Verified Web

தோப்பூர்: ஒரு வரலாற்றுப் பார்வை

30 days ago Administrator

ஏ.ஆ. லாபீர்,

உதவிக் கல்விப் பணிப்பாளர்,
வலயக் கல்வி அலுவலகம்,
மூதூர்

 

கிழக்கு மாகா­ணத்தின் திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் மூதூ­ருக்கு தென்­கி­ழக்­காக அமைந்­துள்ள ஒரு முஸ்லிம் பட்­டினம் தோப்பூர். இங்கு முஸ்­லிம்கள் பெரும்­பான்­மை­யாக வாழ்­கி­றார்கள். இதன் எல்­லை­க­ளாக தெற்கே சேரு­வில, மேற்கே மட்­டக்­க­ளப்பு வீதி, வடக்கே 3ஆம் கட்டை மலை, கிழக்கே உள்­ளகக் கடல் என்­ப­வற்கை எல்­லை­க­ளாகக் கொண்டு இந்த ஊர் அமைந்­துள்­ளது. இந்த ஊரின் சிறப்­பம்­சங்­க­ளாக பழைமை வாய்ந்த முகைதீன் பள்­ளி­வாசல், சேகு டீ.டீ. கல்­லறை, அல்­ஹம்றா மகா வித்­தி­யா­லயம், அல்­லைக்­குளம் என்­ப­ன­வாகும். இது கிழக்கு மாகா­ணத்தில் அதி­கூ­டிய அரச ஊழி­யர்­களைக் கொண்ட ஒரு சிறிய பட்­டி­ன­மாகும். இங்கு வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு, விவ­சாயம், மீன்­பிடி, கால்­நடை வளர்ப்பு ஆகிய துறை­களில் வரு­மானம் ஈட்­டப்­ப­டு­கின்­றன. ஊரின் மத்­தியில் முஸ்­லிம்­க­ளுக்கு சொந்­த­மான சுமார் 70 கடைகள் உள்­ளன.

சிறிய பட்­டி­ன­மாக இருப்­பினும் இதன் எல்­லைகள் மிகப் பரந்து விரிந்­தது. இங்கு 15 பள்­ளி­வா­சல்கள் காணப்­ப­டு­கின்­றன. அவற்றுள் 10 ஜும்ஆ பள்­ளி­வா­சல்கள் அடங்­கு­கின்­றன. இதன் முத­லா­வது பள்­ளி­வாசல் உம­ன­கிரி எனப்­படும், உமர் நகரி பிர­தே­சத்­தி­லேயே அமைந்­தி­ருந்­தது. இது பள்­ளிக்­கு­டி­யி­ருப்­புக்கு பக்­கத்­தி­லுள்ள பொலிஸ் நிலைய சுற்­று­வட்­டத்தில் அமைந்­தி­ருந்­தது. இங்கு அமைக்­கப்­பட்ட 2ஆவது பள்­ளி­வாசல் சேகு டீ.டீ பள்­ளி­வாசல் என அழைக்­கப்­பட்­டது. மேலும் தோப்­பூரின் 3ஆவது பள்­ளி­வாசல் தற்­போது அமையப் பெற்­றி­ருக்கும் தோப்பூர் முகைதீன் பெரிய பள்­ளி­வா­ச­லாகும். இது 1818ஆம் ஆண்டு கட்­டப்­பட்­டது. தோப்­பூரின் ஆதி­வ­ர­லாற்றுக் குடி­யி­ருப்பு உம­ன­கிரி என அடை­யாளம் காணப்­பட்­டுள்­ளது. இங்­குள்ள வீடுகள் லயன் வீடு­களைப் போல தொடர் வீடு­க­ளாக முக்­கோண முகப்­பு­களை கொண்­ட­தாக காணப்­பட்­டன என வர­லாற்றுத் தேட­லி­லி­ருந்து கிடைக்­கப்­பெற்­றது.

