Verified Web

ஆயுத விவ­கார குற்­றச்­சாட்டு: நளினின் கருத்­துக்கு ஹிஸ்­புல்லாஹ் மறுப்பு

2018-09-12 06:23:44 Administrator


அதி­கா­ரி­களின் கவ­னத்­துக்கு கொண்டு செல்­லப்­பட்­டுள்­ளது எனவும் சுட்­டிக்­காட்டு தன்­மீது சுமத்­தப்­பட்­டுள்ள ஆயுத விவ­கார குற்­றச்­சாட்டு தொடர்பில் சட்டம், ஒழுங்கு அமைச்சர் உள்­ளிட்ட சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரி­களின் கவ­னத்­துக்கு கொண்டு செல்­லப்­பட்­டுள்­ள­தா­கவும், அது­சம்­பந்­த­மான விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் நெடுஞ்­சா­லைகள் மற்றும் வீதி அபி­வி­ருத்தி இரா­ஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்­புல்லாஹ் தெரி­வித்தார்.

இதே­வேளை, தான் சட்டம் ஒழுங்கு அமைச்­ச­ரி­டமே முறைப்­பாடு செய்­த­தா­கவும் அதன் பிர­தி­ய­மைச்­ச­ரிடம் எந்த முறைப்­பாட்­டையும் செய்­ய­வில்லை எனவும் குறிப்­பிட்ட இரா­ஜாங்க அமைச்சர், ஆயுத விவ­கார குற்­றச்­சாட்டு தொடர்பில் உரிய விசா­ரணை நடத்தி அதன் அறிக்­கை­யினை பொலிஸ் மா அதி­ப­ரிடம் சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய கோரி­யுள்­ள­தா­கவும் குறிப்­பிட்டார்.

‘ஆயுத விவ­கார குற்­றச்­சாட்டு தொடர்பில் நானோ, அமைச்சர் ரிஷாட் பதி­யு­தீனோ இது­வரை முறை­யி­ட­வில்லை’ என சட்டம் ஒழுங்கு பிர­தி­ய­மைச்சர் நளின் பண்­டார நேற்று சிறி­கொத்­தவில் நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் குறிப்­பிட்­டி­ருந்தார்.

இதற்கு மறுப்புத் தெரி­வித்து இரா­ஜாங்க அமைச்சர் ஹிஸ்­புல்லாஹ் விடுத்­துள்ள ஊடக அறிக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அதில் மேலும் கூறப்­பட்­டுள்­ள­தா­வது:-

‘புனர்­வாழ்­வ­ளிக்­கப்­பட்ட தமிழ் விடு­தலைப் புலிகள் கட்சி 2018.08.18ஆம் திகதி கொழும்பில் நடத்­தி­யி­ருந்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் எனக்கும், அமைச்சர் ரிஷாட் பதி­யு­தீ­னுக்கு எதி­ராக உண்­மைக்கும் புறம்­பான அப்­பட்­ட­மான போலிக் குற்­றச்­சாட்­டொன்றை முன்­வைத்­தி­ருந்­தது. இந்தக் குற்­றச்­சாட்டின் பின்­ன­ணியில் பல சதித்­திட்­டங்கள் இருப்­பதை நாங்கள் உணர்ந்தோம். எனவே இவ்­வி­ட­யத்தை நாங்கள் மிகவும் நிதா­ன­மா­கவே அணு­கினோம். இந்­நி­லையில் சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்­தும பண்­டார இக்­குற்­றச்­சாட்டு தொடர்பில் பூரண விசா­ர­ணை­யொன்றை நடத்­து­வ­தாக 2018.08.20 ஆம் திகதி ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் பகி­ரங்­க­மாக அறி­வித்­தி­ருந்தார்.

பின்னர் என்­மீ­தான குற்­றச்­சாட்­டுக்­களை நான் மறுப்­ப­ளித்து சட்டம் ஒழுங்கு அமைச்­சினால் முன்­னெ­டுக்கும் சகல விசா­ர­ணை­க­ளுக்கு ஒத்­து­ழைப்பு வழங்­கு­வ­தாக 2018.08.21ஆம் திகதி அறி­வித்­தி­ருந்தேன். என்­றாலும், தொடர்ந்தும் இந்த விடயம் தெற்கு அர­சியலில் பேசு­பொ­ரு­ளாக மாறி­ய­தை­ய­டுத்து 2018.08.31ஆம் திகதி ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய, சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்­தும பண்­டார மற்றும் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜய­சுந்­தர ஆகி­யோ­ருக்கு நான் விசேட கடிதம் ஒன்­றினை அனுப்­பி­யி­ருந்தேன். அதில் என் மீதான போலிக் குற்­றச்­சாட்­டுக்­களை முற்­றாக நிரா­க­ரித்­தி­ருந்­த­துடன், உரிய விசா­ர­ணை­களை நடத்தி உண்­மை­களை வெளிப்­ப­டுத்த வேண்­டு­மெனக் என கோரி­யி­ருந்தேன்.

தொடர்ந்தும் நான் அர­சியல் உயர் மட்­டத்தில் இந்த விடயம் தொடர்பில் கலந்­து­ரை­யா­டி­ய­துடன், சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய என் மீதான குற்­றச்­சாட்டு தொடர்பில் உரிய விசா­ரணை நடத்த வேண்டும் என பொலிஸ் மா அதி­ப­ரிடம் 2018.09.05ஆம் திகதி வேண்­டுகோள் விடுத்­தி­ருந்தார். அத்­துடன், இக்­குற்­றச்­சாட்­டா­னது நாடா­ளு­மன்ற உறுப்­பினர் ஒரு­வ­ரு­டனும், நாட்டின் தேசிய பாது­காப்­பு­டனும் சம்­பந்­தப்­பட்­டுள்­ள­மையால் பொலி­ஸா­ரினால் மேற்கொள்ளப்படும் விசாரணை அறிக்கையினை சபாநாயகருக்கு அவரசரமாக வழங்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், எனது தரப்பால் இவ்வாறு பல முன்னெடுப்புக்கள் செய்யப்பட்டு வரும் நிலையில் சட்டம் ஒழுங்கு பிரதியமைச்சர் எந்த முறைப்பாடும் கிடைக்கில்லையென பொறுப்பற்ற வகையில் பகிரங்கமாக கூறுவது ஆரோக்கியமான செயற்பாடு அல்ல – என்றார்.
-Vidivelli