Verified Web

பொலிஸ் அலுவலரைக் கொன்ற குற்றச்சாட்டில் ஏழு பேருக்கு சவூதி நீதிமன்றம் தண்டனை

30 days ago M.I.Abdul Nazar

பொலிஸ் அலு­வ­லரைக் கொன்ற குற்­ற­சாட்­டின்­பேரில் சவூதி அரே­பிய விஷேட குற்­ற­வியல் நீதி­மன்றம் ஏழு பேருக்கு ஆரம்­ப­கட்ட தண்­ட­னை­யினை கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை அறி­வித்­தது.

சவூதி அரே­பி­யாவை சேர்ந்த ஒரு நபர் அலு­வ­லரின் கார் மீது 30 தட­வைகள் துப்­பாக்கிப் பிர­யோகம் மேற்­கொண்­ட­மைக்­காக குற்­ற­வா­ளி­யாகக் காணப்­பட்­ட­தோடு ஏனையோர் தகவல் தெரி­விக்­காமை மற்றும் விசா­ர­ணை­யினை தவ­றாக வழி­ந­டத்­தி­ய­மைக்­காகக் குற்­ற­வா­ளி­க­ளாகக் காணப்­பட்­டனர்.

தீவி­ர­வாதக் கொள்­கை­யினைப் பின்­பற்­றிய நபர்கள் இரா­ணுவ அதி­கா­ரி­களை இலக்­கு­வைக்­கு­மாறு  ஐ.எஸ். அமைப்பின் அறி­வு­றுத்­த­லுக்­க­மை­வாக மேற்­கொண்ட நட­வ­டிக்­கையின் விளைவே இக்­கொலைச் சம்­ப­வ­மாகும்.

கொலை­யினை மேற்­கொண்ட சவூதி நாட்­ட­வ­ருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதோடு ஏனைய ஆறு பேருக்கும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-Vidivelli