண்­மைக்­கா­ல­மாக மாட்­டி­றைச்சி உண்­ப­தற்கு எதி­ராக பௌத்த, ஹிந்து அமைப்­புக்­களால் பிர­சா­ரங்கள் மேற்­கொள்­ளப்­பட்­டன. இது சிங்­கள மக்கள் மத்­தியில் ஒரு பாரிய தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யது என்­பதை யாராலும் மறுக்க முடி­யாது. அதி­கா­ரத்தில் இருப்­ப­வர்கள் கூட இதற்கு ஒத்­து­ழைப்­புக்கள் வழங்­கினர். இலங்கை ஆழ­மான மத நம்­பிக்­கை­யு­டைய மக்­களைக் கொண்ட நாடு. இங்கே மத­கு­ருக்கள் குறிப்­பாக பௌத்த துற­விகள் பெரிதும் மதிக்­கப்­ப­டு­கின்­றனர். இந்து, பௌத்த மதங்­களும் கிறிஸ்­த­வமும் இஸ்­லாமும் மது, போதைப் பாவ­னையை முற்­றாக எதிர்க்­கின்­றன. மாட்­டி­றைச்சி உண்­ணுதல், ஹலால் இலச்­சினை, ஹிஜாப் போன்ற விட­யங்கள் தொடர்பில் பாரிய பிர­சா­ரங்­களை மேற்­கொண்டு மக்கள் மனதில் இது­பற்­றிய விரோத, குரோத எண்­ணத்தை மத­கு­ருக்­களால் விதைக்க முடியும் என்றால் அனை­வரும் ஒன்­றி­ணைந்து மது­வுக்கு எதி­ரான பிர­சா­ரத்தை ஏன் முன்­னெ­டுக்க முடி­யாது? அப்­படிப் பிர­சாரம் செய்தால் நிச்­சயம் ஓர் பாரிய மாற்­றத்தை உண்­டு­பண்­ணு­வது சிர­ம­மா­காது.

அமெ­ரிக்­காவில் போதைப்­பொருள் உப­யோ­கிப்­பதைக் கண்­கா­ணிக்கும், ‘கல்விக் கழகம்’ (Monitoring Institute of Drug abuse Monitoring Future) மாண­வர்­க­ளுக்கு மத்­தியில் ஏற்­ப­டுத்­திய விழிப்­பு­ணர்வுப் பிர­சா­ரங்கள் போதைப் பாவ­னையில் சரிவை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. இதை ஒரு முன்­மா­தி­ரி­யாகக் கொள்ள வேண்டும்.

அடுத்து, போதைப் பாவ­னைக்கும் கடத்­த­லுக்கும் கடத்­த­லுக்கு உடந்­தை­யாக இருக்கும் நட­வ­டிக்­கை­க­ளுக்கும் எதி­ராக கடு­மை­யான தண்­ட­னைகள் வழங்­கப்­பட வேண்டும். அதி­கா­ரிகள் தவறும் பட்­சத்தில் இட­மாற்றம் தண்­ட­னை­யாக அமை­யாது. அதி­கா­ரத்தைத் துஷ்­பி­ர­யோகம் செய்­ப­வர்கள் பணி­நீக்கம் செய்­யப்­பட வேண்டும். அத்­துடன் அவ­ரது அரச உத்­தி­யோ­கத்தின் வரப்­பி­ர­சா­தங்கள் இரத்துச் செய்­யப்­பட வேண்டும். அர­சியல் தலை­வர்கள் இதில் ஈடு­பட்டால் அவர்­க­ளது அமைச்சுப் பொறுப்­புக்கள் பறி­முதல் செய்­யப்­ப­டு­வ­தோடு பாரா­ளு­மன்ற உறுப்­பு­ரி­மையும் பறி­முதல் செய்­யப்­பட வேண்டும். இப்­ப­டிப்­பட்ட தண்­ட­னைகள், நட­வ­டிக்­கைகள் இல்­லா­த­பட்­சத்தில் இக்­குற்றச் செயல்­களைக் குறைக்க முடி­யாது.

வெறும் சிறைச்­சாலை என்­பது உண்­மை­யான தண்­ட­னை­யாக அமை­யாது. சிறையில் அவர்­க­ளுக்குத் தேவை­யான அனைத்தும் கிடைக்­கின்­றன. சிறைக்­குள்­ளி­ருந்­த­வாறே புதிய போதைக் கடத்­த­லுக்­கான திட்­டங்­களைத் தீட்டி நடை­மு­றைப்­ப­டுத்­திய சம்­ப­வங்­களும் நடந்­துள்­ளன. உள்ளே இருந்­து­கொண்டு புதிய புதிய யுக்­தி­களைக் கற்றுக் கொள்­கின்­றனர். புதிய குற்­ற­வா­ளி­களை உரு­வாக்கும் நிலை­யங்­க­ளாக இன்­றைய சிறைச்­சா­லைகள் மாறி­யுள்­ளன. இந்த வகையில் பாரிய போதைக் கடத்­தல்­களில் ஈடு­ப­டு­கின்­ற­வர்­க­ளுக்கு மரண தண்­டனை கொடுக்கும் தீர்­மா­னங்­களை சில நாடுகள் எடுத்­துள்­ளன. அமெ­ரிக்க ஜனா­தி­ப­தி­கூட இந்தக் கருத்தைக் கூறி­யுள்ளார்.

