Verified Web

எத்தியோப்பியாவும் எரித்திரியாவும் எல்லைகளைத் திறந்து கொண்டாடினர்

10 days ago Administrator


எத்­தி­யோப்­பிய மற்றும் எரித்­தி­ரிய தலை­வர்கள் தமது எல்லைக் கட­வை­களைத் திறந்­துள்­ள­தோடு, கடந்த இரண்டு தசாப்­தங்­க­ளுக்கு முன்னர் கடு­மை­யான சண்டை இடம்­பெற்ற பொது முன்­ன­ரங்கு எல்­லையில்  எத்­தி­யோப்­பியப் புத்­தாண்டை ஒன்­றி­ணைந்து கொண்­டா­டினர்.

 எரித்­தி­ரிய ஜனா­தி­பதி இசயஸ் அப்­வேர்கி மற்றும் எத்­தி­யோப்­பிய பிர­தமர் அபியி அஹமட் அலி ஆகியோர் இரு நாடு­க­ளுக்கும் இடை­யி­லான டிபே சிமா-­புர்ரே எல்லைக் கட­வை­யினை வீதி வாகனப் போக்­கு­வ­ரத்­திற்­காக உத்­தி­யோ­க­பூர்­வ­மாகத் திறந்து வைத்­தனர்  என எரித்­தி­ரிய தகவல் அமைச்சர் யேமேனி மெஸ்கல் செவ்­வாய்க்­கி­ழ­மை­யன்று டுவிட்டர் செய்­தி­யொன்றில் தெரி­வித்­தள்ளார்.

அதனைத் தொடர்ந்து இடம்­பெற்ற இரண்­டா­வது விழாவில் இரு தலை­வர்­களும் செர்­ஹா-­ஸ­லம்­பெஸ்ஸா கட­வை­யினைத் திறந்து வைப்­பதை எத்­தி­யோப்­பிய அரச தொலைக்­காட்சி காண்­பித்­தது. எல்­லையில் இரு தலை­வர்­களும் எத்­தி­யோப்­பிய புதுவருடத்தினையும் கொண்டாடியதாக அலியின் தலைமை உத்தியோகத்தர் பிட்சுமா அரீகா தெரிவித்தார்.
-Vidivelli