தோப்­பூ­ரி­லுள்ள  பெரிய பள்­ளி­வா­சலில் பேஷ் இமா­மாக கேர­ளா­வி­லி­ருந்து மலை­யா­ளத்து லெப்பை என்­பவர் முத­லா­வ­தாகக் கட­மை­யாற்­றினார். பள்­ளி­வா­சலின் 1ஆவது மரைக்­கா­ராக கட்டை மரைக்கார் என்­பவர் கட­மை­யாற்­றினார்.

இலங்­கையின் வர­லாற்றுக் குறிப்­பின்­படி கண்டி மன்னன் 4000 முஸ்­லிம்­களை கிழக்கு மாகா­ணத்தில் குடி­யேற்­றினான் எனும் குறிப்­பு­க­ளுக்­க­மை­வாக செனரத் மன்னன் தோப்­பூரில் முஸ்­லிம்­களை குடி­யேற்­றினான் என்று சிலர் குறிப்­பி­டு­கின்­றனர். இக்­கா­லப்­ப­குதி 1618ஆம் ஆண்­டுக்கு சம­மா­னது.

மேலும் உமையா கலீ­பாக்­களின் கொடுங்­கோண்மை ஆட்சி கார­ண­மாக பாதிக்­கப்­பட்ட முஸ்­லிம்கள் கிழக்கு நாடு­க­ளுக்கு தப்­பிச்­சென்று குடி­யே­றினர். அந்­த­வ­கை­யிலே 1650ஆம் ஆண்டு எகிப்­தி­லி­ருந்து வெளி­யா­கிய 2 மரக்­கப்­பல்கள் இந்­தி­யா­வி­லுள்ள காயல்­பட்­டணம் எனும் இடத்­திற்கும் 2ஆவது கப்பல் தோப்­பூரின் கிழக்­கே­யுள்ள சீனன்­வெளி எனும் இடத்­தையும் அடைந்­தது. அந்­த­வ­கையில் சீனன்­வெ­ளியை அடைந்த மக்கள் உப்­பூரல், நல்லூர், பள்­ளிக்­கு­டி­யி­ருப்பு வழி­யாக தோப்­பூரை அடைந்­தனர் என திரு­கோ­ண­ம­லையைச் சேர்ந்த வீணை வேந்தன் எனும் புனை­பெ­யரை கொண்ட சித்தி அம­ர­சிங்கம்,  மலைத்தேன் எனும் கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்­கள வரு­டாந்த வெளி­யீட்டில் குறிப்­பிட்­டி­ருந்தார்.

1756ஆம் ஆண்டு திரு­கோ­ண­மலை மாவட்ட ஒல்­லாந்து ஆளு­ந­ராக இருந்த ஜெப்ரிக் வான்ஸ்  தமது திரு­கோ­ண­மலை மாவட்ட சுற்றுப் பய­ணத்­தின்­போது தோப்­பூ­ருக்கு சென்­றுள்ளார். இவ­ரு­டைய குறிப்­பின்­படி அல்­லைக்­கு­ளத்தை தான் பார்­வை­யிட்­ட­தா­கவும் அதனை எவ்­வாறு விவ­சா­யத்­திற்கு பயன்­ப­டுத்­து­வது பற்றி ஊர்­மக்­க­ளுக்கும், வன்­னி­ய­நா­ருக்கும் எடுத்­து­ரைத்தார். இரவு படுக்­கை­யின்­போது தான் அணிந்­தி­ருந்த பருத்தி உடைக்கு ஊடாக பெரிய நுளம்­புகள் தன்னைக் குத்­தி­ய­தா­கவும் கூடு­த­லான நுளம்­புகள் காணப்­பட்­ட­தா­கவும் அங்­குள்ள மக்கள் தன்னை வர­வேற்று பழங்­களை பாத்­தி­ரங்­களில் வைத்துக் கொடுத்­த­தா­கவும் எனவே இது பழச்­செய்­கைக்குப் பொருத்­த­மான இட­மென்று தான் குறிப்­பிட்டு பழச்­செய்­கையை ஊக்­கு­விக்­கு­மாறு கேட்­டுக்­கொண்­ட­தா­கவும் இவர் எழு­திய உண்­மை­யான குறிப்­பின்­படி சிறுவர், பெண்கள், பெரியோர் உட்­பட மொத்தம் 47 முஸ்­லிம்­களும் 07 தமி­ழர்­களும் தோப்­பூரில் இருந்­த­தா­கவும் குறிப்­பிட்­டுள்ளார். இது தோம்பு என்னும் சனத்­தொகை கணிப்­பீட்­டின்­போதே குறிப்­பிட்­டுள்ளார். இக்­கு­றிப்­புகள் ஒல்­லாந்து வாசி­க­சா­லை­யி­லுள்ள இவ­ரு­டைய குறிப்­பு­களில் காணப்­ப­டு­கின்­றன.

