Verified Web

இலங்கையில் ஜனநாயகம்: எதிர்நோக்க இருக்கும் சவால்கள்

2018-09-12 06:11:39 Administrator

பேரா­சி­ரியர் ஜய­தேவ உயன்­கொட‌
தமிழ்: ரிஷாட் நஜி­முடீன்

நாட்டின் அர­சியல் கலந்­து­ரை­யா­டல்கள் தற்­போது பின்­வரும் இரு கருப்­பொ­ருள்கள் மீதே அதிக கவ­னத்தை குவித்­தி­ருக்­கின்­றன: அடுத்த ஜனா­தி­பதி தேர்­தலில் வெற்­றி­பெறும் நபர் யார்? அடுத்த பாரா­ளு­மன்ற தேர்­தலில் வெற்­றி­பெறும் கட்சி எது?

இவை முக்­கி­ய­மான கேள்­விகள் என்­பதில் சந்­தே­க­மில்லை. ஆனால் அத­னை­விட மிக சீரி­ய­சான அர­சியல் கேள்வி எதிர்­வரும் காலங்­களில் இலங்­கையின் ஜன­நா­ய­க­ம­யப்­ப­டுத்தல் வேலைத்­திட்­டத்­திற்கு நடக்­கப்­போ­வது என்ன? என்­ப­தாகும். 2015 ஆட்சி மாற்­றத்தில் நேரடிப் பங்­கா­ளி­க­ளாக இருந்த அர­சியல், சமூக ஆர்­வ­லர்கள் இக்­கேள்­வியில் தம்மை முழு­மை­யாக ஈடு­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றனர். ஜன­நா­யகம் மீதான நேரடித் தாக்­கு­தல்கள் நடை­பெறும் கட்டம் நோக்கி இலங்கை நகர்ந்து கொண்­டி­ருக்­கின்­றது என்­ப­தற்­கான அறி­கு­றிகள் அவர்­களை இன்னும் கவ­லையில் ஆழ்த்­து­கின்­றன. உள­வியல் சுட்­டி­களை மைய­மாக வைத்து நாட்டுப் பிர­ஜை­களை தேசப்­பற்­றுள்­ளவர், தேசத்­து­ரோகி என்ற இரு வகையில் பிரித்­துப்­பார்க்கும் அண்­மைய‌ கால அறிக்­கைகள் நாசி­சத்தின் சிறி­ய­தொரு பரி­மா­ண‌த்தை காட்­டி­நிற்­கின்­றன.

ஜன­நா­யக ஆர்­வ­லர்­க­ளுக்­கான இவ்­வ­பாய எச்­ச­ரிக்கை நாடு சில சீரி­ய­சான அர­சியல் பிரச்­சி­னை­க­ளுக்குள் இருக்­கின்­றது என்­பதை காட்­டு­கி­றது. கடந்த காலங்­களில் ஜன­நா­ய­கத்தை பாது­காத்தல், அதன் மறு­ம­லர்ச்சி மற்றும் ஒருங்­கி­ணைப்பு விட­யங்­களில் ஈடு­பட்ட இலங்­கையின் சமூக இயக்­கங்­க­ளி­ட­மி­ருக்கும் தாக்கம் செலுத்தும் தேர்­வுகள் பற்­றிய புதி­ய­தொரு கலந்­து­ரை­யா­டலை ஆரம்­பிப்­ப­தற்கு பொருத்­த­மான நேர­மிது.

இவ்­வ­கை­யா­ன­தொரு கலந்­து­ரை­யா­டலை ஆரம்­பிப்­பதை தூண்டும் பங்­க­ளிப்பை ஆற்­று­வ­தற்கு இக்­கட்­டுரை முயற்­சிக்­கி­றது.