ஈரான் மீன்­பிடிக் கப்பல் மூலம் பாகிஸ்­தா­னி­லி­ருந்து இலங்­கைக்குக் கடத்­தி­வ­ரப்­பட்ட 110 கோடி பெறு­ம­தி­யான ஹெரோ­யி­னுடன் 14 வெளி­நாட்­ட­வர்கள் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். இதில் 10 பேர் ஈரா­னியர், ஒருவர் பாகிஸ்­தா­னியர், இருவர் இந்­தியர், ஒருவர் சிங்­கப்பூர் முன்னாள் பொலிஸ் அதி­காரி ஆகியோர் உள்­ள­தாகக் கூறப்­ப­டு­கின்­றது.

இத்­த­கைய கடத்­தல்­கா­ரர்­களால் நாட்டின் பொரு­ளா­தாரம், சமூகக் கட்­ட­மைப்பு, ஆரோக்­கியம், கல்வி போன்ற அனைத்­துமே சீர­ழி­கின்­றன. இத்­த­கை­ய­வர்­க­ளுக்கு மரண தண்­டனை அளிப்­பதில் என்ன தவறு உள்­ளது?

இதே­நேரம் இந்த வெளி­நாட்­ட­வர்கள் இதை இங்கே கொண்டு வந்­தார்­க­ளென்றால் இவர்­க­ளுடன் தொடர்­பு­பட்ட இலங்கை போதை மாபி­யாக்கள் யார் என்­பது கண்­ட­றி­யப்­ப­டா­விட்டால் இவர்­களைக் கொன்­றாலும் இந்தக் கொடூரம் குறையப் போவ­தில்லை.

எனவே, பக்­கச்­சார்­பில்­லாத சட்­டத்தின் முன் அனை­வ­ரையும் சம­மாகப் பார்க்கும் நீதி­யான பார்வை தேவை.

அத்­துடன் போதையைத் தூண்டும் விளம்­ப­ரங்கள், சினி­மாக்கள், நிகழ்­வுகள் தடுக்­கப்­பட வேண்டும். இவற்றைச் செய்­யா­விட்டால் வித்யா, ரெஜினா போன்ற மொட்­டுக்கள் சிதைக்­கப்­ப­டு­வ­தையும் கொடூ­ர­மான கொலைகள், குற்றச் செயல்கள் பெரு­கு­வ­தையும் தவிர்க்க முடி­யாது.

எனவே, முறை­யான தேசிய மதுபானக் கொள்கையொன்று வகுக்கப்பட்டு எந்த அரசு வந்தாலும் அதில் மாற்றம் செய்யாமல் நிரந்தரமான முழுமையான மதுத்தடை என்ற இலக்கை நோக்கி நாட்டை நகர்த்துவதற்கான முன்னெடுப்புக்களை ஆளும் வர்க்கம் துவக்க வேண்டும்.

போதை தொடர்பான குற்றச் செயல்களுடன் தொடர்புபட்ட சிலருக்கு மரணதண்டனை வழங்குவது தொடர்பான கருத்தாடல் இதில் ஒரு கட்டமாக அமையட்டும்!

மனித உரிமை அமைப்புக்களும் கொல்லாமைக் கோட்பாடு கொண்ட ஆன்மீகத் தலைமைகளும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அளிப்பதைக் கண்டிக்கலாம். பாரிய குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை அளிப்பது அவசியமாகும். "தாங்கிப்பிடிக்க ஆளிருந்தால் பிள்ளை தூங்கித் தூங்கி விழும்" என்பார்கள். குற்றவாளிகள் மீது காட்டும் அன்பு அவர்களை மீண்டும் மீண்டும் குற்றம் செய்யவும் புதிய குற்றவாளிகள் உருவாகவுமே இடமளிக்கும்.

எனவே, அளிக்கும் தண்டனை கடுமையாகவும் குற்றவாளிகளுக்குக் கொடுக்கப்படும் தண்டனை அவர்களுக்குப் பாரிய இழப்பை ஏற்படுத்துவதுமாக அமைய வேண்டும்.
-Vidivelli