Verified Web

முரண்பாடுகளை தீர்க்க பேச்சுவார்த்தை

10 days ago ARA.Fareel

 

நீதி­ய­மைச்சர் தலதா அத்­து­கோ­ர­ள­விடம் கைய­ளிப்­பட்­டுள்ள முஸ்லிம் விவாக, விவா­க­ரத்து சட்­டத்தில் மேற்­கொள்ள வேண்­டிய திருத்­தங்கள் தொடர்­பான அறிக்­கையில் காணப்­படும் முரண்­பா­டு­களைக் களை­வ­தற்கு அகில இலங்கை வை.எம்.எம்.ஏ.பேரவை முஸ்லிம் விவாக, விவா­க­ரத்து சட்­டத்தில் திருத்­தங்­களை மேற்­கொள்­வ­தற்­காக நிய­மிக்­கப்­பட்ட குழுவின் தலைவர் முன்னாள் நீதி­ய­ரசர் சலீம் மர்சூப் மற்றும் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி பாயிஸ் முஸ்­தபா ஆகிய  இரு­வ­ரு­டனும் பேச்­சு­வார்த்­தை­களை நடாத்­த­வுள்­ளது.

குழுவின் தலைவர் சலீம் மர்சூப் தரப்­பி­ன­ருக்கும், ஜனா­தி­பதி பாயிஸ் முஸ்­த­பாவின் தலை­மை­யி­லான ஜம்மிய்­யத்துல் உலமா சபை பிர­தி­நி­திகள் அடங்­க­லான குழு­வி­ன­ருக்கும் இடையில் 10 விட­யங்­க­ளிலே முரண்­பா­டுகள் காணப்­ப­டு­வ­தா­கவும் இது தொடர்பில் வை.எம்.எம்.ஏ பேரவை கலந்­து­ரை­யா­ட­வுள்­ள­தா­கவும் வை.எம்.ஏ.பேர­வையின் பொதுச்­செ­ய­லாளர் சஹீட் எம்.ரிஸ்மி தெரி­வித்தார்.

வை.எம்.எம்.ஏ.பேரவை கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை கொழும்பு மன்­ட­ரீனா ஹோட்­டலில் முழுநாள் மாநா­டொன்­றினை நடாத்­தி­யது.

இம்­மா­நாட்டில் உல­மாக்கள், புத்தி ஜீவிகள், சட்­டத்­த­ர­ணிகள், சமூக நல அமைப்­பு­களின் பிர­தி­நி­திகள், பெண்கள் அமைப்­பு­களின் பிர­தி­நி­திகள் என 114 பேர் கலந்து கொண்­டி­ருந்­தனர்.

சலீம் மர்சூப் தலை­மை­யி­லான குழு இரண்­டாகப் பிள­வு­பட்டு சமர்ப்­பித்­துள்ள அறிக்­கையில் முரண்­பா­டுகள் கொண்­டுள்ள 10 அம்­சங்கள் மாநாட்டில் விரி­வாக கலந்­து­ரை­யா­டப்­பட்­ட­துடன் வை.எம்.எம்.ஏ.பேரவை தனி­யான அறிக்­கை­யொன்­றினைத் தயா­ரிக்­க­வுள்­ளது. இதற்­கென புத்திஜீவிகள் உள்­ள­டங்­கிய சுயா­தீன குழு­வொன்றும் நிய­மிக்­கப்­ப­ட­வுள்­ளது.

வை.எம்.எம்.ஏ.பேரவை அறிக்­கையைத் தயா­ரித்து சம்­பந்­தப்­பட்ட இரு தரப்­பி­ன­ரு­டனும் கலந்­து­ரை­யா­ட­வுள்­ளது.

முரண்­பட்டுக் கொண்­டுள்ள இரு தரப்பும் தங்­க­ளது  கொள்­கை­களில் விட்டுக் கொடுப்­புடன் இணக்­கப்­பாட்­டினை எட்­டா­விட்டால் நீதி­ய­மைச்­ச­ரிடம் வை.எம்.எம்.ஏ. தனது சிபார்சு அறிக்­கையை சமர்ப்­பிக்கும் என வை.எம்.எம்.ஏயின் பொதுச் செய­லாளர் சஹீட் எம்.ரிஸ்மி விடி­வெள்­ளிக்குத் தெரி­வித்தார்.

முரண்­பா­டு­க­ளுக்­குள்­ளா­கி­யுள்ள 10 அம்சங்கள் தொடர்பில் பொதுமக்களும் தங்கள் கருத்துகளை வை.எம்.எம்.ஏக்கு தாமதியாது மூன்று நாட்களுக்குள் மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கலாம் எனவும் சஹீட் எம்.ரிஸ்மி தெரிவித்தார்.
-Vidivelli