மூன்று நிறு­வ­னங்கள்

அடுத்த ஜனா­தி­பதி மற்றும் பாரா­ளு­மன்ற தேர்­தல்­களில் அரச அதி­கா­ரத்தை பெற்­றுக்­கொள்­வதில் பின்­வரும் மூன்று அர­சியல் உரு­வாக்­கங்­க­ளுக்கும் மத்­தியில் போட்டி நில­வலாம்: UNPயும் அதன் கூட்டுக் கட்­சி­களும், SLFPயும் அதன் கூட்டுக் கட்­சி­களும், தற்­போ­தைய கூட்டு எதிர்க்­கட்­சியும் அதன் கூட்டுக் கட்­சி­களும். ஜன­நா­ய­க­ம­யப்­ப­டுத்தல் வேலைத்­திட்­டத்தில் இம்­மூன்று நிறு­வ­னங்­களும் மிகச் சிறி­ய­ளவு நேர்­ம­றை­யான சாத்­தி­யப்­பா­டு­க­ளையே வழங்­க­மு­டியும்.

தற்­போ­தைய பிர­தமர் தலைமை தாங்கும் UNP மற்றும் தற்­போ­தைய ஜனா­தி­பதி தலைமை தாங்கும் SLFP ஆகிய இரண்டும் கடந்த மூன்­றரை ஆண்­டு­க­ளாக செய்­தவை பற்றிப் பார்ப்­பது பொருத்தம். பின்­வரும் எதிர்­ம­றை­யான பாடங்­களை அது எமக்கு கூறு­கின்­றது: (அ) ஆட்சி மாற்றம் என்­பது ஜன­நா­யக மறு­ம­லர்ச்­சிக்கும் ஒருங்­கி­ணைப்­புக்கும் போது­மா­ன­தாக இல்லை, அது அவற்­றுக்­கான‌ ஒரு முன்­நி­பந்­த­னை­யாக இருப்­பினும் கூட (ஆ) அர­சியல் கட்­சி­களும் தலை­வர்­களும் –- ஜன­நா­யக சீர்­தி­ருத்தம் என்ற வாக்­கு­று­தி­களால் தேர்­தல்­களில் வென்­ற­வர்கள் கூட- – போதி­ய­ள‌வு துணிவு, உறுதி பெற்­ற­வர்­க­ளா­கவோ அல்­லது தொடர்ந்­தேர்ச்­சி­யான சீர்­தி­ருத்­த­மொன்றை வளர்த்­தெ­டுக்கும் அர­சியல் தேவை கொண்­ட­வர்­க­ளா­கவோ இல்லை. (இ) ஊழல்­க­ளற்ற ஆட்சி, நிலை­யான ஜன­நா­ய­க­ம­ய­மாக்கல், சமா­தா­னத்தை கட்­டி­யெ­ழுப்பல் போன்ற பகு­தி­களில் அரை­ம­ன­தோடு மேற்­கொள்­ளப்­பட்ட முழு­மை­யற்ற முயற்­சிகள் வல­து­சா­ரிக்கும், போதிய மக்கள் ஆத­ர­வு­கொண்ட எதேச்­சா­தி­கா­ரத்­திற்­கு­மான அர­சியல் தள­மொன்றை ஒன்றை உரு­வாக்­கி­யி­ருக்­கின்­றன‌.

UNP மற்றும் SLFP கட்­சி­களும் அதன் தலை­வர்­களும் இலங்­கைக்­கான சீர்­தி­ருத்த வேலைத்­திட்­ட­மொன்றை முன்­னெ­டுப்­பதில் தங்­கி­யி­ருப்­ப­வர்கள் அல்லர். ஜன­நா­யக மாற்­றத்தின் தலைவன் எனும் நாமத்தை எதிர்­கா­லத்தில் தமக்கு சூட்டிக் கொள்­வ­தற்கு அவர்கள் தயா­ராக இல்லை. இவை கசப்­பான உண்­மைகள். அர­சியல் உண்­மை­க­ளும்தான். எமது காலத்தின் சில‌ அர­சியல் கொடூ­ரங்­க­ளை­யும்­கூட‌ அவை உள்­ள­டக்­கி­ருக்­கின்­றன.  