1656இல் 2ஆம் இரா­ஜ­சிங்கன் கண்­டியை ஆட்சி செய்­த­போது போர்த்­துக்­கே­ய­ரு­டைய தொல்­லைகள் தாங்க முடி­யாது போர்த்­துக்­கே­யரை வெளி­யேற்ற முற்­பட்­ட­போது தம்பி மரைக்கார் எனப்­படும் வர்த்­தகர் கண்டி இராச்­சி­யத்தின் அமைச்­ச­ராக இருந்தார். இவர் ஒல்­லாந்­த­ரு­டனும் கண்டி மன்­ன­னிடமும் ஏற்­ப­டுத்­திய ஒப்­பந்­தத்தின் விளை­வாக ஒல்­லாந்தர் போர்த்­துக்­கே­யரை வெளி­யேற்­றினர். போர்த்­துக்­கே­யரை வெளி­யேற்­றிய ஒல்­லாந்தர், தான் கைப்­பற்­றிய மூதூ­ரையும், தோப்­பூ­ரையும் கண்டி மன்­ன­னுக்கு வழங்­க­வில்லை. இதனால் 2ஆம் இரா­ஜ­சிங்கன் சினம் கொண்டான். இச்­செ­ய­லா­னது இலங்­கையின் வர­லாற்றில் இஞ்­சியை கொடுத்து மிள­காயை  பெற்ற கதைக்கு ஒப்­பா­ன­தாகக் கரு­தப்­ப­டு­கி­றது.

13ஆம் நூற்­றாண்­டு­களில் பொல­ந­றுவை இராச்­சி­யத்­தி­லி­ருந்து மாக­னு­டைய ஆட்சி முடிந்து சிங்­கள மன்­னர்­க­ளு­டைய காலத்தில் வெளி­நா­டு­க­ளுக்கு தேன், சுண்­ணாம்பு, முத்து, யானைத் தந்தம், இரத்­தினம், தோல் என்­பன கோகன்ன எனப்­படும் திரு­கோ­ண­ம­லையின் ஊடாக சீனர்­க­ளுக்கும், பார­சீ­கர்­க­ளுக்கும் அரா­பிய சீன பட்­டுப்­பா­தையில் விற்­கப்­பட்­ட­தா­கவும் பீங்கான், பட்டு, புட­வைகள் போன்ற பொருட்கள் அவர்­க­ளூடாக பெறப்­பட்­ட­தா­கவும் இலங்கை மத்­திய வங்­கியின் வரு­டாந்த அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது. இதன்­படி பொல­ந­றுவை, அல்லை, கங்­கு­வேலி, கொட்­டி­யாரம் ஊடா­கவும் பொல­ந­றுவை, அல்லை, கிளி­வெட்டி, தோப்பூர், சீனன்­வெளி ஊடா­கவும் வியா­பார கொடுக்கல் வாங்கல் நடை­பெற்­ற­தாகவும் குறிப்­பி­டப்­ப­டு­கி­றது. ஆயின் மகா­வலி கங்­கையின் கிளை நதிகள் இவ்­வர்த்­த­கத்­திற்கு துணை­பு­ரிந்­தன.

