Verified Web

மாயக்கல்லி எனும் அவிழ்க்கமுடியாத முடிச்சு

30 days ago Administrator

Image result for மாயக்கல்லி

-ஏ.எல். நௌபீர்

நவீன உலகு மத, கலா­சார விழு­மி­யங்­களை மோத விடு­வ­த­னூ­டா­கவே (cultural crisis) கட்சி அர­சி­யலை நகர்த்திக் பொண்­டி­ருக்­கின்­றது. அர­சி­ய­லுக்­கான முக்­கிய முத­லீடு இன­வா­தமும், மதச் சண்­டை­யுமே என்ற நிலை மேலோங்கி வரு­கின்­றது. உலகின் மாற்­றங்­களை உள்­வாங்­கி­ய­தாக இலங்கைத் தேசமும் சமூக, அர­சி­ய­லிலே நகர்ந்து செல்­கின்­றது. குறிப்­பாக சிறந்த மாற்­றங்­களை விடவும், பாத­க­மான மாற்­றங்கள் எமது நாட்டை இல­குவில் தொற்­றிக்­கொள்­கின்­றன.

நாடு­களின் அர­சி­யலைத் தீர்­மா­னிக்கும் சக்தி உரிய  நாடு­க­ளி­லி­ருந்தும் விலகி, வெளி­நா­டு­களே தீர்­மா­னிக்கும் சக்தி (external nations) என்றே ஆகி­விட்­டது. இதிலே பிராந்­திய சக்­தி­களும் (regional powers) கணி­ச­மான ஈடு­பாடு செலுத்­து­கின்­றன. இலங்கை, இந்­திய ஆதிக்­கத்­திலே உள்­ளதும் நாம­றிந்த அண்­மைக்­கால உண்­மையாகும்.

இலங்­கை­யிலே யுத்தம் முடி­வுற்­றதால் அர­சி­யல்­வா­தி­க­ளுக்­கான முக்­கிய அர­சியல் மூல­த­ன­மின்மை (political capitals) ஒரு பிரச்­சி­னை­யாக மாறி­யி­ருந்­தது. இது மத பீதியை உண்டு பண்­ணுதல் என்ற நவீன இந்­திய துணைக்­கண்ட, ஆசிய நாட்டுத் தன்­மை­களை உள்­வாங்க வேண்­டிய நிலையை இலங்கை பேரி­ன­வா­தி­க­ளுக்கும் ஏற்­ப­டச்­செய்­தது. இது ஒன்றும் ஆச்­ச­ரி­ய­மான விட­ய­மல்ல.

அது தந்த உற்­பத்­தி­களே BBS போன்ற அமைப்­புக்­களும் கூட. இவ்­வகை அமைப்­புக்­களை உரு­வாக்­கி­ய­வர்­கள் யார்? என்ற கேள்­வி­களை நமக்குத் தேவை­யற்ற வினா­வா­கவே கொள்ள வேண்­டி­யுள்­ளது. இது இன்­றைய பேரி­ன­வாத அர­சி­யலின் கட்­சிகள் எல்­லா­வற்­றுக்­குமே தேவை­யா­ன­தொரு அர­சியல் போக்­காகும். கட்­சி­க­ளுக்கும் மாறி மாறி இவ்­வகை அமைப்­புக்­களை இர­க­சி­ய­மாக ஊட்டி வளர்க்க வேண்­டிய தேவையும் இல்­லா­ம­லில்லை.

ஒரு மதம் நிந்­திக்­கப்­ப­டு­வதும், இன்­னொரு மதம் மேலா­திக்கம் பெறு­வதும் இவற்றைத் தோற்­று­வித்­த­வர்கள் தலை­வர்கள் என்ற அர­சியல் போலி முகங்­களை மேலே கொண்டு வரு­வதும் என காலம் மாறி­விட்­டது. அத்­தோடு இதிலே பங்­கெ­டுப்­ப­தற்­காக கட்சித் தலை­மைகள் போட்டி போடு­வதும், வாக்கு வேட்­டைக்குத் தயா­ரா­வதும் நடந்தே வரு­கி­றது.