இன்னும் ஒரு வரு­டத்தில் அல்­லது அதன்பின் அதி­கா­ரத்­துக்கு வரத் தயா­ரா­கு­ப­வர்கள் எப்­ப­டிப்­பட்­ட­வர்கள்? கூட்டு எதிர்க்­கட்சி, அதன் புதிய அர­சியல் கட்­சி­யான‌ இலங்கை மக்கள் முன்­னணி ஆகிய இரு நிறு­வ­னங்­க­ளி­னதும் தலை­வர்கள் மற்றும் 2019 இல் பொது ஜனா­தி­பதி வேட்­பா­ளரை கள­மி­றக்­கு­வதை எதிர்­பார்த்­தி­ருக்கும் ஆத­ர­வா­ளர்கள் ஒரு விட­யத்தை தமக்குள் பகிர்ந்­து­கொள்­கின்­றனர். ஜன­நா­யக சீர்­தி­ருத்த வேலைத்­திட்டம் மீதான தம் வெறுப்பு மற்றும் அவ­ம­திப்பு. தற்­போது அவர்கள் ஜன­நா­ய­கத்­துக்குப் பின்­ன­ரான மற்றும் மக்கள் ஆத­ரவு பெற்ற எதேச்­சா­தி­கார அர­சியல் மாற்­றத்­துக்­கான மக்கள் ஆணை­யொன்ற பெற்றுக் கொள்­வ­தற்­கான நிபந்­த­னை­களை உரு­வாக்கி வரு­கின்­றனர். அவர்கள் தம்­மு­டைய இலக்கை அடை­யவும் முடியும். அவர்­க­ளது தேர்தல் வெற்றி - நடந்தால்- ஆரம்­பத்தில் நல்­ல­தொரு உணர்வை தோற்­று­விக்கும். இலங்கை குடி­மக்­க­ளுக்கு அதன் அர­சியல் பின்­ன­டைவை காட்­டி­நிற்க குறிப்­பிட்­ட­தொரு காலம் எடுக்­கலாம்.  

அவ்­வா­றா­ன­தொரு ஆட்சி மாற்றம் நிர்­வ­கிக்க முடி­யாத அர­சியல், சமூக முரண்­பா­டுகள், மென்­மேலும் துரி­தப்­ப­டுத்­தப்­படும் அர­சியல் ஸ்திர­மின்மை, இன-­ச­மூக பிள­வுகள் போன்ற மோச­மான விளை­வு­களை ஏற்­ப­டுத்­து­வ­துடன் ஆட்­சியை நிலைக்கச் செய்­யவும் சமூக எதிர்ப்பை கட்­டுப்­ப­டுத்­தவும் வன்­மு­றையை கட்­டா­ய­மான சாத­ன­மாகப் பயன்­ப­டுத்­தவும் கூடும். இவ்­வ­கை­யா­ன­தொரு ஆட்­சியை அதி­கா­ரத்­தி­லி­ருந்து கலைப்­பது வன்­முறை கலந்­த­தா­கவும் இரத்­தக்­க­ள­ரி­யு­டை­ய­தா­க­வுமே இருக்கும் என்­பதை பல சர்­வ­தேச மாதி­ரிகள் சுட்­டிக்­காட்­டு­கின்­றன. 