தோப்பூர் எனும் பெயர் தோப்­பா­வெவ எனப்­படும் அல்லைக் குளத்தின் பெய­ரி­லி­ருந்து வந்­ததா? என்றும் ஒல்­லாந்தர் சனத்­தொகைக்  கணிப்­பீட்­டுக்­காக ஒல்­லாந்தர் தோம்பு என்னும் பதி­வே­டு­களில் ஈடு­பட்­டதால் தோப்பூர் எனும் பெயர் வந்­ததா? மா, பலா, வாழை, தென்னை மற்றும் பழ­வர்க்­கங்­களைக் கொண்ட தோப்பு இருந்­த­மை­யினால் தோப்பூர் எனும் பெயர் வந்­ததா? என்­பதில் பல்­வேறு கருத்­துக்கள் நில­வு­கின்­றன. எனினும் தோப்பு + ஊர் = தோப்பூர் என வந்­த­தா­கவே பலரும் கரு­து­கின்­றனர்.

1811ஆம் ஆண்டு ஆங்­கி­லேயர் வரைந்த இலங்கை தேசப்­ப­டத்தில் தோப்­பூரின் பெயர் Toppur என்றும் இது கண்டி மியூ­சி­யத்தில் உள்­ளது. 1816ஆம் ஆண்டு ஆங்­கி­லேயர் வரைந்த இலங்கை தேசப்­ப­டத்தில் தோப்பூர் எனும் பெயர் மீளவும் Toppur என பதி­யப்­பட்­டி­ருந்­தது. இது கொழும்பு மியூ­சி­யத்தில் உள்­ளது. ஆனால் 1823ஆம் ஆண்டு ஆங்­கி­லேயர் வரைந்த இலங்கை தேசப்­ப­டத்தில் தோப்­பூரின் பெயர் Toppur என குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது. மற்றும் தோப்பூர் அஞ்சல் அலு­வ­ல­கத்தில் பயன்­ப­டுத்­தப்­படும் இலச்­சி­னையில் Toppur என்றே அச்­சி­டப்­ப­டு­கின்­றது. இதி­லொரு விசேஷம் என்­ன­வென்றால் 1816இல் வரை­யப்­பட்ட இலங்கை தேசப்­ப­டத்தில் Kottiyar எனப்­படும் மூதூரும் Toppur எனப்­படும் தோப்­பூரும் மாத்­தி­ரமே பெயர் குறிக்­கப்­பட்­டி­ருந்­தன என்­ப­தி­லி­ருந்து இதன் முக்­கி­யத்­து­வத்தை அறிந்து கொள்­ளக்­கூ­டி­ய­தாக உள்­ளது. 

1830ஆம் ஆண்டு தோப்­பூரில் ஏற்­பட்ட யானைக்கால் நோய் கார­ண­மாக பலர் இறந்­தனர். இத­னை­ய­டுத்து அங்­குள்ள முஸ்­லிம்கள் ஊரை­விட்டு வெளி­யே­றினர். ஒரு குழு­வினர் மூதூரின் கிழக்­கு­ப் பிர­தே­ச­மான கட்­டை­ப­றிச்­சா­னுக்கு அப்பால் சென்று குடி­யே­றினர். இங்கு இவர்­களின் சமூகத் தலை­வ­ரான முஸ்லிம் ஒரு­வரின் கல்­ல­டி­யப்பா சியாரம் எனப்­படும் ஒரு கல்­ல­றை­யொன்று உள்­ளது. இன்­னொரு குழு­வினர் மட்­டக்­க­ளப்பை நோக்கி இடம்­பெ­யர்ந்து கதி­ர­வெளி எனும் பிர­தே­சத்தில் குடி­யே­றினர். சுமார் 15 வரு­டங்­களின் பின்னர் இரு பிரி­வி­னர்­களும் மீளவும் தோப்பூர் நகரை அடைந்­தனர். வள­மான மண்ணும் அல்லைக் குளமும் இவர்­களின் வாழ்க்­கைக்கு பேரு­த­வி­யாக இருந்­தன.