 

மாயக்­கல்லி

இது­வொரு பௌத்த மத ஆதிக்­கத்தின் வெளிப்­படை நிலை­யாகும். எந்­த­வொரு பௌத்த குடி­யி­ருப்புப் பிர­ஜை­க­ளு­மில்­லாத இடத்­திலே சிலையைக் கொண்­டு­வந்து வைத்­து­விட்டு, இப்­போது அங்கே பன்­சல அமைக்­கப்­பட நிலம் வேண்டும் என்­கி­றார்கள். உல­கிலே இவ்கை ஒரு­பக்க ஆதிக்க உணர்வு மேலோங்கி வரு­கின்ற கால­மிது. அதிக சனத்­தொ­கையின் பிர­தி­நிதி உடை­ய­வனே பல­மா­னவன், அவனே ஆதிக்­க­மு­டை­யவன் என்ற எண்­ணக்­கரு மேலோங்­கி­விட்ட நிலையே இது. எண்­ணிக்கை ஜன­நா­ய­கத்தின் இருண்ட பக்­கங்­களே இவை.

இன்று மாயக்­கல்லி என்­பது ஒரு தேசிய பிரச்­சினை. என்­றாலும் பிராந்­தி­யத்தை தாண்­டிய எந்தப் பல­மான குர­லுமே இதை எதிர்த்து இது­வரை ஒலிக்­க­வில்லை. முஸ்லிம் சமூ­கத்தின் அர­சியல் தலை­வர்­களும் நழுவல் நிலை­யையே கடைப்­பி­டித்து வரு­கி­றார்கள். பதவி, பணம் என்ற போக்கை உடைய அவர்­களால் எதி­ராக குரல் ஒலிக்­கவும் முடி­யாது என்­பதே யதார்த்தம்.

பிராந்­திய மக்­க­ளான இறக்­கா­மத்து மக்கள் இந்த விட­யத்­திலே மிகவும் நிதா­ன­மாக செயற்­பட வேண்டும். குறிப்­பாக முஸ்லிம் விவ­கா­ரங்­களைத் தேர்­த­லிலே பேசும் தனி முஸ்லிம் தலை­வர்­களை உடைய கட்­சிகள் பல இருக்­கின்­றன. அவற்றின் மௌனம் எதைச் சொல்­கின்­றது? திக­ன­யிலே 25 பள்­ளி­வா­சல்கள் உடைக்­கப்­பட்­டன, 500 க்கு மேற்­பட்ட முஸ்­லிம்­களின் கடை­களும் வீடு­களும் ஒரே நாளில் உடைக்­கப்­பட்­டன, தீக்­கி­ரை­யாக்­கப்­பட்­டன. இவற்­றிற்குப் பதி­லாக ஒரு புத்தர் சிலை­யை­யா­வது  யாராலும் உடைக்க முடிந்­ததா? இதுதான் எமது வீட்­டுக்குள் நாம் பேசும் வீரத்­துக்கும், பொது­வான, சமூக வாழ்­வி­லே­யுள்ள யதார்த்­தத்­துக்­கு­மான வித்­தி­யா­ச­மாகும். இதை நன்கு ஆழ­மாக யோசிக்­க­வேண்டும். இது பௌத்த தேசம் அதிலே நாமும் வாழ்­கிறோம். நம்மை, நமது இருப்பை பௌத்­தர்­களால் தீர்­மா­னிக்க முடியும். பௌத்­தர்­களின் இருப்­பையோ, நம்மால் ஒன்­றுமே செய்ய முடி­யாது. அவர்கள் முழுத் தேசத்தின் அதி­கா­ரமும் தமக்கே உரி­யது என்றும், அதை அடுத்த சமூ­கத்­தவர் சூறை­யா­டு­வ­தா­கவும் சொல்லிக் கொள்­கி­றார்கள். முன்பு அர­சி­யல்­வா­தி­க­ளுக்குள் மட்­டுமே இருந்த இன­வாதம், இன்று ஒவ்­வொரு சிங்­கள மக்­க­ளி­னதும் வீடு­க­ளுக்குள் பரவி விட்­டன.