ஜன­நா­யக வட்டம்

அண்­மைக்­கால இலங்கை ஜன­நா­ய­கத்தின் ஒரு பக்­கமே மேலே கூறிய காட்சி. அதன் இன்­னொரு பக்­க­மி­ருக்­கி­றது. ஜன­நா­ய­க­மென்­பது  குடி­மக்­க­ளது அர­சியல் அபி­லா­ஷைகள், அர்ப்­ப­ணிப்­புகள், போராட்­டங்கள், ஜன­நா­ய­கத்தின் வீழ்ச்­சிக்­காலம், பின்­ன­டை­வு­களின் போதான எதிர்ப்பு, மீளு­ரு­வாக்க முயற்சி போன்ற மக்கள் மயப்­ப­டுத்தப்பட்­ட­தொரு சமூக இயங்­கு­தளம்.இலங்­கையின் அண்­மைய வர­லாற்று அர­சியல் மாற்­றங்­களில் இது­வொரு முக்­கிய பரி­மாணம். ஜன­நா­யத்தை விட்டும் பின்­வாங்கும் வகை­யி­லான எதேச்­சா­தி­கார இலக்­குகள் கொண்­ட­தாக‌ அர­சாங்கம் அமை­யும்­போ­தெல்லாம் எதிர்ப்பு தோற்­றம்­பெற்று இறு­தியில் ஜன­நா­ய­கத்தின் பின்­ன­டைவை மிகைக்கும் மறு­ம­லர்ச்சி ஒன்று உரு­வா­கி­வி­டு­கி­றது.     

ஜன­நா­ய­கத்தின் பின்­ன­டைவும், அத­னைத்­தொ­டர்ந்த மீளு­ரு­வாக்­கமும் எனும் தொட­ரி­யக்க வட்டம் இலங்கை அர­சியல் மாற்­றத்தில் நீண்­ட­கால பரி­மா­ணத்தில் நிகழ்ந்தே வந்­தி­ருக்­கி­றது. ஒவ்­வொரு குடி­மக்கள் பரம்­ப­ரையும் இதனை முகம்­கொ­டுக்­கவும் அதன் மோச­மான விளை­வு­களை தாங்­கிக்­கொள்­ளவும் நல்ல விளை­வு­களை அனு­ப­விக்­கவும் வேண்­டி­யி­ருக்­கி­றது.  

அதே­நேரம், அர­சியல் கட்­சி­களும் அர­சி­யலை தொழி­லாகச் செய்­ப­வர்­களும் ஜன­நா­ய­கத்தை வலுப்­ப­டுத்தும் போராட்­டத்தில் நம்­பத்­த­குந்­த­வர்­க­ளல்லர் என்ற பாடத்தை 2015 அனு­பவம் இலங்கை பிர­ஜை­க­ளுக்கு கற்­றுத்­த­ரு­கி­றது. அவர்­களைப் பொறுத்­த­வரை பொது­மக்­க­ளது ஜன­நா­யக ஆசை­களும் அபி­லா­சை­களும் வெறும் சாதன விழு­மி­யங்­களே. தம் தேர்தல் தொகுதி மீதான அவர்­க­ளது கவ­னக்­கு­விப்பும் நம்­பிக்­கையும் தற்­கா­லி­க­மா­ன­வை­யா­கவும், சர்ந்­தர்ப்பம் சார்ந்­த­வை­யா­கவும் தியாகம் செய்யக் கூடி­ய­வை­யா­க­வுமே உள்­ளன. 

 ஜன­நா­ய­கத்தின் வாழ்வு

SLFP மற்றும் UNP ஆகிய இரு கட்­சி­களும் புதிய அர­சாங்­கத்­தின்பின் ஜன­நா­யக அர­சியல் வேலைத்­திட்­டத்தில் மிகவும் பல­வீ­ன­ம­டைந்த நிலையில் -எதிர்க்­கட்­சி­யாக- இருப்பின் ஜன­நா­ய­கத்தின் வாழ்வு மிகவும் சவால்­மிக்­க­தா­கவே இருக்கும். தெற்கில் JVP வடக்கில் ஓரி­ரண்டு தமிழ் கட்­சிகள் தவிர ஏனைய அனைத்து அர­சியல் கட்­சி­களும் மிரட்­டல்­க­ளுக்கு அடி­ப­ணிந்து, புதிய எதேச்­சா­தி­கார அணியின் பங்­கு­தா­ரர்­க­ளாக மாறி­வி­டலாம். மிக மோச­மான‌ இவ்­வா­றான நிலைமை, எதிர்க்­கட்­சியை சிதைக்­கவும் கட்­டுப்­ப­டுத்­தவும் ஜே.ஆர். மற்றும் மஹிந்த ராஜபக் ஷ மேற்­கொண்ட நட­வ­டிக்­கை­களை ஓர­ளவு ஒத்­த­தாக இருக்க முடியும்.               