தோப்பூர் வர­லாற்றை எழு­தும்­போது சேகு டீ டீ எனும் மகானை மறந்­து­விட முடி­யாது. இவர் தோப்­பூரைச் சேர்ந்த ஒரு பிர­தானி 1796ஆம் ஆண்­டிற்குப் பிறகு கொட்­டி­யாரம் எனப்­படும் மூதூர் பிராந்­தி­யத்­திற்­கான ஒமில்டர் எனப்­படும் முகாந்­தி­ர­மாக ஆங்­கி­லே­யரால் நிய­மிக்­கப்­பட்டார். இவர் ஆங்­கிலம், தமிழ், அரபு ஆகிய மொழி­களில் பாண்­டித்­தியம் பெற்­றவர். நெஞ்­சு­ரமும். தலை­மைத்­துவப் பண்பும் கொண்­டவர். ஆங்­கி­லே­யரின் வரி­யி­றுப்பு, அடக்­கு­முறை என்­ப­வற்­றுக்கு எதி­ராக கொட்­டி­யா­ரத்­திலே கிழக்கு மாகா­ணத்தைச் சேர்ந்த 07 முகாந்­தி­ரங்­களும் ஒன்­று­சேர்ந்து இவ­ரு­டைய தலை­மையில் போராட்­ட­மொன்றை ஆங்­கி­லே­ய­ருக்கு எதி­ராக செய்­தனர். 1804ஆம் ஆண்டு இந்த 07 பேரும் கைது செய்­யப்­பட்டு கொழும்பு ஆங்­கி­லேய நீதி­மன்­றத்தில் விசா­ரிக்­கப்­பட்டு கறு­வாக்­காட்டு பொலிஸ் நிலை­யத்தில் தூக்­கி­லி­டப்­பட்­டனர். இவ­ரு­டைய மையம் தோப்­பூ­ரி­லுள்ள உமர் நக­ரிலே அடக்கம் செய்­யப்­பட்­டுள்­ளது. இவ­ரு­டைய கல்­ல­றைக்குப் பக்­கத்தில் இவ­ரு­டைய மனைவி சதக்கு நாச்­சியார், மகள் பாத்­திமா ஆகியோர் நல்­ல­டக்கம் செய்­யப்­பட்­டனர். இவ­ரு­டைய கால்­மாட்­டிலும், தலை­மாட்­டிலும் பிரிட்டிஷ் சின்னம் பொறிக்­கப்­பட்ட இரண்டு கற்கள் நடப்­பட்­டுள்­ளன. இவ­ரு­டைய வழக்குத் தீர்ப்பு கொப்­பியின் இலக்கம் என்­னிடம் உள்­ளது.

1915ஆம் ஆண்டு தோப்­பூரைச் சேர்ந்த அப்துர் ரஹீம் வாத்­தியார் என்­பவர் கண்­டி­யி­லுள்ள திகன எனு­மி­டத்தில் ஆசி­ரி­ய­ராக கட­மை­யாற்­றி­யுள்ளார். இவர் ஆங்­கில மொழியில் கற்­றவர், இவர் கண்­டி­யி­லி­ருந்து கட்­டு­கஸ்­தோட்டை மட­வள ஊடாக திகன என்னும் இடத்­திற்கு அக்­கா­லத்தில் மாட்டு வண்­டியில் பயணம் செய்தார். இவ­ரு­டைய மாதாந்த சம்­பளம் 18 ரூபா 50 சதம் ஆகும். 