ஏதா­வது ஒன்­றுக்­காக நாம் கால நேரத்தைச் செலவு செய்தால் அதில் பலன் கிடைக்க வேண்டும். இல்­லை­யெனில் நாம் விலகி இருப்­பதே நல்­லது. எது­வென்­றாலும் நாங்கள் போரா­டு­வது பெரும்­பான்மை சமூ­கத்தை பய­மு­றுத்­தியே வரு­கி­றது. 2014.10.10 ஆம் திக­திய விஷேட வர்த்­த­மானி மூலமே அதா­வது, மஹிந்­தயின் ஆட்சிக் காலத்­தி­லேயே இந்த சிலை வைப்­புக்­கான வித்து தூவப்­பட்­டது. கோத்­த­பா­யவின் படைப்­பி­ரிவே நள்­ளி­ரவு வேளை­களில் நட­மாடி இந்­தப்­ப­குதி மக்­களின் தக­வல்­க­ளையும், மலையின் தக­வல்­க­ளையும் பெற்று அதை வர்த்­த­மா­னி­யிலே பிர­சு­ரித்­தது. அதைப் புதிய அரசும் தீவி­ர­மாக நடை­முறைப் படுத்­து­கி­றது. அவர்­க­ளுக்கு முழு நாடுமே அவர்­களின் சொத்து என்­பதே கோட்­பாடு.

ஐ.தே.கட்சி, ஸ்ரீல.சு.கட்சி என்று அவர்கள் பிரிந்து செயற்­பட்­டாலும் பௌத்தர் நலன் எனும்­போது அவர்­களின் எல்லா முக­முமே ஒரே முகம்­போ­லாகி விடு­கின்­றன. புதிய ஐ.தே. கட்­சியின் அமைச்சர் தயா கமகே இவ்­வி­வ­கா­ரத்தில் தீவி­ர­மா­கவே செயற்­பட்டு வரு­கிறார். அவர்­க­ளுக்கு பௌத்த மக்கள் இல்­லாத பூமி­யிலே சிலை வைப்­பதோ, பன்­சல அமைப்­பதோ பிரச்­சி­னை­யல்ல. இந்த தேசத்தின் எவ்­வி­டத்­திலும் எங்கள் புனித பூமியை நிறு­வுவோம் என்று செயற்­ப­டு­வதே அவர்­களின் வைராக்­கி­ய­மாக உள்­ளது. இது அவர்­களின் அர­சியல் வாக்­கு­று­தி­யாகி விட்­டது. இது தவ­றா­ன­தா­யினும் இதுவே அவர்­களின் நிலைப்­பாடு.

* இவற்றை எல்லாம் விடுத்து இதை நிறுத்தித் தரு­கிறோம்.

* இதைப் புதிய அரசே உரு­வாக்­கி­யது என்­பதும்

* இதை மஹிந்­த­வே உரு­வாக்­கினார் என்­பதும்

* எங்­க­ளிடம் அதி­காரம் இல்­லையே இருந்தால் இதை இந்­நேரம் அகற்றி இருப்போம் என்­ப­தெல்லாம் எல்­லாமே வெறும் அர­சி­ய­லுக்­கான பேச்­சுக்கள். இவ்­வி­டத்­துக்கு சிலை வந்­தது எப்­படி மர்­ம­மா­னதோ அதேபோல் இதை அகற்­றுவோம் என்­பதும் மர்­மமே. யாரா­லுமே ஒன்­றுமே செய்ய முடி­யாது வெறும் அர்த்­த­மில்­லாத சத்தமிடல்களைத் தவிர. சில சமயம் விகாரைக்கான பணியைப் பிற்படுத்த முடியுமே ஒழிய அதை முற்றாக நிறுத்துவதற்கான எந்தப் பொறிமுறை அரசியலும் இன்று முஸ்லிம்கள் மத்தியில் இல்லை.

உரிய உயரதிகாரிகளோ, அரசியல் தலைவர்களோ இதில் மௌனம் காக்கிறார்களே ஏன்? பிரபல சட்டத்தரணிகள் கூட உயிருக்குப் பயந்து ஒளிந்து கொள்கிறார்களே ஏன்?

மக்கள் மிகவும் நிதானமாக செயற்பட வேண்டும். மாயக்கல்லி என்பது மாணிக்கமடுவிலே இருந்தாலும் முஸ்லிம்களுக்கு சொந்தமான பள்ளிகளும், மக்களும் முழு இலங்கை எங்குமே பரந்திருக்கின்றன என்பதே உண்மை. குறிப்பாக இறக்காமம் மக்களே இது உங்கள் கவனத்துக்கு.
-Vidivelli