இச்­சாத்­தி­யப்­பாட்டை ஏற்­ப­டுத்த பல்­வே­று­பட்ட‌ தேசிய மற்றும் சர்­வ­தேச கார­ணிகள் துணை­செய்ய முடியும். அவற்றுள் மிக முக்­கி­ய­மா­னவை: (அ) தோற்­றம்­பெறும் புதிய அர­சாங்­கத்தின் சீனா­வு­ட­னான‌ இறுக்­க­மான பிணைப்பு, சீன பொரு­ளா­தார, அர­சியல் மாதிரி மீதான அதன் ஈர்ப்பு, சர்­வ­தேச சந்­தையில் தோன்­றி­யி­ருக்கும் புதிய குழுக்­க­ளு­ட­னான அதன் தொடர்பு. (ஆ) முன்­னெப்­போ­து­மில்­லாத கடும் பொரு­ளா­தார நெருக்­கடி சூழலில் அது முன்­வைக்கும் துரித பொரு­ளா­தார வளர்ச்சித் திட்டம் மற்றும் அதிக கரி­சனை கொள்ளும் அர­சியல் ஸ்திர­நிலை. (இ) முன்னாள் இரா­ணுவ- சிவில் அதி­கா­ரத்தின் கூட்­டாக உரு­வாகும் எதேச்­சா­தி­காரம் புதிய அர­சாங்­கத்தின் உள்­நாட்டு, வெளி­நாட்டு வேலைத்­திட்­டங்­களை வரை­யலாம். (ஈ) ஜனா­தி­பதி, பாரா­ளு­மன்ற தேர்­தல்­களை தொடர்ந்து ஜன­நா­யக பின்­ன­டைவை தடுத்து நிறுத்தி, அதனை எழுச்சி நோக்கி நகர்த்தும் வேலைத்­திட்டம் ஆரம்­பிக்­கப்­ப­டலாம். (உ) தேசிய பாது­காப்பு அர­சாங்கம் எனும் ஆட்சி மாதிரி நோக்கி மீளுதல். இப்­பின்­ன­ணியில், இலங்கை மாலைத்­தீவை ஒத்த, புதி­ய­தொரு தோற்­றம்­பெற சாத்­தி­ய­மி­ருக்­கி­றது.

இலங்கை ஜன­நா­யக நிறு­வ­னங்கள் பின்­வரும் கேள்­வி­க­ளுக்கு முகங்­கொ­டுக்க வேண்­டி­யுள்­ளன: 2019- – 2020 தேர்­தல்­களின் பின் ஜன­நா­யகம் மிக சீரி­ய­சான பின்­ன­டைவை சந்­திப்­பது ஊர்­ஜி­த­மா­கு­மாயின், அதனை மீளு­ரு­வாக்கம் செய்­வது எவ்­வாறு? தவிர்க்க முடி­யாத அடக்­கு­முறை சூழ­லிலும் அணி­தி­ரட்­ட­லுக்கும் எதிர்ப்பு தெரி­வித்­த­லுக்­கு­மான வாயில்கள் மூடப்­படும் சூழ­லிலும் ஜன­நா­யக சிவில் சமூகம் மற்றும் அர­சியல் சமூக தொகு­திகள் தம் வாழ்வை முன்­னெ­டுத்துச் செல்­வது எவ்­வாறு? மக்கள் ஆத­ர­வுடன் தோற்­றம்­பெறும் வல­து­சாரி, எதேச்­சா­தி­கார ஆட்­சியின் நிபந்­த­னை­களின் கீழ் ஜன­நா­யக இயக்­கங்­க­ளது மீளு­ரு­வாக்கம் எவ்­வாறு சாத்­தி­ய­மாகும்? 

