Verified Web

அரசியல் இலாபம் தேட வேண்டாம்

2018-09-19 02:20:06 MM.Minhaj

பொது வேட்­பா­ள­ராகக் கள­மி­றங்­கும்­போது மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் பாது­காப்பு நீக்­கப்­பட்­ட­போது யார் குரல் கொடுத்­தது. அப்­போது அமை­தி­யாக இருந்­த­வர்­க­ளுக்குத் தற்­போது ஜனா­தி­ப­தியின் மீது ஏன் இவ்­வ­ளவு அக்­கறை ஏற்­பட்­டுள்­ளது. ஜனா­தி­பதி மற்றும் முன்னாள் பாது­காப்பு கோத்­தா­பய ராஜபக் ஷ கொலை சதித்­திட்டம் தொடர்பில் விசா­ரணை முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றது. இந்த சந்­தர்ப்­பத்தில் இர­க­சிய தக­வல்கள் எத­னையும் எம்மால் வெளி­யிட முடி­யாது. விசா­ரணை முடிந்த பின்­னரே உறு­தி­யான தக­வல்­களை கூற முடியும். ஆகவே இந்த விவ­கா­ரத்தை வைத்து அர­சியல் இலாபம் தேட வேண்­டா­மென பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க சபையில் வலி­யு­றுத்­தினார்.

அத்­துடன் முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­தா­பய ராஜபக் ஷவுக்கு அச்­சு­றுத்தல் இருப்பின் பாது­காப்பு வழங்­கு­மாறு கோர முடியும்  என்றும் அவர் குறிப்­பிட்டார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­தா­பய ராஜபக் ஷ ஆகி­யோரை கொலை செய்யும் சதித்­திட்டம் தொடர்­பாக நிலை­யியற் கட்­டளை 27 இன் 2 கீழ் கூட்டு எதி­ரணிப் பாரா­ளு­மன்ற குழுவின் தலைவர் தினேஷ் குண­வர்­தன எம்.பி. எழுப்­பிய கேள்­வி­யை­ய­டுத்து எழுந்த சர்ச்­சை­யின்­போது பதி­ல­ளிக்­கை­யி­லேயே பிர­தமர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

தினேஷ் குண­வர்­த­னவின் கேள்­வி­யை­ய­டுத்து எழுந்த சர்ச்­சையின் போது சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரன்ஜித் மத்­தும பண்­டா­ரவே பதில் வழங்­கினார். இதன்­போது சபையில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க வீற்­றி­ருந்தும் எழுந்து பதி­ல­ளிக்க முன்­வ­ர­வில்லை. இந்த சந்­தர்ப்­பத்தில் எழுந்த கூட்டு எதி­ரணி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சிசிர ஜய­கொடி கூறும்­போது, பாரா­ளு­மன்­றத்தில் வேறு கேள்­விகள் எழுப்­பப்­ப­டும்­போது பொலிஸ் மா அதி­பரை போன்று கிண்­ட­ல­டித்­துக்­கொண்டு பதி­ல­ளிக்கும் பிர­தமர், பெரும் பாரா­தூ­ர­மான பிரச்­சினை தொடர்பில் தற்­போது  கேள்வி எழுப்­பும்­போது எழுந்து பதி­ல­ளிக்­காமல் அமை­தி­யாக சபையில் வீற்­றி­ருக்­கின்றார். ஏன் பதி­ல­ளிக்­காமல் உள்ளார் என்றார்.

இத­னை­ய­டுத்து எழுந்து பதி­ல­ளித்த பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க,

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­தா­பய ராஜபக் ஷ ஆகி­யோரைக் கொலை செய்ய சதித்­திட்டம் தீட்­டி­யமை தொடர்­பாக வெளி­வந்த தக­வல்கள் தொடர்பில் தற்­போது தீவிர விசா­ரணை முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. இவ்­வா­றான பார­தூ­ர­மான விசா­ர­ணை­யொன்று முன்­னெ­டுக்­கும்­போது அது தொடர்­பான அனைத்து தக­வல்­க­ளையும் வெளி­யிட முடி­யாது. இர­க­சிய தக­வல்­களை பாது­காக்க வேண்டும்.  சாட்­சி­யங்­களை பாது­காக்க வேண்டும்.

எனவே, தற்­போது குற்றப் புல­னாய்வுப் பிரி­வினால் விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. சுயா­தீ­ன­மான முறையில் விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­படும்.

அத்­துடன் இந்த சந்­தர்ப்­பத்தில் ஜனா­தி­பதி மீது அக்­கறை கொண்டு தினேஷ் குண­வர்­தன இந்தக் கேள்­வியை எழுப்­பி­யமை குறித்து நான் சந்­தோ­ஷப்­ப­டு­கின்றேன். எனினும், ஜனா­தி­பதி தேர்­தலின் போது பொது வேட்­பா­ள­ராக  மைத்­தி­ரி­பால சிறி­சேன கள­மி­றங்­கி­ய­போது அப்­போது அவ­ரது பாது­காப்­புகள் அனைத்தும் நீக்­கப்­பட்­டன. அப்­போது இங்­கி­ருந்­த­வர்­களில் யார் குரல் கொடுத்­தனர். அப்­போது குரல் கொடுக்­கா­த­வர்கள் தற்­போது ஜனா­தி­ப­தியின் மீது ஏன் இவ்­வ­ளவு அக்­கறை செலுத்­து­கின்­றனர். அதனை நினைக்­கும்­போது ஆச்­ச­ரி­ய­மா­கவே உள்­ளது.

எனினும், ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் பாது­காப்பில் நாம் அக்­கறை கொண்­டுள்ளோம். அவ­ருக்­கான பாது­காப்­புகள் விஸ்­த­ரிக்­கப்­பட்­டுள்­ளன. எனினும் முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­தா­பய ராஜபக் ஷவினால் தனக்குப் பாது­காப்பு வழங்­கு­மாறு கோரினால் அவ­ருக்­கான பாது­காப்­புகள் வழங்­கப்­படும்.

இந்த சபையில் ஜனா­தி­ப­தியின் பாது­காப்பு தொடர்பில் பேச ஆரம்­பித்­த­வர்கள் தற்­போது பொலிஸ்மா அதிபர் வரை வந்­துள்­ளனர். பொலிஸ்மா அதி­ப­ரிடம் குறைபாடுகள் இருக்கலாம். இந்த சம்பவத்தில் அவரது வகிபாகம் தொடர்பு உள்ளதா என்பது இறுதியில் தெரியவரும்.

எவ்வாறாயினும் இது தொடர்பான விசாரணைகளை செய்யுமாறு ஜனாதிபதி, சட்டமா அதிபர் ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர். நானும் வெளிநாட்டிலிருந்து வந்த கையோடு பொலிஸ் மா அதிபரிடம அறிக்கை கோரியுள்ளேன். ஆகவே எம்மால் தற்போது ஒன்றும் கூறமுடியாது. விசாரணைகள் நிறைவடைந்த பின்னரே எதனையும் கூறமுடியும் என்றார்.
-Vidivelli