Verified Web

எரி­பொருள் விலை மீண்டும் அதி­க­ரிப்பு

2018-09-12 06:15:35 Administrator

எரி­பொருள் விலை சூத்­தி­ரத்­திற்­க­மைய நேற்­று­முன்­தினம்  நள்­ளி­ரவு முதல் எரி­பொ­ருட்­களின் விலை அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ள­தாக நிதி­ய­மைச்சு தெரி­வித்­துள்­ளது. இவ் விலை அதி­க­ரிப்­பிற்­க­மைய ஒக்டைன் 92 பெற்றோல் ஒரு லீற்றர் ஐந்து ரூபா­வாலும், ஒக்டைன் 95 பெற்றோல் ஒரு லீற்றர் நான்கு ரூபா­வா­லும் ஒடோ டீசல் லீற்றர்  ஐந்து ரூபா­வாலும் சுபர் டீசல் லீற்றர்  மூன்று  ரூபா­வாலும் அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளன.

அதன்­படி 145 ரூபா­வாகக் காணப்­பட்ட ஒக்டைன் 92 பெற்றோல் 149 ரூபா­வா­கவும், 157 ரூபா­வாகக் காணப்­பட்ட ஒக்டைன் 95 பெற்றோல் 161 ரூபா­வா­கவும், 118 ரூபா­வாகக் காணப்­பட்ட ஒடோ டீசல் 123 ரூபா­வா­கவும், 130 ரூபா­வாகக் காணப்­பட்ட சுபர் டீசல் 133 ரூபா­வா­கவும் விலை அதி­க­ரிப்­பட்­டுள்­ளன.

உலக சந்­தையில் ஏற்­பட்­டுள்ள எரி­பொருள் அதி­க­ரிப்­பிற்கு ஏற்ப எரி­பொருள் விலை தொடர்­பான விலை சூத்­திர அடிப்­ப­டை­யி­லான அதி­கா­ரிகள் குழு­வினர் நிதி­ய­மைச்சின் அதி­கா­ரி­க­ளு­ட­னான கலந்­து­ரை­யா­டலின் பின்­னரே இவ்­விலை அதி­க­ரிப்பு ஏற்­பட்­டுள்­ள­தாகத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இதே­வேளை, பாட­சாலை மாண­வர்­களை ஏற்­றிச்­செல்லும் வேன்­களின் போக்­கு­வ­ரத்து கட்­ட­ணத்தை அதி­க­ரிப்­ப­தற்கு அகில இலங்கை பாட­சாலை போக்­கு­வ­ரத்து சேவைகள் சங்கம் தீர்­மா­னித்­துள்­ளது. 

எரி­பொருள் விலை­யேற்­றத்தின் கார­ண­மாக இந்த தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ள­தாக குறித்த சங்­கத்தின் தலைவர் மெல்சிறீ த சில்வா தெரி­வித்­துள்ளார்.

அத­ன­டிப்­ப­டையில் பாட­சாலை போக்­கு­வ­ரத்து வேன்­களை பயன்­ப­டுத்­து­வ­தற்­கான கட்­ட­ணத்தை 5 வீதத்தால் அதி­க­ரிக்­கு­மாறு சங்க உறுப்­பி­னர்­க­ளுக்கு அறி­வித்­துள்­ள­தா­கவும் அவர் மேலும் தெரி­வித்­துள்ளார்.

இதே­வேளை, எரி­பொருள் விலை சூத்­தி­ரத்தை அறி­மு­கப்­ப­டுத்­திய பின்னர் இரண்டு சந்­தர்ப்­பங்­களில் எரி­பொருள் விலை அதி­க­ரிக்­கப்­பட்­டி­ருப்­பதால் பேருந்துக் கட்டணங்களிலும் திருத்தங்களை ஏற்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை தனியார் பயணிகள் பேருந்து சங்கங்களின் சம்மேளனத்தின் செயலாளர் அஞ்சன பிரியன்ஜித் தெரிவித்துள்ளார்.
-Vidivelli