  ஜன­நா­ய­கத்தின் பாது­காப்பு

மாலைத்­தீவை ஒத்த ஒரு நாடாக இலங்கை உரு­வாக்­கப்­பட்­டு­வி­டாமல் இருக்க, எமது சமூ­கத்­தி­லி­ருக்கும்  ஜன­நா­யக பாது­காப்­பு­களை பலப்­ப­டுத்தி, கட்­டி­யெ­ழுப்­பு­வதே முடி­யு­மான ஏக வழி­யாக இருக்­கக்­கூடும். ஜன­நா­யக நிறு­வ­னங்­க­ளான அர­சியல் கட்­சி­க­ளது வீழ்ச்சி, நாட்டு பிர­ஜைகள் மீதும் அவர்­க­ளது சுயா­தீ­ன­மான அணி­தி­ரட்டல் மீதும் பொறுப்­புக்­களை சுமத்­தி­வி­டு­கி­றது.

எதிர்த்­தி­யங்கும் கலா­சாரம் இலங்கை சமூ­கத்தின் நிரந்­தர‌ அர­சியல் பண்­பு­களில் ஒன்­றாக இருந்து வந்­தி­ருக்­கி­றது. சமூ­கத்தின் ஜன­நா­யக மையத்தை வடி­வ­மைக்­க­கூ­டிய செயற்­பாட்­டா­ளர்கள் குழுக்­களால் எதிர்த்­தி­யங்கும் நடை­முறை தொடர்ந்தும் பாது­காக்­கப்­பட்டும் தக்­க­வைக்­கப்­பட்டும் வந்­தி­ருக்­கின்­றது. இலங்கை ஜன­நா­ய­கத்தின் சிவில் சமூ­கத்­தையும் அவர்­களே ஒழுங்­கு­ப­டுத்­தினர். சிவில் சமூக ஈடு­பாடு பின்­வரும் அர­சியல் பண்­புகள் கொண்­டி­ருந்­தன: (அ) ஜன­நா­யகம் ஆபத்­துக்­குள்­ளாகும் போதெல்லாம் அதனை பாது­காத்தல். (ஆ) சிவில் எதிர்ப்பை தோற்­று­வித்தல். (இ) பொது­மக்­களை மைய­மாக கொள்ளல். (ஈ) பொது­மக்­களை எச்­ச­ரித்து விழிப்­பூட்டல். (உ) கூட்­டாக இயங்­குதல். (ஊ) ஜன­நா­ய­கத்தை அத்­தி­ய­வ­சி­ய­மான‌ பொது­மக்கள் சொத்­தாக கரு­துதல். வர்த்­தக நிறு­வ­னங்கள், தொழில்­நி­று­வன ஊழி­யர்கள், மாணவர் இயக்­கங்கள், விவ­சாய அமைப்­புகள், நகர- கிராம இளை­ஞர்கள், பெண்கள், தொழில் அமைப்­புகள், சமூக சிந்­தனை கொண்ட மத நிறு­வ­னங்கள், ஊடக அமைப்­புகள், அரசு சாரா நிறு­வ­னங்கள், ஜன­நா­யக பற்­றுள்ள நாட்­டுப்­பி­ர­ஜைகள் என பல தளங்­களில் அவர்கள் பர­வி­யி­ருப்­பார்கள்.