இங்­குள்ள பெரும்­பா­லான முஸ்­லிம்கள் எகிப்­தி­லி­ருந்து வந்த காசிம் குளத்தைச் சேர்ந்­த­வர்கள். அத்­துடன் மடங்­கு­பாட்டி, கம்பன் கூத்­தாடி கூட்டம், மரைக்­கார்­குடி, லெப்­பைக்­குடி பட்­டாணி, வங்­கடி அப்பா குடி என்றும் இங்­குள்ள குடிகள் அழைக்­கப்­ப­டு­கின்­றன. மடங்­குப்­பாட்­டியில் சீனித்­தம்பி, தம்­பி­லெவ்வை, அஹ­மது சாகிப், ஜெமீல் பரம்­ப­ரை­யி­னரை குறிப்­பி­டலாம். கம்பன் கூத்­தாடி கூட்டம் கொழும்­பி­லி­ருந்து வந்­த­வர்கள். இவர்கள் வெள்ளை நிறமும் நீள­மான உய­ரமும் உடை­ய­வர்கள் கம்பன் கூத்து என்னும் கூத்தை ஆடி எதி­ரி­க­ளு­டைய மனோ­ப­லத்தை குறைப்பர். மரைக்கார் குடியில் கட்டை மரைக்கார், சின்­ன­ம­ரைக்கார், முக­ம்மது மரைக்கார், வரி­சைத்­தம்பி மரைக்கார், காசி­லெவ்வை மரைக்கார், கதி­மீரா மரைக்கார், சாதிக் மரைக்கார், நவாஸ் மரைக்கார் போன்ற வழித்­தோன்­றல்­களை குறிப்­பி­டலாம். லெப்பை குடியில் மலை­யா­ளத்து லெப்பை, காச்சல் கார­லெப்பை, முக­மது தம்­பி­லெவ்வை, சின்­ன­லெப்பை, அஹ­மது லெப்பை, முக­ம்மது சரிபு லெப்பை, மீராசா லெப்பை போன்ற வழித்­தோன்­றல்­களை குறிப்­பி­டலாம். மேலும் சம்­சுதீன், M.S. ஹனிபா, மக்கள் மஜிது பது­ரு­சமான், ஜப்பான் புள்ள, பேப்பர் பி.ஜி மூமின், மா.தா. இப்­றாகீம் கபீர் மேசன், வெட்டு லத்திப், பக்­ருதீன் மரைக்கார் போன்ற இந்­தியா வம்சா வளி­யி­னரும் தோப்பூர் இனக் கூட்­டத்­துக்குள் உள்­ள­டக்­கப்­ப­டு­கின்­றனர். இவர்கள் இந்­தி­யா­வி­லுள்ள காயல்­பட்­டணம், தொண்டி, தேவி­பட்­டணம், முத்­துப்­பேட்டை போன்ற இடங்­க­ளி­லி­ருந்து வந்­தனர். மேலும் வங்­கா­ள­தே­சத்­தி­லி­ருந்து தோப்­பூ­ருக்கு வந்த அப்துல் சமது என்­பவர் 1930இல் தோப்­பூ­ருக்கு வந்தார். இவர் ஒரு தாஈ­யாக இருந்­தவர். இவ­ரு­டைய சியாரம் அல்­லைக்­கு­ளத்­துக்கு அரு­கா­மையில் உள்­ளது. இவ­ரு­டைய குடும்­பத்­த­வரும் மேலும் சம்­மாந்­து­றையில் இருந்து வந்த முகம்­மது இஸ்­மாயில் எனப்­படும் ஊசி­லெப்பை குடும்­பத்­த­வரும் தோப்பூர் இனக்­கு­ழுக்­களில் அடங்­கு­கின்­றனர். வட்­ட­வி­தானை அப்பா திரு­கோ­ண­ம­லை­யி­லி­ருந்து மூதூ­ருக்கு வத்­தையில் வரும்­போது 1957இல் மரக்­கப்பல் கடலில் மூழ்­கி­யதால் ஒரு மரப்­ப­ல­கையில் மர­ண­ம­டைந்து மூதூர் கரையை அடைந்தார். இவ­ரு­டைய சியாரம் தோப்பூர் பட்­டி­னத்தின் மத்­தியில் உள்­ளது. இவ­ரு­டைய கூட்­டத்­தாரும் தோப்பூர் இனக்­கு­ழுக்­க­ளுக்குள் அடங்­குவர். பின்னர் கிண்­ணியா சேவப்­பா­குடி, அக்­க­ரப்­பத்­தான்­குடி, மரு­த­முனைக் குடியும் இணைந்­தன.