  ஜன­நா­யக எதிர்ப்பு

இவர்கள் சிறு தொகை­யி­ன­ராக இருப்­பினும் இக்­குழு சார்ந்­த­வர்­களில் சிலரே ராஜபக் ஷ சகோ­த­ரர்­க­ளது எதேச்­சா­தி­கார ஆட்­சிக்­கெ­தி­ரான‌ எதிர்ப்பை ஓர­ளவு வெளிக்­காட்­டினர். அர­சியல் கட்­சி­க­ளது புதிய கூட்டு ஜன­நா­யக எழுச்­சிக்­கான தள­மொன்றை தோற்றுவித்­தி­ருக்­கி­றது. சிவில் குழுக்கள் மிகவும் செய­லற்­ற­தாக உள்­ளன. அவை புதிய, புத்­து­ணர்­வுடன் கூடிய அணி­தி­ரட்­ட­லொன்­றையும் ஒத்­து­ழைப்­புடன் கூடிய செயற்­றிட்­டங்­க­ளையும் நடை­மு­றைப்­ப­டுத்­த­லையும் எதிர்­பார்த்­தி­ருக்­கின்­றன.

சித­றிப்­போ­யுள்ள ஜன­நா­யக சமூக இயக்­கங்­க­ளுக்­கான நிறு­வ­ன­ம­யப்­பட்ட தலை­மைத்­து­வ­மொன்றை வழங்­கு­வதே தற்­போது போதிய வளங்களைக் கொண்டியங்கிக் கொண்டிருக்கும் சிவில் சமூக அமைப்புகளது அவசர கடமை. ஜனநாயகத்தை பாதுகாக்கவும் எதிர்த்து நிற்கவுமான புதியதொரு சமூக இயக்கத்தை வடிவமைக்கவும் ஜனநாயகத்துக்குப் பதிலாக தோன்ற முடியுமான எதேச்சாதிகாரம் மிக்க வலதுசாரி சீர்திருத்த வேலைத்திட்டத்தை எதிர்த்து நிற்கக்கூடிய பலமான கூட்டமைப்பொன்றையும் கட்டியெழுப்ப‌ அவர்களுக்கு இன்னும் ஒரு வருடம் மாத்திரமே -அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்- இருக்கிறது.

ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான புதிய சமூக இயக்கத்தினது அரசியல் சில ஒழுங்குமுறைகள் கொண்ட அடித்தளத்தின் மீது கட்டியெழுப்பப்பட வேண்டும்: (அ) அது சமூக இயக்கங்களது விரிந்ததொரு கூட்டணி. அது "ஜனநாயக பன்மைத்துவம்" என்பதன் அடிப்படைகள் மீது கட்டப்படல். (ஆ) மையம் இல்லாத, குறிப்பிட்ட சிந்தனையொன்றின் இரும்புப் பிடியில்லாத, நிர்வாக படிநிலை இல்லாத தொடர்ந்து வளர்ந்து செல்லும் வகையிலான இறுக்கமில்லாத கட்டமைப்பு கொண்டதாக இருத்தல். (இ) பெரும் அரசியல் கட்சிகளுடன் முழுமையான தந்திரோபாய கூட்டணி அமைக்கக் கூடியதாகவும் அதேநேரம் அதன் அரசியல் சுயாதீனத்தை எக்கட்டத்திலும் விட்டுக்கொடுக்காததாகவும் செயற்படல். (ஈ) சிறிய அரசியல் கட்சிகளுடனும் அவர்களது தேர்தல் வேலைத்திட்டத்தில் சிக்கிக்கொள்ளாத வகையில் நெருங்கிய கூட்டுறவுகளை வைத்துக்கொள்ளல். (உ) அது புதியதொரு அரசியல் மொழியொன்றை உருவாக்குவதனூடாக நாட்டுபிரஜைகளது ஜனநாயக மற்றும் சுதந்திர அரசியல் கனவையும் அடைந்துகொள்ள துணைசெய்வதாக இருத்தல்.     

நன்றி: Colombo Telegraph
-Vidivelli