1937இல் இந்­தி­யா­வி­லி­ருந்து வந்த மஸ்தான் சாகிப் இவரும் ஒரு தாஈ­யாக இருந்­தவர். மரம் வெட்­டு­வது ஹராம் என்று சூழல் கொள்­கையை வெளி­யிட்­டவர். இதனால் இவர் மக்­களின் எதிர்ப்பை சம்­பா­திக்க வேண்டி வந்­தது. இருப்­பினும் மரம் வெட்­டு­வதால் மழை கிடைக்­காது என்றும், பறவை பட்­சிகள் உயி­ரி­னங்கள் வாழ முடி­யாது என்றும் குளம் வற்­றிப்­போகும் என்றும் தோப்பு கட்­டாந்­த­ரை­யாக மாறும் என்றும் மக்­க­ளுக்கு அறி­வு­றுத்தி தேவைக்கு அதி­க­மாக காடு­களை வெட்­டு­வதை நிறுத்­து­மாறு கூறினார். இவ­ரு­டைய சியாரம் உமரி நக­ரிலே உள்­ளது.

1927இல் சேகுக்­கன்னி என்­பவர் தோப்­பூரில் கால்­நடை வளர்ப்பில் பெரிய செல்­வந்­த­ராக இருந்தார். இவ­ரு­டைய காலத்தில் ஆய்­வுக்­காக வந்த இரு சிங்­கள நபர்கள் காணாமல் போனதால் தேடலில் ஈடு­பட்­ட­போது ஆயிரம் வரு­டங்­க­ளுக்கு முற்­பட்ட சிங்­கள விகாரை ஒன்று அங்கே புதர்­மண்டி கிடந்­த­ததை அறி­யக்­கூ­டி­ய­தாக இருந்­தது.

தோப்பூர் கிராம சபையில் 1947ஆம் ஆண்டு தொடக்கம் பின்­வ­ருவோர் சேர்­ம­னாக கட­மை­யாற்றி உள்­ளனர்.

1. வரிசைத் தம்பி – 1947.

2. முகம்­மது ஹஸன் – 1951.

3. தொப்பி அப்துல் ஹமீது – 1955.

4. சேகு லெப்பை  – 1959.

5. முகம்­மது கரீம் – 1963

6. கபீப் முகம்­மது –1967

7. மு.இ. முஸ்­தபா –1972

தோப்பூர் பட்­ட­ணத்தை உள்­ள­டக்­கிய கிராம சேவக பிரி­வுகள் என அடை­யாளம் காணப்­ப­டு­பவை தோப்பூர், அல்­லை­நகர் கிழக்கு, அல்­லை­நகர் மேற்கு, பாலத்­தோப்பூர், பாலத்­த­டிச்­சேனை, ஜின்னா நகர், ஆஸாத் நகர், பள்­ளிக்­கு­டி­யி­ருப்பு போன்ற கிராம சேவகர் பிரி­வு­க­ளாகும். மற்றும் தோப்பூர் அஞ்சல் அலு­வ­லக விநி­யோக பிரி­வு­க­ளாக தோப்பூர், பாலத்­தோப்பூர், அல்­லை­நகர் கிழக்கு, அல்லை மேற்கு, ஆஸாத் நகர், ஜின்னா நகர், பட்­டித்­திடல், முன்­னம்­போடி வெட்டை, பள்­ளிக்­கு­டி­யி­ருப்பு, சின்­னக்­குளம், நல்லூர், பாட்­டா­ளி­புரம், கணே­ச­புரம்  ஆகி­யன காணப்­ப­டு­கின்­றன. மூதூர் பிர­தேச சபைக்­கான வட்­டா­ரங்­க­ளாக தோப்பூர், அல்­லை­நகர், பாலத்­தோப்பூர் ஆகிய வட்­டா­ரங்கள் காணப்­ப­டு­கின்­றன. 1987ஆம் ஆண்டு கொண்­டு­வ­ரப்­பட்ட மாகா­ண­சபை தேர்­தலின் போது கிழக்கு மாகா­ண­ச­பைக்கு ஹனிபா சர்தார் ஹாஜா­மு­கைதீன் என்­பவர் உறுப்­பி­ன­ராகத் தெரிவு செய்­யப்­பட்டார். 2013இல் ஹனிபா ஹாஜா முகைதீன் என்­பவர் மூதூர் பிர­தேச சபையில் பிரதிச் சேர்­ம­னாகக் கட­மை­யாற்­றினார்.
-Vidivelli